மக்கள் மனசு! - ஜூ.வி. சர்வே அதிரடி ரிசல்ட்
ஜூ.வி. சர்வேயின் இறுதி எபிசோட் இது.
தமிழக அரசியலையும் நடப்பு விஷயங்களையும்
கேள்விகளாக்கி, தொடர் சர்வே முடிவுகளை வெளியிட்டு வந்தோம். 48 கேள்விகளை
உள்ளடக்கி இரண்டு கட்டங்களாக நடந்த இந்த மெகா சர்வேயில், தமிழக அரசைப்
பற்றிய கேள்விகளும் அடக்கம். வரும் மே 16-ம் தேதியோடு அ.தி.மு.க. ஆட்சிக்கு
வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதையட்டியே கேள்விகளைத்
தயாரித்திருந்தோம். 7,756 நபர்கள் பங்கேற்ற இரண்டாம் கட்ட சர்வேயின்
தொடர்ச்சி இந்த இதழில்...
கடந்த காலங்களில் நாம் சர்வே எடுத்தபோது ''எங்களுக்கு
இலவசப் பொருட்கள் கிடைக்கவில்லை. நிவாரணம் தரவில்லை'' போன்ற கோரிக்கைகளையே
அதிகமாக நம் முன் வைத்தார்கள். ஆனால் இப்போதோ, ''மின்வெட்டுப் பிரச்னை
எப்போது தீரும் சார். இதற்கு விடிவே கிடையாதா?'' என்று பட்டிதொட்டி எங்கும்
கேள்விக்கணைகளால் துளைத்தார்கள். சர்வே முடிவிலும் இது எதிரொலித்தது.
'அ.தி.மு.க. ஆட்சியில் உங்களை அதிகம் பாதித்தது?’ என்கிற கேள்விக்கு
'மின்வெட்டு’ என 69 சதவிகித நபர்கள் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.
தமிழகத்தின் மின்வெட்டுப் பிரச்னை... 'மோசம்’ என்று 47 சதவிகித நபர்களும்
'தி.மு.க. ஆட்சியைவிட மோசம்’ என 39 சதவிகித நபர்களும் கருத்தைப்
பதிவுசெய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஜெயலலிதாவின் இரண்டு வருட ஆட்சியைப்
பற்றி மதிப்பீட்டுக்கு 'சுமார்’ என்றே பெரும்பாலானவர்கள் டிக்
அடித்திருந்தார்கள். மோசம், மிக மோசம் என்ற நிலைமைக்குப் போகாததை நினைத்து
அ.தி.மு.க-வினர் சந்தோஷப்படலாம்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், சட்டம் - ஒழுங்கு
காப்பாற்றப்படும் என்கிற இமேஜ் சரிந்திருக்கிறது. இப்போது சட்டம் - ஒழுங்கு
சுமார்தான் என 54 சதவிகித மக்கள் சொல்கிறார்கள். தமிழக அரசைவிட மத்திய
அரசின் மீது மக்களுக்கு ஏக வெறுப்பு. மத்திய அரசின் நான்கு வருட ஆட்சி
பற்றிய கேள்விக்கு 'மிக மோசம்’ என 58 சதவிகித மக்கள் கருத்து சொல்லி
இருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment