Friday, May 10, 2013

நாகராஜசோழன் எம் ஏ ,எம் எல் ஏ - சினிமா விமர்சனம்

பெண்பார்க்கும் படலம் நடக்கும்போது தரகர் சில சமயம் பொண்ணோட ஃபோட்டோவைத்தராம பொண்ணோட அக்கா ஃபோட்டோ கொடுத்து பார்த்தீங்களா? ரதி மாதிரி இருக்கு? இதனோட தங்கச்சிதான் நீங்க கட்டப்போற பொண்ணுனு அள்ளி விடுவார். நாமளும் மண்டையை மண்டையை ஆட்டுவோம், அப்புறம் பார்த்தா அந்த சக்க ஃபிகரோட தங்கச்சி மொக்க ஃபிகரா இருக்கும். அந்த மாதிரி தான் ஆரவாரமான வெற்றி பெற்ற அமைதிப்படை முதல் பாகம் படம் மாதிரி 20 வருஷம் கழிச்சு வந்திருக்கும் அமைதிப்படை பாகம் 2 படமும் .

சாதாரண எம் எல் ஏ வா இருக்கும் ஹீரோ  சி எம்மையே மிரட்டி உதவி சி எம் ஆகிடறார். அவருக்கும் அவரோட அல்லக்கைக்கும் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் கொஞ்சம் .ஆதிவாசிகள் நிலத்தை அபகரிக்க பண்ற அட்டூழியங்கள்  , கொலைகள் என இன்னொரு டிராக். எப்படி திரைக்கதை எழுதறதுனு ஒரே குழப்பமாகி சும்மா வசனங்களாலும் , சத்யராஜ் - மணி வண்ணன் காம்பினேஷன் காட்சிகளால் மட்டுமே படத்தைத்தூக்கி நிறுத்திடலாம்கற நப்பாசைல எடுத்த படம் இது.


 சும்மா சொல்லக்கூடாது , இத்தனை வருஷங்கள் ஆகியும் சத்யராஜ் - மணி வண்ணன் பிரமாதப்படுத்தி இருக்காங்க . எகத்தாளம் , எள்ளல் நக்கல் எல்லாம் செம.  ஆனா எல்லாம் பிட்டு பிட்டா இருக்கு. அதான் மைனஸ் . படத்தோட ஒட்டலை. ரொம்ப செயற்கையா இருக்கு .





சத்யராஜ்ன் கெட்டப் கன கச்சிதம். போலீஸ் ஆக வரும் இன்னொரு சத்யராஜ் பாவம் சான்ஸே இல்லாமல் சும்மா வந்துட்டுப்போறார். மணி வண்ணனின் மகனுக்கு வேறு ஒரு கேரக்டர் கொடுத்து விட்டதால் அவரை முன்னிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் வேறு .


 சீமான் பொது வாழ்க்கைலயும் சரி , சினிமா வாழ்க்கைலயும் சரி எந்த அளவுக்கு இமேஜை வளர்த்து வெச்சிருந்தாரோ அந்த அளவு கெடுத்துக்கிட்டார். முன்பெல்லாம் அவர் வரும் காட்சிகளீல் எல்லாம் அப்ளாஸ் அள்ளும் . இப்போ சிரிப்பா சிரிக்கறாங்க . 


  மலைவாசிகள் டூயட் பாடும்போது இவர் எதுக்கு கூட கையை காலை ஆட்டி எக்சசைஸ் பண்றார் ? அய்யோ பாவம் 


 இது போக மிருதுளா ( ரொம்ப மிருதுவா இருக்குமோ? )  , ஹன்சிபா , கோமல் ஷர்மா என சில பல ஃபிகர்கள் வந்துட்டுப்போகுது. வர்ணிக்கற அளவு பெருசா இல்லை , ஐ மீன் காட்சிகள் , வாய்ப்புகள் அவங்களுக்குப்பெருசா இல்லை . 




