Tuesday, March 05, 2013

சூது கவ்வும் இயக்குநர் கம் தீயா வேலை செய்யணும் குமாரு வசனகர்த்தா பேட்டி

வரிசையாக் குறும்படங்கள் எடுத்துப் பழகிட்டோமா? எந்தக் கதைக்குத் திரைக்கதை எழுதினாலும், 10, 20 நிமிஷத்துக்குள்ள படமே முடிஞ்சிருது. சுந்தர்.சி சார் இயக்கும் 'தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்துக்கு வசனம் எழுதினேன். அப்போதான் ஒரு சினிமாவுக்கான ஸ்க்ரிப்ட்டுக்கு, எதையும் கொஞ்சம் மேல இருந்து பார்க்கணும்னு கத்துக்கிட்டேன். இப்போ ஆல் இஸ் வெல்!'' - பளிச்செனச் சிரிக்கிறார் நலன். 'நாளைய இயக்குநர் சீஸன்-1’ வின்னர். இப்போது 'சூது கவ்வும்’ என்று வெள்ளித் திரைக்குப் படையெடுக்கிறார்.  


 ''திருச்சி பையன். எம்.டெக். படிச்சிட்டு ஈவென்ட் மேனேஜ்மென்ட் வேலை பார்த்துட்டு இருந்தேன். சும்மா இருக் கிறப்போ நெட்ல ஹாலிவுட் படங்களின் ஸ்க்ரிப்ட் படிச்சுட்டு இருப்பேன். ஏதோ ஒரு வெளிநாட்டு சேனலில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஆறேழு இளைஞர்கள் போட்டி போட்டுக் குறும்படங்கள் எடுப்பாங்க. 



அதை அக்குவேறு ஆணிவேரா அலசி ஆராய்ஞ்சு சிறந்த குறும்படத்தைத் தேர்ந்தெடுப்பாங்க நடுவர்கள் குழு. இங்கேயும் அப்படி ஒரு நிகழ்ச்சி வந்தா நல்லா இருக்கு மேனு மனசுல நினைப்பு ஓடிட்டே இருக்கிறப்ப, 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி அறிவிப்பு வந்துச்சு. ஓவர் டோஸ் உற்சாகத்துல வீட்ல பொய் சொல்லிட்டு, 15 ஆயிரம் ரூபா பணத்தோட குறும்படம் எடுக்க வந்துட்டேன்.



'நெஞ்சுக்கு நீதி’, 'உண்மையை சொல்லணும்னா’, 'நடந்தது என்னன்னா?’, 'துரும்பிலும் இருப்பார்’னு எட்டுக் குறும்படங்கள் எடுத்தேன். ஒவ்வொரு குறும்படமும் எனக்கு ஒரு பாடம் கத்துக்கொடுத்துச்சு. 'நாளைய இயக்குநர்’ டைட்டில் ஜெயிச்சதும் உடனே சினிமாவுக்கு வரக் கூடாதுனு உறுதியா இருந்தேன். நிறையக் கத்துக்கிட்டே இருந்தேன். அதனால்தான் என் நண்பர்கள் கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன் எல்லாம் முத்திரை பதிச்ச பிறகு ஃபீல்டுக்கு வந்திருக்கேன்.''



''அதென்ன குறும்பட இயக்குநர்கள் எல்லாருக்கும் விஜய் சேதுபதி செல்லமா இருக்கார்?'' 



''விஜய் சேதுபதி என் நண்பர். என் குறும்படத்தில் நடிச்சவர். அந்த நட்பில் 'சூது கவ்வும்’ ஸ்க்ரிப்ட் படிச்சிட்டு கமென்ட்ஸ் சொல்லச் சொன்னேன். படிச்சுட்டு 'நானே நடிக்கிறேன்’னு ஆசையா சொன்னார். 'சும்மா இருங்க சேது... நாப்பது வயசு கேரக்டருக்கு செட் ஆக மாட்டீங்க. நான் இந்த கேரக்டரை உங்களுக்குத் தந்து கஷ்டப்படுத்த மாட்டேன்’னு சொல்லிட்டு நான் மறந்துட்டேன்.



 கொஞ்ச நாள் கழிச்சு முடி, தாடிக்கு வெள்ளை டை அடிச்சுட்டு, கொஞ்சம் வெயிட் போட்டு, அந்த கேரக்டராவே வந்து நின்னார். அப்போ அவர் அடம்பிடிச்சது எவ்வளவு நல்லதுனு இப்போ சந்தோஷப்படுறேன். படத்தின் லீட் கதாபாத்திரத்தில் நடிக்கிறவருக்கு இருக்கும் அந்த டெடிகேஷன்தான் எங்களைப் போன்ற முதல் பட இயக்குநர்களுக்குத் தன்னம்பிக்கை தர்ற விஷயம். அந்த வகையில் விஜய் சேதுபதி குறும்பட இயக்குநர்களின் ஃபேவரைட்டா இருக்கார்.''  



''குறும்பட அனுபவம் சினிமாவுக்கு உதவும்கிறது ஓ.கே. ஆனா, இந்த டிரெண்ட் தொலைநோக்கில் சினிமாவுக்கு நல்லதா, கெட்டதானு ஒரு பக்கம் விவாதம் ஓடிட்டு இருக்கே..?'


'
''இப்போதான் குறும்பட இயக்குநர்களை மதிச்சு பொறுமையாக் கதை கேட்கும் பழக்கமே இண்டஸ்ட்ரியில் வந்திருக்கு. அதுக்குள்ள அதைப் பத்தின விவாதங்கள் எதுக்குங்க? எல்லாரும் ரசிக்கிற மாதிரி குறும்படம் இயக்குவதும் ரொம்ப சவாலான வேலைதானே. ரொம்பக் குறைஞ்ச பட்ஜெட், அவுட்டோர் அனுமதிகள், ஒரு வாரத்துக்குள் படம் பண்ண வேண்டிய நெருக்கடி, உதவி இயக்குநர், புரொடக்ஷன் மேனேஜர்னு பலர் பார்க்க வேண்டிய வேலையை தனி ஒரு ஆளா பார்க்கிறதுன்னு பல அவஸ்தைகள், அனுபவங்களுக் குப் பிறகுதான் ஒவ்வொரு குறும்பட இயக்குநரும் தன் படைப்பை உருவாக்குகிறார். அதனால், அவங்களைக் குறைச்சு மதிப்பிடத் தேவையில்லை!''



நன்றி - விகடன்

0 comments: