Tuesday, February 12, 2013

ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்த 'என்றென்றும் புன்னகை’ இயக்குநர் பேட்டி

 

3 க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்... அவங்க என்ன பண்றாங்க... என்ன பேசிக்கிறாங்கனு அவங்களுக்கே தெரியாம கேமராவெச்சு ரெக்கார்ட் பண்ணா எப்படி இருக்கும்? அப்படி இருக்கும் படம்'' - பிரகாசமாகப் புன்னகைக்கிறார் 'என்றென்றும் புன்னகை’ இயக்குநர் அஹமத்.  



''இந்த ஜெனரேஷன்ல நட்பு எப்படி அப்டேட் ஆகியிருக்குனு பேசும் படம் இது. ஜீவா, வினய், சந்தானம்... மூணு பேரும் நேரம்காலம் பார்க்காமச் சுத்துற பசங்க. கல்யாணம் பண்ணிக்கிட்டா சுதந்திரமா இருக்க முடியாது. பெரிய பெரிய பொறுப்புகள் தோள்ல விழும். 



தினமும் சந்திக்கிற நண்பர்களை எப்போவாவதுதான் பார்க்க முடியும்’னு காரணங்கள் சொல்லி  'கல்யாணமே வேண்டாம்’னு இருக் கார் ஜீவா. அப்புறம் அவருக்குக் காதல், கல்யாணம், கடவுள் மேல் எப்படி நம்பிக்கை வருதுன்னு பயணிக்கும் திரைக்கதை. ரொம்ப உயிர்ப்பா இருக்கும் படம்.'' 



'' 'முகமூடி’, 'நீதானே என் பொன்வசந்தம்’ படங்களுக்குப் பிறகு ஜீவாவுக்கு இப்போ அவசியம் ஒரு ஹிட் தேவைப்படுதே... இந்தப் படத்தில் அது சாத்தியமா?''  


   

''நிறைய நல்ல படங்கள் கமர்ஷியலா சக்சஸ் ஆகாம இருந்திருக்கு.  இது எல்லா ஹீரோக்களுக்கும் நடக்கிறதுதான். ஆனா, தொழிலுக்கு ரொம்ப நேர்மையாவும் பக்தியாவும் இருக்கிறவர் ஜீவா. முந்தைய படத்தோட ரிசல்ட் பத்திக் கவலைப்படாம, அடுத்தடுத்த படங்களில் ரிஸ்க் எடுத்து நடிப்பார். அதோட ஜீவாவுக்குள் ஒரு இயக்குநர் ஒளிஞ்சிருக்கார்.




 போட்டோகிராஃபர் புதைஞ்சிருக்கார். நடிச்சுக்கிட்டே இருப்பார். பேக்கப் சொல்றப்போ, அன்னைக்கு ஷூட்டிங்ல எவ்வளவு செலவாகி இருக்கும்னு கரெக்டா சொல்வார். அவ்ளோ துல்லியமா சினிமாவைத் தெரிஞ்சுவெச்சிருக்கார். ஒரு சில படங்களோட முடிவு ஜீவாவைப் பாதிக்காது!''


''நண்பர்கள்ல ஒருத்தரா இருந்தாலும், சந்தானம் இந்தப் படத்துலயும் வழக்கமான காமெடிதானே பண்ணுவார்?''




''சந்தானம் பண்ற காமெடி பிடிச்சா சிரிப்போம்... இல்லைன்னா, கமென்ட் பாஸ் பண்ணிட்டுப் போயிருவோம். ஆனா, தினமும் ஒவ்வொரு படத்துலயும் காமெடி பண்ணி நடிக்கிறது நிச்சயம் சந்தானத்துக்கு ரொம்பவே கஷ்டமான வேலை.



 நான் சந்தானத்துக்கு அந்தக் கஷ்டத்தை வைக்கலை. 'இந்தப் படத்தை நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன். நல்லா வந்திருக்கு’னு எல்லார்கிட்டயும் சந்தானமே அக்கறையா சொல்லிட்டு இருக்கார். அவரோட வழக்கமான ஸ்டைல் இதுல இல்லை. வேற ஒரு வெர்ஷன்ல சந்தானத்தை இதில் பார்ப்பீங்க.''




''ஆண்ட்ரியா ஓவியக் கல்லூரி மாணவர்களுக்காக நிர்வாண போஸ் கொடுத்து நடிக்கிறதா பரபரப்புக் கிளப்பிட்டீங்களே?''  



''படத்துல ஆண்ட்ரியா மாடல்ங்கிறது உண்மை. ஆனா, ஓவியக் கல்லூரி மாடல் இல்லை. ஃபேஷன் ஷோ மாடல். அது நியூட் போஸ் இல்லை. ஸ்கின் டிரெஸ்னு ஒண்ணு இருக்கு. தோலின் நிறத்திலேயே இருக்கும். ராம்ப் வாக்கில் ஆண்ட்ரியா அந்த டிரெஸ்ல வர்ற மாதிரி பிளான் இருந்தது. 



ஆனா, இப்போ அந்த சீனும் படத்தில் இல்லை. ஒரு ஃபேஷன் மாடலா கலர்ஃபுல்லா, அழகா இருப்பாங்க ஆன்ட்ரியா. ஒரு மிடில்கிளாஸ் பொண்ணா, பொறுப்பா, பளிச்னு இருப்பாங்க த்ரிஷா. இது தமிழ்ப் படம். தமிழ்ப் படத்துக்கு என்ன தேவையோ, அது மட்டும்தான் படத்துல இருக்கும்!''


நன்றி - விகடன் 



1 comments:

mohideen said...

படம் வரட்டும் பார்ப்போம்