சந்தானம் ஓனர்... விஷால் லேபர்!
க.ராஜீவ் காந்தி
வழக்கமா ஒரு படத்தில் ஹீரோவின் வாழ்க்கையில் நடுநடுவே
ரிலாக்ஸுக்காக, அப்பப்போ காமெடியன் வருவார். ஆனா, இந்தப் படத்தில்
காமெடியன் வாழ்க் கையில் அப்பப்போ ஹீரோ வந்து ஆக்ஷன் பண்ணுவார். படத்தின்
கதை முழுக்கவே சந்தானம் மேலேதான் டிராவல் பண்ணும். சந்தானத்தின் கதையின்
நடுவில் புகுந்து தன் பிரச்னைகளைத் தீர்த்துக்குவார் விஷால். 80 சதவிகிதம்
காமெடி, 20 சதவிகிதம்தான் ஆக்ஷன். நல்லா இருக்குல்ல இந்த ஃபார்முலா!'' -
'பட்டத்து யானை’ படத்தின் மேக்கிங்குறித்து நம்பிக்கை மிளிரப் பேசுகிறார்
இயக்குநர் பூபதி பாண்டியன்.
''அப்போ படத்தின் ஹீரோ விஷாலா... சந்தானமா?''
''காரைக்குடியில் சமையல் கான்ட்ராக்டர் சந்தானம்.
அவருக்கு ஒரே தேதியில் ரெண்டு ஆர்டர் வருது. ஒண்ணு, ஏரியா ரவுடி வீட்டுக்
கல்யாணம். இன்னொண்ணு அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் வீட்டுக் கல்யாணம். ரெண்டு
ஆர்டரில் எதை எடுக்கிறதுனு சந்தானம் முழிச்சுட்டு இருக்கும்போது, ரவுடியை
இன்ஸ்பெக்டர்கிட்ட மாட்டிவிட்டுரலாம்.
இன்ஸ்பெக்டர் வீட்டு ஆர்டர்
எடுத்துக்கலாம்னு விஷால் ஐடியா கொடுப்பார். ஆனா, கல்யாணம் நடக்கும்
அன்னைக்குனு பார்த்து இன்ஸ்பெக்டருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்துடும்.
இப்போ ரவுடிகிட்ட வசமா மாட்டிக்குவார் சந்தானம். 'இப்படி மத்தவங்களை நம்பாம
நாமளே திருச்சில சொந்தமா ஒரு ஹோட்டல் வைப்போம்’னு சொல்லி, சந்தானத்தை
திருச்சிக்குக் கூட்டிட்டு வருவார் விஷால்.
அப்புறம் திருச்சியில் நடக்கும்
சம்பவங்கள்தான் கதை. க்ளைமாக்ஸ்ல ஒரு விருந்து சமைக்கிறார் சந்தானம்.
அதில் விஷாலைக் காலி பண்ணணும்னு சாப்பாட்டில் விஷத்தைக் கலந்துடுவார். அந்த
அளவுக்கு விஷால் மேலே சந்தானம் ஏன் காண்டாகுறார்ங்கிறதுதான் கதையே.
இதுக்கு நடுவில்தான் ஹீரோவோட காதல், அதில் வர்ற பிரச்னைகள், ஆக்ஷன் எல்லாமே
இருக்கும்!
எப்பவும் என் படத்துல காமெடிக்குனு தனியா யாரையும்
நடிக்கவைக்க மாட்டேன். ஹீரோ, ஹீரோயின், வில்லன் வரை எல்லாருமே காமெடி
பண்ணுவாங்க. அப்படி இதில் படம் முழுக்க சந்தானம் காமெடி பண்றார். ஒரு
ஹோட்டல் நடத்தணும்னா ஒரு ஓனர், நாலஞ்சு லேபர்ஸ் வேணும்ல. அப்படி இதில் ஓனர்
சந்தானம். அவரோட லேபர்ஸ்தான் விஷால், ஜெகன், சபேஷ் கார்த்தி, சரித்ரன்
நாலு பேரும்!''
''அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி நடிக்கிறாங்களா?''
''அர்ஜுன் சார் பொண்ணுகிட்ட கரெக்ஷன்ஸ் சொன்னா எப்படி
எடுத்துக்குவாங்கனு, ஆரம்பத்தில் சின்னத் தயக்கம் இருந்துச்சு. ஆனா, கேமரா
முன்னாடி ஐஸ்வர்யாவுக்கு எந்தக் கூச்சமும் இல்லை. முதல் படம்னு சொல்ல
முடியாத அளவுக்கு நடிக்கிறாங்க!''
''
'வின்னர்’, 'கிரி’ படங்கள்ல வடிவேலுவுக்கு நீங்க தான் காமெடி எழுதினீங்க.
தனுஷ§க்கு 'தேவதையைக் கண்டேன்’, 'திருவிளையாடல்’னு ரெண்டு ஹிட் படம்
கொடுத்தீங்க. அவங்ககூட எல்லாம் டச்ல இருக்கீங்களா?''
''வடிவேலுகூடப் பேசிட்டுதான் இருக்கேன். அவரோட
ரெண்டாவது ரவுண்ட் செம மிரட்டலா இருக்கும் பாருங்க. தனுஷ்கூட இடையில கொஞ்ச
நாள் பேச முடியலை. இப்ப திரும்பப் பேசிக்க ஆரம்பிச்சுட்டோம். 'கொலவெறி’,
இந்திப் படம்னு ரொம்பப் பெரிய ரேஞ்சுக்குப் போயிட்டார். சீக்கிரமே அவர்கூட
ஒரு படம் பண்ண வாய்ப்பு வரும்னு நினைக்கிறேன்!''
நன்றி - விகடன்
0 comments:
Post a Comment