a
தமிழ் நாட்டை விட்டு ஒரு இஞ்ச் கூட நகராத என் கண்ணுக்கே டொக்கு ஃபிகரா தெரியற ஒரு 50 மார்க் ஃபிகர் ஹீரோயினை தாய்லாந்து , பாங்காங்க் , மும்பை என பல இடம் பார்த்த பல ஃபிகர் பார்த்த தாதா ஹீரோ பார்த்ததும் லவ்வுல தொபுக்கடீர்னு விழறாரு. அந்த டொக்கு ஃபிகரு ஹோட்டல்ல சர்வரா இருக்கு .5 ரூபா டிப்ஸ் குடுத்தாலே மடங்கிடும் அந்த ஃபிகருக்கு ஹீரோ 5000 ரூபா டிப்ஸ் தர்றாரு. அது உடனே “ நான் அந்த மாதிரி பொண்ணு இல்லை “ அப்டிங்குது
இதுல என்ன காமெடின்னா அந்த மாதிரி பொண்ணுங்களே ஓப்பனிங்க்ல கெத்து காட்ட அப்டி பில்டப் குடுப்பாங்களாம், போய்ட்டு வந்த சிலர் சொன்னாங்க .ரொம்ப பிகு பண்ணின பிறகு அந்த டொக்கு ஃபிகர் எங்கப்பா உன்னை பார்க்கனும்னு சொல்லி கூட்டிட்டுப்போறார். ( நல்ல வேளை , அவங்கம்மா பார்க்கனும்னு சொல்லி இருந்தா இன்னொரு கில்மாக்கதை சிக்கி இருக்கும் )
இப்போ பயங்கரமான 2 ட்விஸ்ட். 20 நாளாவது ஓடற படமா இருந்தா சஸ்பென்சை வெளியே சொல்லாம கமுக்கமா இருந்திருப்பேன், ஆனா எப்படியும் இது ஊத்திக்கப்போகும் படம் தான். எப்படியும் நீங்க யாரும் படம் பார்க்கப்போறதில்லை , அதனால சொல்லிடறேன். ட்விஸ்ட் 1. ஹீரோயின் நிஜமாவே ஹீரோவை லவ் பண்ணலை , எல்லாம் டிராமா ( இந்த டொக்கு ஃபிகருக்கே இவரைப்பிடிக்கலையே..... ) ட்விஸ்ட் 2 . பிரசாந்த் நடிச்ச அப்பு படத்துல வில்லனா வந்த பிரகாஷ்ராஜ் மாதிரி , விஸ்வரூபம் டான்ஸ் மாஸ்டர் கமல் மாதிரி , வரலாறு அஜித் மாதிரி பெண்மைத்தனம் கொண்ட இன்னொரு ஹீரோவோட ஆள் தான் ஹீரோயின் .
எதுக்காக இந்த டிராமா? இந்த குப்பைப்படத்துக்கு எதுக்கு இந்த பில்டப். இயக்குநர் அமீருக்கு யோகி வாங்குன அடி பத்தலையா? ஏன் இப்படி ? என்பதை டி வி ல அடுத்த வாரம் எப்படியும் போட்ருவாங்க , அப்போ பார்த்து தெரிஞ்சுக்குங்க
ஹீரோ ஜெயம் ரவிக்கு இது முக்கியமான படம் ( அப்டினு அமீர் ஏமாத்தி கால்ஷீட் வாங்கிட்டாரு ) ஓப்பனிங்க் ல சி பி ஐ டெபுடி கமிஷனர் என கெத்து காட்டும் ரெய்டு காட்சியில் சுஜாதா திரைக்கதையில் வந்த செல்லமே விஷால் நினைவு வருது . பின் தாதாவாக வரும்போது நாயகன் கமல் நினைவு வருது ( கமல் ரசிகர்கள் மன்னிக்க - சும்மா ஒரு பேச்சுக்கு ) .திருநங்கை கெட்டப்ல வரும்போது ஆணழகன் பிரசாந்த் நினைவு வருது . ஆனாலும் அந்த கேரக்டரில் ஜெயம் ரவி கலக்கிட்டார். என்னா ஒரு பாடி லேங்குவேஜ் .
அந்த கேரக்டரில் அவர் வரும் காட்சிகளெல்லாம் அப்ளாஸ் அள்ளுது ( எல்லாம் ரசிகர்களாத்தான் இருக்கும் )
ஹீரோயின் கழுவாத விடியா முகரையா நீது சந்த்ரா . ஆயில் ஸ்கின் ஃபேஸ். க்ளோசப் ல பார்த்தாலும், லாங்க் ஷட்ல பார்த்தாலும் , சைடுல பார்த்தாலும் தேறாத முகம்,. இந்த லட்சணத்துல நெத்தில குங்குமம் வேற இல்லை. ரசிக்கறதுக்கு அங்கே ஏதும் லேது .அடிக்கடி லோ கட் சுடி வேற . ஆனா க்ளைமாக்ஸ் ல ஹீரோ கூட ஒரு ஃபைட் இருக்கு , பின்னிப்பெடல் எடுத்துட்டார். ஷங்கை எக்ஸ்பிரஸ் ஜாக்கிசான் படத்துல பார்த்த அதே ஸ்டெப் என்றாலும் பிரமாதமான முயற்சி
படத்துல காமெடி மருத்துக்கு கூட இல்லை .
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. சென்னை சாலி கிராமத்திலேயே எடுத்து முடிச்சிருக்க வேண்டிய கதையை இது ஒரு இண்ட்டர்நேசனல் சப்ஜெக்ட் என நம்பவெச்சி தயாரிப்பாளர் காசுல பாங்காங்க் , தாய்லாந்து , மும்பை என சுற்றிப்பார்த்த லாவகம்
2. படத்தோட கதை எப்படியும் தேறாதுன்னு முடிவு பண்ணி ஜெயம் ரவி ரசிகர்களைக்கவர்வதற்காக அந்த திருநங்கை கேரக்டரை உருவாக்குனது , ரவியிடம் நல்ல நடிப்பை வாங்கியது
3. ஆதி , பகவன் என டைட்டில் வைக்காம ஆதி பகவன் என டைட்டில் வெச்சு பலரது எதிர்ப்பை சம்பாதிச்சு நெகடிவ் பப்ளிசிட்டியை ஓ சி ல பெற்றது
4. ஹீரோ தன் தங்கையின் காதலனிடம் காம்ப்ரமைஸ்க்கு பேசிப்பின் பலன் அளிக்காமல் தங்கையின் எதிரிலேயே காதலனை போட்டுத்தள்ளும் காட்சி அபாரம்
5. பாடல்கள் 2 தேறுது . பி ஜி எம் ஓக்கே , யுவன் ராக்ஸ்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. துரோகம் பண்ணினது காதலியாகவே இருந்தாலும் அவளை உண்மையா காதலிச்ச காதலன் அவளுக்கு எந்தக்கெடுதலும் கனவிலும் நினைக்க மாட்டான், இதுதான் ஆண்கள் சைக்காலஜி . ( அவ(நா)ங்க நாசமாப்போவதும் அதனால தான் ) அதை உன்னை நினைத்து படத்துல சூர்யா கேரக்டர் மூலம் அழகா சொல்லி இருப்பார் இயக்குநர் விகரமன்,. ஆனா இதுல ஹீரோ ஹீரோயின் தன்னை காதலிப்பதா ஏமாத்துனது தெரிஞ்சதும் அவரை வில்லன் ரேஞ்சுக்கு ஃபைட் போட்டு கொல்வதெல்லாம் கொடூரம் , கேரக்டர் மதிப்பே போச்சே.
2.ஓப்பனிங்க் ரெய்டு சீனில் மொட்டை மடியில் தண்ணி டேங்கில் கோடிக்கணக்கில் தங்கக்கட்டிகள் ஒளிச்சு வைப்பதெல்லாம் ரீலோ ரீல் , முடியல
3. ரெய்டு முடிஞ்ச அடுத்த நிமிடமே ஏர்போர்ட் , அலெர்ட் கொடுத்திருந்தால் மந்திரியின் கோடிக்கணக்கான சொத்தை ஈசியா காப்பாற்ரி இருக்கலாமே?
4. எதுக்கும் இதவாத அந்த திருநங்கை கேரக்டரை ஹீரோயின் லவ் பண்ணுவது ஏன்? அவன் அவளுக்கு துரோகம் பண்ணியும் அவ அவன் மேல உயிரையே வெச்சிருப்பதுக்கு லாஜிக்கே இல்லையே? பொண்ணுங்க எதை வேணாலும் மன்னிச்சுடுவாங்க ( சமையல் பண்ணலைன்னாக்கூட ஹோட்டல் கூட்டிட்டுப்போய் சமாளிச்சுக்கலாம்) ஆனா அவங்களுக்கு துரோகம் பண்றதை மன்னிக்கவே மாட்டாங்க அதுவும் ஹீரோயின் கண் முன்னால ஹீரோ நெம்பர் 2 துரோகம் பண்றார்.
5.க்ளைமாக்ஸ் மகா நீளம் , இழுவை , சுருக்னு முடிக்க வேணாமா? ஹீரோ ஹீரோயின் கூட ஃபைட் போட்டு , அப்புறம் வில்லன் கூட ஃபைட் போட்டு உஷ் அப்பா ..
மனம் கவர்ந்த வசனங்கள்
1. பார்க்கறதுக்கு பால் குடிக்கற பையன் மாதிரி இருக்கான் , இவனா கொலை செஞ்சான் ?
2. மாஸ்டர் பிளான் என்னோடது
அதை எக்ஸ்சிக்யூட்டிவ் பண்ணுன மாஸ்டர் மைண்ட் என்னோடது
3. ஒரே நாள் ல மேலே வரனும்னு ஆசைபப்டறியா? மேலே போகனும்னு ஆசைப்படறியா?
4. தொழில யார் கூட மோதறோம்கறது முக்கியம் இல்லை , யார் முன்னால போறாங்க என்பதுதான் முக்கியம்
5. பணத்தோட ருசி உனக்குத்தெரியல
6. அம்மா, நல்லா இருன்னு சொல்லாட்டி பரவாயில்லை , தொலைஞ்சு போ அப்டின்னு சொன்னாக்கூட நல்லாருக்கும்
7. டியர், யார் உன்னை விட்டுட்டுப்போனாலும் உன் கூடவே இருப்பேன்
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே
சி. பி கமெண்ட் - ஜெயம் ரவியின் திருநங்கை கேரக்டர் மட்டுமே புதுசு, அதை ரசிக்க நினைப்பவர்கள் மட்டும் பார்க்கலாம். மற்ற படி ஆதி பேதி , அரே பகவான் அமீரிடமிருந்து எம்மை காப்பாற்று
ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்
a
9 comments:
நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்.. நன்றி..
hello... do not say all are bad. i am sure that this will added from RAVI& Amir hit list. i saw it from Dubai Galary 3 star Multiplex theatre. if you do not like, tell me that i do not like. but should not say the wrong opinion
சிபி...
நான் சொன்னா நீங்க நம்பணும்.
‘நான் இந்தப்படத்தை பாக்கல’.
எப்படி நீங்க நீதுவ மொக்கை பிகர்னு சொல்லலாம்? உங்களுக்கு ரசனை சுத்தமா குறைய ஆரம்பிச்சுருச்சு, படத்துல ஒழுங்கா காட்டலைனு சொல்லலாம், நீதுவ வேற படத்துல நீங்க பார்த்ததே இல்லையா?
அட கடவுளே!!! இதைதான் 2வரஷமா எடுத்தாங்களா..துவச்சி காயப்போட்டிங்களே..உண்மையிலேயே தேறாதோ
ஜெயம் ரவிக்கு இதுவும் போச்சா.
தம்பி செந்திலு...நீங்க டொக்கு பிகருன்னு டொக்கு பிகரு என்று சொல்லி அம்மணி டொக்கு காட்டுற எல்லா படத்தையும் போட்டு வச்சிருக்கீங்க?
உங்க விமர்சனம் பார்த்து படம் பார்க்கலாம்னு இரண்டு வருசம் காத்திட்டு இருக்கேன்
படம் அவுட்டா?
வாசிக்க: அமலா பால் ஆர்யா-அஞ்சலி விஷாலின் காதல் கண்டிஷன்
Post a Comment