Saturday, April 20, 2013

ஓவியத் தேடல்


ஊர் ஊராய் ஓர் ஓவியத் தேடல்!


வடபழனியில் உள்ள அந்த வீட்டுக்குள் நுழைந்தால், ஏதோ ஓவியக்கூடத்துக்குள் நுழைந்து விட்ட உணர்வே ஏற்படுகிறது. சுவர் முழுக்க சித்திரங்கள்! மண்பாண்டம், துணி, உலோகம், களிமண், கண்ணாடி என விதவிதமான கலைவண்ணம் ரகம் ரகமாய் அசத்துகிறது.


பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு வரை, சராசரி ஹோம்-மேக்கராக இருந்த கனிமொழி, இன்றைக்குகனி ஆர்ட்ஸ்என்ற பெயரில் சித்திர கைவேலை வகுப்புகளை மும்முரமாக நடத்தி வருகிறார் என்றால்... அதற்குக் காரணம் அவர் பார்த்த ஒரு டீ.வி. நிகழ்ச்சி!


வீட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டு, ஒருநாள் ரிலாக்ஸா டீ.வி. பார்க்க உட்கார்ந்தேன். பொதிகை சேனலில், கலை மற்றும் கைவேலைத் துறைக்கான மத்திய அரசாங்க டெபுடி டைரக்டர் ராமமூர்த்தி என்பவரின் பேட்டி ஒளிபரப்பானது. அதில் டிராயிங் அல்லது ஓவியத்தில் ஆர்வமுள்ள பெண்கள் குறிப்பாக வடமாநிலப் பெண்கள் பெரிய அளவில் பிஸினஸ் செய்து வருவதைக் குறிப்பிட்டுப் பேசினார். அவரது பேச்சு எனக்குள் உற்சாகப் பொறியைக் கிளப்பியது.

நான் சின்ன வயதிலிருந்தே நல்லா வரைவேன். டிராயிங் நோட், சயின்ஸ் ரெகார்ட் நோட் எல்லாவற்றிலும் தத்ரூபமாய் வரைஞ்சு ஆசிரியர்களிடம் பாராட்டு வாங்கியிருக்கேன். ‘சரி, முயற்சி செய்து பார்க்கலாமேன்னு ராம மூர்த்தி சாரை தொடர்பு கொண்டேன். அவர் தந்த ஊக்கமும், ஆலோசனையும்தான் என்னை ஆர்ட் ஸ்கூல் வைக்கிற அளவுக்கு உயர்த்தியிருக்கு" என்கிறார் கனிமொழி.


இந்தியா முழுக்க விரிந்துள்ள நமது தொன்மையான ஓவியக் கலைகளைக் கற்பதற்காக கனிமொழி எடுத்த ஆர்வமானது, ஒரு பி.எச்.டி. பண்ணும் அளவுக்கு வித்தியாசமான கள அனுபவங்களைத் தந்து விட்டதாம்.


ஆந்திரப் பிரதேசத்தின் பாரம்பரிய ஓவியமானநிர்மல்’, ‘ஒடிஸாவின்பட்ட சித்ரா’, பீஹாரின்மதுபானிமகாராஷ்ட்ராவின்வார்லி’, நேபாளத்தின்தங்கா’, ராஜஸ்தானின்மிரர் வர்க்’, கேரளாவின்மியூரல் வர்க்என ஊர் ஊராகத் தேடிப் போய், அந்தந்தக் கலைஞர்களிடமே நேரடியாக ஓவியத்தையும் கலைகளையும் கற்றுக் கொண்டேன்



 எத்தனையோ கலைகளைக் கற்றாலும், எனக்கு என்னமோ தமிழ்நாட்டுக் கோயில்களின் மூலிகைச் சாறு ஓவியங்களும், தஞ்சாவூர் பெயின்டிங்கும்தான் மிகச் சிறப்பாகத் தோன்றுகின்றன. தெய்விகமும், கலைநுணுக்கமும் கொண்ட அவற்றைக் கற்கவும், கற்பிக்கவும் பக்தி கலந்த கலாரசனை தேவை" என்று சொல்லும் கனிமொழிக்கு இரண்டு விஷயங்களில் மிகவும் பெருமை!


முதல் பெருமை: சமீப காலமாக அரசு மற்றும் தனியார் ஓவியக் கண்காட்சிகள் எங்கு நடந்தாலும் அதில் கனிமொழியின் படைப்பு ஏதேனும் இடம்பெறுவது.
இரண்டாவது பெருமை: எழும்பூர் மியூசிய வளாகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு என பிரத்யேகமாக ஒருநாள் கைவேலை வகுப்புகளை நடத்தி வருவது.

மிகவும் வறியக் குடும்பத்திலிருந்து வந்தாலும் சில பெண் குழந்தைகள் கைவேலைகளைக் கற்பதில் காட்டும் ஆர்வமும் கற்பனையும் என்னை பிரமிக்க வைக்கின்றது. அவர்கள் அனைவரையும் கிரீடமும், வீணையும் இல்லாத கலைவாணிகளாகவே காண்கிறேன்" என்று நெகிழ்கிறார் கனிமொழி சந்தானம்.

thanx - kalki

0 comments: