Thursday, May 30, 2013

dandupalya - சினிமா விமர்சனம் 36 +

 

எச்சரிக்கை - இதய பலஹீனம் உள்ளவர்கள்  , கர்ப்பமா - இருக்கும் பெண்கள் , இல்லாத பெண்கள் , 20 வயதுக்கு உட்பட்டவர்கள் , மனோ பலம் இல்லாதவர்கள் , குழப்பமான மன நிலையில் உள்ளவர்கள் , தனிமையில் வாழ்பவர்கள் , வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் , சமூகத்தின் மீது கோபம் உள்ளவர்கள் , நிலையான மனமோ, சொந்தமாக முடிவு எடுக்கும் திறனோ இல்லாதவர்கள் , மாணவ ,மாணவிகள்   யாரும் இந்தப்படத்தைப்பார்க்கவோ , பட விமர்சனத்தைப்படிக்கவோ வேண்டாம் என பொது நலன் கருதி  கேட்டுக்கொள்கிறேன்.

 உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு  எந்த அளவுக்கு வல்கரா படம் பண்ண முடியுமோ அந்த அளவு வன்முறையைத்தூண்டும் வகையில் வக்ரமாக படம் எடுத்திருக்காங்க . 



கன்னடத்தில் இது ஆல்ரெடி தண்டுபாள்யா என்ற பெயரில் ரிலிஸ் ஆகி பெரும் சர்ச்சையைக்கிளப்பிய படம் 



பியூட்டி பெண்களூர் என வர்ணிக்கப்படும் பெங்களூரில் தண்டுபாளையம்னு ஒரு  ஊரு. அப்பகுதியில் 91 கற்பழிப்புகள், 106 கொலைகள், 203 கொள்ளைகள் நடந்துள்ளன. இவ்வளவு அக்கிரமங்களை செய்தவர்களை போலீஸார் எப்படி அடக்கினார்கள் என்பதே இந்தப்படத்தின் கதை.

 



பூஜாகாந்தி கன்னடத்தில் மேலாடை இல்லாமல் நடித்த படம் என்ற விளம்பரத்தோடு  தமிழில் ‘கரிமேடு’ என்ற பெயரில் டப்பிங்  படமா ரிலீஸ் ஆகி இருக்கு


பல தரப்பட்ட வயசு உள்ள 8 ஆம்பளைங்க , ஒரு கொடூர லேடி இவங்க முதல்ல ஏரியாவை நோட்டம் போடறாங்க. வீட்ல தனியா லேடீஸ் இருந்தா அந்த வீட்ல போய் முதல்ல இந்த கொடூர லேடி “ குடிக்க தண்ணி குடுங்க” அப்டினு கேட்கும். அவங்க உள்ளே போன கேப் ல கூட்டாளிங்க உள்ளே  வந்து  கொள்ளை அடிச்சுட்டு , அந்த பொண்ணை கொலை பண்ணிட்டு, அதுக்குப்பிறகு  ரேப் பண்ணிட்டு ( ஆர்டர் மாறி இருக்கேன்னு குழப்பம் வேணாம். அப்படித்தான் பண்றாங்க )  எஸ் ஆகிடறாங்க .


 இப்படிப்பட்ட கொடூரமான கும்பலை போலீஸ் எப்படி பிடிக்குது  என்பதே மிச்ச மீதி கொடூரக்கதை .


படத்தின் ஹீரோ , ஹீரோயின் , வில்லி எல்லாமே  பூஜாகாந்தி தான் செம நடிப்பு . அவர் தம் அடிக்கும் ஸ்டைலும் , அசால்டா கொலையை நேரில் கிட்டக்கா பார்ப்பதும் முதுகுத்தண்டு சில்லிட வைக்கும் நடிப்பு .

தலை பூரா விரிச்சு போட்டு  முகத்தில் கொடூரமும் , கண்களில் அசால்ட்த்தனமும் காட்டி நடித்த அந்த மெயின் வில்லன் நடிப்பு  செம. மற்ற கேடிகளின்  சவத்தனமான முகமே பொதுமானதாக இருக்கிறது .. பின்னணி இசை ஒரே இரைச்சல். திகில் ஊட்ட வேண்டிய இடங்களில் மட்டும் அதிரடி இசை கொடுத்தால் போதாதா? என நினைக்க வைக்கிறது

 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஓப்பனிங்க் சீனிலேயே நேரடியாக கதைக்கு வந்து விட்ட  லாவகம்.நகரங்களில் வாழும் மக்கள் , தனியாக வசிக்கும் பெண்கள் எப்படி அலர்ட்டா இருக்கனும்? என கற்றுக்கொடுக்கும் பாங்கில்  அமைக்கப்பட்ட திரைக்கதை



2. தற்கொலை செய்யப்பட்டதாக நம்ப வைக்கும் ஒரு கணவனின் நாடகத்தை அம்பலப்படுத்தும் இன்ஸ்பெக்டரின் லாவகம் சபாஷ் .  தூக்கு போட்டு தற்கொலை செஞ்சா கை விரல்கள்  விரைப்பா இருக்கும் , இப்படி மூடிய வாக்கில் இருக்காது , கயிற்றின் முடிச்சு  பின்னங்கழுத்தில் தான் இருக்கும் , இப்படி சைடில் இருக்காது என அவர் விவரிக்கும் இடம்  ( ஆல்ரெடி ராஜேஸ் குமார் நாவல்களில் வந்திருந்தாலும் ) சபாஷ் போட வைக்குது



3. பாத்திரத்தேர்வு பாராட்டும் விதமாய் இருக்கு. ஒவ்வொரு ஆளும் நிஜக்கேடியோ என எண்ண வைக்கிறது 





 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. சாதா பொது ஜனத்துக்கே எச்சரிக்கை உணர்வும் , ஆபத்து காலத்தில் தற்காக்கும் உணர்வும் இருக்கும், ஒரு போலீஸ் ஆஃபீசர் பைக்கில் போறார். அவருக்கு முன் 20 மீட்டர் தொலைவில் 4 ரவுடிகள் வழி மறிக்க நிக்கறாங்க . அவர் கிட்டே ஒரு தற்காப்பு உணர்வே வர்லையே . அவர் இடுப்புல ரிவால்வர் இருக்கு. அதை எடுக்கலை, பைக்கை வேகமா ஓட்டி எஸ் ஆகி இருக்கலாம். அதைச்செய்யலை. அட்லீஸ்ட் சடன் பிரேக்காவது போட்டிருக்கலாம்.  எதுவுமே செய்யாம அவங்க வந்து அட்டாக் பண்ணும் வரை பார்த்துட்டே இருக்காரே? அந்த போலீஸ் ஆஃபீசர் மன்மோகன் சிங்க் உறவுக்காரரா? 


2. ஒரு ஆளை முடிக்கனும்னா ஃபோட்டோ தரனும் , அல்லது ஸ்பாட்ல ஆளை காட்டனும். 2ம் இல்லாம  இன்ன இடத்துக்கு இந்த டைம்க்கு வர்றவனைப்போட்டுத்தள்ளு என்பது ஏத்துக்கவே முடியலை யே.. 



3. பொதுவா நாய்க்கு மோப்பசகதி அதிகம் .  வீட்டில் காவலுக்கு இருக்கும் வேட்டை நாய்க்கு டீக்கடை பன்னுக்குள்  மயக்க மருந்து வைத்து ரவுடி தர்றான். நாய் எப்படி அதை முகர்ந்து பார்க்காம அதை சாப்பிடுது?



4. ஒவ்வொரு தாக்குதலிலும் பெண்கள் மயக்க நிலைக்கு போயிடறாங்க . எதுக்காக தேவை இல்லாம கொலை பண்றாங்க? என்பதற்கு விளக்கம் இல்லை .எதிர்ப்பு வந்தாலோ, கோர்ட்டில் சாட்சி சொல்லிடுவாங்க என்ற பயம் இருந்தாலோதான் கொலை செய்வாங்க 


5. போலீஸ்க்கு மேட்டர்  தெரிஞ்சாச்சு, கூட்டாளி ஒருத்தனை பிடிச்சுட்டாங்க என்றதும் அலர்ட் ஆகி ஊரை விட்டு எஸ் ஆகாமல் அங்கேயே யாராவது டேரா அடிப்பாங்களா? 

 


6. கொலை செய்யப்படும் காட்சிகள் , ரேப் சீன்கள் நாசூக்காக , குறிப்பால் உணர்த்தும் விதமாய் எடுத்தால் போதாதா? இவ்வளவு கர்ண கொடூரமாய் இருக்கனுமா?  எப்படி சென்சார்ல அனுமதிச்சாங்க? 



7. திரைக்கதை தெளிவாக கொலை, கொள்ளைச்சம்பவத்தைச்சுற்றி போய்ட்டிருக்கும்போது அந்த தம்பதிகள் கதையில் மட்டும் எதுக்கு தேவை இல்லாத டூயட், செண்ட்டிமெண்ட் காட்சிகள் ? 



8.  மிகப்பெரிய கொலை சம்பவம் ஊர்ல நடந்திட்டிருக்கு. போலீஸ் இரவு நேர ரொந்துக்கு ஏற்பாடு செய்யலையா? 


9. இன்ஸ்பெக்டர் கொலையாளீகளை எதேச்சையாக அன் டைமில் பார்த்து அவங்களிடமே “ ஜாக்கிரதையா இருங்க “ என எச்சரித்து அனுப்புவது செம லாஜிக் சறுக்கல். ஆளுங்க எல்லாம் பக்கா கேடிங்க மாதிரி இருக்காங்க . விசாரணை பண்ண மாட்டாரா? 



10. கோயில் சிலையை கொள்ளை அடிப்பவங்க லோக்கல் சேட்டு க்டைல அடமானம் வைக்க மாட்டாங்க , தங்கத்தை உருக்கி விப்பாங்க, அல்லது வெளியூர்ல தான் விப்பாங்க , அவன் அசால்ட்டா பகல் ல பேரம் பேசுவதும் , இன்ஸ்பெக்டர் அந்த நேரத்தில் அங்கே வருவதும் படு செயற்கை 






மனம் கவர்ந்த வசனங்கள்


1.          என்னடா? ஆஃபீஸ்ல இருந்து சீக்கிரமா வந்துட்டே?

நான் வேணா போய்ட்டு அப்புறமா வர்ட்டா?


2.          டியர், வயிறு வலிக்குது , டாக்டர்ட்ட போய் உடம்பை காட்டனும்

என் கிட்டேயே காட்டு



3.          ஏம்ப்பா, வெறும் 5,000 ரூபா, 10,000 ரூபா கூலிக்காக கொலையே பண்ணுவீங்களா?


கொலைக்குப்பிறகு  அவங்க போட்டிருக்கும் நகை , வீட்டில்  இருக்கும் பணம் எல்லாம் எங்களுக்கு  எக்ஸ்ட்ரா போனஸ் மாதிரி 


 


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் – 39 ( இது கன்னட டப்பிங்க் என்பதால் விமர்சனம் போட மாட்டாங்க )


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் – ஓக்கே 


சி.பி கமெண்ட் - விமர்சனத்தின் முதல் பத்தியை படிக்கவும் 


ரேட்டிங்க் - 2.5 /5 


சொந்த ஊரான சென்னிமலையில் அண்னமார் தியேட்டரில் படம் பார்த்தேன் 



 

அம்பிகாவதி பாடாவதி ஆகிடுமா? தனுஷ் அதிர்ச்சி

படம் சொல்லும் கருத்து..நீ எப்படி அப்படியே..
Photo: படம் சொல்லும் கருத்து..நீ எப்படி அப்படியே..
1.கோயில் பிரசாதம் வாங்கப்போகும்போது உள்ளங்கை சூடு தாங்காதவர்கள் சின்ன டிபன் பாக்ஸ் எடுத்துப்போகவும் # ஹி ஹி



----------------------


2.  ஆர்க்கெஸ்ட்ராவில் பாடகர் பாடகியைப்பார்த்தபடியும் ,பாடகி பாட்டு புக்கை பார்த்தபடியும் பாடுகிறார்கள் # நீதி - ஆண் ரசனைக்காரன்



-------------------

3. 'அம்மா' பட்டம் தான் எனக்கு பெருமை: ஜெ பெருமிதம் # அய்யா பட்டம் தான் எனக்குப்பெருமை - மு க தானிக்கு தீனி


----------------------


4. டேமேஜர் ஒய்ப்க்கு போன் பண்ணி நைட் வீட்டுக்கு வர லேட்டாகும்கறார்.ரிசப்ஷனிஸ்ட்க்கு போன் பண்ணி 6 மணிக்கு வந்துடுவேன் கறார்.அய்யோ நாராயணா


----------------------


5. சம்சாரம் ஒரு சாபம் என்பதை போகப் போக புரிந்துகொள்வான் புருஷன்



---------------------------------------



பார்த்து ஆண் நட்புகளே ,இப்போ ரொம்ப பேரு இப்படித்தான் ஏமாந்துபோய் உங்க நேரத்தையும் பணத்தையும் இழந்துவருவதாக நேரிலும் பார்க்கிறோம் ,சில பெண்கள் செய்துட்டும் சொல்றாங்க..!
Photo: பார்த்து ஆண் நட்புகளே ,இப்போ ரொம்ப பேரு இப்படித்தான் ஏமாந்துபோய் உங்க நேரத்தையும் பணத்தையும் இழந்துவருவதாக நேரிலும் பார்க்கிறோம் ,சில பெண்கள் செய்துட்டும் சொல்றாங்க..!

6. டார்கெட் அச்சீவ் பண்ணி முடிச்சதும் செல்போன்ல பில்லா தீம் மியூசிக் போட்டு விட்டு ஆபிஸ்ல ஒரு நடை நடந்தேன்.டேமேஜர் ஜெர்க் ஆகிட்டார்




---------------------


7. CHEVROLET கார்ல போனாலும் நம்மளை ஒரு பிகர் கூட கண்டுக்கல # நீதி - பியூட்டி பார்லர் போகனும்


--------------------


8. வீணா நல்ல பொண்ணா இருந்தாலும் காலை10 மணிக்கு போன் பண்ணி அவங்கம்மா கிட்டே வீணா ஆபீஸ் போயாச்சானு கேட்டா ஆமா வீணா போய்ட்டானு தான் சொல்வாங்



-----------------------



9. 3 நாள்பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் ஜப்பான்செல்கிறார் #-மொழி தெரியலைங்கற கவலை இல்ல.எப்படியும் பேசப்போறது இல்ல




---------------------


10. இண்ட்டர்வியூவுக்கு வந்திருக்கும் 12 பேர்ல 8 பேரு சிம்ம ராசி போல.கால் மேல கால் போட்டு நீலாம்பரி மாதிரி இருக்காங்க



-----------------------





11. ரெகுலரா போடும் ஐ டெக்ஸ் மை யே போட்டுட்டு இருக்காம புது மை போடும் பெண்தான் புது மை ப்பெண்ணா?




----------------------


12. அடக்கு முறையை எதிர்த்து வழக்குத் தொடர முடிவு-ராமதாஸ்# அடேங்கப்பா.கட்சில அவ்ளவ் நிதி இருக்கா?- ஜெ


---------------------



13. அன்பே.உன் கழுத்தில் தாலி கட்ட ரெடி.தாலியுடன் வா.ஹி ஹி பை வெத்து வேட்டு விளக்கெண்ணெய்



-----------------------


14. ஏப்ரல் 1 ந்தேதி மேரேஜ் பண்ணுன மாப்ள முதல் இரவு அறைக்கு போகாம ஐ ஏப்ரல் பூல்னான்.பொண்ணு ஆளே காணோம்.ஹி ஹி




------------------


15. வாலிபால் ப்ளேயர்ஸை எந்தப்பொண்ணுக்கும் பிடிக்காது # லவ் ஆல்


-----------------------



Photo

16. சயின்ஸ் டீச்சர் சவீதா - பால் வீதி - சிறுகுறிப்பு வரை.



லொள் மாணவன் - அமலாபால் குடி இருக்கும் வீதியே சுருக்கமா பால் வீதி எனப்படுது 




---------------------


17. எய்ட்சை வராமலும்/வந்த பின்பும் தடுக்கும் வாழைப்பழம் -மிச்சிகன்பல்கலை கழகம்# இனி சீப்பா கிடைக்காது.காஸ்ட்லி ஆகிடும்



---------------------


18. பேய்க்கு காலே இல்லை.ஆனா சினிமாவுல பேய் வரும்போது கொலுசுச்சத்தம் மட்டும் கேட்கும் #,அடேய்



---------------------

19. ஜூன் -ல் விஜய் -ன் தலைவா , சூர்யாவின் சிங்கம் 2 , தனுஷ்-ன் ராஞ்சனா ( தமிழில் அம்பிகாவதி) ரிலீஸ் # அம்பிகாவதி மட்டும் பாடாவதி ஆகிடும்


------------------------


20. சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ 2 கோடி # நீங்களும் வென்றாச்சு 2 கோடி ,அடுத்த விஜய் ஆக வாழ்த்துகள்


--------------------------


சும்மா கோத்து விடுவோம் ..எல்லோரும் சண்டைப்போடுவாங்க!
Photo: சும்மா கோத்து விடுவோம் ..எல்லோரும் சண்டைப்போடுவாங்க!

Wednesday, May 29, 2013

தள்ளாடும் தமிழகம்... திண்டாடும் டாஸ்மாக்!


தள்ளாடும் தமிழகம்... திண்டாடும் டாஸ்மாக்!

ஒரு போதை நிலவரம்

டி.எல்.சஞ்சீவிகுமார், ஓவியம்: ஹாசிப் கான்

பூரண மதுவிலக்கு கோரி நடையாக நடக்கிறார் வைகோ. ராமதாஸ், தமிழருவி மணியன் தொடங்கி காங்கிரஸின் ஞானதேசிகன் வரை மதுவிலக்கை அமல்படுத்த அறிக்கைப் போர் நடத்துகிறார்கள். தியாகி சசிபெருமாள் வாரக் கணக்கில் உண்ணாவிரதம் இருக்கிறார். தமிழக முதல்வர்  ஜெயலலிதாவின் மனதில்கூட அப்படி ஓர் எண்ணம் இழையோடுவதாகச் செய்திகள் கசிகின்றன. ஆனால், உண்மை நிலை என்ன? பூரண மதுவிலக்கு தமிழகத்தில் சாத்தியமா?

இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, நீங்களே இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியும்!  

முன்பெல்லாம் டாஸ்மாக் கடைக்குச் சென்று ஒரு வாடிக்கையாளர் குறிப்பிட்ட வகை மதுபானம் வேண்டும் என்று கேட்டு வாங்கிவிட முடியும். ஆனால், இப்போது கேட்கும் பிராண்ட் கிடைப்பது குதிரைக்கொம்பு. 'கேட்ட குவார்ட்டர் கிடைக்காதது ஒரு குற்றமா?’ என்று உதாசீனப்படுத்த முடியாத அளவுக்கு, இதன் பின்னணியில் இயங்குவது அசுர அரசியல்!

வெளியே தெரியாத ஒரு சிறு புள்ளிவிவரம்... ஒரு டாஸ்மாக் கடையில் உயர் ரக மதுபானப் பெட்டி ஒன்றை (48 குவார்ட்டர் பாட்டில்கள் அடங்கியது) விற்பனை செய்தால் அந்தக் கடையின் பணியாளருக்குக் கிடைக்கும் கமிஷன் 25 ரூபாய். இது அரசாங்கம் கொடுப்பது அல்ல... சம்பந்தப்பட்ட மதுபான நிறுவனம் கொடுப்பது. தங்கள் நிறுவனத்தின் மதுபானத்தை விற்பனை செய்வதற்கு ஒரு பணியாளருக்கே இவ்வளவு ரூபாய் கமிஷனாகத் தர முன்வரும் மதுபான நிறுவனங்கள், தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் சுமார் 50 லட்சம் பெட்டிகளைத் தங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் சங்கிலித் தொடர் பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு எவ்வளவு லட்சம் கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும்?  

சரி, அப்படி கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்து கொள்முதல் 'செய்யப்படும்’ மதுபானங்கள் முழுமையாக விற்பனையாகின்றனவா? இல்லை... இல்லவே இல்லை! ஏனெனில், மதுபான ஆலை அதிபர்கள் மற்றும் அதிகாரவர்க்கத்தின் லாபத்துக்காக வாடிக்கையாளர்கள் விரும்பாத, மார்க்கெட்டில் விலைபோகாத மதுபானங்களே அதிக அளவில் டாஸ்மாக்கால் கொள்முதல் செய்யப்படுகின்றன. இப்படிக் கடந்த சில ஆண்டுகளாக டாஸ்மாக்கில் விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கும் மதுபானங்களின் மதிப்பு மட்டும் சுமார் 2,465 கோடி ரூபாய்! இவ்வளவு மதிப்புள்ள மதுபானங்கள் தேக்கம் அடைந்திருக்கும் நிலையிலும், மேலும் மேலும் விற்பனை ஆகாத, சந்தையில் டிமாண்ட் இல்லாத மதுபான வகைகளையே கொள்முதல் செய்து குவிக்கிறதே டாஸ்மாக்... ஏன்?  

பொதுவாக, தமிழகத்தில் ஆட்சி மாறினால் காட்சி மாறும். புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனையாக்கப்படுவது முதல் தலைமைச் செயலாளர் டம்மி ஆக்கப்படுவது வரை தலைகீழ் மாற்றங்கள் நிகழும். சாமான்ய வாக்காளன்கூட உணரும் அரசியல் சுழற்சி இது. ஆனால், சாராய வியாபாரத்தில் மட்டும் வேற்றுமையிலும் ஒற்றுமை காண்கிறார்கள் அரசியல்வாதிகள். கடந்த தி.மு.க. ஆட்சியில் சசிகலா சம்பந்தப்பட்ட மிடாஸ் நிறுவனம் எந்த அளவுக்குக் கோலோச்சியதோ, அதைவிட அதிகமாகவே தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் கோலோச்சுகின்றன தி.மு.க. பிரமுகர்களின் மதுபான ஆலைகள்! (பார்க்க பெட்டிச் செய்தி)


தமிழகத்தில் தற்போது 11 மதுபான ஆலைகள் இருக்கின்றன. மேற்கண்ட நிறுவனங்களில் ஓரிரு நிறுவனங்கள் தவிர, மற்றவை அனைத்திலும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் முக்கியஸ்தர்கள்தான் நேரடி, மறைமுகப் பங்குதாரர்களாக இருக்கின்றனர். மேற்கண்ட நிறுவனங்களிடம் மதுபானம் கொள்முதல் செய்வது தொடங்கி டாஸ்மாக் நிர்வாகத்தின் கொள்கை முடிவுகளை வரையறுப்பது வரை முடிவெடுக்கும் அதிகாரம்கொண்ட கமிட்டி ஒன்று இருக்கிறது. அந்தக் கமிட்டியின் தலைவராகக் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தமிழக உள்துறைச் செயலர் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பதவி, துறையின் அமைச்சர் வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அப்போதே இது பல்வேறு சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியது.  


பொதுவாக, டாஸ்மாக் நிர்வாகத்தின் கொள்கை முடிவுப்படி, சாதாரண ரக மதுபானங்கள் 40 சதவிகிதம் (மானிட்டர், ஓரியன் பிராந்தி, ஓல்டு மங்க் ரம் போன்றவை) நடுத்தர ரகம் 40 சதவிகிதம் (எம்.சி., எஸ்.என்.ஜே., டே அண்ட் நைட் பிராந்தி, பேக் பைப்பர் விஸ்கி போன்றவை), உயர் ரகம் 20 சதவிகிதம் (மார்பியஸ், பிரிட்டிஷ் எம்பயர், ஹாப்சான்ஸ் பிராந்தி, சிக்நேச்சர் விஸ்கி) என மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படும். உயர் ரக வகை மதுபானங்கள் டாஸ்மாக்கின் சில்லறை விற்பனையில் அதிக அளவு விற்பனை ஆகாது என்பதாலேயே இப்படி ஒரு முடிவு. ஆனால், துறையின் அமைச்சர் எப்போது டாஸ்மாக் கமிட்டியின் தலைவராக மாற்றப்பட்டரோ அப்போது 'கன்செய்ன்மென்ட் ஆர்டர்’ என்கிற ஒரு புதிய விதிமுறை புகுத்தப்பட்டது. அதாவது, எந்த மதுபான ரகம் அதிகம் விற்பனை ஆகிறதோ அந்த மதுபானத்தைக் கூடுதலாகக் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்பதே அந்த விதி.

''மேலோட்டமாகப் பார்த்தால் இந்த முடிவு நியாயமானதாகப்படும். ஆனால், அதில் இருக்கும் அரசியல் வேறு. ஒரு குறிப்பிட்ட ரக மதுபானம் கொள்முதல் செய்யப்பட்டு, டாஸ்மாக்கின் சில்லறை விற்பனைப் பிரிவுக்குச் சென்று வாடிக்கையாளர் கைகளுக்குச் சென்று காசாக மாறினால் மட்டுமே அது விற்பனை ஆனதாக அர்த்தம். ஆனால், குடோனில் இருந்து கடைகளுக்குக் குறிப்பிட்ட ரக மதுபானங்களை அனுப்பிவிட்டாலே அந்த ரகம் விற்பனை ஆகிவிட்டதாகக் கணக்குக் காட்டப்படுவதுதான் அந்தப் புதிய விதிமுறையின் நடைமுறையில் இருக்கிறது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக் கொள்முதல் ஆர்டர் அளிக்கப்படுகிறது.


 சரக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு டெலிவரி செய்யப்படும். ஆனால், அவற்றை வாங்குவதில் குடிமகன்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இதனால், டாஸ்மாக் கடைகளில் ஏராளமான மதுபானங்கள் விற்பனை ஆகாமல், தேங்கிக்கிடக்கின்றன. நிறைய கடைகளில் அவற்றை வைக்க இடம் இல்லாமல், அருகில் இன்னொரு கட்டடத்தை வாடகைக்குப் பிடித்து இருப்பு வைத்திருக்கிறார்கள்!'' என்கிறார்கள் ஊழியர்கள். ஒரு கடையின் ஒருநாள் விற்பனையைப் பொறுத்து, அதைப் போல் அதிகபட்சம் 10 மடங்கு மதிப்பு கொண்ட மதுபானங்களை மட்டுமே இருப்பு வைக்க வேண்டும். அப்போதுதான் கடையில் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் காப்பீடு கிடைக்கும். இது அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால், இப்போதோ நாளன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் விற்பனை ஆகும் கடையில், சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

அதிலும் கடந்த இரண்டு மாதங்களாக நிலைமை இன்னும் மோசம். மேற்கண்ட மோசடிக் கொள் முதல் விதியும் தூக்கி எறியப்பட்டுவிட்டது. எந்தச் சாராய ஆலை நிறுவனங்கள் அதிகம் கமிஷன் அளிக்க முன்வருகின்றனவோ, அவற்றின் மதுபான வகைகள்தான் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகின்றன.

ஆனால், இவ்வளவு முறைகேடுகள், ஊழல்கள் நடந்தும் டாஸ்மாக் நிர்வாகம் லாபத்தில்தானே இயங்குகிறது. அந்த வருவாயை வைத்துத்தானே தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்கிற கேள்வி எழலாம். நியாயமான சந்தேகம்தான்! இவ்வளவு சீர்கேடுகளைத் தாண்டியும் டாஸ்மாக் கொள்ளை லாபத்தில் கொழிப்பதற்குக் காரணம், அவ்வளவு அநியாயமாகக் குடிக்கிறார்கள் தமிழகக் 'குடி’மகன்கள்! அப்படி எனில், டாஸ்மாக் நிர்வாகத்தைச் சீராக்கினால், இன்னும் எவ்வளவு லாபம் குவியும். (அதற்காக டாஸ்மாக்கை லாபகரமாக நடத்துங்கள் என்று சொல்லவில்லை!)

டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த நடைமுறைகள் குறித்து அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியிடம் விளக்கம் கேட்டேன். தன் பெயரையோ, பொறுப்பையோ வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டவர் பகிர்ந்துகொண்டது பகீர் தகவல்கள். ''துறைரீதியிலான எந்தச் செயல்பாடுகளுக்கும் கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டுமே எங்கள் வேலை. டாஸ்மாக் கடைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவருக்கு நெருக்கமான ஒரு அதிகாரிதான் மொத்த முடிவுகளையும் எடுக்கிறார். இருவரும் பக்கத்துப் பக்கத்து ஊர்க்காரர்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளின் கைகள்கூடக் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இவை எல்லாம் முதல்வருக்குத் தெரியுமா... தெரியாதா என்பதே எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது!'' என்றார்.

2012-13ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் மாநிலத்தின் மொத்தத் துறைகளின் வருவாய் சுமார் 1 லட்சத்து 500 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் நான்கில் ஒரு பங்கு வருமானம் டாஸ்மாக்  நிறுவன விற்பனை மூலம் திரட்டப்பட்டது. இந்த நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டின் மீதான விவாதங்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் தமிழகத்தின் பட்ஜெட்டை மட்டும் அல்ல... அரசியலை, பணப்புழக்கத்தை, குற்றச் செயல்கள் உள்ளிட்ட சமூகத்தின் எதிர்மறை நிகழ்வுகளை... எதிர்காலத் தமிழகத்தின் கணிசமான பகுதியை மறைமுகமாக நிர்ணயிப்பது சாராய ஆலை அதிபர்கள்தான். கசப்பான உண்மை என்றாலும் இது நம் சாபக்கேடு!

இப்போது நீங்களே சொல்லுங்கள்... தமிழகத்தில் முழு மதுவிலக்கு சாத்தியமா?


யார் யாரிடம் எந்தெந்த நிறுவனங்கள்?

கோல்டன் வாட்ஸ் டிஸ்டெல்லரீஸ். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் ராஜா தொடர்புடைய நிறுவனம் இது.


 எலைட் டிஸ்டெல்லரீஸ். தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் இதன் உரிமையாளர்.


 எஸ்.என்.ஜே.டிஸ்டெல்லரீஸ். இதன் இயக்குநர்கள் ஜெயமுருகன், கீதா. கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான 'உளியின் ஓசை,’ 'பெண் சிங்கம்’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் இந்த ஜெயமுருகன்.


 கால்ஸ் டிஸ்டெல்லரீஸ். காரைக்காலைச் சேர்ந்த வாசுதேவன் இதன் மேலாண்மை இயக்குநர். தி.மு.க. முகாமில் நெருக்கமான தொடர்புடையவர்.


 இம்பீரியல் ஸ்பிரிட்ஸ். உரிமையாளர் தரணிபதி ராஜ்குமார். இவரது தந்தை கிருஷ்ணசாமி கவுண்டர் தி.மு.க. ஆட்சியில் தென்னை விவசாயிகள் நல வாரியத் துணைத் தலைவராக இருந்தவர்.

 மிடாஸ். சசிகலாவின் உறவினர்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம்.

இது போக, திண்டுக்கல் அருகே ஆளும்கட்சியின் முக்கியப் பிரதிநிதிகள் இருவர் அனுமதி பெற்று ஒரு சாராய ஆலையைத் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் உற்பத்தி தொடங்கலாம்!

லேபிள் கலாட்டா!  
.தி.மு.க. ஆட்சியில் இரண்டு முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் தங்களுக்கான கொள்முதல் விலையையும் உயர்த்தி அளிக்கும்படி மதுபான ஆலை அதிபர்கள் கேட்டார்கள். சட்ட நடைமுறைகளால் கொள்முதல் விலையை உயர்த்த முடியாது என்று கைவிரித்தது அரசு. அதைச் சமாளிப்பதற்கு இன்னொரு குறுக்கு வழியைச் சொல்லித் தந்தார்கள் அதிகாரிகள். அதாவது, ஏற்கெனவே இருக்கும் பிராண்டின் பெயரில் சப்ளை செய்தால் தானே கொள்முதல் விலையை உயர்த்தித்தர முடியாது? புதிய பிராண்டுகளை உருவாக்கி, அடிப்படைக் கொள்முதல் விலையை உயர்த்தி சப்ளை செய்யுங்கள். 

அந்த பிராண்டுகளுக்கு அதிக விலை தருகிறோம் என்று ரூட் போட்டுக்கொடுத்தார்கள். அதாவது, மதுபான பாட்டிலின் லேபிளை மட்டும் மாற்றுவது. இதனால்தான் மேன்சன் ஹவுஸ் பிராந்தி, மேன்சன் ஹவுஸ் அல்ட்ரா ஆனது. கிங்ஃபிஷர் ஸ்டிராங் பியர், கிங்ஃபிஷர் சுப்பீரியர் ஸ்டிராங் ஆனது. இப்படியாக உருவானவைதான் லா மார்ட்டின், பிரிட்டிஷ் எம்பயர், எம்.ஜி.எம். கோல்டு, மென்ஸ் கிளப், அரிஸ்டோகிராட், ராயல் அக்கார்டு போன்றவை எல்லாம். இன்றும் வாரத்துக்கு நான்கைந்து புது பிராண்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இப்படி வெறும் லேபிள்கள் மட்டும் மாற்றப்பட்ட மதுபானங்களுக்குக் 'குடி’மகன்கள் கொடுக்கும் கூடுதல் விலை எவ்வளவு தெரியுமா? குவார்ட்டருக்கு ரூபாய் 10 முதல் 30 வரை. அரசு கொடுக்கும் கூடுதல் கொள்முதல் விலை ரூபாய் 5 முதல் 10 வரை. இரண்டுமே... மக்கள் பணம்தான்!

thanx - vikatan 

 readers views

1.வார்த்தைக்கு வார்த்தை அம்மா, புரட்சி தலைவி என்று சொல்லும் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் இந்த மதுக்கடை புறச்சியைப் பற்றித்தான் சொல்கிறார் என்பது தெளிவாகிறது. ஜெயலலிதா ஆட்சிக்கும் வந்ததிலிருந்து மக்கள் நல திட்டங்களில் வறட்சிதான். மதுக்கடையில் மட்டும் திமுக வை விட, அதிமுக புரட்சி படைத்துள்ளது.

2. திமுக, அதிமுக இரண்டும் ஒரே (ஊழல்) குட்டையில் ஊறிய இரு மட்டைகள் ' என்று சும்மாவா சொன்னார் கர்ம வீரர் காமராஜர் ! சசி கலாவுக்கும் , டிஆர்பாலுவுக்கும் ஒரு கேள்வி ! அமிர்தமும் ஓர் அளவிற்கு மேல் போனால் விஷமாகி விடுமே ! வரும் போது எதை எடுத்துக் கொண்டு வந்தீர்கள் ? போகும் போது எதை எடுத்துக் கொண்டு போகப் போகிறீர்கள் ? இத்தனை குடும்பங்கள் வயிறெரிந்தால் அந்தப் பாவம் உங்கள் இருவரையும் சும்மா விடுமா? விடாது ! அது இறைவன் ஆணை!

3. மதுக்கடைகளால் ஒரு நாளைக்கு சாராசரியாக ஆறாயிரம் தாலிகள் அடகு கடைக்கு ஹிந்தி பயில போகின்றன, மதுகடைகளால் ஒரு நாளைக்கு சாராசரியாக ஆறுநூறு தாலிகள் கழுத்தில் இருந்து இறங்குகின்றன... ஆம், அரசு தரும் "தாலிக்கு தங்கம் திட்டம்" ரொம்ப முக்கியமாக்கும்....


4. பாஸ்பரஸ் குண்டு போட்டு 40 ஆயிரம் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சே என்ற மிருகத்தை விட இவர்கள் கொடியவர்களே!

இந்தியாவின் முக்கிய பிரச்சினை புற்றீசல் போல் மக்கள் தொகை பெருக்கம். இப்படி மதுவை எதிர்ப்பவர்கள் முதலில் இந்த மக்கள் தொகை பெருக்கத்தை எதிர்க்க வெண்டும். இந்தியாவில் எல்லாவற்றிக்கும் தட்டுப்பாடு - தண்ணி, மின்சாரம், மணல், நிலம் ... ஒன்றை தவிர அது தான் மக்கள் தொகை. மக்கள் தொகை பெருக்கத்திற்கு முன் இந்த மது ஒன்றுமில்லை. முதலில் இதை நிவர்த்திக்க போராடுங்கள்.

6. ஒரு காலத்தில் இதே திராவிட கட்சிகள் ஜமீந்தார்கலையும் நிலசுவந்தார்களையும் கையை காட்டி ஏழையின் சிரிப்பில் இறைவனை காட்டுகிறோம் என்று கூறி மக்களை ஏமாற்றி இன்று அனைத்து திராவிடகழக கட்சிகாரர்கள் பெரிய நிலசுவாந்தார்கள் ஆகிவிட்டர்கள் ஆனாலும் இன்னும் தமிழர்கள் இவர்களை இனம் கண்டு கொள்ளவில்லை உதாரணம் கருணாநிதி,மாறன் குடும்பங்கள்,இந்திய அளவில் எடுத்தால் மத்தியில் சோனியா குடும்பம் மகாராஷ்ட்ராவில் சரத்பவார் குடும்பம் சிவசேன குடும்பம்,நிதீன்கட்காரி குடும்பம் உ பில் மாயாவதி,முலயன்சிங்க்ஹ் குடும்பம் ஆந்திராவில் மறைந்த முதல்வரின் குடும்பம்,கர்நாடகாவில் ரெட்டி குடும்பம் இவ்வாறு அடிக்கிக்கொண்டே போகலாம்,ஒட்டு மொத்தமாக இந்தியாவில் உள்ள எந்த அரசியல் வாதியும் யோக்கியர்கள் இல்லை என்பது தெள்ள தெளிவு.