 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. கலைஞர் , கேப்டன்  இருவரையும் குறி வைத்து செம நக்கல் அடிக்கும் காட்சிகள்  வசனங்கள் அபாரம் , 45 இடங்களில் வசனம் கலக்கல் 



2. எல்லா ஊரிலும் முக்கியமான தியேட்டர்களை பிடித்தது செம . ஈரோட்டிலேயே 3 தியேட்டர் . 3ம் ஏ சி டி டி எஸ் ( ரஜினி , அஜித் , விஜய் படங்களுக்குத்தான் இப்டி அமையும் ) 


3. போஸ்டர் டிசைன் , டி வி யில் வரும் விளம்பர க்ளிப்பிங்குகள் எல்லாம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது 


 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. மணிவண்ணன் இயக்கும் படத்தில் டைட்டிலில் அவரே அவர் பேரை இன மான இயக்குநர் என போட்டுக்கறாரே? கூச்சமா இருக்காதா? அடுத்தவங்க படம்னா தேவலை . முரசொலில தமிழ் இனத்தலைவர்னு டாக்டர் கலைஞரே போட்டுக்கற மாதிரி  ( இந்த லட்சனத்துல இவரு அவரை நக்கல் அடிக்கறாரு )


2. ஹீரோ அடிக்கடி மருமகளை ஏழைப்பொண்னு , மலை ஜாதிப்பொண்னு என நக்கல் அடிக்கிறார். ஆனா  8 ஏக்கர் 30 செண்ட் நிலம் அவருக்கு சீரா கொடுத்தாங்கன்னு வசனம் வருது . மிடில் கிளாஸ் ஃபேமிலி கிட்டேயே 5 செண்ட் நிலம் இருக்கறது இல்லை , ஏழைப்பெண்ணுக்கு எபடி 8 ஏக்கர்? 



3. ஹீரோ அடியாட்கள் மூலமா 3 பேரை கொலை பண்ணிடறார். அந்த 3 பிணங்களையும் ஊர்வலமா கொண்டுவரும் காட்சியில் பிணத்தின் கால் கட்டை விரல் பக்கத்து விரலுடன் க்ளோசப் ஷாட்டில் கட்டப்பட்டும் , லாங்க் ஷாட்டில் பிரிந்தும் இருக்கே? எப்டி? எடிட்டிங்க் ஃபால்டா? 



4. ஹீரோவோட சின்ன வீடு ஒண்னு பார்க்க லோக்கல் மாதிரி இருக்கு. 25 ரூபாய்க்கு  மசால் தோசை வாங்கித்தர்ற அளவு கூட ஒர்த் இல்லாத மொக்கை பீசுக்கு அவர்  800 ஏக்கர் கரும்புத்தோட்டம் எழுதி வைப்பதா காட்சி வருவது கொடுமை 



5. போலீஸ் ஆஃபீசர் சத்யராஜ் ஹீரோ சத்யராஜை வந்து மெனக்கெட்டு மிரட்டிட்டு மட்டும் போறாரே? ஏன் கைது பண்ணலை? ஒண்ணா அரெஸ்ட் பண்ணி இருக்கனும் , அல்லது வந்தே இருக்கக்கூடாது  என் புருஷனும் கச்சேரிக்குப்போனான்கற கதையா எதுக்கு தேவை இல்லாம பில்டப் கொடுத்து மொக்கைப்பட்டம் வாங்கனும் ? 


6. மருமக கொலை செய்யப்பட ஆர்டர் வந்தது தெரிஞ்சதும் அவ ஏன் வெளியூர்ல இருக்கும் புருஷனுக்கு தகவல் தெரிவிக்கலை? அட்லீஸ்ட் ஒரு எஸ் எம் எஸ் கூட பண்ணலை? புருஷன்னா எல்லாருக்கும் அவ்வளவு இளக்காரமா?


7. சீமான் படம் பூரா டம்மியா வர்றவர் திடு திப்னு க்ளைமாக்ஸ்ல சிவப்புக்கலர் ரிப்பன் எடுத்து தலைல ( நெத்தில) கட்டிக்கிட்டு புரட்சி வீரன் ஆவது செம காமெடி . 


