லட்டு யாருக்குச் சொந்தம்?
வெடிக்கும் பாக்யராஜ்... துடிக்கும் ராம நாராயணன்...
பொங்கலுக்கு வந்த படங்களில் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வசூலை வாரிக் குவிக்கிறது. அந்த லட்டு யாருடையது என்பதுதான் இப்போது பிரச்னை!
''என்னுடைய 'இன்று போய் நாளை வா’ படத்தின் கதைதான் 'கண்ணா லட்டு தின்ன
ஆசையா’. இது கலைத் திருட்டு'' என்று போலீஸில் புகார் செய்தும் கோர்ட்டில்
வழக்குப் போட்டும் அதிரடி கிளப்பி இருக்கிறார் இயக்குநர் பாக்யராஜ்.
a
பாக்யராஜை சந்தித்துப் பேசினோம். ''தலைவர் எம்.ஜி.ஆரோட 'நீரும் நெருப்பும்’
படத்தைத் தயாரிச்ச டெகரானி என்ற நார்த் இண்டியன்தான் என் 'இன்று போய் நாளை
வா’ படத்துக்குத் தயா ரிப்பாளர். டெகரானியிடம் இருந்து ஓ.கே.மணி என்பவர்
நெகட்டிவ் உரிமையை வாங்கினார். இது, முதலில் எனக்குத் தெரியாது. 'கண்ணா
லட்டு தின்ன ஆசையா’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் சேது, 'அண்ணே இது உங்க
படத்தோட கதை’ என்ற தகவலைச் சொன்னபோது அதிர்ந்துபோனேன். பிறகு, சந்தானமும்
சீனிவாசனும் சேர்ந்து கொடுத்த ஒரு பேட்டியில், 'நாங்கள் நடிப்பது, 'இன்று
போய்
நாளை வா’ படத்தோட கதைதான்!’ என்று ஓபனாகச் சொன் னார்கள். திடீரென ஒரு
நாள், ராம நாராயணன் என்னுடைய வீட்டுக்கு வந்தார். 'உங்களோட 'இன்று போய்
நாளை வா’ படத்தை நாங்க ரீ-மேக் செய்றோம். எவ்வளவு வேணும்னு சொல்லுங்க’னு
கேட்டார். 'இதுவரை சாந்தனு நடிச்ச படம் எதுவும் ஹிட் ஆகவில்லை. அதனால்,
நானே அந்தப் படத்தை சாந்தனுவை வைத்து இயக்கப்போறேன்’ என்று சொன்னேன்.
'உங்க
படத்தோட உரிமம் புஷ்பா கந்தசாமிகிட்ட இருக்கு. நான் அவங்ககிட்ட
பேசிக்கிறேன்’னு கிளம்பி விட்டார். அதன்பிறகு வந்த புஷ்பா கந்தசாமி,
படத்தோட உரிமம் தன்னிடம் இருப்பதாகப் பத்திரங்களைக் காட்டினார். 'நெகட்டிவ்
ரைட்ஸ் உங்களிடம் இருந்தாலும், படத்தோட கிரி யேட்டர் நான்தான்’ என்பதை
அவரிடம் தெளிவாகச் சொன்னேன். 'என் அனுமதி இல்லாமல் படம் எடுக்க யாருக்கும்
உரிமை இல்லை’ என்பதையும் அவரிடம் தெளிவுபடுத்தினேன்.
இயக்குனர் சிகரம் பாலசந்தரின் மகள்தான் புஷ்பா கந்தசாமி. 100 படங்களுக்கு மேல் இயக்கியவர்
ராம நாராயணன். இந்த இருவருக்குமே நெகட்டிவ் ரைட்ஸ் வைத்துக்கொண்டு
எதுவும் செய்ய முடியாது என்பது எப்படித் தெரியாமல் போனது? என்னிடம் பேசியதை
மறைத்து, 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை எடுத்து ரிலீஸ் செய்து
விட்டனர். ஷூட்டிங் நடக்கும்போதே நான் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
செய்தேன்.
நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து இருக்கிறேன். 'பாக்யராஜை
நான் சந்திக்கவே இல்லை’ என்கிறார் புஷ்பா. ராம நாராயணனோ, 'நான் படத்தோட
தயாரிப்பாளர் மட்டும்தான். கதையைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது’
என்கிறார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்னுடைய படம். படத்தின் வசூலில்
எனக்குப் பங்கு தரவேண்டும். அதுவரை நான் ஓய மாட்டேன்'' என்று
கொந்தளித்தார்.
படத்தின்
தயாரிப்பாளர் ராம நாரா யணன் என்ன சொல்கிறார்? ''ஒரு படத்தை அதே மொழியில்
ரீ-மேக் செய்ய வேண்டும் என்றால், அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி
வாங்கினால் போதும். படத்தின் தயாரிப்பாளர் டெகரானியிடம் புஷ்பா கந்தசாமி
உரிமம் பெற்று இருந்தார். அவரிடம் அனுமதி வாங்கிய பிறகுதான் நாங்கள் படம்
எடுத்தோம்.
நானும் இயக்குநர்தான். 100 படங்களுக்கும் மேல் இயக்கி
இருக்கிறேன். அத் துடன் என் வேலை முடிந்து விடுகிறது. படத்தின் உரிமை
தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். ரஜினி நடித்த 'பில்லா’ படத்தின்
ரீ-மேக்கில் அஜித் நடித்தார். அதற்கான உரிமத்தை தயாரிப்பாளர் பாலா
ஜியிடம்தான் வாங்கினார்கள். 'முரட்டுக்காளை’ ரீமேக் செய்தபோது, ஏ.வி.எம்.
நிறுவனத்திடம்தான் உரிமம் வாங்கினார்கள். கட்டிய கட்டடத்தை விற்பனை செய்த
பிறகு, வீடு எனக்குச் சொந்தம் என்று சொல் வதைப்போல இருக்கிறது பாக்யராஜ்
சொல்வது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, அதிகம் பேசுவது
சரியாக இருக்காது'' என்பதோடு முடித்துக் கொண்டார்.
தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமியிடம் இந்த விவகாரம் பற்றி பேசினோம். ''
'இன்று போய் நாளை வா’ படத்தின் நெகடிவ் உரிமையை ஓ.கே.மணி என்பவரிடம் அதன்
தயாரிப்பாளர் டெகராணி விற்று விட்டார். கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்,
நான் அவரிடம் இருந்து படத்தின் உரிமையை வாங்கினேன். ராம நாராயணன் என்னைச்
சந்தித்து படத்தை ரீ மேக் செய்வதாகச் சொன்னார். நானும் ரீ மேக் செய்ய அனு
மதித்தேன். பாக்யராஜை நான் சந்திக்கவே இல்லை. விஷயம் நீதிமன்றம் வரை போய்
இருக்கிறது. எனவே, நான் அதைப்பற்றி பேசுவது முறையல்ல'' என்றார்.
தியேட்டரில் காமெடியாய் ஓடும் படம், வெளியில் சீரியஸ் ஆகிவிட்டது!
மக்கள் கருத்து
1. Dr A.Shyam Sundar5 Hours ago
இவையெல்லாம் தமிழ்த்திரையுலகின் கற்பனை வறட்சியை சுட்டிக்காட்டுகின்றன.
ரீமேக்குக்காகாவும், கோடிகளில் சம்பளம் கேட்க்கும் நடிகர்களுக்கும் காத்திருக்காமல் பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும்.
2. Suresh8 Hours ago
நான் வேலை செய்யும் கம்பனியின்
வியாபாரமாக்கப்பட்ட பல பொருட்களில் என்னுடைய கிரியேட்டிவிட்டி இருக்கிறது.
அதற்கு எனக்கு சம்பளம் தந்துவிட்டார்கள். நான் அந்த கம்பனியின் உரிமையாளர்
அல்ல. அந்த கம்பனி அவர்களுடைய பொருளை யாருக்கும் எவ்வளவு விலைக்கும் விற்க
உரிமை உண்டு. அதில் போய் நான் எப்படி பங்கு கேட்க முடியும்? ஆனால்
பாக்யராஜ் அதை தான் கேட்கிறார். இது நியாயமாக எனக்கு படவில்லை.
3. Sridhar7 Hours ago
சந்தானம் சன் டிவி பேட்டியில் இது நாங்கள்
அப்படி டிஸ்கஸ் பண்ணி இப்படி டிஸ்கஸ் பண்ணி கதையை ரெடி செய்தோம் என்று
சொன்னார்............... ஊருக்கே தெரியும் இது எந்த கதை
என்று..........?.......... சந்தானம் திரையில் காமெடியன் , நிஜத்தில்
வில்லனோ ...??!!
4. அசோகன், சிங்கப்பூர்7 Hours ago
பாக்யராஜுவுக்கு இது கசப்பு லட்டு... படம்
வெற்றிபெற்று வாசூல் சாதனை செய்தவுடன் புலம்புபவர், பிரச்னையின்
ஆரம்பத்திலேயே தனது மகனைக்கொண்டு போட்டியாக இதே கதையை வைத்து படம்
தயாரித்திருக்கலாமே?!... தான் தயாரித்திருந்தால் இவ்வளவு சாவாரசியமாக படம்
பண்ணமுடியாது என்பது தெரிந்திருக்கலாம்...
5. Venky7 Hours ago
இதில் பாக்யராஜ் குறை கூறி தன்னை தரம்
தாழ்த்திகொண்டார் என்றே தோன்றுகிறது. தயாரிப்பவருக்கே எல்லா உரிமையும்
உண்டு - இதனை சினிமா பாடல்களில் கண்டு இருக்கிறோம்.
ரஹ்மான் வந்த பிறகே அந்த பாடல்களின் உரிமத்தை தராமல், உபயோக்கிக்கும் அனுமதி (லைசன்ஸ்) தரும் முறை அறிமுகமானது என்று எண்ணுகிறேன்.
ஆனால் கதை, திரைக்கதை, வசனம் போன்றவை ஒட்டு மொத்தமாக இன்றும் தயாரிப்பாளர்களின் வசமே தரப்படுகிறது. சட்ட ரீதியாக பாக்யராஜ் வெல்ல முடியுமா என்பது சந்தேகமே. இது, இந்த செய்தி வசூலுக்கு உதவியது. அட 'இன்று போய் நாளை வா' - வா என்று படம் பார்த்த பலரின் நானும் ஒருவன். இல்லை எனில் சந்தானத்தின் வசன இமேஜூக்கு (அத்துடன் யார் சார் அந்த ஹீரோ?) யாராவது இந்த படத்தை பார்க்க போய் இருப்பார்களா என்ன?
ரஹ்மான் வந்த பிறகே அந்த பாடல்களின் உரிமத்தை தராமல், உபயோக்கிக்கும் அனுமதி (லைசன்ஸ்) தரும் முறை அறிமுகமானது என்று எண்ணுகிறேன்.
ஆனால் கதை, திரைக்கதை, வசனம் போன்றவை ஒட்டு மொத்தமாக இன்றும் தயாரிப்பாளர்களின் வசமே தரப்படுகிறது. சட்ட ரீதியாக பாக்யராஜ் வெல்ல முடியுமா என்பது சந்தேகமே. இது, இந்த செய்தி வசூலுக்கு உதவியது. அட 'இன்று போய் நாளை வா' - வா என்று படம் பார்த்த பலரின் நானும் ஒருவன். இல்லை எனில் சந்தானத்தின் வசன இமேஜூக்கு (அத்துடன் யார் சார் அந்த ஹீரோ?) யாராவது இந்த படத்தை பார்க்க போய் இருப்பார்களா என்ன?
4 comments:
இபோநாவா சூப்பர் டூப்பர் காமேடு படம். லட்டு சூப்பர் டூப்பர் மொக்கப் படம்
இபோநாவா சூப்பர் டூப்பர் காமேடி ப டம். லட்டு சூப்பர் டூப்பர் மொக்கப் படம்
கடைசியில் பாக்கியராஜ்க்கு லட்டு கிடைக்குமா கிடைக்காதா?
எல்லாருக்கு லட்டு
பாக்யராஜுக்கு அல்வா ?
Post a Comment