7. இந்த மதுவெனும் குடும்பத்தை வெட்டி அழிக்கும் கோடாரியை தினமும் குடித்து நாசம் செய்யும் பெருங்குடிகாரர்களே, இது தினமும் குடும்பத்தினரை துன்புறுத்தி,குருதி கண்ணீர் சிந்த வைப்பதற்கு பதிலாக நீங்கள் ஏன் ஒரே ஒரு நாள், ஒரே ஒரு முறை, ஒரே ஒரு குடுவை, நஞ்சை குடித்து விட்டு மடியக்கூடாது?.... உங்களது பிரிவை எண்ணி உங்களது குடும்பத்தினர் ஒரு வாரம் வேண்டுமானால் அழுவார்கள், அதன் பிறகு உங்களது குடிவெறி தந்த பெரும் தொல்லைகள் எல்லாம் தொலைந்து, நன்குழைத்து நிம்மதியாக வாழ்வார்கள்....

சுமாரான ஃபிகர்கள் கூட ஆண்களைக்கவரக்காரணம் என்ன?

1. சுமாரான ஃபிகர்கள் கூட ஆண்களைக்கவரக்காரணம் 


1. வேற ஏதும் சிக்கலை 


2 ஆண்கள் எப்பவும் அலர்ட்டா இருக்கனும் , விட்டா கிடைக்காது


-----------------------------------


2. சார், ஏ ஆர் ஆர் இசைல உங்க பையன் யுவன் பாடறாராமே?



 இசைஞானி - தப்பு, யுவன் பாட்டுக்கு ஏ ஆர் ஆர் மியூசிக் போடறார், அவ்ளவ் தான் 



---------------------------


3. மிஸ், இந்த காலேஜ்லயே நீங்க தான் களையா இருக்கீங்க 



.. ம் தாங்க்ஸ் 


.. அதாவது வயல் ல பயிர்கள் நடுவே தேவை இல்லாத களை இருக்குமே அது போல 


-----------------------


4. ஆண்கள் கிரிக்கெட் பைத்தியமா இருந்தாலும் அது அப்பப்ப , பெண்கள் சீரியல் பைத்தியமா இருப்பதால் தினமும் சண்டை வருதே?


-------------------------


5. DR,நான் எப்பவும் ஃபாஸ்ட் புட் சாப்பிடுவேன்னு எப்டி கண்டுபிடிச்சீங்க? 



நர்ஸ் 1 பர்லாங்க் தூரத்துல இருந்து வரும்போதே கண்ல பல்பு எரியுதே 


-------------------------------


6. ஸ்டெனோவுக்கு டேமேஜர் முத்தம் கொடுத்தா அதுதான் அதிகார கிஸ் பிரயோகம்



--------------------------


7. ஸ்பின் பவுலிங்க் தானே போட்டீங்க? எதுக்கு 1 கிமீ ஓடி வந்தீங்க? 



பேட்ஸ்மேனை குழப்பத்தான் 


--------------------------


8. தனக்கு எடுபுடி வேலை செய்யும் வரை ஒரு ஆண் நல்லவன் அவனுக்கு ஏதாவது அத்த அவசரம்னு உதவி கேட்டா கெட்டவன் #பெண் கணக்கு


---------------------------


9. பிகர்களை கடந்து செல்பவன் மனிதன்.பாலோ பண்ணி வீடு கண்டுபிடிப்ப்வன் மன்மதன்.நீ யார்?


------------------------


10. டியர்.என் போன் பப்ளிக் பிராப்பர்டி மாதிரி.அடிக்கடி SMS பண்ணாதீங்க.என் தங்கச்சி படிச்சிட்டா வம்பு. 



ஐ ஜாலி ஹி ஹி 


------------------------


11. டியர்.உன் தோழியையும் சினிமாக்கு கூட்டிட்டு வா.


 எதுக்குடா? 


போகப்போறது 3 பேர் 3 காதல் 


-------------------------------


12. வடை சூடா இருக்கறது தெரியாம வாய்ல வெச்சா அதுதான் வாயில வட சுடறதா?


--------------------------


13. அன்பே! ஒரு இஞ்ச் தாண்டியதற்கே கூப்பாடு போட்டாயே! சீனாவைப்பார்.10 கிமீ எல்லை தாண்டியும் இந்தியா கண்டுக்கவே இல்லையே!


------------------



14. நர்சை சிஸ்டர் னு கூப்பிடும் டாக்டரை நாம மச்சான் னு கூப்பிட்டுட்டா நர்ஸ் நமக்கு முறைப்பொண்ணு ஆகிடும்.ஹி ஹி ;-)


------------------------


15. டாக்டர் ஆவது உன் லட்சியமாக இருந்தாலும் நர்ஸை லவ் பண்ணினா தற்காலிகமா பேஷன்ட் ஆக அட்மிட் ஆகிக்கொள்க



------------------------

16. டியர், உன் கூந்தல் இவ்ளவ் நீளமா இருக்கே? எப்டி? 


ஹி ஹி 2 சவுரி வெச்சிருக்கேனே?


-----------------------


17. டியர் , ஐ லவ் யூ டூ மச்


.. புதுசா ஏதாவது சொல்லுங்க, போர் அடிக்குது 


. ஐ லவ் யுவர் சிஸ்டர் ஹி ஹி 


-----------------------------


18. எங்களை குடிகாரர்களாக மாற்றியது எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் தான். -கா.வெ.குரு.# சொந்த புத்தியை வாடகைக்கு விட்டுட்டீங்ளாண்ணே ?



---------------------


19. சொந்த) பொண்டாட்டி கிட்டே அடி வாங்காத புருஷனும் ,புருசன் கிட்டே செல்லக்கடி வாங்காத பொண்டாட்டியும் உலகத்தில் இல்லை




---------------------


20. டியர்.மேரேஜ்க்குப்பிறகு 24,மணி நேரமும் உன் கிட்டே பேசிட்டே இருக்கனும்.அது தான் என் ஆசை.

சுத்தம்.அடுத்த ஸ்டெப்க்கு போக்வே மாட்டியாடா?


--------------------------

Tuesday, May 28, 2013

ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் = 2013 ஃபிகர் # எப்படி?

1.டியர்.5 வருசமா லவ் பண்றோம்.திடீர்னு கழட்டி விட்டா எப்டி ?




,50 வருசம் மார்க்கெட்ல இருந்த ஜான்சன் & ஜான்சனையே கழட்டி விட்டுட்டாங்க

------------------------




2.சாதா அப்பாவுக்கும், கவர்மெண்ட் ஜாப்பில் இருக்கும் அப்பாவுக்கும் என்ன வித்தியாசம்? 

சாதா அப்பா - மரம் மாதிரி வளர்ந்திருக்கே.அறிவில்ல. ? 



GOVT JOB DAD - அரச மரம் மாதிரி வளர்ந்திருக்கே.அறிவில்ல?

------------------------


3.ஆல் வன்னியர்ஸ் யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் ! மரக்காணம் கலவரத்துக்குப்பின் நீங்க எல்லாம் பாமக வை மறக்கோனும்.

-------------------------



4.லேடி போலீஸ் - நைட்டியை கிண்டல் பண்ணினே இல்ல.நட ஸ்டேஷனுக்கு. 



என்னங்க அநியாயம்? நைட்டி போட்டவங்க கோபப்படக்கூடாது

-----------------------------




5.நைட் டீ குடிப்பது் தப்பு.பகல் ல நைட்டியோட சுத்தினா ஒரே அப்பு # சும்மா ரைமிங்க்காக

-----------------------------




6.உன் கழுத்தில் கை வைத்தேன்.நீ (NECK ) நெக்குருகிப்போனாய்!

----------------------------




7.நமக்குள் ஏதோ இருக்கு என ஊரே கொளுத்திப்போட்டது.ஜெகஜோதி யாய் பற்றி எரிகிறது நம் காதல்

------------------------------




8.அன்பே! உனக்கே உனக்கான ஒரே பாலோயராக இருக்க ஆசைப்படறேன்.என்ன சொல்றே?

------------------------------




9.உன் கழுத்தில் அணிந்திருக்கும் நெக்லசை பரிசோதிக்கும் என் கள்ளத்தனத்தை நீ உணர்ந்தே தான் அனு மதிக்கிறாய்

------------------------------





10.உன் மீது நான் காதலில் விழுவதும் ,வேண்டுமென்றே உன் மீது நான் விழுவதும் வீழ்ச்சி அல்ல !

---------------------------------




11.என்னைப்பார்க்கும்போதெல்லாம் சிணுங்கி னாயே! என்னைப்பார்க்கமுடியாத போதெல்லாம் வருந்தி னாயே !

---------------------------------




12.பிரிவினைவாதிகளாய் இருக்கும் உன் உதடுகளை ஒன்று சேர்க்கும் ஒருங்கிணைப்பாளன் நான். ( கோ ஆர்டினேட்டர் ஆப் த டெர்மினேட்டர்)

-------------------------------




13.நமது காதல் உறுதி செய்யப்பட்டபின் நீ எந்தப்புறம் இருந்து என்னைப்பார்த்தாலும் அந்தப்புரத்தில் இருப்பது போலவே உணர்கிறேன்

---------------------------------



14.உன் வாசங்களை என்னுள் நிரப்பி விட்டு வீடெங்கும் நேசத்தை தெளித்து விட்டு நீ பாட்டுக்கு போய் விட்டாய்

-----------------------------




15.பேஷன்ட் பிழைச்சுடுவாரா ? 



டாக்டர் நாராயணசாமி - 15 நாள் கழிச்சுத்தான் எதையும் சொல்ல முடியும்

------------------------------




16.ஹலோ.அன்புமணி சார்.உள்ளே போன அப்பாவைப்போய்ப்பார்த்தீங்களா?



 ம் ம் அரசாங்க செலவில் அவங்களே கூட்டிட்டுப்போனாங்க

----------------------------------





17.ஆண்களிடம் அசால்ட்டாகப்பழகி விடலாம்.பெண்களிடம் பழக மிக்க ஜாக்கிரதைத்தன்மையும் ,வரம்பு மீறாத கண்ணியமும் தேவைப்படும்



------------------------------





18.ஜெ ( மைன்ட் வாய்ஸ் ) - எப்படியோ முதல் கட்டமா ஒரு செட் அப்பா பையனை உள்ளே தள்ளியாச்சு.அடுத்த டார்கெட்...

-----------------------------




19.டாடி.மேரேஜ் பண்ண எவ்ளவ் செலவு ஆகும் ? 



அது கம்மிதான் ஆகும்.ஆனா பண்ணின பிறகு டெய்லி செலவு ஆகிட்டே இருக்கும்

------------------------------





20.மணமான மணாளனின் வீட்டு சுவரில் எழுதப்பட்ட வாசகம் - என்னை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்.ஏற்கனவே ஒருத்தி ரொம்ப தொந்தரவு பண்ணிட்டிருக்கா

மதன் கார்க்கி - கலைஞர் தூது போன காதல்! -வி.ஐ.பி.களின் காதல் அரங்கேற்றம்

வி..பி.களின் காதல் அரங்கேற்றம்
கொஞ்சு புறாவே

கலைஞர் தூது போன காதல்!

கதிர்பாரதி
மதன் கார்க்கி

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு... இந்தப் பஞ்சபூதங்களில் எதுதான் காதல்? இவையெல்லாம் கலந்ததுதான் காதலென்றால் அண்ணா பல்கலைக் கழகத்தில் என்னையும் நந்தினியையும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நனைத்த மழையை ஏன் காதலென்று சொல்லக்கூடாது! இப்போது பெய்கிற மழையில் அப்போது பெய்த மழையை இனங்காண முடிகிற உணர்வுதானே காதல்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் படிப்பை முடித்துவிட்டு ஆராய்ச்சிப் படிப்புக்காக நான் ஆஸ்திரேலியாவுக்குப் பறக்கிறவரை என் காதலை நந்தினியிடம் சொல்லவில்லை. அப்போது என் காதலுக்கு வயது ஐந்து. என்.சி.சி.யில் நான் சீனியர் மாணவன்; நந்தினி ஜூனியர். இந்தளவில் இருந்த எங்கள் அறிமுகத்தை காதலை நோக்கித் திருப்பி வைத்ததெல்லாம் நான் செக்ரெட்ரியாக இருந்த கம்ப்யூட்டர் சொஸைட்டிதான். அது மாணவர்களின் கம்ப்யூட்டர் திறன் மட்டுமல்லாத மற்ற திறமைகளுக்கும் நாற்றங்கால். அங்கே நந்தினி என் அப்பாவின் கவிதைகளையும் கலீல் ஜிப்ரானின் படப்புகளையும் பற்றிப் பேசியதும் எழுதியதும் அவளைத் தனித்துக் காட்டியது. அப்போதிருந்தே நான் நந்தினியைக் கவனிக்க ஆரம்பித்திருந்தேன். ஆனால் நந்தினிக்குள் நான் காதலாக அப்போது இல்லை. வெறும் நட்பாகத்தான் இருந்தேன்.
அப்போதெல்லாம் நந்தினியோடு என்ன பேச வேண்டும் என்பதை ஒரு பேப்பரில் குறிப்பெடுத்துக் கொள்வேன். பிறகுதான் பேசுவேன். குறிப்புகளுக்கு இடையில் இந்த இடத்தில் நந்தினி சிரித்தால், இந்தப் பதில்; சிரிக்காவிட்டால் இந்தப் பதில் என்றெல்லாம் காதலை வீட்டுப்பாடமாகச் செய்தவன் நான். நந்தினி சிரிக்க வேண்டும் என்று நினைத்த இடத்திலெல்லாம் சிரித்தாள். இந்த அனுபவத்தைத்தான்காதலில் சொதப்புவது எப்படி?’ படத்தின்அழைப்பாயா...’ பாடலில் இப்படிப் பதிந்து வைத்தேன்.
நானென்ன பேசவேண்டுமென்று சொல்லிப் பார்த்தேன் / நீ என்ன கூற வேண்டுமென்றும் சொல்லிப் பார்த்தேன் / நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன் / நீ எங்கு புன்னகைக்க வேண்டுமென்றுகூட சேர்த்தேன்
ஆஸ்திரேலியாவில் இருந்த ஒருநாளில் நந்தினிக்கு நான்தான் சாட்டில் என் காதலைச் சொன்னேன். நான் மத்தியதர வகுப்பு. உங்களோடது பெரிய குடும்பம் ஒத்துவராது என்று முதலில் மறுத்தவளுக்கு முற்றாக மறுக்க மனமில்லை. ஆஸ்திரேலியாவில் என் படிப்பு எனக்குக் கொடுத்த அழுத்தம், லட்சியம் எல்லாம் என்னை நந்தினியிடமிருந்து விலக வைத்தது. நந்தினிக்கும் அப்படித்தான். அவள் மேல்படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டாள். ஐந்து வருடங்கள் என் தேடல்களை நோக்கி ஓடிக் கொண்டிருந்தேன். நந்தினியும் அப்படித்தான் அமெரிக்காவில் ஓடிக் கொண்டிருந்திருக்கிறாள்.
ஆராய்ச்சிப் படிப்பெல்லாம் நான் முடித்து விட்டு இந்தியா வருகிற சமயத்தில் என் அப்பா என்னைப் பற்றி குமுதத்தில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். ‘என் தோள்வரைக்கும் வளர்ந்துவிட்ட என் மகனை, தோளைவிட்டுக் கீழிறக்கிவிடும் காலம் வந்துவிட்டது. இனி அவன் திசை, அவன் வானம், அவன் சிறகு. திருமணம் செய்து வைக்கலாம் என்றிருக்கிறேன் பார்க்கலாம் எந்தத் தேவதைக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோஎன்றெல்லாம் அந்தக் கட்டுரையில் எழுதி இருந்தார். அப்போதுகூட என் மனத்தில் நந்தினியின் ஞாபக நிழல் இல்லை. திருமணத்துக்குத் தீவிரமாக பெண் தேடும் மும்முரத்தில் ஒரு நாள் என் அப்பா கேட்டார்.
உன் மைண்ட்ல யாரும் இருக்காங்களா? "
அப்படியெல்லாம் ஒருத்தருமில்லை. நீங்க பொண்ணு பாருங்க" என்று சொல்லிவிட்டேன். பின்பு யதேச்சையாக ஆர்குட்டில் நந்தினியைப் பிடித்தேன்.
எப்படி இருக்கீங்க"- நான்தான் ஆரம்பித்தேன்.
நல்லாருக்கேன். அமெரிக்காவில் வேலையில் இருக்கேன்" - என்றாள் நந்தினி.
கல்யாணம் ஆயிடுச்சா?"

