நம்ம ஊர்ல நடந்த ஒரு உண்மைச்சம்பவம் -ஹிதேந்திரன் என்ற சிறுவனின் உடல் உறுப்பு தானம் பற்றிய கதையை மலையாளத்துல டிராபிக் என்ற பெயரில் எடுத்து ஹிட் ஆக்கினாங்க , அதை ரீ மேக்கி இருக்காங்க . இது எப்படின்னா தமிழன் தமிழ் நாட்டில் கிடைக்கும் 10 ரூபா இளநீரை வாங்கிக்குடிக்காம அந்த இளநீரை அமெரிக்காக்காரன் நம்ம நாட்டில் வந்து வாங்கி அவங்க நாட்டுக்குக்கொண்டுபோய் பாலிபேக்ல பேக் பண்ணி 100 ரூபாய்க்கு விக்கும்போது அதை வாங்கிப்பான். அந்த மாதிரி
மாமூல் மசாலாக்கதைகளை பார்த்து சலித்த கண்களுக்கு இது மாதிரி வித்தியாசமான களத்தில் சொல்லப்படும் கதைகள் ஆச்சரியத்தைத்தருவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை
குடும்பத்துக்கு நேரம் ஒதுக்காத சினிமா சூப்பர் ஸ்டார் பொண்ணுக்கு மாற்று இருதயம் 1 வேணும்.அதுவும் உயிரோட இருக்கும் ஆளின் இதயம் தான் வேணும். ஒரு விபத்தில் பலி ஆகி மூளைச்சாவு ஏற்பட்டு நிச்சய இறப்பு என உறுதி ஆன ஒரு கேஸ். அந்தப்பையனோட இதயத்தை இந்தப்பொண்ணுக்கு பொருத்தனும் .டிராபிக் உள்ள பகல் டைம்ல சென்னை டூ வேலூர் 170 கிமீ வேகத்துல 90 நிமிடங்கள் ல போய் ஆகனும். இதை எப்படி சக்சஸ் ஃபுல்லா செய்யறாங்க என்பதுதான் திரைக்கதை
சமீபத்தில் எனக்குத்தெரிந்து இத்தனை கதாப்பாத்திரங்களை வைத்து அத்தனை பேரையும் நம் மனசில் பதித்து பிரமாதமான, குழப்பமே இல்லாமல் ஒரு திரைக்கதை வந்ததில்லை . கதைப்போக்கு மணி ரத்னத்தின் ஆய்த எழுத்தை ஒத்திருந்தாலும் , திரைக்கதை சாயல் எங்கேயும் எப்போதும் படம் மாதிரி இருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு இது ஒரு முக்கியமான படமே..
படத்தில் கம்பீரமான நடிப்பு சரத் குமாருடையது .ஆபரேஷன் லீடர் இவர் தான் . போலீஸ் ஆஃபீசர் , நாட்டாமை ஆகிய 2 கேரக்டர்களும் சரத்துக்கு அல்வா சாப்பிடுவது போல . அசால்டாக செய்து இருக்கிறார். அவர் காட்டும் பாடி லேங்குவேஜ் , உடல் மொழி , கம்பீரம் , தோரணை புது நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று .
ஆபரேசனை வெற்றிகரமாக நடத்தும் முக்கிய ஆள் அந்த காரின் டிரைவராக போலீஸ் காரர் சேரன் .சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட குற்ற உணர்ச்சி அவர் முகத்தில் தாண்டவம் ஆடுது .தன்னை நிரூபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பை அவர் பயன் படுத்திக்கொள்வதில் ஒரு சுய நலம் இருந்தாலும் அதில் பொது நலனும் இருப்பதால் நோ இஸ்யூஸ்
குடும்பத்தின் மீது கவனம் செலுத்தாமல் எப்போதும் பிசியாகவே இருக்கும் சூப்பர் ஸ்டாராக பிரகாஷ் ராஜ். ஆர்ப்பாட்டமான நடிப்பு , அவர் மனைவியாக வரும் ராதிகா இந்தப்படத்தின் புரொடியூசர் என்பதற்காக அவருக்கு அதிக சீன் எதுவும் வைக்காமல் அண்டர்ப்ளே ஆக்ட் செய்ய வைத்திருப்பது சிறப்பு
இடைவேளை திருப்பத்துக்காகவும் , கதையில் கமர்சியல் சுவராஸ்யத்துக்காகவும் பிரசன்னா , இனியா கேரக்டர்கள் . தன் மனைவி தனக்கு துரோகம் செய்து விட்டாள் அதுவும் தன் உயிர் நண்பனுடன் என்பதை உணரும் பிரசன்னாவின் நடிப்பு எதார்த்தம்
பேஷண்ட்டின் காதலியாக பார்வதி மேனன். புருவம் ரொம்ப அடர்த்தி என்ற குறை தவிர நல்ல ஃபிகர் தான்
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஒரு உண்மைச்சம்பவத்தை சுவராஸ்யமான சம்பவச்சேர்ப்புகளோடு திரைக்கதை அமைப்பது சவாலான பணி , மிகப்பிரமாதமாக அதை செய்து இருக்கிறார். வாழ்த்துகள்
2. பாத்திரத்தேர்வு அழகு . கே பாலச்சந்தர் படம் போல் எல்லா கேரக்டர்களுமே மனதில் நிற்கிறார்கள் , அவர்களை அழகாக நடிக்க வைத்ததற்கு , நம் மனதில் நிறுத்தியதற்கு
3. மொத்தப்படமும் நமக்கு உணர்த்தும் சேதிகள் 2 தான் . 1. சாலையில் செல்லும்போது கவனம் வேண்டும் 2 உடல் தானம் உயிரைக்காக்கும் . அதை எந்த பிரச்சார நெடியும் இன்றி கலைப்படத்தின் நேர்த்தியுடன் ஜனரஞ்சகமாய்ச்சொன்னது
4. ராடான் பிக்சர்ஸ் செய்த புத்திசாலித்தனமான விஷயம் மலையாள ஒரிஜினல் டிராபிக்கில் உதவி இயக்குநராகப்பணி ஆற்றியவரையே இதில் இயக்குநர் ஆக பிரமோஷன் பண்ணியது
5. மூளைச்சாவு நிகழ்ந்த பேஷண்ட்டின் பெற்றோராக வரும் இருவர் நடிப்பும் கன கச்சிதம்
மனம் கவர்ந்த வசனங்கள் ( அஜயன் பாலா)
1. ஒரு மனுசன் கடவுளா நம் கண்ணுக்கு தெரிவது இக்கட்டான தருணங்களில்
---------------------
2. எல்லோருடைய லைப்லயும் ஏதாவது ஒரு நாள் முக்கியமான நாளா அமைஞ்சிடும்
----------------------
3. தப்பாயிடும் தப்பாயிடும்னு பயந்துட்டே ஒரு காரியம் செஞ்சா அந்த காரியம் தப்பாயிடும்
--------------------
4. முடியாதுன்னு சொல்லிட்டா வழக்கமான நாளா இதுவும் ஆகிடும்.முடியும்னு சொல்லி முயற்சி செஞ்சா இந்த நாள் வரலாறா மாறும்
--------------------
5. க்ளைமாக்ஸ் சூப்பர்னு எல்லாரும் சொல்றாங்க
அப்போ அதை மட்டும் ரிலீஸ் பண்ணா போதுமா?
