Thursday, April 18, 2013

பூவே பூச்சூடவா நதியா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி! @ கல்கி

 

நம்பிக்கைப் பூவே நதியா!

எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

பூவே பூச்சூடவாவில் பார்த்த அதேசுந்தரிசற்றும் மெருகு குறையாமல் சுற்றளவும் ஏறாமல் அதே அழகுடன் இருப்பது படு ஆச்சரியம்! மும்பையில் தம் கணவர் ஷிரீஷ் கோட்போலே, தம் மகள்கள் சனம் மற்றும் ஜனாவோடு ஒரு மாலை பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த நதியாவை அவரது செல்()பேசியில் தொடர்பு கொண்டோம். அப்போது கிடைத்தமின்னல் பதில்கள்...
.கே! எல்லோருமே உங்கக்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படற ஒரு கேள்வி தான் இது. அது எப்படி அதே ட்ரிம் அன்ட் ஸ்லிம்மை மெயின்டேன் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?
(ஜோரான சிரிப்பைத் தொடர்ந்து வருகிறது பதில்) அதுக்குக் காரணம் என்னோட ஜீன்ஸ் தாங்க. Jeans இல்ல genes. எங்க அம்மா இந்த வயசுலகூட பார்க்க ரொம்ப இளமையா தெரிவாங்க."
உங்க ஜீன்ஸுக்கு ஒருஜே ஜே’. தினமும் ஜிம்முக்குப் போய்மாங்கு மாங்குன்னு உடற்பயிற்சி செய்யறது. நோ சர்க்கரை, நோ நெய், நோ சாதம்னு ஏதாவது...?
சொன்னா நம்ப மாட்டீங்க. தினமும் லஞ்ச் சாப்பிட்டு முடிச்ச உடனேயே டார்க் சாக்லெட் சாப்பிடுவேன். டின்னர் முடிச்சப்பறமும் டார்க் சாக்லெட் கட்டாயம் சாப்பிடுவேன். என்னோட வீக்னஸே சாக்லெட்தான். ஜூஸ் சாப்பிடுவது மட்டுமேதான் டயட்டிங் அப்படீன்னு கிடையாது. எதைச் சாப்பிட்டாலும் கொஞ்சம் குறைவா சாப்பிடணும். அவ்வளவுதான். தினம் 30 நிமிஷங்களாவது என் வீட்டிலேயே உடற்பயிற்சி கட்டாயம் செய்வேன். வாக்கிங் போவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஜிம்முக்கு போனாதான் ஜம்முன்னு இருப்போம், அப்படின்னு எல்லாம் கிடையாது. நம்ம உடம்பை நாமே புரிஞ்சு ஓரளவு பராமரிச்சாலே போதும். எல்லாருமே என்னிக்குமே ஜம் ஜம்ன்னு இருக்கலாம்."

நீங்க சமைப்பீங்களா? உங்க ஃபேவரைட் உணவு எது?
நான் நல்லகுக்குங்க! வீட்டுல இருந்தா, முக்கால்வாசி நான்தான் சமைப்பேன். நாங்க நிறைய வெளிநாடுகள்ல இருந்தவங்க. அதனால, மெக்சிகன், சைனீஸ் உணவு வகைகளில் எனக்கு நாட்டம் உண்டு. என் கணவர் சுத்த சைவம். மஹராஷ்ட்ரிய உணவுகளைப் பார்த்துப் பார்த்து சமைப்பேன். கேரள பாணியில் அசைவ உணவுகளையும் சமைப்பேன்."
சூப்பரா தமிழ் பேசறீங்களே. நீங்க நடிக்கிற படங்கள்ல உங்கச் சொந்தக் குரலிலேயே பேசலாமே?
எனக்கும் சொந்தக் குரலில் தமிழ்ல பேசி நடிக்கணும்னு ஆசைதான். ஆனா, இன்னி வரைக்கும், ஒரு பத்து பேர் முன்னாடி என்னைத் தமிழ்ல பேசுங்கன்னு சொன்னா நான் ரொம்ப நெர்வஸ் ஆயிடுவேன். தமிழ்நாட்ல இருக்கும் பொழுது தமிழ் வரும். திரும்ப இங்க மும்பை வந்தாச்சுன்னா தமிழ் ஸ்விட்ச் ஆஃப் ஆயிடும். இங்க மராத்தி, ஹிந்தின்னுதானே காதுல விழுது?"
நாட்டியப் பேரொளி நடிகை பத்மினிகூட முதல் படம் நடிச்சது பற்றி...?

நான் மும்பையில் பிறந்து வளர்ந்த பொண்ணு. எங்க வீட்ல என்னோட பெற்றோர்கள் மலையாளத்துலதான் பேசுவாங்க. தமிழ், எனக்கு அப்போ தெரியாது. அப்போல்லாம் ஹிந்திப்படம்தான் பார்ப்பேன். எப்பவாவது தியேட்டரில் மலையாள படம் போட்டா, அப்போ போய் பார்ப்பேன். அவ்வளவுதான். தமிழ்ப்படத்தை அவ்வளவா நான் பார்த்தது கிடையாது.
பத்மினி அம்மா நடிச்ச ஹிந்திப் படம்தான் பார்த்திருக்கேன். பத்மினி அம்மா ரொம்ப ரொம்ப பொறுமைசாலி! தான் ஒரு பெரிய ஆர்டிஸ்ட்ங்கற பந்தாவே இல்லாம பழகினாங்க. நான் எவ்வளவோ டேக் எடுத்திருக்கேன். ஆனா கொஞ்சம்கூட சலிச்சுக்கலை. அந்தப் படத்துக்காக எனக்குத் தமிழ் டீச்சர் ஒருத்தங்க தமிழ் கத்துக் கொடுத்தாங்க."
நடிகர் திலகத்தோடஅன்புள்ள அப்பாவில் நடிச்சீங்களே அது?

அவர் ஒரு பர்ஃபெக்ஷனிஸ்ட்! எது செஞ்சாலும் அதை சரியா செய்யணும்னு நினைப்பார். அவரோட நான் நடிக்கும்போது எனக்கு 19, 20 வயதுதான் இருக்கும். எனக்கு அவரைப் பார்த்தாலே ஒரே உதறலா இருக்கும். ஆனா, ஃபர்ஸ்ட் டேக்லியே சரியா நான் பண்ணினதைப் பார்த்து ரொம்பவே பாராட்டி எனக்கு ஆசி கூறினார். நான் பேசிய தமிழைக் கேட்டு கிண்டல் பண்ணுவார். சினிமாவை சீரியஸாக நான் எடுத்து கொள்ள ஆரம்பிச்சதே சிவாஜி அப்பாவுடன் நடிச்ச பிறகுதான்."
நீங்க ஏன் தமிழ் டீ.வி சீரியல்களில் நடிப்பதில்லை? தமிழ் சினிமாவும் ரொம்ப செலக்டிவ்வாதான் பண்றீங்க? என்ன காரணம்?
தமிழ் சீரியல்கள் செய்ய எனக்கு முதல்ல நேரம் இல்லீங்க. நான் இருப்பது மும்பைல. என்னோட முதல் ப்ரையாரிட்டி என்னோட அழகான குடும்பம்தான். பாருங்க, என் பெரிய பொண்ணு பத்தாவது படிக்கறா. அவளோட படிப்பை நான் பார்க்கணும். சீரியல்களில் திரும்பத் திரும்ப பழைய கதைகளையே சொல்லிக்கிட்டு இருக்காங்க. சினிமாவில் எனக்குப் பிடிச்ச மாதிரி, வித்தியாசமான கேரக்டர் வந்தா நான் நடிப்பேன். நடிக்கணும்னு சும்மாவே ஏகப்பட்ட படங்கள் ஒத்துக்கிட்டு பண்ற பழக்கம் எனக்கு இல்ல"

மும்பைல இருக்குற ஹிந்தி மக்கள் உங்களை அடையாளம் கண்டுபிடிப்பாங்களா?
இல்லை! இங்க இருக்குற தமிழர்கள் மற்றும் மலையாளிகள் தான் என்னை அடையாளம் கண்டு குதூகலிப்பாங்க!
சினிமா பெயர்தான் நதியா. இங்க இருக்கறவங்களுக்கு நான் ஜரீனா இல்லன்னா, மிஸஸ் கோட்போலே. என்னை இங்க யாருமே சினிமா நடிகையா பார்ப்பது கிடையாது. ஒரு முழு நேர அம்மாவாகவும், ஹவுஸ் வொய்ஃபாகவும்தான் நான் மும்பையில் இருக்கேன். அப்பப்போ என் மன நிறைவுக்காகவும், என் ரசிக - ரசிகைகளின் சந்தோஷத்துக்காகவும், சினிமா, விளம்பரப்படங்கள்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன்..."
மகளிர் தின மெஸேஜ் ஒண்ணு...?
எப்பவும் டல்லடிக்காதீங்க. உங்களை நீங்களே நம்புங்க! எதிலும் நம்பிக்கை வெச்சா ஜெயிக்கலாம்!" என்கிறார் இனிமை, இளமை மாறாத நைஸ் நதியா!


 
 நன்றி - கல்கி

2 comments:

'பரிவை' சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி...

தனிமரம் said...

நன்றி பகிர்வுக்கு அண்ணாச்சி!