கல்யாணம் பண்ணிக்கறதா ஐடியா இல்லை. நிறைய பயணம் போகணும். உலகத்தை அப்சர்வ் பண்ணணும். விரிந்து பரந்த உலகத்தில் விடை தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கே!" என்றெல்லாம் பேசிக்கொண்டு போன நந்தினியிடம், வீட்டுல பொண்ணு பார்க்கறாங்க. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன். " - சாட்டில் தட்டிவிட்டுவிட்டு, நந்தினியின் பதிலுக்காகக் காத்திருந்த நொடிகள் கனமானவை.
சரின்னுதான் தோணுது. நீங்களும் நானும் சேர்ந்து வாழறது அர்த்தமுள்ளதா இருக்கும். நான் இன்னும் ஒரே வாரத்துல உங்களை இந்தியாவுல வந்து பாக்கறேன்" என்று நந்தினி சொன்னதும் எனக்குள் நந்தினிக்காக ஆகாயம் விரிய ஆரம்பித்தது. ஆகாயம் பழசுதான் ஆனால் சிறகு புதிது. அவள் என்னை வந்து பார்ப்பதாகச் சொன்ன நாள் என் பிறந்தநாள் மார்ச் 10 அன்று.
இப்போது அப்பாவிடம் வந்து நின்றேன். நந்தினியைப் பற்றிச் சொன்னதும் அவருக்குக் கோபம். ஏன் ஆரம்பத்தில் சொல்லவில்லை. நண்பர்களிடம் சொல்லி பெண்ணெல்லாம் பார்த்துவிட்டேனே முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் ஏன் இப்படி?" என்ற அப்பாவின் வாதத்தில் மகனின் வாழ்க்கை நலமாக இருக்க வேண்டுமே என்கிற கவலை இருந்தது.
அப்பா, என் விருப்பம் நந்தினி. உங்கள் சம்மதத்துக்காகக் காத்திருக்கிறோம் இருவரும்" என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். தம்பியைத் தூதனுப்பினேன். தாயை அனுப்பினேன். நண்பனை பேசவைத்தேன். அப்பா அசைந்து கொடுக்கவில்லை. எனக்கும் வேறு வழி தெரியவில்லை. என் காதலைத் தூக்கிக் கொண்டு கலைஞரிடம் போய்விட்டேன். அப்போது அவர் தமிழகத்தின் முதல்வர். என் காதலைக் காது கொடுத்துக் கேட்டவர், கவலைப்படாதே என் குடும்பத்தில் நிறைய காதல் கல்யாணம்தான். உன் அப்பாவிடம் பக்குவமாகப் பேசுகிறேன்" என்று என் காதலுக்குக் கைகொடுத்தார்.
மறுநாள் காலையில், நான் என் காதலுக்காக கலைஞரைப் பார்த்துவிட்டு வந்த விஷயத்தை அவர் என் அப்பாவின் காதுக்குள் போட்டுவிட்டார். கலைஞரோடு அப்பா பேசி முடித்ததும், என் வீட்டில் அப்பாவின் கோப அலை.
கலைஞரிடம் உன்னைப் போக வைத்தது யார்? எப்படிப் போகலாம்..." என்று பொரிந்து தள்ளிவிட்டு, சரி நந்தினியை வரச் சொல்," என்றதும், எனக்கு சந்தோஷம். நந்தினியை வரவைத்து அப்பாவோடு அரைமணி நேரம் பேச வைத்தேன்.
காதலைப் பற்றிப் பேச வந்தவள், அப்பாவின்கள்ளிக் காட்டு இதிகாசம்நாவலையும்ரிதம்படத்தின் பாடல்களைப் பற்றியும் பேசிய தைரியசாலி நந்தினி. அப்போதுகூட அப்பா இறங்கி வரவில்லை.
எங்கேயும் வெளியே சுற்றாதீர்கள்" என்று கட்டளை போட்டுவிட்டு கவிதை எழுத போய்விட்டார். அவர் சொன்னதிலும் நியாயம் இருந்தது. அமெரிக்காவிலிருந்து என்னைப் பார்க்க நந்தினி இந்தியா வருவதற்குள் அந்த மாத போன் பில் மட்டும் எழுபத்தைந்தாயிரம் கட்டினேன். அப்போது எனக்கு அண்ணா பலகலைக்கழகத்தில் பார்ட் டைம் வேலையில் மாதச் சம்பளமே இருபதாயிரம்தான்.
நந்தினியோடுதான் என் திருமணம் என்ற என் பிடிவாத நியாயத்தை அப்பா புரிந்து கொண்டார். கலைஞர் தலைமையில் என் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. எங்கள் காதலின் உயிர்சாட்சியாக மகன் ஹைக்கூ வந்து விட்டான். பயணமும் உணவும்தான் எங்களுக்கான புரிதலை , காதலை அதிகப்படுத்தி இருக்கிறது. டாஸ்மேனியாவில் நானும் நந்தினியும் காரில் சுற்றிய 3000 கி.மீ. பயணம், அவளை இன்னும் நெருக்கமாக உணர வைத்தது. என் பாடல்களை நந்தினி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது இன்னும் எங்கள் காதல் அடர்த்தியாகி இருக்கிறது.
மொழியை நம்பி ஓடிக்கொண்டு இருப்பவனுக்கு காதல் நல்ல ஆசுவாசம்தான். அதுவும் திரைத்துறையில் ஓடிக்கொண்டிருக்கிற எனக்கும் என் லட்சியத்துக்கும் ஆசுவாசமாக காதல் இருக்க வேண்டிய இடத்தில் நந்தினியை நிற்க வைத்திருக்கிறது காலம். கடல் படத்தில் நான் எழுதிய கீழ்க்கண்ட பாடலைப் போல
மனச தொறந்தாயே... நீ /எங்கிருந்து வந்தாயோ நீ?/ அடியே... அடியே / என்ன எங்க நீ கூட்டிப் போற?

நன்றி - கல்கி