---------------
6. காரியம் நடக்கனும்னா கொஞ்சம் செண்ட்டிமெண்ட் கலந்து பேசுவது தப்பில்லை
-------
7. உங்களுக்கு என் பையன் சாகக்கிடக்கும் ஒரு உயிர் , ஆனா எங்களுக்கு அவன் உயிரோட இருக்கும் மகன்
-----
8. எல்லா மனிதர்களுக்கும் அவர்கள் குடும்பம்தான் முக்கியம், அதை சரியா கவனிக்காத யாரும் வெற்றியாளர் கிடையாது
----------------------------
9. ரசிகர்களை ஏமாத்தலை . உங்களை நீங்களே ஏமாத்திட்டு இருக்கீங்க
----------------------
10 ஒரு ஹீரோவா நீங்க ஜெயிச்சிருக்கலாம் , ஆனா ஒரு மனுஷனா தோத்துட்டீங்க
-------
இயக்குநரிடம் சில கேள்விகள் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1. மிட் நைட்ல தம்பதிகள் அவங்க பெட்ரூம் ல படுத்திருக்காங்க , அப்போ மனைவிக்கு அவ கள்ளக்காதலனும் , கணவனின் நெருங்கிய நண்பனுமான ஆள் கிட்டே இருந்து ஃபோன் வருது. அப்போ மனைவி “ அவர் பக்கத்துல தான் இருக்கார், நான் அப்புறமா கூப்பிடறேன்”ன்னு சொல்லி ஃபோனை கட் பண்றா, அப்போ புருஷன் எழுந்து யார் ஃபோன்ல என கேட்க மனைவி “ ராங்க் கால்” ங்க்கறா. எவ்வளவு பெரிய ஓட்டை இந்த காட்சில ...
அ. கணவனின் நெருங்கிய நண்பன் என்பதால் அவன் எப்போ வீட்ல இருப்பான்னு நண்பனுக்கு தெரிஞ்சிருக்கும் , மிட் நைட்ல ஃபோன் பண்ணினா ஆபத்துன்னு தெரியாதா?
ஆ. கள்ளக்காதலன் கிட்டே இருந்து ஃபோன் வரும்போது அருகில் கணவன் இருப்பதால் மனைவி ஃபோனை கட் பண்ணி ஆஃப் பண்ணி இருக்கலாம், அல்லது மெசேஜ் அனுப்பி இருக்கலாம், அல்லது பெட்ரூமை விட்டு வெளியே பாத்ரூம் போவது போல் போய் அங்கே ரகசியமாய் பேசி இருக்கலாம்
இ . போன் பேசி முடித்ததும் அந்த காலை எரேஸ் பண்ணவே இல்லை . பின் கணவன் ஃபோனை எடுத்துப்பார்த்து மிட் நைட்ல அவன் ஏன் ஃபோன் பண்ணான்? என கேட்க மாட்டானா?
2. பர்சனாலிட்டியான , வசதியான , கவுரவமான பதவியில் கணவன் , குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கறான். மனைவியை அப்பப்ப சந்தோஷப்படுத்தறான், இத்தனை பிளஸ் இருந்தும் மனைவி தடம் மாறுவதற்கு காரணம் சொல்லவே இல்லை
3. துரோகம் செய்த மனைவியை பிரசன்னா கார் ஏத்தி கொலை பண்ண முடிவு எடுத்தாச்சு , ஓக்கே . மோதியவர் அரைகுறையா அப்டியே விட்டுட்டுப்போவாரா? மனைவி அவரை பார்த்துட்டா , உயிர் பிழைச்சா ஆபத்து , சாட்சி ஆகிடுவா . இன்னொரு ஏத்து ஏத்தினா மேட்டர் ஓவர். அதை செக் பண்ணாம ஆளில்லா அந்த ரோட்டில் அவசர அவசரமா அவர் ஏன் திரும்பனும் ?
4. கிரிமினலான பிரசன்னாவுக்கு சேரன் எதுக்கு பரிதாபம் காட்டறார்?
5. பொதுவா மேல் அதிகாரிகள் என்ன சொல்றாரோ அதைக்கேட்பதுதான் நம்ம வேலை. ஆனா கமிஷனரின் ஆர்டருக்கு கட்டுப்படாமல் சேரன் தன் போக்கில் முடிவு எடுப்பது ஏன்? அதை சரத்தும் கண்டு கொள்ளலையே?
6. ராமராஜன் வேட்டிகள் மற்றும் பிரபல டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் மார்க்கெட்டிங்க் எக்ஸ்க்யூட்டிவ்ஸ் ஒழுங்கா ஏரியா பார்க்கறாங்களா? என்பதைக்கண்காணிக்க அவர்கள் வசம் ஜிபிஎஸ் ஃபோன் கொடுப்பாங்க , அது அவங்க இருக்கும் ஏரியாவை காட்டிக்கொடுத்துடும் . சாதாரண கம்பெனியே அந்த ஐடியா ஃபாலோ பண்றப்ப போலீஸ் ஏன் அதை ஃபாலோ பண்ணலை? சேரன் செல் கீழே விழுந்தாலோ , திடீர்னு ரிப்பேர் ஆனாலோ எப்படி காண்டாக்ட் பண்றதுன்னு ஏன் முதல்லியே யோசிக்கலை?
7. மணிக்கு 170 கிமீ வேகத்துல போகும் போலீஸ் சேரன் செல் ஃபோன்ல பேசிட்டே போவது ஆபத்து இல்லையா? பக்கத்துல ஒரு ஆள் சும்மாவே இருக்காரே? எதுக்கு? ஃபோன் ஆர்டர்களை ரிசீவ் பண்ண ஒருவர் , கார் ஓட்ட ஒருவர் என ரெடி பண்ணி இருக்கலாமே?
8. மூளைச்சாவு ஏற்பட்ட பேஷண்ட் ஃபேமிலி உருக்கம் ஓக்கே , ஆனா எப்போ திரைக்கதை கார்ப்பயணத்துக்கு வந்துச்சோ அப்பவே அந்த செண்ட்டிமெண்ட் போர்ஷன் ஓவர் ஆகிடுச்சு , அதுக்குப்பின் கரெக்ட் டைம்க்கு அது போய்ச்சேர்ந்ததா? என்பதில் தான் ஆடியன்ஸ் ஆர்வம் இருக்கும் . அந்த டைம்ல பழைய சோகத்தை எல்லாம் பிழியக்கூடாது
9. மூளைச்சாவு ஏற்பட்ட பேஷண்ட்டின் காதலியாக வரும் ஃபிகர் புருவம் ஏன் அவ்ளவ் அடர்த்தியா இருக்கு? அதை ட்ரிம் பண்ணி இருக்கலாம் .க்ளோசப் ல அடிக்கடி காட்டுவதால் உறுத்துது ( உறுத்துதுன்னா கொஞ்சம் தள்ளி உட்கார்)
10 . மூளைச்சாவு ஏற்பட்ட பேஷண்ட்டின் அப்பா கேரக்டர் சோகம் காட்டின அளவுக்கு அம்மா கேரக்டர் சோகம் காட்டலை . மேக்கப் எதுக்கு அவ்வளவு ? குங்குமம் எல்லாம் கல்யாண வீட்டுக்குப்போற மாதிரி , அந்த ஹாஸ்பிடல் சீன்ல இன்னும் அந்தம்மாவுக்கு மேக்கப் டல் பண்ணி இருக்கனும்
மல்லிகாவுக்குப்பக்கத்துல இடது புறமா நிக்கும் ஃபிகரின் கீழ் உதட்டைப்பார்க்கவும் ஹி ஹி
11. பேஷண்ட்டோட கிரிட்டிகல் சிச்சுவேஷன் பற்றி ஒரு டாக்டர் இப்படித்தான் ஹெட் ஆஃப் த டாக்டர்ஸ் கிடே பேஷண்ட்டோட பேரண்ட்ஸ் முன்னால உளறுவாங்களா?
12. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல எப்பவும் “ நீ இந்த வேலையைச்செஞ்சிடு”ன்னு ஆர்டர் தான் போடுவாங்க. ஆனா கமிஷனர் சரத் “ யார் இதை செய்யத்தயார்?”னு கேட்பது காமெடின்னா யாருமே தயார் இல்லை என்பதும் செம காமெடி
13 . ஹெலிகாப்டர்ல போக முடியாது என புத்திசாலித்தனமா வசனம் வெச்சா போதுமா? குறிப்பிட்ட அந்த பயணம் பூரா மழை வருவது போலவோ , வானம் மோடம் போட்டிருப்பது போலவோ காட்ட வேணாமா?
