சினிமாவுக்கு முதுகெலும்பாக இருப்பது...
கதையே...
திரைக்கதையே...
வசனமே...
பாடல்களே...
இசையே...
ஒளிப்பதிவே...
எடிட்டிங்கே...
டைரக்ஷனே...
- என்று ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொருவர் இங்கு வாதாடுகிறார்கள்.
கலைமணி: கதையே..!
''படம் என்றாலே அது ஒரு கதையைச் சொல்வதுதான். ரெண்டு
பேரும் காதலிக்கிறார்கள் என்பதையே படம் முழுக்கச் சொல்ல முடியாது.
காதலிக்கும்போது அவர்களுக்கு என்ன நடந்தது என்று ஒரு கதை வேண்டும்.
கதாசிரியன்தான் ஜீவநாடி. டைரக்டர் அந்தக் கதையை
அலங்கரிப்பவர்தான்.
புகழடைந்த ஸ்ரீதர், பாலசந்தர் போன்ற டைரக்டர்கள் கதாசிரியராகவும்
இருக்கிறார்கள். டைரக்ஷன் மட்டும் பண்ணிக்கொண்டு யாரும் இங்கே புகழ்
பெறவில்லை. அப்படி உள்ளவர்கள் என்று நீங்கள் நினைப்பவர்கள்கூட அணு அளவு
மூலத்தை யாரிடமாவது பெற்று, அதை ஒரு நல்ல கதையாக எழுதிக்கொள்கிறார்கள்.
பிறகு, அதற்குத் திரைக்கதை அமைக்கிறார்கள்.
![](http://cdnw.vikatan.com/av/2013/03/zjuyja/images/p67b.jpg)
காலத்தை வென்று நிற்பவை கதையுள்ள படங்கள்தான்.
'காட்சி’யை மட்டும் நம்பி எடுக்கப்படும் படங்கள் காலப்போக்கில்
கரைந்துவிடும். அண்ணன், தங்கை பாசத்துக்கு அழியாத உதாரணம் 'பாசமலர்’. அது
கதையுள்ள படம். காதலுக்கு ஒரு கவின்மிகு எடுத்துக்காட்டு 'தேவதாஸ்’. அது
கதையுள்ள படம். சிவாஜி போன்ற மாபெரும் நடிகர்களின் சிறந்த நடிப்புகூட,
கதையில்லாத சில படங்களில் விழலுக்கு இறைத்த நீராகப் போயிருக்கிறதே.
சமுதாயப் பிரச்னையைச் சொல்லி, அதற்குத் தீர்வையும் சொல்ல கதையம்சம் நிறைந்த
ஒரு படத்தால்தான் முடியும்.''
பார்த்திபன்: திரைக்கதையே..!
![](http://cdnw.vikatan.com/av/2013/03/zjuyja/images/p67.jpg)
இனிமேலும், கதை என்ற பெயரால் மக்களை ஏமாற்றவே முடியாது.
திரைக்கதையால்தான் வித்தியாசப்படுத்த முடியும். திரைக்கதையை வைத்துதான்
புதிய படங்கள் செய்ய முடியும். கதை நன்றாக இல்லாவிட்டாலும், திரைக்கதை
நன்றாக உருவாக்கப்பட்டால் படம் சிறப்பாக இருக்கும்.
என்னைப் பொறுத்தவரை நான் கதை என்று எதையும்
ஏற்படுத்துவது இல்லை. ஏதாவது வித்தியாசமான ஒரு காட்சியை முதலில்
யோசிப்பேன். வீடு தீப்பிடிக்கும். ஒருவன் அந்த நெருப்பில் சிகரெட்
பற்றவைக்கிறான் என்று ஒரு காட்சியை யோசித்தேன். பிறகு, அவன் எந்த
சூழ்நிலையில் அப்படிச் செய்வான் என்று யோசித்து, காட்சியின் மேல் காட்சியாக
அடுக்கினேன். 'புதிய பாதை’ பிறந்தது!''
ஆரூர்தாஸ்: வசனமே..!
![](http://cdnw.vikatan.com/av/2013/03/zjuyja/images/p67c%281%29.jpg)
பாலாஜி தயாரித்த 'விதி’ படத்தின் வெற்றியில் என் பங்கு
கூடுதல் என்று கூறும் அளவுக்கு, என் வசனம் எல்லோராலும் பாராட்டப்பட்டது.
கோர்ட் ஸீனுக்காகவே பலர் அந்தப் படத்தைப் பார்த்தார்கள். அதன் பின் வந்த
'பூ ஒன்று புயலானது’ படமும் என் வசனத்தால் பெரும் சிறப்படைந்ததே. இப்போது
வரும் புதியவர்களின் படங்களில்கூட வசனம் முக்கியப்படுத்தப்படுகிறதே. ஒரு
வரிக் கதை, பத்து வரிக் கதை, எழுதாத - வாய்ச்சொல் கதை, ஒரு கரு, ஆங்கிலப்
படத்தின் பிரதிபலிப்பு - இந்திப் படப் பாதிப்பு என எப்படி வேண்டுமானாலும்
கதை கட்டலாம். ஆனால், வசனம் அப்படியல்ல.
அழவைத்தல் - ஆத்திரப்படவைத்தல் - சிரிக்கவைத்தல் -
சிந்திக்கவைத்தல் முதலிய உணர்வு களின் ஊற்றுக் கண்களைத் திறப்பதே
வசனம்தான். ஒரு படம் நாலு இடங்களில் வசனத்துக்காகக் கைதட்டல் வாங்கினால்
போதும். அந்தப் படத்தின் வெற்றி முடிவுசெய்யப்பட்டதாக அர்த்தம். எனவே,
திரைப்படத்துக்கு முதுகெலும்பு வசனமே!''
கவிஞர் முத்துலிங்கம்: பாடல்களே..!
''ஒரு படத்தில் அனைத்து அம்சங்களும் காலப்போக்கில்
ரசிகனுக்கு மறந்துபோகலாம். ஆனால், அவனுக்கு மறக்காமல் இருப்பது பாடல்
வரிகள்தான். பாடல் வரிகளை வைத்துதான் பல படங்கள் அடையாளம் கூறப்படுகின்றன.
உதாரணமாக, 'வயசுப் பொண்ணு’ என்று ஒரு படம். இந்தப் படத்தைப் பற்றிப்
பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ஆனால், 'காஞ்சிப் பட்டுடுத்தி...
கஸ்தூரிப் பொட்டு வைத்து தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்’ என்று நான்
எழுதிய பாட்டு பெருமளவில் புகழ் பெற்றது. இப்போதும்கூட இந்தப் பாடல் இந்தப்
படத்தில்தான் என்றவுடன், அந்தப் படத்தைப் பற்றிய நல்லதொரு அபிப்பிராயமே
ஏற்படும். ஒருவேளை அது ரொம்ப நல்ல படமோ என்றெல்லாம் எண்ணத் தோன்றும் (அது
மோசமான படம் என்று நான் சொல்லவில்லை. ஓர் உதாரணம் சொன்னேன்!).
![](http://cdnw.vikatan.com/av/2013/03/zjuyja/images/p67d.jpg)
நல்ல கருத்துகளை மக்கள்
மனத்தில் பதியவைப்பது பாடல்கள்தான். அவ்வளவு ஏன்... எம்.ஜி.ஆரை
உருவாக்கியதே பாடல்கள்தானே! இதை யாராவது மறுக்க முடியுமா? 'பாடல்கள் இல்லாத
படம் ஒன்று பண்ணலாமா?’ என்று ஒரு இயக்குநர் எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது,
'அப்படி ஒரு படத்தை என்னால் யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. யோசிக்கவும்
நான் விரும்பவில்லை’ என்றாராம் புரட்சித் தலைவர். எம்.ஜி.ஆர்.
முதலமைச்சரானபோது ஒரு அமெரிக்கப் பத்திரிகை 'இன்றுபோல் என்றும் வாழ்க’
படத்தில் நான் அவருக்கு எழுதிய 'அன்புக்கு நான் அடிமை’ என்ற பாடலையும் 'இது
நாட்டைக் காக்கும் கை’ பாடலையும் எழுதி, அவற்றின் ஆங்கில அர்த்தத்தையும்
குறிப்பிட்டு 'இதுபோன்ற பாடல்களால்தான் எம்.ஜி.ஆர். முதலமைச்சரானார்’ என்று
எழுதியிருந்தார்கள்!''
எஸ்.ஏ.ராஜ்குமார்: இசையே..!
![](http://cdnw.vikatan.com/av/2013/03/zjuyja/images/p67f.jpg)
கிரவுண்டில் சோகமான ஷெனாய் இசையோ அல்லது வயலின் இசையோ
வரும். அந்த இசை வந்த பின்னர்தான் ரசிகன், கதாநாயகனோட நிலைக்குப் போய்
அந்தச் சோகத்தை உணர்வான்.
ஆனா, படம் பார்க்கிற ஆடியன்ஸுக்கே - இந்த
இசையால்தான் நமக்கு அந்த உணர்ச்சி கிடைக்குதுங்கிறது தெரியாது. அந்த
மியூஸிக் இல்லைன்னு வெச்சுக்குங்க... 'அம்மா இறந்துட்டாங்க’ன்னு சொன்னவுடனே
அந்தக் காட்சியைக் காணும் நமக்குக்கூட, 'அப்படியா சரி, பரவாயில்லே’ன்னு
சொல்லத் தோணும்.
சம்பந்தம் இல்லாத மியூஸிக் வந்ததுன்னா, அந்த ஸீன்ல
ஆடியன்ஸ் சிரிச்சுடுவான். அப்புறம் குடி முழுகிப்போன மாதிரிதான். ஒரு
கேரக்டருக்கு காபி கொண்டுவந்து தர்றாங்க. அந்தக் காபியை அவர்
குடிக்கும்போது, நாங்க ஒரு சின்ன மியூஸிக் 'பிட்’டால, அவர் விஷம் கலந்த
காபியைக் குடிக்கறாருங்கிற எண்ணத்தை ரசிகர்கள்கிட்ட ஏற்படுத்த முடியும்!''
பி.கண்ணன்: ஒளிப்பதிவே..!
![](http://cdnw.vikatan.com/av/2013/03/zjuyja/images/p67g.jpg)
சோகக்
காட்சியில் நமக்குக் கோபம் வரும். கோபக் காட்சியில் சோகம் வரும். காதல்,
காதலாக இருக்காது. கஷ்டமாக இருக்கும். அருவருப்பான இடத்தைக்கூட எங்க
கேமராவால் அழகாகக் காட்ட முடியும். குப்பைமேட்டுப் பக்கத்தில் ஒரு காதல்
காட்சியை எடுத்து, சூப்பர் லொகேஷன் என்று பெயர் வாங்க முடியும்.
சினிமா என்பதே விஷ§வல் மீடியாதான். விஷ§வல் என்பதே
கேமரா. அந்த கேமரா எங்கள் கையில். இப்போது சொல்லுங்கள் - சினிமாவுக்கு
முதுகெலும்பு கேமராதானே!''
விட்டல்: எடிட்டிங்கே..!
![](http://cdnw.vikatan.com/av/2013/03/zjuyja/images/p67e.jpg)
மகேந்திரன்: டைரக்ஷனே..!
![](http://cdnw.vikatan.com/av/2013/03/zjuyja/images/p67i.jpg)
அடிப்பகுதி உடைந்து தட்டையாகி முட்டை அப்படியே நின்றது - உள்ளே
உள்ளது வெளியே வராமலேயே! பிரபுக்கள் 'இது என்ன கஷ்டம்? இதை எப்படி ஏற்க
முடியும்?’ என்றார்கள். 'நான்தான் எப்படியாவது நிறுத்துங்கள் என்றேனே...’
என்றார் கொலம்பஸ்.
அதுபோல, படத்தைச் சிறப்பாக உருவாக்க வேண்டிய வேலை
எல்லோருக்கும் உண்டு. ஆனால், எப்படியாவது நன்றாக உருவாகக் வேண்டும் என்ற
கடமை - கட்டாயம் டைரக்டருக்குத்தான் உண்டு. ஒரு படத்தில் ஏனைய துறையைச்
சேர்ந்தவர்களின் விஷயங்கள் நன்றாக வந்திருக்கிறது என்றால், டைரக்டர் அவற்றை
அனுமதித்திருக்கிறார் என்று அர்த்தம். ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவரிடமும்
'நீங்கள் இந்த அளவுக்குப் பணியாற்ற வேண்டும். இப்படி பணியாற்ற வேண்டும்’
என்று வரையறை தருகிறோம்.
அதை விட்டு விலகாமல் 'இம்ப்ரூவ்’ பண்ணிச் செய்வது
அவர்கள் திறமை. நல்ல இசையை, நல்ல பாடலை, நல்ல கதையை, நல்ல வசனத்தைக்
கேட்டுப் பெறுவது நாங்கள். நல்ல எடிட்டிங்கை, சிறந்த ஒளிப்பதிவை
நிர்ணயிப்பது நாங்கள். நல்ல திரைக்கதையைக் கொண்டுவருவது நாங்கள், இப்படி
மேற்சொன்ன ஏழு விஷயங்களின் அஸ்திவாரம் - தாய் - எல்லாம் டைரக்ஷன்தான்.
இப்படியிருக்க டைரக்ஷனை மிஞ்சி யார் என்ன செய்ய முடியும்?''
இந்தக் கட்டுரைக்காக எல்லோரையும் அணுகியபோது, ஒட்டுமொத்தமாக அனைவரும் சொன்ன கருத்து:
''நீங்கள் இப்படிக் கேட்டதால்தான், நாங்கள் எங்கள் துறையின்
முக்கியத்துவத்தைக் கூறுகிறோம். மற்றபடி சினிமா என்பது ஒரு டீம் வொர்க்!''
- சு.செந்தில்குமரன்
படங்கள்: ஆர்.விஜி
நன்றி - விகடன்
4 comments:
இது எதுவும் கிடையாது: நம்மளை மாதிரி குங்குமம் சுமக்கும்...
நல்ல பகிர்வு...
வாழ்த்துக்கள்....
கண்டிப்பாக திரைக்கதைதான்.
குரோம்ல உங்க வெப்சைட் போக முயற்சி பண்ணா error காட்டுது .ஏதோ udanz.com லருந்து malware found னு வருது பாத்து சரி பண்ணி விடுங்க
Post a Comment