எல்லா தமிழ் சினிமாக்களையும் கலாய்க்கும் எஸ் வி சேகரின் சினிமா சினிமா , ஷக்தி சிதம்பரத்தின் மகாநடிகன் , சி எஸ் அமுதனின் தமிழ்ப்படம் பாணியில் இன்னொரு படம் . முதல் பாதி ஹாலிவுட் படமான ஹேங்க் ஓவர் , பின் பாதியில் இன்று போய் நாளை வா & கண்ணா லட்டு தின்ன ஆசையா? அக்மார்க் உல்டா என கலந்து கட்டி மொக்கை போட்டிருக்கிறார்கள் .. உஷ் அப்பா முடியல
நண்பர்கள் 3 பேரு , திருப்தி இல்லாத மேரேஜ் லைஃப்ல இருந்து விடுபட ஐடியா பண்றாங்க . இவங்க 3 பேருக்கும் ஏன் மனைவி செட் ஆகலை அப்டினு தனித்தனி டிராக்ல சின்ன சின்ன கதை .அது முடிஞ்சதும் டான்ஸ் பார்ட்டில ஒரு ஃபிகரை பார்க்கறாங்க. அதுதான் ஹீரோயின் . அதை கரெக்ட் பண்ண 3 பேரும் படாத பாடு படறாங்க. யார் செட் பண்ணாங்க என்பதுதான் கதை . இதுல ஒரு ட்விஸ்ட் வேற இருக்கு க்ளைமாக்ஸ் ல . தில் இருக்கறவங்க தியேட்டர்ல போய் பார்த்துக்குங்க.. இந்த கூத்துல பெரிய கூத்து என்னன்னா 2 வது பாகம் வேற வருதாம் .
ஹீரோ வினய் என்பதே டைட்டில் ல தான் தெரியுது . எப்படி இருந்த ஆளு இப்படி ஆகிட்டாரே? அய்யோ பாவம் , சத்யன் , பிரேம் ஜிக்கு கொடுத்த முக்கியத்துவம் கூட இவருக்கு இல்லை . இவர் அஜித்தை , ரஜினியை , விஜய் யை கலாய்ப்பதெல்லாம் ஓவர் . யார் யார் என்ன செஞ்சா நல்லாருக்கும்னு தெரிய வேணாமா? ( அவர் கலாய்ச்ச ஆர்டர் படி பேர் போட்டிருக்கேன், இதுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவிச்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க )
ஓப்பனிங்க் ஷாட்டில் ஒரு பாடலுக்கு வரும் பவர் ஸ்டார்க்கு அமோக வரவேற்பு , ஆனா பெருசா ஏதும் கவரலை . பவர் ஸ்டார் உஷார். இப்படி சில்க் ஸ்மிதா மாதிரி ஆடிட்டு இருந்தா உங்க பவர் போயிடும் .
படத்துலயே எல்லார் மனமும் கவர்ந்தவர் சத்யன் தான். நல்ல காமெடி சென்ஸ். டயலாக் டெலிவரி , நடிப்பு எல்லாம் பக்கா
பிரேம் ஜியை க்ளோசப் ல அடிக்கடி காட்டுவது ஏன்? அவர் வாய் என்ன சிம்ரனின் இடுப்பா? கேமராவைக்கொண்டு போய் கொண்டுபோய் அவர் வாய் கிட்டேயே வைக்கறாங்க >. முடியல
ஹீரோயின் லட்சுமி ராய். டைட்டில் ல அழகு தேவதைனு போடறாங்க. என்ன நிர்ப்பந்தமோ .. பில்லா நயன் தாரா கெட்டப்பில் க்ளைமாக்ஸ் சில் நல்லா பண்ணி இருக்கார் , ஜாக்கிங்க் போற சீன்ல நல்லா திறமையை காட்டி இருக்கார்.. ( ஜாக்கிங்க் போறதுல என்ன திறமை?னு கேட்கும் சின்னப்பசங்க எல்லாம் ஜவ் மிட்டாய் சாப்பிடவும் ). நீச்சல் டிரஸ் ல 10 நிமிஷம் வர்றார் , அதோட அவர் போர்ஷன் ஓவர் .
வினய்க்கு மனைவியாக வரும் அந்த குண்டு பொண்ணு ஆர்த்தி மாதிரி ஒரு ரவுண்ட் வர சான்ஸ் இருக்கு , அவரே 19 ரவுண்ட் நம்மை விட குண்டா தான் இருக்கார் .
கவுரத்தோற்றத்தில் (!!!!!!!!!) டான்ஸ் பார்ட்டி புகழ் சோனா . 1ம் சொல்றதுக்கில்லை.. அப்புறம் மந்த்ராஆஆ
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. போஸ்டர் டிசைனில் , விளம்பரங்களில் பவர் ஸ்டாரை போட்டு மார்க்கெட் பண்ணினது , அவர் ஒரு பாட்டுக்குத்தான் வர்றார் என்பது தெரியாத வண்ணம் பார்த்துக்கிட்டது
2. படத்தின் ஹீரோயின் லட்சுமிராய் படம் போட்டு 97 வது நிமிடம் தான் அதாவது இடைவேளை முடிஞ்சு 6 நிமிஷம் கழிச்சுத்தான் எண்ட்ரியே ஆகறார் என்பது தெரியாத படி ஃபுல் அண்ட் ஃபுல் அவர் தான் எல்லாம் என்பது மாதிரி பிரமோட் பண்ணது
3. ஹீரோ வினய் என்பதே தெரியாத படி இருட்டடிப்பு பண்ணி பிரேம் ஜி , சத்யன் இவங்களை பூஸ்ட் அப் பண்ணது
4. பிரேம் ஜி - சோனா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளில் கடலோரக்கவிதைகளை நையாண்டி செஞ்ச விதம் ( அடி ஆத்தாடி )
5. சத்யன் தன் ஜோடியுடன் பாடும் உயிரின் உயிரே ( காக்க காக்க) பாடல் காட்சி
6, மனைவியைப்பிரிந்த வாலிபர்கள் சங்கம் ஆரம்பிச்சு பாடும் கானாப்பாட்டான வா மச்சி வா குத்தாட்டப்பாட்டு ஆக்கியது ( பாடல் இல் இருந்த கிக் படமக்கத்தில் இல்லை )
7 . மனோபாலாவின் சம்சாரத்தை வேறொரு நபர் கிஸ் அடிப்பதும் , அதை மன்னிக்கும் மனோபாலாவை ஒபாமா சந்திக்க விரும்பும் காமெடி டிராக்கும் ஆஹா!
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. கலாய்த்தல் என்பது சம்பந்தப்பட்ட நபரே பார்த்தாலோ படிச்சாலோ அவங்களே ரசிக்கும் அளவு இருக்கனும். எல்லை மீறினால் ரொம்ப த்தப்பு . ரஜினி, கமல் , அஜித் , விஜய் 4 பேரையும் கலாய்ச்சு இருக்கீங்க , இதுல அவங்களோ, அவங்க ரசிகர்களோ பார்த்தா கடுப்பாகும்படி தான் காட்சிகள் இருக்கு .
2. ஹீரோ பேரு டேவிட் பில்லா , அவர் தடுமாறி கீழே விழும் காட்சியில் “ நீ நெம்பர் ஒன் நெம்பர் ஒன் அப்டினு சொன்னே, இப்போ கீழே விழுந்து கிடக்கே “ இந்த டயலாக் எதுக்கு? அஜித் ஒரு நாளும் தன்னை நெம்பர் ஒன் அப்டினு சொன்னதே இல்லையே? தனிப்பட்ட முறைல உங்களுக்கு ஏதாவது அஜித் கூடப்பகையா?
3. சத்யன் ஒரு காட்சியில் துப்பாக்கி விஜய் ஸ்டைலில் “ ஐ ஆம் வெயிட்டிங்க் “ அப்டின்னதும் ஃபிகர் “ போடா லூசு “ அப்டிங்குது. இது ரொம்ப ஓவர்
4. யார் அவன் கோச்சடையான்? மண்டை மேல கொண்டை வெச்சுக்கிட்டு என்ற டயலாக்கும் அத்து மீறலே , தியேட்டர்ல யாரும் சிரிக்கவே இல்லை பாஸ்
5 . லொள்ளு சபா உட்பட எல்லாரும் பிரிச்சு மேஞ்ச நாயகன் வேலு நாயக்கர் கேரக்டர் உல்டா செம போர்..
6. மகளிர் தினம் அன்னைக்கு படம் ரிலீஸ் பண்ணிட்டு படம் பூரா பெண்களை மட்டம் தட்டிட்டே இருக்கீங்க.. டயலாக்ஸ் எல்லாம் நேரடி டபுள் மீனிங்க் .. ஏஏஏ சர்ட்டிஃபிகேட் குடுத்ததில் தப்பே இல்லை
7, கே எஸ் ரவிக்குமார் போலீசாக செய்யும் அலப்பறை செம மொக்கை
8. க்ளைமேக்ஸ் வந்ததும் டகால்னு 3 பேரும் திருந்துவது எப்படி?
9. படத்தின் கடைசி அரைமணி நேரம் சத்திய சோதனை , மகா இழுவை
10 . ஒவ்வொரு தமிழ் சினிமாவையும் கலாய்க்கும்போது நல்லாவே தெரியுது என்ன படத்தை ஓட்டறீங்கனு, போதாததுக்கு அந்தந்தப்பட ஃபேமஸ் பி ஜி எம் மை வேற ஓட விடறீங்க , போதாததுக்கு படத்தோட டைட்டிலையும் கேரக்டரே சொல்லனுமா? படு செயற்கை
மனம் கவர்ந்த வசனங்கள்
1. நாம 10 ரூபா கடனா கேட்டா தராத பசங்க பொண்ணுங்க கேட்டா மட்டும் 1000 ரூபா அயர்ன் பண்ணித்தருவானுங்க
2. நான் தல யையே பார்த்தவ.என் கிட்டேயே மங்காத்தாவா ?
- நான் தல ,தளபதி 2 பேரையும் பார்த்தவ
3. எல்லாரும் சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் வெச்சவனைத்தான் லவ் பண்ணுவாங்கன்னா என்னை மாதிரி சிங்கிள் பேக் எல்லாம் எங்கே போக ?
4. ஏய், டூ வட் ஐ ஸே..
என்னது? வாட்டர் சப்ளை வேணுமா?
5. ட்ரெட் மில்லுல என்னை இப்படி நடக்க விட்டதுக்கு ரோட்ல என்னை விட்டிருந்தா இந்நேரம் நான் கோயம்பத்தூருக்கே போய் இருப்பேன்
6. ஹாய் மிஸ்.. என்ன இவங்க கை கொடுக்க மாட்டாங்களா?
அவங்க கொஞ்சம் ஆர்த்தோடக்ஸ்
ஆடு மேய்க்கறாங்களா?
அய்யோ, யாரையும் டச் பண்றது பிடிக்காதுன்னு அர்த்தம்
குட் ஹேபிட், ஆனா பேடு மேனர்ஸ்
7. இவ என் ஃபிரண்ட் சவுந்தர்யா
ரஜினியை கேட்டதா சொல்லுங்க
8. நாம 2 பேரும் பாம்பே ஓடிப்போலாம்
அங்கே வேணாம் , குஜராத் போலாம்//
இல்லை , பாம்பே படத்துல தான் அர்விந்த் சாமி மணீஷா கூட ஓடிப்போய் ரெட்டை குழந்தை பெத்துக்கிட்ட்டாரு , அதே செண்ட்டிமெண்ட் ல நாமும் ட்ரை
9. தண்ணி குடு
இல்லை
இப்போதான் ஒரு 30 லிட்டர் கேனை உருட்டிட்டுப்போனே? ( அது ஒரு குஜிலி)
10. டேய், இது எத்தனை நாளா நடக்குது?
இப்போத்தான் அரை மணி நேரமா
11. நான் உயிரோடு இருக்கும் வரை தப்பு பண்ண விட மாட்டேன்
ஓ, எப்போ சாவீங்க ?
12. எதுல வேணாலும் விளையாடுங்க, ஆனா என் லவ் ல மட்டும் விளையாடாதிங்க
அப்போ உன் லவ்வர் கூட விளையாடலாமா? ( எந்த ஃபிரண்ட்ஸ் ஆவது இப்படி கேட்பாங்களா? )
13. இந்த நாய்க்கு பூஜை, அர்ச்சனை செய்யனுமா? சரி நட்சத்திரம் என்ன?
மிருக சீசரம் , கவுரவ கோத்திரம்
கூட இருந்து பிரசவம் பார்த்த மாதிரியே சொல்றானே
14. என்ன பேசறீங்க?
தமிழ் தான்
15. ஏய்.. புரிஞ்சுக்க
முதல்ல புரியற மாதிரி பேசு
16. புலி பசிச்சாலும் புரோட்டா தின்னாது
17. முழு புரோட்டாவா இருந்த நம்ம வாழ்வு மேரேஜ் ஆனதுல இருந்து கொத்து புரோட்டாவா ஆகிடுச்சு
18. நான் அஞ்சாவது படிக்கும்போது அஞ்சலை டீச்சரை லவ் பண்ணேன், பத்தாவது படிக்கும்போது பத்மா டீச்சரை , பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது பரிமளா டீச்சரை லவ் பண்ணேன்
19. அடடா, என்ன அழகு அழகு , உக்கார வெச்சு ஒரு மாசம் வேடிக்கை பார்க்கலாம் போல
20 . எங்கே அவளைக்காணோம்? மைதா மாவு மாதிரி இருந்தாளே, தண்ணீருல கரைஞ்சுட்டாளா?
21. மிஸ் , 17 சி பஸ் எங்கே நிக்கும்?
சாலி கிராமம் போய்க்கேட்டா சொல்வாங்க, இது பெங்களூர்
22. அய்யோ , மேடம், ரொம்ப ஏறி ஏறி இறங்காதீங்க ( அவுட் ஆகிடப்போகுது ) சென்சார் கட் வசனம் மியூட் ( டபுள் மீனிங்க் _)
23./ ஓமக்குச்சி கூட என்னைப்பார்க்க வர மாட்டான், ஒபாமா எதுக்கு வர்றாரு?
24. அந்தக்கொரில்லா நீ எது சொன்னாலும் கேட்குமா? முட்டி போடுமா?
குட்டியே போடும் ( அதாவது வாரிசு )
இதை பிரஸ் மீட் வெச்சா சொல்லிட்டு இருக்க முடியும்?
26. குத்துங்க எஜமான் குத்துங்க, இந்த மாமியார்களே இப்டித்தான்
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே
சி. பி கமெண்ட் - எல்லாரும் பார்க்க முடியாது . பி , சி செண்ட்டர் ஆண் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம். எல்லா தமிழ் சினிமாக்களையும் பார்த்தவங்க ஓரளவு ரசிக்கலாம் , டி வி ல பார்க்க ஏற்ற படம் . தியேட்டருக்குப்போனா 9 ல குரு ஏழரை சனி - ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்
ரேட்டிங்க் - 2.25 / 5
9 comments:
Romba thanx rs150 save pannitinga
thanks a lot...
ரொம்ப நன்றி தலைவா !!!!
1000 ருபாய் மிச்சம்...
கண்டிப்பா பார்க்க மாட்டேன் பாஸ்
9ம் (மார்ச்) தேதி போய் பார்த்துட்டேம்பா..... எனக்கு 9ல சனினினினினினி.......
காமெடி படம்னு நினைச்சு போய் மொக்க வாங்குனது தான் மிச்சம்.அய்யா டைரக்டர்களே இது மாதிரி மொக்க படம் எடுத்து எங்க காச வேஸ்ட் பண்ணாதீங்க!
ajith than thaan next superstar endu oru peddiyila solli irukkan.so avanukku intha nondi ok thaan
varallaru theriyadi enkaav
athu keddu paathiddu eluthunga bass
@vishakan selvaratnam
vandhutaaruya obama :P
Post a Comment