14. மொத்தப்படமும் பிரமாதமா போய்ட்டிருக்கும்போது சூர்யா கேரக்டர் திணிப்பும் அவர் ரசிகர்கள் காருக்கு ரூட் ஏற்படுத்துவதும் அப்பட்டமான சினிமாத்தனம்
15. சூர்யா ரசிகர்கள் உதவி பண்றாங்க ஓக்கே , அப்போ படத்துல சூப்பர் ஸ்டாரா வரும் பிரகாஷ் ராஜ் ரசிகர்கள் ?
16. இதய தானத்துக்கு ஆரம்பத்துல பெற்றோர் ஒத்துக்கலை , ஓக்கே , ஆனா அவங்க பின்னர் ஒத்துக்கொள்வதை காட்சியா காட்ட வேணாமா? சும்மா வசனத்துல மட்டும் ஒப்பேத்துனாப்போதுமா?
17. காரில் பயணம் செய்ய இன்னொரு ஸ்பேர் டிரைவர் ஏன் ரெடி பண்ணலை? சப்போஸ் அவர் டயர்டு ஆனாலோ , முடியாம போனாலோ ஆல்ட்டர்நேட்டிவ் டிரைவர் வேண்டாமா?
18. சாதாரண கார் டிரைவரை யூஸ் பண்ணீயதை விட அஜித் மாதிரி பைக் ரேஸ் வீரர் அல்லது கார் ரேஸ் வீரர் என காட்டி இருந்தால் இன்னும் நம்பகத்தன்மையா இருந்திருக்கும்
19. கார் பயணிக்கும் நேரம் எல்லாம் வெய்யில் கொளுத்துவது போல் ஏன் காட்ட வேண்டும்? மூலப்படமான டிராபிக் மலையாளப்படத்தில் மிகச்சிறப்பாக சீதோஷ்ணத்தை பேலன்ஸ் செய்து இருப்பதாக பார்த்தவர்கள் சொல்றாங்க
20 ரவுடிகள் காரைத்துரத்தி பைக்கில் ரவுண்ட் கட்டும்போது அந்த லேடி ஏன் கார்க்கண்ணாடிக்கதவுகளை ஏற்றி விட வில்லை?
21, சிட்டி கமிஷனர் நடத்தும் அவசர மீட்டிங்கில் போலீஸ் உயர் அதிகாரிகள் மட்டுமே இடம் பெற முடியும், சாதாரண போலீஸ் ட்ரைவர் எப்படி இடம் பிடிக்க முடியும்? அதே போல் ஆல் போலீஸ் டிரைவர்ஸ் மீட்டிங்க்கு வரனும் என சரத் குறிப்பிடுவதும் தேவை இல்லாததே
22. யார் யாருக்கோ நன்றி என டைட்டில் கார்டு போட்டவங்க “ 2008 இல் உடல் தானம் செய்ய உதவிய ஹிதேந்திரனின் பெற்றோருக்கு நன்றி என டைட்டில் ல போட்டிருக்கலாமே?
23. சேரன் ஃபாஸ்ட் டிரைவிங்க்கில் இருக்கும்போது சரத் அடிக்கடி ஃபோன் பண்ணி இப்போ எங்கே இருக்கீங்க? என பொண்டாட்டி மாதிரி நச்சரிப்பது மகா எரிச்சல். அவர் கார் ஓட்டுவாரா? உங்களுக்கு பதில் சொல்லிட்டு இருப்பரா?
சென்னையில் ஒரு நாள் - நல்ல திரைக்கதை உத்தி - விகடன் மார்க் மே பி - 46 ( இது ட்விட்டர்ல போட்டது, ஆனா விகடன் மார்க் - 43
குமுதம் ரேட்டிங்க் - ஓக்கே
ரேட்டிங்க் 3.5 / 5
சி பி கமெண்ட் - மாறுபட்ட சினிமாக்களை விரும்புபவர்கள் தவற விடக்கூடாத படம்
0 comments:
Post a Comment