குமுதம் சினி விமர்சனம்
டான்ஸ், டான்ஸ், டான்ஸ். படம் பூராவும் டான்ஸ்தான். வேறு எதுவும் இல்லை.
பிரபுதேவா இருப்பதால் ஹிந்திப் படத்தை தமிழில் டப் பண்ணியிருக்கிறார்கள்.
ஸ்டிரீட் டான்ஸர், ஸ்டெப் அப் படங்களில் டீ! (காப்பி உடம்புக்குக் கெடுதலாம் பாஸ்!)
ஹெ லெவல் டான்ஸ் ஸ்கூலில் இருந்து, டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவைத் துரத்தி விடுகிறார்கள். அவர் பிள்ளையார் ஊர்வலத்தில் நடனமாடும் சில பசங்களை ஒன்று சேர்த்து, அவர்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்து, போட்டியில் ஜெயிக்க வைப்பதே கதை.
பிரபுதேவா அமைதியாகச் செய்திருக்கிறார். ஒரு டான்ஸ் மட்டும் ஆடி, எல்லோரையும் ஆட்டுவிக்கிறார். வெளியேற்றப்பட்ட வலியை அற்புதமாகக் காட்டியிருக்கிறார்.
படத்தில் பிரபுதேவாவைத் தவிர தெரிந்த முகம் யாருமே இல்லை என்பது பெரிய மைனஸ் பாயிண்ட் கதாநாயகி கூட கிடையாது. எங்கும் ஹிந்தி வாசனை வேறு ஜூனூன் ஸ்டைலில் டப் செய்திருப்பதும் வெறுப்படிக்க வைக்கிறது.
ஜஹாங்கீராக வருபவர் நல்ல தேர்வு. தோற்றபிறகு பொருமாமல் கைதட்டி கண் கலங்குவது நன்று.

ஏபிசிடி: டான்ஸ் பிடித்தவர்களுக்கு கொண்டாட்டம். மற்றவர்களுக்குத் திண்டாட்டம்
ஆஹா: டான்ஸ், டான்ஸ், டான்ஸ்.
ஹிஹி: டப்பிங் படம், பிரபுதேவாவைத் தவிர தெரிந்த முகம் ஏதுமில்லை.
குமுதம் ரேட்டிங்: ஓகே.
தினமலர் விமர்சனம்
இந்தியில் பெரிய இயக்குனராக பெயரெடுத்து விட்ட நம்மூர் நடன இயக்குனர், நாயகர் பிரபுதேவா, ரெமோ டிசோசா எனும் வட இந்திய இயக்குனரின் இயக்கத்தில், நாயகராக நடித்து தமிழிலும், இந்தியிலும் வெளிவந்திருக்கும் படம்தான் "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்!"
கதைப்படி பிரபுதேவாவும், அவரது நண்பர் கே.கே.மேனனும் மும்பையில் பிரபலமான நடனப்பள்ளி ஒன்றை தொடங்கி நடத்துகிறார்கள். ஒருகட்டத்தில் பிரபுதேவாவுக்கும், நண்பர் கே.கே.வுக்குமிடையே ஈகோ யுத்தம் கிளம்ப, அதனால் அங்கிருந்து கிளம்பும் பிரபுதேவா, தனது மற்றொரு நடன நண்பர் கணேஷ் ஆச்சார்யாவின் குடியிருப்புக்கு குடிபெயர்கிறார். கணேஷ் ஆச்சார்யாவும், கே.கே.வால் பாதிக்கப்பட்டவர் என்பதால் சென்னை கிளம்ப நினைக்கும் பிரபுதேவாவை மும்பையிலேயே பிடித்து வைத்து வேறு நடனபள்ளி ஆரம்பிக்க தூண்டுகிறார் கணேஷ்.