8. பிரபாகரன் நல்லவேளை இப்போ  இல்லை. சீமானை பிரபாகரன் ரேஞ்சுக்கு உயர்த்தி டயக்லாக்ஸ் வெச்சது அய்யய்யோ அம்மம்மா . விஜயலட்சுமி கூட ரசிச்சிருக்க மாட்டாரு

 


9 தமிழ் நாட்டின் சி எம் தன் மருமகளை கொலை பண்ண பிளான் பண்றாரு , மருமக தன் புருஷன் கிட்டே சொல்லாம ஏதோ இட்லி மெஸ் வெச்சிருக்கும் லேடி கிட்டே வந்து நீங்க தான் என்னைக்காப்பாத்தனும்னு சொல்வது செம காமெடி


10 அமைதிப்படைல அப்ளாஸ் அள்ளிய காட்சிகள் எல்லாத்துலயும் உயிர் இருந்தது அதுக்காக அப்டியே டிட்டோவா காப்பி அடிக்கனுமா? அண்டர் டிராயரை துவைக்க அடிச்சுக்குவது  போர் 


11. வில்லன் கிட்டே அந்த லேடி “ என்னைத்தொடாதே “ என சொல்வது செம காமெடி . புருஷனே கேட்கமாட்டான் , வில்லன் கேட்பானா?


12. சி பி ஐ ஆஃபீஸ்ல எதுக்கோ அனுமதி வாங்கப்போகும் போலீஸ் சத்யராஜ் எதுக்கு கூலிங்க் கிளாஸ் போட்டிருக்கார்? மெட்ராஸ் ஐ யா? ஐய்யோ பாவம் 


13.  மாமனார் சத்யராஜ் - மருமகள் சமப்ந்தப்பட்ட காட்சிகளில் எங்கே சிந்து நதிப்பூ வாசம் அடிச்சுடுமோன்னு பரிதவிக்க வைப்பது எதுக்கு? சஸ்பென்சா? கண்றாவி 


14. லவ் மேரேஜ் பண்ணிக்கிட்ட வசதியான வீட்டுப்பையன் ஏன் தனியா வெளியூர் போறான்? பொண்டாட்டியையும் துணைக்குக்கூட்டிட்டுப்போலாமே? 


15. ரத்தம்னா பயந்துக்கற அந்த லேடி கேரக்டருக்கு ஒரு கிளைக்கதை எதுக்கு? இங்கே மெயின் கதையே தடுமாறிட்டு இருக்கு 

16 வகை தொகை இல்லாம தி முக , தே மு திக என எல்லாரையும் விளாசும் மணீவண்ணன் பேனா ஜெ வைக்கண்டு பம்முவது ஏன்? 




 மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஓட்டு வாங்கற கட்சியை விட ஓட்டை பிரிக்கற கட்சிக்குத்தான் மரியாதை இப்போ


2. நேத்து சாயங்காலம் 6 மணிக்கு கட்சில சேர்ந்தவன் நீ.என் முன்னாலயே கை நீட்டி எதிர்த்துப்பேசற அளவு ஆகிடுச்சு


3. நகரவாசி கிராமம் வந்தா அவன் கண்ணுக்கு மரம் எல்லாம் சேர் டேபிளா தெரியும்.கிராமவாசி நகரம் போனா சேர் டேபிள் எல்லாம் மரமாத்தெரியும்



4. பெட்ரோல் விலை எல்லாம் ஏறிட்டதால என்னோட 15 சின்ன வீடுகளையும் ஒரே அபார்ட்மெண்ட்ல குடி வெச்சுட்டேன்


5.  அரசியல்வாதிகிட்டே எவ்ளவ் சொத்து இருக்குன்னு அவங்களுக்கே தெரியாது.சிபிஐ வந்து ரெய்டு பண்ணும்போதுதான் கணக்கே தெரியும்


6. நான் பேமிலிமேன் அண்ணா .


 அதெப்பிடிடா கூச்சமே இல்லாம உன்னை பேமிலி மேன்னு சொல்லிக்கறே?


7. நல்ல பையனாப்பார்த்து இவளுக்கு கட்டி வைக்கலாம்னு பார்த்தா நல்ல பையனே கிடைக்கலை.சரினு நானே கல்யாணம் கட்டிக்கிட்டேன் ,ஹி ஹி



8. நீங்க தான் சாமி எங்க தெய்வம். 


எங்களைக்க்டவுள் ஆக்கிட்டு ஏழைங்க நீங்க தெருவுலயே கிடங்க 


9. என் ஆளு எந்த் அளவு ஷை டைப்னா குளிக்கும்போது கூட சேலை கட்டி இருப்பான்னா பார்த்துக்குங்க


10. மணி.உன் சின்ன வீட்டை ஒரு நாள் நம்ம வீட்டுப்பக்கம் கூட்டிட்டு வா.


 



 வேணாங்ணா.அவ ரொம்ப ஷை டைப்.வீட்டை விட்டு வெளில வரமாட்டா 



11. விபத்துல காயம் அடைஞ்ச தலைவர் முகத்துல 100 தையலா? சும்மா ரீல் விடாதீங்க.அது என்ன முகமா? ஜாக்கெட் பிட்டா? 


12. நான் யார்னு உங்களுக்குத்தெரியும்.எங்க ஆதரவு இல்லாம நீங்க மத்தில ஆட்சி பண்ண முடியாதுனு உலகத்துக்கே தெரியும்



13. ஏழைங்க கோபப்படக்கூடாது.நக்சலைட்னு சொன்னாலும் சொல்லிடுவாங்க 


14. நம்ம நாட்ல ஓட்டுப்போடவும் மிஷின்.ஓட்டு போடற ஜனங்களும் மிஷின் 


15. ஆட்சி மாறும்.ஆனா அல்லக்கைகள் மட்டும் என்னைக்கும் மாறாம இருப்பாங்க 




16. அப்பாவை தீர்த்துகட்டிட்டு மகன் ஆட்சியைப்பிடிப்பது நம்ம மொகலாயப்பேரரசு காலத்துல இருந்தே இருக்கே?


17. ஏய் னு நாக்கை மடிச்சுக்கடிக்கற ஆளை எல்லாம் தலைவர் ஆக்கிடுங்க.நாடு உருப்பட்டுடும்


18. நல்லா இருக்கீங்ளா மாமா ? 


ஜெயில் ல இருக்கறவன் கிட்டே விசாரிக்கற விதம் இதானா?என்னமோ நான் பைவ் ஸ்டார் ஹோட்டல்ல ஜெனரேட்டர் வசதியோட இருக்கற மாதிரி கேட்கற? 


19. ஆட்சில இலவசமா மிக்சி குடுத்தீங்க பேன் குடுத்தீங்க.ஆனா இதை எல்லாம் யூஸ் பண்ண கரண்ட் குடுத்தீங்ளா? இலவச ஜெனரேட்டர் தர்றதா வாக்கு தரும் கட்சி தான் அடுத்து ஜெயிக்கும் 


20. அவரு சொந்தமா எப்பவும் டிராக் போடமாட்டாரு.என்னை மாதிரி இளிச்சவாயன் ஆல்ரெடி டிராக் போட்டு வெச்சிருந்தா உஷார் பண்ணிடுவாரு



 



21. பாடிலேங்க்வேஜை பவ்யமா வெச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே செருப்பால அடிக்கிறது நீ தான் மணி


22. இது தான் மணியோட 4 வது சின்ன வீட்டோட மகளா ?



 நீங்க வேற.அவரோட 4 வது சின்ன வீடே இதுதாணுங் 



23. ‘வயசானவன் இளைஞரணி த்தலைவரா இருக்கும் போது ஆம்பள மகளிர் அணி தலைவரா இருக்க கூடாதா?’,  ( மு க ஸ்டாலின் )



24.  ‘கட்சிக்கு கட்சி தாவிகொண்டே இருப்பவன் எல்லாம் கட்சி தலைவன்!’,( டாக்டர் ராம்தாஸ் )



25 ‘புருஷன் பொண்டாட்டி எல்லாம் சேர்ந்து கட்சி ஆரம்பிக்கராங்கபா! போங்க! போய் தமிழ் நாட்ட பிச்சு தின்னுடுங்க!’  ( கேப்டன் )



26. , ‘தோத்து போனவன்னு நாட்டுக்கே தெரிஞ்சும் உன்னைய ஜெயிக்க வைத்தது சட்டத்தை மீறி தான்’  ( ப சிதம்பரம் )




27 , ‘தமிழ் தமிழ்னு ஊருக்காக வேஷம் போடறவங்க தன் பிள்ளைகளுக்கு மட்டும் ஹிந்தி கற்றுத்தருவது’ ஏன்? ( கலைஞர் ) 


28 வெளிநாட்டுக்காரங்க தங்களோட உரிமைக்காக போராடுவாங்க. நம்ம மக்களுக்கு அதெல்லாம் எங்க இருக்கு? நம்ம அரசியல்வாதிங்க நாட்ட கூறு போட்டு விற்க த்தான் செய்வாங்க! 



29. ‘நாம போராடினா நம்ம அடுத்த தலைமுறை இதை விட வேகமா போராடும்’,



30  நாம இழக்கிறது நம்ம உயிரை மட்டும் தான் போராடறத நிறுத்திட்டா நாளைய தலைமுறையோட உரிமையையும் சேர்த்து  இழப்போம்


 31. பொதுக்குழுவை என்னைக்கு கூட்டி இருக்காங்க? அவங்களா ஒரு முடிவு எடுத்துட்டு அறிவிப்பாங்க?


32. அப்பனும் பையனும் சேர்ந்து அரசியல்ல ஈடுபடுவது அந்தக்காலம்.புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து கட்சி ஆரம்பிப்பது இந்தக்காலம்

 



 சி பி கமெண்ட் - அமைதிப்படை பார்ட் 2 -கதை போறாது ,திரைக்கதை தேறாது - , நாகராஜசோழன் MAMLA -ஆல் பேப்பர்ஸ் அவுட்.  டி வில இன்னும் 20 நாட்கள் ல எப்படியும் போட்டுடுவாங்க பார்த்துக்கலாம் . ஒரு வாரம் தான் தாங்கும் 


எதிர்பார்க்கப்படும் விகடன் மார்க் 35


 குமுதம் ரேங்க் - சுமார் 


 ரேட்டிங்க் - 2 / 5 


 ஈரோடு ஆனூர் தியேட்டரில் படம் பார்த்தேன் 



 டிஸ்கி - மனம் கவர்ந்த வசனங்கள் இன்னும் 20 இருக்கு , இன்னும் அரை மணியில் இதே லிங்க்கில் அப்டேட்டிடறேன் 


 

7 comments:

கோவை நேரம் said...

அவுட்...

Unknown said...

போலன்னு இருந்தேன் காப்பதிடிங்க அண்ணே

Karthikeyan Rajendran said...

நல்ல விமர்சனம்

முத்தரசு said...

அப்டேட் பண்ணுங்க

Try 🆕 said...

கலக்கல் விமர்சனம்

Eliyavan said...

ஙொக்கா மக்கா,
இயக்குநரிடம் சில கேள்விகள் (16), மனம் கவர்ந்த வசனங்கள் (32) இத்தனையும் சொல்லிப்புட்டு இதுக்குமேல இன்னும் 15 இருக்குன்னு எப்புடி மக்கா சொல்ல முடியுது? படத்த ஒருமுறை பார்த்தவுடனே இத்தன வரியும் நெனச்சு வைக்கிற நீங்கள் நெஜமாலுமே கிரேட்.

minnal nagaraj said...

ரொம்ப எதிர்பார்த்தேன் உங்க விமர்சனத்தே படிச்சப்பறம் ஒரு 500 மிச்சம் நன்றி சகோ