ஓஸ்: தி கிரேட் அண்ட் பவர்ஃபுல்
பிரபல
நாவலாசிரியர் எல். பிராங் பெளம் எழுதிய "தி ஒண்டர்ஃபுல் வைஸாட் ஆஃப் ஓஸ்'
என்கிற நாவலைத் தழுவி 1939-ஆம் ஆண்டு "தி வைஸாட் ஆப் ஓஸ்' என்கிற படம்
வெளிவந்தது. அந்தக் கதையில் வந்த சம்பவங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை
அடிப்படையாகக் கொண்டு தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் படம்தான் "ஓஸ்: தி
கிரேட் அண்ட் பவர்ஃபுல்'.
வால்ட் டிஸ்னி நிறுவனம் இத்
திரைப்படத்தை 200 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கியுள்ளது. இத்
திரைப்படம் 2ஈ, டிஜிட்டல் 3ஈ, ரியல் 3ஈ, ஐமாக்ஸ் 3ஈ ஆகிய நான்கு முறைகளில்
எடுக்கப்பட்டுள்ளது. எல். பிராங் பெüளம் எழுதிய 13 நாவல்களை படமாக்கிய
வால்ட் டிஸ்னி நிறுவனம் தற்போது 14ஆவது நாவலை படமாக்கி வெளியிடுகிறது."
ஸ்பைடர்மேன்' படத்தின் மூன்று பாகங்களையும் இயக்கியிருந்த ஸாம் ரெய்மி இப்படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தின்
முதல் 15 நிமிடக் காட்சியில் கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ளன.
15ஆவது நிமிடத்தில் திரைக்கதையில் ஏற்படும் ஒரு முக்கிய மாற்றத்திற்கேற்ப
காட்சி வண்ணமயமாக மாறும்.இப்படத்தின் கதை நிகழும் ஆண்டு
1905. படத்தின் கதை இதுதான். ஒரு சர்க்கஸ் கம்பெனியில் மேஜிக் செய்பவனாக
பணிபுரிகிறான் கதாநாயகன் ஆஸ்கர் டிக்ஸ்.
ஒருநாள் அவனோடு பணிபுரியும்
மற்றொரு ஊழியனுக்கும் அவனுக்கும் சண்டை வருகிறது. ஆஸ்கர் டிக்ஸ் கோபத்துடன்
ஒரு ராட்சச பலூனில் ஏறி சர்க்கஸ் கம்பெனியை விட்டு பறந்து விடுகிறான்.அந்த
பலூன் பல்வேறு விதமான பகுதிகளை கடந்து செல்கிறது. ஆஸ்கர் டிக்ஸ் பல்வேறு
குணமுடைய மனிதர்களை, விலங்குகளை வழி நெடுக பார்க்கிறான். முடிவில் "ஓஸ்'
என்கிற அழகிய ஊருக்கு வந்து சேருகிறான்.
அங்கு இருக்கும் மனிதர்களால்
அவனுக்கு ஏற்படும் சுவையான அனுபவங்களே திரைக்கதையின் அடிநாதம்.இப்படத்தில் ஜேம்ஸ் ஃபிராஸ்கோ, மைக்கேல் வில்லியம்ஸ், ராஷெல் வெய்ஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.குழந்தைகள்
முதல் பெரியவர் வரை எல்லா தரப்பினரும் ரசிக்கும் விதமாக
உருவாக்கப்பட்டுள்ளது வால்ட் டிஸ்னியின் "ஓஸ்: தி கிரேட் அண்ட் பவர்ஃபுல்!'
நன்றி - தினமணி
0 comments:
Post a Comment