பிரபுதேவாவும், கணேஷ் எதிர்பார்க்காத வகையில் காசுக்காக நடனம் கற்று தருவதை தவிர்த்து திறமைகள் இருந்தும் பல்வேறு குரூப்களாக பிரிந்து கிடக்கும் அந்த குப்பத்து இளைஞர்களுக்கு டான்ஸ் சொல்லித்தர களம் இறங்குகிறார். அப்புறம், அந்த இளைஞர்களின் பெற்றோர் போடும் தடைகள், தன் நண்பர் கே.கேவின் நக்கல் நையாண்டி, சூழ்ச்சி எல்லாவற்றையும் தாண்டி அந்த இளைஞர்களை மும்பையில் நடைபெறும் இண்டர்நேஷனல் டான்ஸ் போட்டிகளில் ஜெயிக்க வைக்கிறார், ரசிகர்களை வியக்க வைக்கிறார்.
பிரபுதேவாவின் அடிப்படையே நடனம் என்பதால் ஒரு பக்குவப்பட்ட நடன இயக்குனராக படத்தில் பாத்திரத்தோடு ஒன்றிப்போய், ரசிகர்களை இருக்கைகளில் கட்டிப்போடுகிறார். நட்பு, துரோகம், நம்பிக்கை என்று நடிப்பில் சாந்த சொருபியாக நம்மை வியக்க வைக்கும் பிரபுதேவா, நடனம் என்று விந்துவிட்டால், நடராஜரூபமாக வெளுத்து கட்டுவது படத்தின் பெரும்பலம்.
பிரபுதேவாவின் நல்ல நண்பர் கம் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யாவும் கூட அம்மாம் பெரிய உடம்பை தூக்கி கொண்டு அந்த அசத்து அசத்துவதும், கெட்ட நண்பர் கே.கே.மேனன் க்ளைமாக்ஸ் போட்டியில் பிரபுதேவா நடனக்குழுவினரை விலை பேசுவதும், அதில் ஒருவனை தூக்கி வந்து அவர்களது கான்செப்ட்டை இவரது குழு மூலம் அரங்கேற்றுவதும் எதிர்பாராத திருப்பங்கள். தனது நடன குழுவின் கான்செப்ட் களவாடப்பட்டது கடைசிநேரத்தில் தெரிந்தும் அதுபற்றி கவலைப்படாமல் மும்பை வீதிதோறும் குறிப்பாக விநாயகர் ஊர்வலங்களில் ஆடப்படும் பிள்ளையார் டான்ஸையே வித்தியாசமும், விறுவிறுப்பாக செய்து காட்டி நடன போட்டியில் பிரபுதேவா குழு வெல்வதும் சூப்பர்ப்!
பிரபுதேவா, கணேஷ் ஆச்சார்யா தவிர கே.கே.மேனன், சல்மான், லூரன் கோட்டிலிப் என்று நட்சத்திர பட்டாளம் மொத்தமும் வட இந்தியமுகங்களாகவே தெரிவது படத்தின் பலவீனம்!
ஆனாலும் சச்சின் ஜிகாரின் பிரமாண்ட இசையும், விஜய்குமார் அரோராவின் பிரமாதமான ஒளிப்பதிவும், ரெமோ டிசோசாவின் இயக்கத்தில், "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்" படத்தை, இன, மொழி, முகபேதம் கடந்து தூக்கி நிறுத்துகின்றன பேஷ், பேஷ்!
ஆக மொத்தத்தில், "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்" (ஏ.பி.சி.டி) - "ரசிக்கலாம் ஆடியன்ஸ்!"
நன்றி - தினமலர் , குமுதம்
டிஸ்கி - மார்ச் மாசம் இயர் எண்டிங்க் ஒர்க் இருப்பதால் ஆஃபீசில் டைட் ஒர்க். அதனால் சுமாரான படங்களுக்கு படம் பார்த்து (ம்) விமர்சனம் டைப் பண்ண டைம் இல்லை
3 comments:
துட்டு வேஸ்ட் பண்ணாம ஆபிஸ் இயர் என்டிங் சொல்லி சமாளிச்சிட்டீங்க
//நடனம் என்று விந்துவிட்டால்//
spelling mistake boss...!!!!
Copy of English Film "Honey"
Post a Comment