முதல் டான்ஸ் 3டி படத் தில் நானும் இருக்கேன்னு நாளைக்கு என் பசங்ககிட்ட
பெருமையா சொல்லிக்கலாம். ஷூட்டிங் ஆரம்பிக் கும்போது 77 கிலோ இருந்தேன்.
இப்போ 71 கிலோ!'' - சட்டைக் காலரை உயர்த்தி விட்டுச் சிரிக்கிறார்
பிரபுதேவா. 'ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்’ படத்தில் இளைஞர்களுடன் இணைந்து
பணிபுரிந்த உற்சாகம் பிரபு தேவாவின் வார்த்தைகளில் தெறிக்கிறது.
''பட டிரெய்லர் நல்லா இருக்கு. ஆனா, ஷூட்டிங் அப்போ, 'எனக்கு வயசாகிடுச்சு. கஷ்டமான ஸ்டெப்ஸ் தராதீங்க’னு சொன்னீங்களாமே?''
''வயசாகிடுச்சுனு சொல்லலை. 39 வயசு ஆகிடுச்சுன்னுதான் சொன்னேன். ஹலோ, ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்குங்க.''
''இந்தியில் பரபரப்பான இயக்குநர் ஆகிட்டீங்க. ஆனா, தமிழ்ல நீங்க நடிச்ச 'களவாடிய பொழுதுகள்’ படம் வெளிவருவதில் ஏன் இவ்ளோ தாமதம்?''
''தங்கர் எனக்கு நல்ல நண்பர். ரிலீஸ் பண்ணலைன்னா, நான் அவரை விட
மாட்டேன்ல. 'களவாடிய பொழுதுகள்’ படம் எப்ப வெளிவந்தாலும் அதில் லைஃப்
இருக்கும். 'பெண்ணின் மனதைத் தொட்டு’ படத்துக்குப் பிறகு, நான் நடிச்ச
படங்களில் 'களவாடிய பொழுதுகள்’ என் மனசுக்கு நெருக்கமான படம். நானும்
தங்கர் சாரைக் கேட்டுட்டே இருக்கேன். சீக்கிரமே நல்லபடியா ரிலீஸ்
ஆகும்.''
''தனிமை கஷ்டமா இல்லையா?''
''அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. கொஞ்சம் நேரம் கிடைச்சாலும் நான்
பசங்களைப் பார்க்க, சென்னை வந்திருவேன். அவங்க என்னைப் பார்க்கணும்னு
நினைச்சா, ஓடி வந்துடுவாங்க. இப்பதான் சமீபத்துல ஹாங்காங் போய்ட்டு
வந்தோம். ரிஷிக்கு இப்போ ஒன்பது வயசு. ஃபோர்த் படிக்கிறான். ஆதித்யாவுக்கு
நாலு வயசு. எல்.கே.ஜி. போறான். குழந்தைங்க உலகத்துக்குள்ள நாம போனா நேரம்
போறதே தெரியலை. வாழ்க்கையில இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.''
''காதல்பத்தி இப்போ உங்க பார்வை என்ன?''
''அழகான விஷயம். சூப்பர் மேட்டர்ல அது!''
''இன்னும் கொஞ்சம் டீட்டெய்லா சொல்லலாமே?''
''என் டைரக்ஷன்ல காதல் எப்பவும் இப்படித்தாங்க இருக்கும்''-
அட்டகாசமாகச் சிரிக்கிறார் பிரபுதேவா.
thanx - vikatan
0 comments:
Post a Comment