நீங்கள் செலவாளியா,சேமிப்பவரா ?
படங்கள்: ஸ்டீவ் சு.இராட்ரிக்ஸ்,தே.தீட்ஷித், எஸ்.கேசவசுதன்.
இந்த இரு குணாதிசயம் கொண்டவர்கள் பணம் செலவு செய்யும்
விதத்தை மாற்றிக்கொண்டுதான் ஆகவேண்டும். வாழ்க்கையில் அத்தியாவசியமான
தேவைகளை அங்கீகரித்து நிறைவேற்றுவதன் மூலம் நீங்களும் உங்களைச் சுற்றி
இருப்பவர்களும் மகிழ்ச்சி அடைவீர்கள். பணத்தைச் செலவு செய்யாமலே
வைத்திருந்து எந்த பயனும் இல்லை. எனவே, நல்ல வருமானம் தரும் திட்டங்களில்
முதலீடு செய்யுங்கள். வங்கி ஆர்.டி., அஞ்சலகச் சேமிப்பு பப்ளிக்
பிராவிடண்ட் ஃபண்ட் போன்ற திட்டங்களில் பணத்தைச் சேமிப்பதன் மூலம் 8
சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்கும்.
சேமிப்பவர் : நீங்கள் இன்றைய உலக
நிலையைப் புரிந்துகொண்டு, வாழ்க்கையைக் கொஞ்சம் அனுபவிக்கிற அதேநேரத்தில்,
நாளைக்கும் கொஞ்சம் சேர்த்து வைக்கவேண்டும் என்று நினைப்பவர். இந்த
கேட்டகிரியில் இருக்கும் நீங்கள் ஏற்கெனவே வங்கி எஃப்.டி., அஞ்சலகச்
சேமிப்பு போன்றவற்றில் ஒரு தொகையைச் சேமித்து வந்தாலும், ஓரளவுக்கு ரிஸ்க்
உள்ள மியூச்சுவல் ஃபண்டுகளிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை எஸ்.ஐ.பி. முறையில்
முதலீடு செய்யத் தொடங்கலாம்.
தாராள மனமுடையவர் : சேமிக்கும்
நற்குணங்கள் உங்களிடம் இருந்தாலும், சற்று இளகிய மனமுடையவர் நீங்கள்.
உங்களால் எப்போதும் மறுத்துச் சொல்ல முடியாது. நீங்கள் கொஞ்சம்
முயற்சித்தால், சேமிக்கும் கேட்டகிரியில் வந்துவிடலாம். அப்படி வந்தபின்
சேமிப்பவர் கேட்டகிரியினருக்குச் சொன்னதுபோல் முதலீடு செய்யலாம்.
செலவாளி : 25 வயதுக்குள் இருக்கும்
திருமணமாகாத பலர் இந்த கேட்டகிரியில் இருப்பார்கள். அளவுக்கதிகமான வருமானம்
உங்களை இப்படி மாற்றி இருக்கும். திட்டமிட்டு பணத்தைச் செலவழிக்கும்
எண்ணம் உங்களிடம் இருக்காது. அடிக்கடி செல்போனை மாற்றுவீர்கள். பிராண்டட்
பொருட்களையே வாங்குவீர்கள். சம்பளம் வந்ததும் சேமித்துவிடுவது என்கிற
பழக்கத்தை நீங்கள் கொண்டுவந்தால்தான் தப்புவீர்கள். ஆர்.டி., அஞ்சலகச்
சேமிப்பு., பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் என எதில்
வேண்டுமானாலும் நீங்கள் சேர்ந்து சேமித்தே ஆகவேண்டும்.
ஷோக்குப் பேர்வழி : கழுத்தில் மைனர்
செயின், புதிதாக வாங்கிய டூவீலர், பிராண்டட் ஜீன்ஸ், சட்டை, கறுப்புக்
கண்ணாடி, செல்போன் என மற்றவர்களை அசத்தவேண்டும் என்பதற்காகவே அலைபவர்
நீங்கள். இதற்காக ஆகும் செலவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்.
இதேபோக்கு தொடர்ந்தால் எதிர்காலத்தில் பல சிக்கல்களை
சந்திப்பீர்கள். இப்போதே செலவைக் குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துவது
கட்டாயம்.
ஊதாரி : நீங்கள்தான் ஆபத்தின்
விளிம்பில் இருப்பவர்கள். உங்கள் குடும்பத்தினர் எல்லோரையும் வருத்தப்பட
வைப்பீர்கள். வரவைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல் செலவு செய்வீர்கள்.
தாராளமாக நன்கொடை தருவீர்கள். பெரிய பார்ட்டி/ விருந்துகளை அடிக்கடி
ஏற்பாடு செய்வீர்கள். நீங்கள் உங்கள் பழக்கத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால்,
கடுமையான விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்.
செலவாளி, ஷோக்குப் பேர்வழி, ஊதாரி - இந்த மூன்று
கேட்டகிரியில் வருபவர்களும் சம்பளம் வந்தவுடன் அதில் ஒருபகுதியை கையில்
வாங்காமலே அப்படியே சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் கொண்டு சென்றுவிடுவது
கட்டாயம். ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ள வழிகளில் இவர்கள் பணத்தைச் சேமிப்பது
அவசியம்.
இனியாவது சேமிப்பு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளுங்கள். உன்னதமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
thanx - vikatan
0 comments:
Post a Comment