Wednesday, April 10, 2013

ஒரு ஸ்கூல் மாஸ்டரின் காமெடி அனுபவங்கள்

1. என்னடா? பரீட்சைல இப்படி 1 மார்க் , 2 மார்க்னு சிங்கிள் டிஜிட்ல மார்க் வாங்கி இருக்கே?

 கவர்மெண்ட் பாலிசியை இதுலயும்  கடைப்பிடிக்கறேன் சார். ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம், இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்




----------------------



2. என்னடா ஜீரோ மார்க் வாங்கி இருக்கே?


 அது ஜீரோ இல்லைப்பா . நான் நல்லா படிக்கறேன்னு வாத்தியார் எனக்கு ஓ போட்டிருக்கார்




-----------------------------


3.  சரி, அது போகட்டும் , இங்க்லீஷ் பரீட்சைல ஏன் ஃபெயில் ஆனே?


 நான் தமிழ்ப்பற்று மிக்கவன் என்பதை எப்படி நிரூபிப்பது?




------------------


4.  என்ன சார்? உங்க பையனுக்கு தயிர் ராஜ்னு பேர் வெச்சிருக்கீங்க?


 பால்ராஜ் தாங்க வெச்ச பேரு , ஊரெல்லாம் திரிஞ்சு கெட்டுட்டான்


-----------------------


5.  நானும் உங்களை மாதிரி ஒரு ஸ்டூடண்ட்டா இதே ஸ்கூல்ல படிச்சவன் தான், இன்னைக்கு இதே ஸ்கூல்ல வாத்தியாரா வந்திருக்கேன், இதுல இருந்து என்ன தெரியுது?


இந்த ஸ்கூல்ல படிச்சா வேற எங்கேயும் வேலை கிடைக்காதுன்னு தெரியுது சார்




------------------



6. நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது கேப்டன் விஜயாந்த்தா? என்னடா சொல்றே?


 புதிய சரித்திரம் படைப்போம்னு சொன்னீங்களே?



-------------------------



7.  தமிழ் இலக்கணத்துல ஒரு கேள்வி , நேர்மா , நிரைமா, புளிமா அடுத்து என்ன?


 நக்மா சார்



--------------------------


8.  தமிழ் இலக்கிய பாடத்துல சூர்யா - த்ரிஷா பற்றி  பக்கம் பக்கமா எழுதி வெச்சிருக்கியே?



 ஆறு தன் வரலாறு கூறுதல்  இதுதான் கட்டுரைத்தலைப்பு ,ஆறு பட ஹீரோ - ஹீரோயின் அவங்க தானே?




---------------------------


9. எட்டாங்கிளாஸ் படிக்கும்போது சித்ராவை லவ்  பண்ணே , 10 ங்கிளாஸ் படிக்கும்போது மோகனாவை லவ் பண்றியே ஏன்?


 நீங்க மட்டும் தான்  பாட சிலபஸை மாத்துவீங்களா? நாங்க லவ் சிலபசை மாத்தக்கூடாதா?


---------------------------


10. உங்க பையனுக்கு எத்தனை தடவை திருப்பி திருப்பிச்சொன்னாலும் புரியவே மாட்டேங்குதே ஏன்?

 நீங்க ஏன் சார் திருப்பி திருப்பி சொல்றீங்க ? நேரா சொல்லிக்குடுங்க




----------------------------


11. ஸ்கூல் டீச்சர் மேரேஜுக்கு லேட்டா போனது தப்பா போச்சு


 ஏன்?

 மண்டப வாசல்ல முட்டி போட வெச்சுட்டாங்க




-------------------------



12. ராமாயணத்துல  மொத்தம் எத்தனை காண்டம் இருக்கு?

 கிட்டத்தட்ட  ஒண்ணே கால் லட்சம் காண்டம் சார்


 என்ன உளர்றே?


 தசரத சக்ரவர்த்திக்கு  60,000 மனைவிகள் , ஆவரேஜா கணக்குப்பார்த்தா  60,000 * 2 = 1, 20,000 ஆச்சே



----------------------------------


13.  சீதை ராமன் கூடவே காட்டுக்குச்சென்றாள் - இதுல இருந்து என்ன தெரியுது?


 அந்தக்காலத்துல கூட பொண்ட்டாட்டிங்க புருஷன் மேல சந்தேகப்பட்டுட்டே இருந்திருக்காங்க , புருஷன் எங்கே போனாலும் ஃபாலோ பண்றாங்க  அப்டினு தெரியுது சார்


----------------------


14.  சார் , பூங்கொடி 65 % மார்க் வாங்கி இருக்கா, இதுல ஏதோ ஊழல் நடந்திருக்கு


எப்டி சொல்றே?


 பெண்களுக்கு 33 % தானே?



----------------------------------


15.  பாட்டனி பரீட்சைல  எதுக்காக பொண்ணோட  ஃபோட்டோவை ஒட்டி இது தலை , இது கை-னு நோட்ஸ் எழுதி வெச்சிருக்கே?


 ரோஜாவின் படம் வரைந்து பாகங்களைக்குறின்னு கேள்வி




---------------------------


16. மத்தியப்பிரதேசம் - சிறு குறிப்பு வரைக


 போங்க மிஸ் , எனக்கு வெட்கமா இருக்கு ..




---------------------------


17. உலகம் சுத்துதுங்கற உண்மையை யார் முதல்ல கண்டு பிடிச்சது? கலிலியோவா? நியூட்டனா?


 தண்ணி அடிச்ச மப்புல தான் யாரோ கண்டு பிடிச்சிருக்கனும்


------------------


18. ராமன் ராவனனைக்கொன்றான் - இது செய்வினையா? செயப்பாட்டு வினையா?


 இது ராவனணோட தீவினை சார்



-------------------------


19.  அவனுக்கு ஏன் மார்க்கண்டேயன்னு பேர் வெச்சிருக்காங்க?

 லேடீஸ் கூட பேசும்போது அவங்க முகத்தைப்பார்த்துப்பேசாம  முகத்துக்கு கீழே பார்த்து பேசி இருக்கான்




------------------------------


20.  பரீட்சைல எல்லா கேள்விக்கும் சரியா பதில் சொல்லி இருக்கே , இதுக்கு உன் விடா முயற்சி காரணமா?  சொல்லிக்குடுத்த வாத்தியார் காரணமா?


 2ம் இல்லை சார் , எக்சாம் ஹால்ல  கோனார் நோட்ஸ் கொடுத்த கந்த சாமி தான் காரணம்



-------------------------


21. மஹா பாரதக்கதைல இருந்து நாம் தெரிஞ்சுக்கிட்ட நீதி என்ன?


 சூதாட கிளப்புக்குப்போகும்போது  மனைவியை வீட்லயே விட்டுட்டு போகனும், கூட கூட்டிட்டுப்போனா அவளை இழக்க வேண்டி வரும்



------------------------------


22. பரீட்சைல ஏன் அவன் பாதிலயே எழுந்துட்டான்?


 அது அரைப்பரீட்சை ஆச்சே?


--------------------


23. ஏன் கடைசி பெஞ்ச்ல உக்காந்திருக்கே?


 முதல் பெஞ்ச்ல உக்காந்தா மட்டும் பாடம் புரிஞ்சுடவா போகுது?



---------------------------------


24.  உயிர் உள்ளவை - உதாரணம் தருக

 ஆடு , மாடு  , எருமை , எலி


உயிர் அற்றவை - உதாரணம் தருக 


 செத்த ஆடு ,  செத்த மாடு  ,  செத்த எருமை ,  செத்த எலி


--------------------


25. ஸ்கூல் டூர் எப்டி இருந்தது?

 பிரமாதம் சார், நாளை மறுபடி அதேஊட்டிக்குப்போறோம்.

 ஏன்?

 அங்கே 2 பசங்களை விட்டுட்டு வந்துட்டோம்




----------------------



26. வல்லினம் , மெல்லினம் , இடையினம் உதாரணம் தருக



 நமீதா , த்ரிஷா , சிம்ரன்



--------------------------


27.  என்னது? நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் க்குக்கும் ஒரு சினிமா நடிகருக்கும் ஒற்றுமை இருக்கா? எப்டி?


 நிலா மேல முதல் முதல்  காலை வெச்சது நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க், கையை வெச்சது ( சினிமாவுல ) எஸ் ஜே சூர்யா






-------------------------




28.  கங்கா ! உனக்கு 16 வயசு ஆகிடிச்சு, வாழ்க்கை பற்றி உன் கிட்டே இன்னைக்கு டிஸ்கஸ் பண்னப்போறேன்


 ஓக்கே டாடி கேளுங்க  என்ன என்ன டவுட்ஸ் இருக்கு?






------------------------------


1 comments:

Unknown said...

கலக்கிட்டீங்க போங்க