Thursday, March 28, 2013

தலைவா துப்பாக்கியை தாண்டிடுமா? - இயக்குநர் விஜய் பேட்டி

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQDLezW28cuvlB5MXx6q9XysBBYAdhBxZU3iI8cfxUDLJXe43-2 
 
"குட் பேபி அமலா பால்!”
 
 
எம். குணா
 
முதன்முதலா காலேஜ் கட் அடிச்சுட்டுப் பார்த்த படம் 'காதலுக்கு மரியாதை’. என் பேரும் விஜய்ங்கிறதால அப்ப அந்தப் படத்துல விஜய் போட்டிருந்த மாதிரியே டி-ஷர்ட், கூலர்ஸ் போட்டுக்கிட்டு அலம்பல் பண்ணுவேன். இப்போ அதே விஜயை வெச்சு, 'தலைவா’ படம் இயக்குறேன். காலம் ரொம்ப வேகமா ஓடுது!'' - சிலிர்ப்பும் சிரிப்புமாகப் பேசத் தொடங்கினார் விஜய்... இயக்குநர் விஜய்!
 
 
 
''இயக்குநர் விஜய், நடிகர் விஜயை எப்படிப் பிடிச்சார்?''  


''தனிப்பட்ட முறையில் அவர் எனக்குப் பழக்கம் இல்லை. முன்னாடி 'மதராசபட்டினம்’ பார்த்துட்டு வாழ்த்தினப்போ, 'நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’னு சொன்னார். இப்போ சமீபத்தில் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் 'விஜய் கால்ஷீட் என்கிட்ட இருக்கு. நீங்க போய் அவருக்குக் கதை சொல்லுங்க’னு சொன்னார்.


அவரைப் போய்ப் பார்த்தேன். 'தலைவன்கிற பட்டத்தை நாம தேடிப் போகக் கூடாது. அது தானா நம்மளைத் தேடி வரணும்’னு ஒன் லைன் சொல்லிட்டுக் கதை சொன்னேன். கால் மணி நேரத்துல சிரிச்சுட்டே கைகொடுத்து கன்ஃபர்ம் செய்தார்!''




''நீங்க இயக்கின 'கிரீடம்’, 'மதராசபட்டினம்’, 'தெய்வத்திருமகள்’ எல்லாமே சோகமான முடிவுகொண்ட க்ளாஸிக் வரிசைப் படங்கள். ஆனா, 'துப்பாக்கி’ ஹிட்டுக்கு அப்புறம் அதைவிட அதிரடியா எதிர்பார்ப் பாங்களே விஜய் ரசிகர்கள்?!''   


''நீங்க குறிப்பிடும் எல்லாப் படங்களிலும் க்ளைமாக்ஸ் சோகமா இருக்கும். ஆனா, படம் முழுக்க ட்ராவல் செய்யும் கேரக்டரின் தேடலுக்கு அதுதான் தேவை. 'தலைவா’ சீனுக்கு சீன் ஆர்.டி.எக்ஸ். பட்டாசு வெடிக்கும் படம். இன்னைக்கு 'தலைவர்’னு அடையாளப் படுத்தப்படுற எல்லாரும் அந்த இடத்துக்கு எப்படி வந்தாங்கனு ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கும். அப்படியொரு ஃப்ளாஷ்பேக்தான் படம். 'துப்பாக்கி’ சக்சஸுக்குப் பிறகான எதிர்பார்ப்பு நிச்சயம் பூர்த்தியாகும் அளவுக்குத் திரைக்கதை பிடிச்சிருக்கோம். ஸ்டைல், டான்ஸ் போக சின்னச் சின்ன நுணுக்கமான எக்ஸ்பிரஷன்களுக்குக்கூட ரொம்ப மெனக்கெட்டு நடிச்சிருக்கார் விஜய்!''



''சத்யராஜுக்குப் படத்தில் என்ன ரோல்?'' 


''மிக முக்கியமான ரோல். அது விஜயின் காட்ஃபாதரா இல்லை வில்லானாங்கிறது சஸ்பென்ஸ். நான் டவுசர் போட்ட காலத்துல இருந்து இப்போ வரை அவரோட உயரத்தையும் நடிப்பையும் அண்ணாந்து பார்க்குறவன். ஆனா, அவர்கூட வேலை பார்க்கும்போது சினிமா மீது அவர் வெச்சிருக்கிற டெடிகேஷன் பார்த்து ஆச்சர்யமா இருக்கு. மும்பையில் 'தலைவா’ ஷூட்டிங் நடந்துட்டு இருந்தப்போ, பால் தாக்கரே உடம்பு சரியில்லாம மருத்துவமனையில் இருந்தார்.


 நான் ஸ்பாட்ல இல்லாதப்போ, சிவசேனா கட்சிக்காரங்க வந்து சத்யராஜ் சார்கிட்ட படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லியிருக்காங்க. 'நோ... நோ... டைரக்டர் வந்து பேக்கப் சொல்லாம நான் இடத்தைவிட்டு நகர மாட்டேன்’னு சொல்லி அவங்களை தில்லா எதிர்த்திருக்கார். அந்த அர்ப்பணிப்பும் துணிச்சலும் எங்களைப் போன்ற ஜூனியர்கள் எல்லாரும் கத்துக்க வேண்டிய பாடம்!''


'' 'என்கிட்ட நூறு பேருக்கு மேல உதவி இயக்குநர்களா வேலை பார்த்திருந்தாலும் விஜயை என் அசிஸ்டென்ட்னு சொல்லிக்கிறதில் பெருமைப்படுறேன்’னு இயக்குநர் ப்ரியதர்ஷன் சொல்லியிருக்காரே?'' 



''ப்ரியதர்ஷன் சார் என் கலைக் கடவுள். என்னைப் பத்தி அவர் அப்படிச் சொல்றதுக்கு நான் ரொம்பக் கொடுத்துவெச்சிருக்கணும். இன்னிக்கு நான் இருக்கும் இடத்துக்குக் காரணம் அவர் கத்துக்கொடுத்த பாடம்தான். எனக்கு ஒரு ஆசை இருக்கு. இதுவரை ப்ரியதர்ஷன் சார் 92 படம் இயக்கியிருக்கார். அவரோட 100-வது படத்துல மறுபடி நான் அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா வேலை பார்க்கணும்!''


''உங்களுக்கும் அமலா பாலுக்கும் நத்திங் நத்திங்னு சொல்றீங்க. ஆனா, 'தலைவா’வில் அவர் எப்படி ஹீரோயின் ஆனார்?'' 


''இளைமைத் துடிப்பும் பெர்ஃபார்மென்ஸ் நடிப்பும் காட்ட வேண்டிய ஹீரோயின் கதைக்குத் தேவை. சோனம் கபூர், தீபிகா படுகோன் எல்லாம் கேட்டுப் பார்த்தோம். உடனடியா கால்ஷீட் இல்லைனு சொன்னாங்க. இடையில ஒரு நாள் விஜய் சார், 'மோகன்லால், அமலா பால் நடிச்ச 'ரன் பேபி ரன்’ படம் பார்த்தேன். அமலா நடிப்பு நல்லா இருந்துச்சு. நம்ம படத்துக்குப் பொருத்தமா இருப்பாங்கனு தோணுது’னு சொன்னார். 'நானும் படம் பார்த்தேன். உங்களுக்கு ஓ.கே-ன்னா எனக்கும் ஓ.கே’னு சொன்னேன். இப்படித்தான் அமலா பால் புராஜெக்ட்டுக்குள் வந்தாங்க. அந்த நிமிஷத்துல இருந்து இந்தக் கேள்வியையும் நான் எதிர்பார்த்தேன்!''


''சரி... உங்க கல்யாணம் எப்போ? காதல் கல்யாணமா... நிச்சயிக்கப்பட்ட திருமணமா?'' 


''நான், நீரவ் ஷா, ஜி.வி.பிரகாஷ் மூணு பேரும் சேர்ந்து ஒரு ரூபாகூடச் சம்பளம் வாங்காம ஒரு படம் எடுக்கணும்னு ஆசைப்படுறோம். காரைக்குடிதான் படத்தோட மொத்த லொகேஷனும். அந்தப் படம் தமிழகக் கலாசாரத்தின் பிரதிபலிப்பா இருக்கணும். அப்புறம்தான் கல்யாணம் பத்தின நினைப்பே. அதுவும் அம்மா, அப்பா பார்த்து செலெக்ட் செய்ற பொண்ணுதான். போதுமா?''


ஒருவேளை... அப்பா-அம்மாவே அமலா பாலை செலெக்ட் பண்ணுவாங்களோ?! 

நன்றி - விகடன் 
 
 
 
 

0 comments: