Sunday, February 03, 2013

புதிய தலைமுறை திரு மாலன் அவர்களிடம் சில கேள்விகள்

விகடன் , குமுதத்திற்குப்பின்  இளைஞர்களின் வரவேற்பைப்பெற்ற இதழ் புதிய தலைமுறை. குறுகிய கால கட்டத்தில் ஒரு லட்சம் புக் சேல்ஸ். அவங்க ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்காங்க . அதாவது மாதம் ஒருவருக்கு அந்த இதழை தயாரிக்கும் வாய்ப்பு . 4 இதழ்கள் தயாரிக்கலாம்.வாரம் ஒரு புக் வீதம் மாதம் 4 புக் , இந்த மாதிரி 12 பேருக்கு வாய்ப்பு . ஒரு வருடம் - 12 மாதம் , 12 பேர் தலா 4 வாரம், 48 வாரம் வாசகர் தயாரிப்பு 


 வரவேற்க வேண்டிய  விஷயம். ஏன்னா எல்லாருக்கும் பத்திரிக்கை தயாரிக்கும் , பணி புரியும் எண்ணம், ஆசை இருக்கும், ஆனா வாய்ப்பு இருக்காது. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் விதமாய் இந்த அறிவிப்பு இருக்கு.


 ஆனா அதுல அவங்க போட்ட கண்டிஷன் ஸ் பார்த்தா மிடில் கிளாஸ் ஃபேமிலி இளைஞர்கள் கலந்துக்கவே முடியாது . சென்னை வந்து போகும் செலவை அவங்க ஏத்துக்க மாட்டாங்களாம், புதிய தலைமுறை ஊழியர்களுக்கான சலுகைகள் ஏதும் கிடையாதாம், ஒரு வாரம் தங்கி செயல்படும்போது அதுக்கான செலவையாவது ஏத்துக்குவாங்களா? அல்லது அதுவும் நாம தானா? என்ற தகவல் கொடுக்கப்படலை



எனது கேள்விகள்


1.  பி கே பி நடத்திய உங்கள் ஜூனியர் மாத இதழ் இதே போல் பல வருடங்களுக்கு முன்பு ( 1996 டூ 1999 )  இதே போல் ஒரு வாய்ப்பை வாசகர்களுக்கு வழங்கியது . அவர்கள் புக் சேல்ஸ் இவர்களுடையதை விட 25 மடங்கு கம்மி. அவங்களே  சென்னை வந்து போகும் செலவை ஏத்துக்கிட்டாங்க , இத்தனைக்கும் அவங்களுக்கு அந்த புக்கால பெரிய லாபம் ஏதும் இல்லை. மினிமம் 10,000 மேக்சிமம் 20,000 புக் சேல்ஸ் ஆன ஒரு புக்கே இத்தனை செலவு செய்யும்போது  1,50,000 புக்ஸ் விற்கும் புதிய தலைமுறை ஏன் ஓ சி யில்  மங்களம் பாட நினைக்குது? 


2. இதே போல் குமுதம் ஆஃபீசில் 2000 ஆம் ஆண்டின் தீபாவளி ஸ்பெஷல் இதழுக்காக டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் சை சென்னை வர வைத்து ஒரு மீட்டிங்க் போட்டாங்க. வந்தவங்களுக்கு அப் அண்ட் டவுன் சார்ஜ் குடுத்து , ஆளுக்கு  ஒரு வாட்ச் ( ஒர்த் ரூ 1850 ) பரிசு தந்தாங்க . மதிய விருந்தும் இருந்தது , பின் 2012 ஆம் ஆண்டு இதே போல் இன்னொரு மிட்டிங்க் , இதிலும் டிட்டோ . ஏன் உங்க பத்திரிக்கை மட்டும் எளிய மக்களை , இளைஞர்களை கண்டுக்க மாட்டேன்கறீங்க? 



3. ஆனந்த விகடன்  - விக்ரம், விஜய்  என பல வி ஐ பி நடிகர்களுடன் வாசகர் சந்திப்பு நடத்திய போது இதே போல்  அசத்தலான பரிசு கொடுத்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ( ரூ 500 பில் ஒரு ஆளுக்கு )  விருந்து கொடுத்தது .


இப்படி பல முன்னுதாரணங்கள் பத்திரிக்கை உலகில் இருக்கு . நீங்க ஏன் அப்படி செய்யக்கூடாது? 

 ஒரு ஆஃபீஸ்ல பணி புரியும்  ஆள் ஒரு வாரம் லீவ் போட்டா  சம்பளம் பிடிச்சுக்குவாங்க , பல காரணம் சொல்லி லீவ் எடுக்கனும் .அது போக  சென்னை வந்து போகும் செலவும் கூடுதல் சுமைதானே? 


இதை எல்லாம் நான் எனக்காக கேட்கலை,. ஏன்னா நான் இதுக்கு விண்ணப்பிக்கலை . மற்ற மிடில் கிளாஸ் இளைஞர்கள் சார்பா கேட்கறேன். ( நான் கலந்துக்காததுக்கு காரணம் இது யூத்ங்களுக்கானது , என்ன தான் நான் யூத்தா இருந்தாலும்  18 வயசு டூ 25 வயசு யூத் இல்லை ) 




 இந்த பதிவை படிக்கும் பத்திரிக்கைத்துறையினர் ஏழை இளைஞர்களின் கஷ்டம் உணர்ந்து இது போன்ற விழாக்கள்,  பத்திரிக்கைத்தயாரிப்பிப்பணிகள் இவற்றுக்கு  போக்குவரத்துச்செலவு தந்து உதவுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்






2 comments:

நம்பள்கி said...

செந்தில் தம்பி! இது உங்களை மாதிரி ஈரோட்டானுங்களுக்கு கிடையாது.

இதுக்கு ஆள் அம்பு எல்லாம் ஏற்கனவே கீது..பா சென்னை மாநகரத்திலே!

Logoka said...

சி பி சொன்னதை நான் வரவேற்கிறேன். அப்புறம் நம்பள்கி அண்ணா, வணக்கம் .ஒரு சின்ன விஷயமுங்கோ!. ஈரோட்டனுங்க எல்லாம் சென்னை மாநாகரித்தில் இருக்கும் ஆள் அம்பை விட கொஞ்சம் அறிவாளிங்க! கொஞ்சம் அடக்கி வாசிங்கன்னா! நன்றி - லொள்ளு லோகு.