Tuesday, January 08, 2013

இசைஞானி இளையராஜா vs சாருநிவேதிதா சர்ச்சை

அந்த டகால்டி ஒலக எளுத்தாளருக்கு இசையராஜா கொடுத்த செ*ப்படி
**********************************************************
//
சாருநிவேதிதா, தனது 'கனவுகளின் நடனம்' புத்தகத்தில் தங்களை பயங்கரமாக விமர்சனம் செய்து உள்ளாரே... படித்தீர்களா ?

“ நான் எப்போதாவது காரில் வெளியூருக்குப் போகும்போது வழியில் மெயின் ரோடுகளில் உள்ள கடைகளில் பெயர்ப் பலகைகளைப் பார்ப்பேன். அதில் என் உருவத்தைத் வரைந்து "ராஜா ஆடியோ சென்டர்" என்றோ "இசைஞானி எலக்ட்ரிகல்ஸ்" என்றோ அல்லது "இளையராஜா பேக்கரி" என்று கூட எழுதியிருப்பார்கள். இது தங்கள் கடைகளை எளிதில் பிரபலப்படுத்திக் கொள்ளும் ஒரு யோசனையாக இருந்தாலும் கூட, அவர்கள் என் பாடல்களைக் கேட்டு என் மேல் உள்ள உண்மையான பாசத்தின் பால் அப்படி வைத்துக் கொள்கிறார்கள். 



“நானும் ராஜாவும்" என்றுகூட SPB கச்சேரி பண்ணினான். எத்தனையோ இசைக்குழுக்கள் "ராஜா ராஜாதான்" என்றும் இன்னும் பற்பலவாறு தலைப்புக்கொடுத்து என்னுடைய படத்தையும் போட்டு தானே இசை நிகழ்ச்சி நடத்துவதைப் போல அவர்கள் பிழைக்கிறார்கள். அதிலொன்றும் தவறில்லை. ஆனால் அதேபோல வேறு சிலரும் தங்களையும் தங்கள் எழுத்துக்களையும் எளிதில் பிரபலப்படுத்திக்கொள்ள என் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த நப்பாசையால்தான் நீங்கள் குறிப்பிடும் அந்த நபரும் என்னைத் திட்டி எழுதியிருக்கிறார். என் பெயரை வைத்து அவர் பிரபலமாக நினைக்கிறார். ஆகிவிட்டுப் போகட்டுமே. நமக்கென்ன வந்தது.

என்னைப் பற்றி எழுதவில்லையென்றால் அதை யாரும் படிக்க மாட்டார்கள். அதனால் அவரை யார் என்று வெளியில் தெரியாது. பெயரை வேண்டுமென்றே திணிக்க எத்தனையோ வழி; அதில் இதுவும் ஒன்று!”

இளையாராஜாவைக் கேளுங்கள், குமுதம் (16.01.2012)//


அதிஷாவின் ஃபேஸ் புக்கில் இருந்து


இந்த பதிலை படித்த போது நிறையவே அதிர்ச்சியாக இருந்தது. ராஜாசார் எப்போதும் தன்னை ஆன்மீக குருவாகவும், அமைதியின் வடிவாகவுமே முன்னிறுத்தி கொள்பவர். ஆனால் அவருடைய பதிலிலோ ஒருவித ஆணவமும் அகந்தையும் நிறைந்திருப்பதை பார்க்க முடிகிறது.

ஏதோ எஸ்பிபி கூட ராஜாசாரை பெயரை உபயோகித்து புகழ்தேட முனைந்ததாக குறிப்பிடுகிறார். அவருடைய பாடல்களை பாடி பிழைப்பு நடத்துவதாக இசைக்குழுக்களை பற்றி சொல்கிறார். அவருடைய பெயரை பயன்படுத்தி பலரும் புகழ்தேடுகிறார்கள் என்றெல்லாம் கூறுகிறார். உண்மையில் கடைசியாக இளையராஜா இசையமைத்து சூப்பர் ஹிட்டான படம் எதுவென்று கடந்த பத்தாண்டுகளில் தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. கடைசியாக அவருடைய பெயரை முன்னிறுத்தி வெளியிடப்பட்ட அஜந்தா என்கிற படம் அரை நாள் கூட தியேட்டர்களில் நிற்கவில்லை.

எனக்கும் ராஜாவின் இசை பிடிக்கும்தான் என்றாலும், ஒரு எழுத்தாளன் விமர்சகன் இன்னொரு படைப்பை முன்வைத்து தன்னுடைய விமர்சனத்தை ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கிறான். அதை ராஜா படித்தாரா என்பதை குறிப்பிடவில்லை. ஆனால் ஏதோ தன்னைப்பற்றி எழுதிதான் அவர் புகழ்தேட நினைக்கிறார் என்பது போல எழுதுவது நிச்சயம் தவறானது. சாருவின் மீது அநேக விமர்சனங்கள் இருந்தாலும் இதை ஏற்க முடியாது.



  • JaiGanesh Nadar .
    ராணுவத்தால் அழிந்ததை விட ஆணவத்தால் அழிந்தவர்கள் அதிகம். இவரும் அதில் ஒருவர். எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறும் தன்னடக்கம் இவருக்கு சுட்டு போட்டால் கூட வராது.
  • நிவேதா பாரதி என்ன ஒரு பண்பட்ட பதில்..?!
  • கண்ண தாசன் இசையில் மயக்கும் இளையாராஜா ..... பதில்களில் ... அந்த தன்மை இல்லை ... அவர் ராஜாவை கேளுங்கள் பகுதியை குமுதம் நிறுத்தினால் நல்லது ..இளையாராஜா வுக்கு !!!!
  • ஸ்ரீகாந்த் தென்னரசு எங்கள் மண்ணின் மைந்தர், நாங்கள் எங்கள் மண்ணை பேன்றவர்கள், பிறருக்கு பயன்படுவேமன்றி, யாரையும் பிழைக்க மாட்டேம்
  • JaiGanesh Nadar .
    மலபார் ஜுவல்லரி விளம்பரத்தில் இவர் நடிப்பது அன்பிற்கா..? பணத்திற்கா..?
  • கண்ண தாசன் ஆமாப்பா உங்கள் மண்ணின் மைந்தர்தான் ....... சென்னை தெருக்களில் பாடி திரிந்தபோது ... உங்கள் மைந்தரை தெரியாமல் போனது ஏன் !!!!! மையி ...... மைந்தன் ......
  • JaiGanesh Nadar பண்ணபுரத்திற்கு என்ன செய்தார் மண்ணின் மைந்தன்..?
  • ஸ்ரீகாந்த் தென்னரசு அதை நீங்கள் இங்கு வந்து பருங்கள், நீங்கள் உங்கள் ஊருக்கு என்ன செய்தீர்கள்,
  • JaiGanesh Nadar நான் குமுதத்தில் என்னைப் பற்றி நல்லவன், வல்லவன் என்று அவிழ்த்து விடுவதில்லை.
  • JaiGanesh Nadar மேலும் அவரே சொல்லிவிட்டார். பண்ணபுரத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. உலகத்திற்கு இசையைக் கொடுத்தேன் என்று.
  • ஸ்ரீகாந்த் தென்னரசு பெண்களை போக பெருளாக காட்டும் விளம்பரங்களை விட, மது பாண விளம்பரங்களை விட, உள்ளாடை விளம்பரங்களை விட, மலபார் விளம்பரம் ஒன்றும் தரம் குறைந்து விடவில்லை
  • JaiGanesh Nadar அவர் இஷ்டம். அவர் வாழ்க்கை. ஆனால் ஏன் தான் மட்டும் சிறந்த இசையமைப்பாளர் என்று ஆணவப்படவேண்டும்..?
  • JaiGanesh Nadar ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதை மனிதன் புகழக் கூட இல்லை.. அங்கே அதை பொடிவைத்து பேசியது தான் கொடுமை.
  • JaiGanesh Nadar .
    மேலும் சிம்பொனி என்பது நம்ம ஊரு தியாகராஜ திருவிழா மாதிரி.. கும்பலோடு கோவிந்தா.. அதைச் செய்துவிட்டு இவர் செய்த அமர்க்களம்.. ஸ்ஸ்ஸ்ஸ்சபப்பா.. இன்று இந்தியாவில் சில்வண்டுகள் கூட சிம்பொனி செய்கின்றன.
  • ஸ்ரீகாந்த் தென்னரசு எங்களுக்கு தேவையான வற்றை நிறவேற்ற எங்கள் உழைப்பு உள்ளது, இயற்கை அன்னையின் கெடையாக எண்ணிலற்ற வளங்கள் உள்ளன நாங்கள் யாரையும் நம்பில்லை, எங்கள் முன்னேற்றத்திற்க்கு நாங்கள் பார்த்துக்கெள்வேம், இளையராஜவோ அல்லது பாரதி ராஜாவோ தங்கள் திறமையால் தான் முன்னேறினார்கள்
  • Lenin Mirni குமுதம் எதிர் தரப்பில் இருந்து [சாரு] பதில் வாங்கி அடுத்த வாரம் பிரசுரிக்கப் போகிறார்களாம். அப்பறம்தான் ஆட்டம் சூடு பிடிக்கும்!!
  • JaiGanesh Nadar வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்வதில் இந்த ஆளு பெரிய ராஜா தான்.
  • Lenin Mirni ஆனாலும், இந்த "கன்னித்தீவு பொண்ணா, கட்டெறும்பு கண்ணா" பாட்டுல சாரு ஆர்மோனியம் வாசிக்கிற அழக பாத்து அந்த இளையராசாவே அசந்து போயிருப்பாரு!!
  • JaiGanesh Nadar அது சாருவா.. வியப்பா இருக்கே.
  • Lenin Mirni வியப்பா இருக்கா?அதான் சாரு!



ட்விடர்கள் கருத்து 



 
ராஜா சாருவுக்குக் கொடுத்த பதிலில் உடன்படாதவர்கள், இதுவரை சாருவின் ராஜா குறித்த சீண்டலை அறியாதவர்களாக/புரியாதவர்களாக இருப்பர் 



2. இளைய ராஜாவை இசையளவிலோ, கேரக்டர் அளவிலோ விமர்சிக்க்கக் கூடாதென்றில்லை! அதற்கான வக்கு வகை இந்தத் திருவோட்டுக்கு கிடையாது. 



டியர் குமுதம், ப்ளீஸ் ஆஸ்க் ராஜா அபவுட் ஒலக இசை நிபுணர் ஷாஜி’ஸ் கட்டுரைகள் #ரிக்வெஸ்டு அல்லது #ஐடியா 



குமுதத்தில் ராஜா பதில்கள் தொடங்கியதுமுதல் கொஞ்சம் பதுங்கிப்பதுங்கியே வாழ்ந்துவந்தேன். இன்று தலைநிமிர்ந்து நடக்கிறேன். சூப்பர்



இளையராஜா சொன்ன பதில் நியாயமில்லையெனில் கேட்ட கேள்வியும் நியாயமில்லததே.. 



கேள்வியவே ஒமிட் செய்திருக்கலாமே..? குமுதம் செய்தது சரி.. பதில் சொன்னது தப்பா..? பதில் சொல்லலைனா மண்டக்கனம் புடிச்சவம்பீங்களே ? 



ராஜா கேள்விக்கு பதில் அளித்திருக்க கூடாது.. ரைட்டு அப்டிச் சொல்லலைனா மண்டக்கனம்னு சொல்லுவாங்களா மாட்டாங்களா..? 



ராஜாசாரின் ஆணவம்தான் சாரு குறித்த அவருடைய பதிலில் வெளிப்படையாக தெரிந்தது. தொடர் தோல்வி குடுக்கும்போதே இப்படீனா.. ம்ம் #நீங்கஞான்ராஜாசாரே



அதிஷாவின் ஃபேஸ்புக்கில்

  • US Tamilan படத்தை பார்க்காமலே அராத்து சொன்னதை வைத்து கொண்டு "நீதானே எந்தன் பொன் வசந்தம்" ஒரு "நீதானே எந்தன் புண் வசந்தம்" என்று சாரு சொல்வதற்கு எப்படி உரிமை இருக்கிறதோ, வழக்கு என் 18/9 படத்தை 10 நிமிடம் பார்த்து விட்டு வாந்தி எடுக்க வந்தது என்று சாரு சொல்வதற்கு எப்படி உரிமை இருக்கிறதோ அதே உரிமை இளையராஜாவிற்கு உண்டு. யாருக்கு தெரியும், இளையராஜாவை பொறுத்த வரை சாரு ஒரு சரோஜாதேவியாக இருக்கலாம்! அதன் பிறகு Win டிவிகாக சாரு படத்தை பார்த்தார் என்பது வேறு விஷயம்!
  • Haris David "நீதானே என் பொன்வசந்தம்" எப்படி முன் நிறுத்தப்பட்டது
  • Haris David சாரு இளையராசாவின் இசை குப்பை என்று சகட்டு மேனிக்கு திட்டிய போது எங்கே இருந்தீர்கள்?
    அப்போது வாய் மூடி மௌனிகளாக இருந்து விட்டு இப்போது நியாயம் கற்பிக்க வந்து விட்டீர்கள்.
  • Haris David ராஜாவை கண்டிக்க முன் உங்களுக்கு அந்த தார்மீக உரிமை இருக்கின்றதா என்று ஒரு தடவை நினைத்து பாருங்கள்
  • Rama Chandran a drunken monkey(charu) cannot comment like this on a great musician ilayaraaja
  • தமிழ்ப்பெண் விலாசினி எனக்கும் அதுதான் ஆச்சரியம். எத்தனை மட்டமாக சாரு எழுதிய போதும், அதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு எழுத்தாளர் கூட எழுதவில்லை. ஆனால் இளையராஜாவின் பதிலுக்கு இத்தனை பேர் போர்கொடி தூக்குவது ஆச்சரியம். இசை வேறு, எழுத்து வேறு என்பதினால் இருக்கலாம்.
  • Gowtham Muthusamy சாரு ஒரு மூன்றாம் தர எழுத்தாளர் ..சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேச்சை மாற்றும் பச்சோந்தி .. இளையராஜாவின் கோபம் நியாயமானதே ..ஆனால் அவர் மற்ற இசைக்குழுக்கள் பற்றி சொன்னது தேவையில்லாதது ..
  • Athisha Vino சாருவை பற்றி விமர்சிக்கிறவர்கள் தயவு செய்து கனவுகளின் நடனம் புத்தக அட்டையையாவது பார்த்துவிட்டு பேசவும். டாட்!
  • Vijayveerappan Swaminathan Our house 1000 kuppai.. why cleaning other's house? same question raja rasikan ask..
  • Thiyagaarajan Namasivayam இளையராஜா மனதில் உள்ளதை தெளிவாக கூறிவிடுகிறார் மற்றவரைப் போல நடிக்காமல் இருப்பதும் ஒரு காரணம்.
    அவர் தன்னை ஞானி என்றோ தன் பின்னே ஆள் வர வேண்டும் என்றோ விரும்ப வில்லை.சற்று முன்பு கூட அவர்
    ஒரு கவிதை தொகுப்பு வெளியீட்டு விழாவில் எனக்கு கவிதை பற்றி என்ன தெரியும் என கேட்பவர்களுக்கு
    "நான் ஒரு சாதாரண ரசிகனாவே இந்த நூலை வெளியுடுகின்றேன்,என் படம் பாடல்கள் நன்றாக இருப்பதாக
    கூறுபவர்களிடம் இசையை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்றும் நான் திரும்ப கேட்க முடியும் " என்று கூறினார்.
    இந்த பதிலே போதுமானது.நீங்கள் மேலும் கடந்த பத்தாண்டுகளின் எத்தனை யாரது பாடல்களை திரும்ப திரும்ப கேட்டு வருகிறீர்கள் ?
  • Kavitha Sornavalli /சாருவை பற்றி /- மத்த புக் எதுவும் சொல்ல மாட்டியா கொஞ்சம் ரீசன்ட்டா வந்த மதுமிதாவின் பாம்பு கதைகள் உட்பட ! நித்தியாந்தா புகழ் பாடினது ! அப்புறம் திட்டினது ! இது கூட சாருதான
  • Gowtham Muthusamy //சாருவை பற்றி விமர்சிக்கிறவர்கள் தயவு செய்து கனவுகளின் நடனம் புத்தக அட்டையையாவது பார்த்துவிட்டு பேசவும். டாட்!//இளையராஜாவை பற்றி விமர்சிப்பவர்கள் அவர் சாதனைகளில் கொஞ்சமேனும் சாதித்திருந்தால் விமர்சிக்கவும் ..
  • Kalees Waran spb யோ மற்ற இசைக்குழுக்களோ அப்படிச் செய்வதுத் தவறில்லைன்னுத் தானே சொல்லிருக்காரு. என் மேல் உளள பாசத்துல பண்றாங்கன்னு சொல்றதுல என்னத் தப்பு
  • Selvam Marimuthu இளையராஜவுடன் தொடர்பு கொண்டு அவரைக் கொண்டாட‌ ஒரே வழி...அவருடைய சிறந்த பாடல்களைக் கேட்பது மூலம் மட்டும் தான். தவிர அவருடைய பேட்டிகள், அரசியல், ஆன்மிகம், எழுத்துக்கள் கொண்டெல்லாம் பிம்பத்தை கட்டமைக்க முயன்றால் சேதாரம் கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும்.வைரமுத்து எழுதிய கிசுகிசுவிற்கு அவரைக் கண்டித்தவர்கள் யாரும்..இளையராஜா எழுதிய கிசுகிசுவிற்குக் கண்டித்ததாக நினைவில்லை.
  • Sathish Rationalist இளையராஜா பற்றி எழுதவில்லையென்றால் அதை யாரும் படிக்க மாட்டார்கள். அதனால் அவரை யார் என்று வெளியில் தெரியாது. பெயரை வேண்டுமென்றே திணிக்க எத்தனையோ வழி; அதில் இதுவும் ஒன்று!”.....
  • Ra Muruganandam ராஜா என்றுமே ராஜா தான். No Comments.
  • US Tamilan நான் அந்த புத்தகத்தை படித்து இருக்கிறேன். சாரு எங்கேயாவது எந்த பாடலையாவது நூணுக்கமாக அலசி இருக்கிறாரா? அந்த புத்தகத்தில் இருந்து உதாரணம் காண்பியுங்கள்? இந்த பாடல 500 தடவை கேட்டு விடிய விடிய ஆடினேன்! அந்த பாடலை கண்ணை மூடி கேட்டேன் கடவுள் தெரிந்தார்! இது...See More

    kolandha.com
    ரோஜா படம் வெளியானபொழுது எனக்கு ஆறு வயது. அதனால் அந்தப் படத்தின் இசை குறித்து எனக...்கு ஒன்றும் தெரியாது. ஒளிப்பதிவு நினைவில் உள்ளது. பாடல்கள் கேட்க அருமையாக இருந்தது. அவ்வளவே தான் ஞாபகம் உள்ளது. அதேபோன்று தான், அதற்கடுத்த ஆண்டில் வெளிவந்த திருடா திருடா. ஒளிப்பதிவும் – அதிரடியான இசையும் ஞாபகம் உள்ளது. ஊ...See more
  • Loverence Zaa இந்த கேள்வியவே ராஜா தவிர்த்திருந்துருக்கலாம்..
  • Vijayveerappan Swaminathan ராஜாவின் இசையை விமர்சிப்பவர்கள் தயவு செய்து ராஜாவின் பத்து பாடல் கேசட் அட்டையாவது பார்த்துவிட்டு வாருங்கள். டாட்டோ டாட்.
  • Pradeep Kumar Kadantha 10 aandugalil antha nabar isaiyaiye ozhungaga ketpathillai endru ninaikiren... Quality song enbatharku meaning theriyuma? Azhagi, rasathanthiram, bharathi, pithamagan, onok pola ennatra padangal ullana...

    Ilayaraja kooriyathil oru thavarum illai... Thannai gnani endru avar kooravillai...

    Aanmigam irunthal kobam varakoodathu endru sattam illai... Kobamum kadavulin gunam thaan thambi...
  • Prabhusankar Rajasekaran ஆனால் அவருடைய பதிலிலோ ஒருவித ஆணவமும் அகந்தையும் நிறைந்திருப்பதை பார்க்க முடிகிறது.// True. Not only in this case, in his every answer..
  • Vijayveerappan Swaminathan /*ஆனால் அவருடைய பதிலிலோ ஒருவித ஆணவமும் அகந்தையும் நிறைந்திருப்பதை பார்க்க முடிகிறது.// True. Not only in this case, in his every answer..*/

    பைசா பிரயோஜனம் இல்லாத ஃபேஸ்புக்கில, மொக்க ஸ்டேட்ஸ் போடுற நமக்கே இவ்ளோ அதுப்பு இருக்கும்ன்னா, அவ்ளோ பெரிய ஸ்டுடியோவில மிஜிக் போடுற அவருக்கு எவ்ளோ அதுப்பு இருக்கும். இல்ல எவ்ளோ அதுப்பு இருக்கும்ன்னு கேக்குறேன்.
  • Sengai Nilavan இசைஞானியை விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ணும் த‌குதி சாருவுக்கு உண்டா என்ப‌தை இங்கு விம‌ர்சித்து எழுதும் த‌மிழ் உற‌வுக‌ள் கொஞ்ச‌ம் ந‌டு நிலையோடு யோசித்தாலே போதும்.

    என‌க்கு என்ன‌வோ இதுவும் கூட‌ ஒரு அர‌சியல் சூழ்ச்சி என்றே நினைக்கின்றேன் ஏன் என்றாள் சாரு ஒரு ச‌ந்த‌
    ...See More
  • Prabhusankar Rajasekaran எவ்ளோ அதுப்பு இருக்கும்?
  • US Tamilan சாரு: ஒரு நாலு மாதம் கூட வாக்கைக் காப்பாற்ற முடியாத ஒரு ஆள் எப்படி தன் உயிர் இருக்கும் வரை என்று வாக்குக் கொடுக்கிறார்? மாதம் 5000 ரூ. கூட கொடுக்க முடியாத ஒருவர் எப்படி 30,000க்கு வாக்குக் கொடுக்கிறார்? ஏன் எனக்கென்று ஒவ்வொருத்தராக இப்படியே வருகிறார்க...See More
  • Thiyagaarajan Namasivayam இங்கே தான் எழுத்தாளர்களுக்கு திரைப்படம் மற்றும் இசை விமர்சனம் செய்ய தகுதி(?) நிறைய கொடுக்கப்பட்டிருக்கிறது.
  • Athisha Vino Sengai Nilavan இங்கே பேச்சு சாரு எப்படிப்பட்டவர் அவரை ஏற்கலாமா வேண்டாமா என்பதல்ல.. ஒரு விமர்சகனை முதிர்ந்த அனுபவமிக்க ஒரு இசையமைப்பாளர் எப்படி எதிர்கொள்கிறார்.. தன் மீதான விமர்சனத்தை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே.. போகிற போக்கில் எஸ்பிபியையும் மட்டம் தட்டிவுட்டார் பாருங்க!
  • Vijayveerappan Swaminathan /*எவ்ளோ அதுப்பு இருக்கும்?*/ நமக்கெல்லாம் எவ்ளோ இருக்குமோ, அத விட ஜாஸ்தியா இருக்கும்.
  • Hari Prasad //ஒருவித ஆணவமும் அகந்தையும் நிறைந்திருப்பதை பார்க்க முடிகிறது// முற்றிலும் உண்மை... இவர் தரப்பு நியாயத்தை சொல்லிருந்தால் சரியாக இருக்கும்.. அதை விடுத்து இது சுயதம்பட்டம்... எனக்கும் ராஜாவின் பாடல் பிடிக்கும், ஆனால் இவர் பதில் எriச்சல் படுத்துகிறது
  • Saravana Kumar ilayaraja great, thiramai irukum idathil thmir irunthal thappuillai
  • Paraneetharan Kaliyaperumal சாரு எப்படி எழுத்தாளன் என்கிற முறையில் ஆணவம் கொண்டு விமர்சிக்கிறரோ அதே போன்று இளையராசாவும் பதில் கூறியுள்ளார். இதில் தவறு எதுவும் இல்லை. வரவேற்கதக்கதே...ஒரே ஒரு குறை இளையராச சங்கராச்சாரி காலில் விழாமல் இதே போன்று வீராப்பா ஆணவத்துடன் பேசவேண்டும் என்பது நமது விருப்பம்.
  • Thiyagaarajan Namasivayam I dislike this post
  • Athisha Vino Paraneetharan Kaliyaperumal வெளங்கினாப்லதான்! ;-))
  • Sengai Nilavan Athisha Vino ///“நானும் ராஜாவும்" என்றுகூட SPB கச்சேரி பண்ணினான்.///

    இதில் உள்ள‌ உரிமையை பார்க்க‌னும், ராசாவும் எஸ்பியும் உயிர் ந‌ண‌ப‌ர்க‌ள், இருவ‌ரும் சேர்ந்து தான் இரைத்துறையில் வாய்ப்பு தேடினார்க‌ள். த‌ன் ந‌ட்பின் அடையாள‌மாக‌ த‌ன் மாமா ம‌க‌ளை க‌ங
    ...See More
  • Gopinath Ravi Nothing wrong with raja. Kalaingnargaluku konjam aanavam iruppadhill thavarillai.
  • Prabhusankar Rajasekaran சுயமாக யோசிக்கும் திறன் அற்றவர்கள் , பெரிய ஆள்னா இப்படிதாண்டா இருப்பான் என்று இருப்பார்கள் போலிருக்கிறது .. வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான் என்ற மனோபாவம் இங்கு நிறையவே இருக்கிறது .. இசைஞானி என்பதாலேயே அவரை விமர்சிக்ககூடாது என்பது முட்டாள்தனம் ..அவரின் இசையை இங்கு விமர்சிக்கவில்லை , அவரின் அகந்தையை மட்டுமே ..
  • Vijayveerappan Swaminathan ”இசைஞானி” அப்போ இசையை மட்டும் தானே விமர்சிக்கனும். அவரு, அவரோட அகந்தை, மற்றும் இன்ன பிற எல்லாம் விமர்சிச்சா விமர்சனம் இல்லை. அவதூறு..
  • Joe Milton இளையராஜா மீது உங்கள் விமர்சனம் சரியென வைத்துக்கொண்டாலும், சாருவின் உளறலை நியாயப்படுத்திவிடாது.
  • Athisha Vino Joe Milton சாருவின் புத்தகத்தின் அப்படி என்னதான் எழுதினார் என்பது தெரியாமலேயே உளறல் என்று சொல்வது சரியாயிருக்காதில்லையா
  • மன்னை முத்துக்குமார் இசை துறையில் இருக்கும் ஒருவர் , இசையை பற்றி தெரிந்த ஒருவர் இப்படி ஒரு விமர்சனத்தை இளையராஜா மீது வைத்திருந்து , வாசகர் கேட்ட கேள்விக்கும் சாருவுக்கும் பதில் சொல்லாமல் இருந்தால் தான் அது தவறு.
  • Sengai Nilavan உறுப்புட்டுறும் த‌மிழ் இன‌ம்,இதே மாதிரி ந‌ன்றி விசுவாச‌த்துட‌ன் இருங்க‌ள். மேலே சாருவுக்கு வ‌க்கலாத்து வாங்கும் ந‌ண்ப‌ர்க‌ள் எல்லாம் ராசாவின் இசையை ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ ர‌சிச்ச‌வ‌ர்க‌ளாக‌ தான் இருக்க‌முடியும். ஒரு திற‌னாய்வு திற‌மையும் இல்லாத‌ சாரு ராசாவின...See More
  • Vijayveerappan Swaminathan Sengai Nilavan : விடுங்க பாஸ். இவுங்க எப்பவுமே இப்பிடி தான். லெட்ஸ் என்ஞாய் ராஜா சார் மியூஜிக். முதல் பாடல் இதோ!!!
    http://www.youtube.com/watch?v=vthIjUz6oTs

    நன்றி டு மை ட்வீட்டர் ஃபிரண்ட்..

  • Mu Muthu Kumar இளையராஜாவின் இசையை விமர்சிக்கும் அளவுக்கு சாருவுக்கு இசை ஞானம் கிடையாது....உண்மையில் கடைசியாக இளையராஜா இசையமைத்து சூப்பர் ஹிட்டான படம் எதுவென்று கடந்த பத்தாண்டுகளில் தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. என்று சொன்ன கருத்து சரிதானா...? நான் கடவுள் , நீதானே என் பொன் வசந்தம் ,etc போன்ற படங்கள் எல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வந்ததா ..?
  • Mari Muthu நாரதர் கலகம் ஆரம்பமாயிடுத்து!
    நன்மையில் முடிந்தால் சரி
  • Thiyagaarajan Namasivayam Before you Make a post about Duo please think of Ethics and Integrity of the Person
  • Vijayveerappan Swaminathan மேலே திரு மன்னை முத்துக்குமார் குடுத்துள்ள பாட்டில முதல் 20 செகண்ட் கேட்டுவிட்டு, அந்தப் பாட்டின் மொத்த சந்தோஷம், துள்ளல், Joy, உங்க்ளுக்கு வரவில்லை என்றால், நீங்கள்!!! இதை விட ஒருத்தர் என்ன செய்துவிட முடியும் இசையில்!!!
  • Gopalakrishnan Sankaranarayanan இரண்டு விஷயங்கள...ஒன்று இளையராஜாவின் ஆண்வம் குறித்து நீங்கள் தெரிவித்திருக்கும் அதிர்ச்சி என்னை வியப்படையச் செய்திருக்கிறது. ஆணவத்தின் மனித வடிவம் அவர். எனவே தான் அவரது பாடல்களையும் இசையையும் கேட்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளே...See More
  • Joe Vimal ரஹ்மான் என்ற மனிதரின் நற்மதிப்பு ஒவ்வொரு குமுதம் வரும்போதும் ஏறுகிறது
  • Raja Rajendran தன்னுடைய தகுதிக்கு நிகரில்லாத ஒருவர் வைக்கும் விமர்சனத்தை சாருவே கூட கடும் கோபத்துடன்தான் எதிர்கொள்வார். உலகின் பெரிய இசைவல்லுநர் யாராவது விமர்சித்து அதை இளையராஜா மட்டம் தட்டியிருந்தால் நானும் இளையாராஜா அகந்தைமிக்கவர் எனக் கூறியிருப்பேன். எனவே இதை பெ...See More
  • Ramesh Babu MR. ATHISHA DO NOT TRY TO TWIST BETWEEN RAJA AND SPB ,
  • Mayuran Sivanathan Athu sari. SPBum Rajavum friends. Adichukuvanka pudichukuvanka mathavanga moodittu irunga
  • Sathya Narayanan S R "புது ராகம் படைபதலே நானும் இறைவனே " இது ஒரு வரி போதாதா தல .....
  • Yacob Antony இதில் என்ன தவறு இருக்கிறது ..
    என் பெயரை வைத்து பிழைகிறர்கள் என்று சொன்னது . இந்த கோவம் அவர்களை சாடவில்லை
    சாருவுக்கு உரைக்க வேண்டும் என்று சொன்னது. மற்றபடி கடந்த 10 வருடங்களில் அவர் hit கொடுக்கவில்லை என்பதெல்லாம் சரியல்ல
  • Selvam Marimuthu இளையராஜா தன்னுடைய பதிலில் சாருவின் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை. எனவே இங்கு நாம் சாருவின் தகுதி குறித்து விமர்சிப்பது முறையா? சாருவிற்குப் பதில்......என்று வைத்துக் கொள்ளலாம். இப்போது மட்டும் ராஜா சொல்வது சரியா?

    இன்னொன்று ஒன்றை பற்றி விமர்சிக்க வேண்டு
    ...See More
  • AB Rajasekaran அப்பா! சற்று நேரத்தில் எவ்வளவு கமெண்ட்ஸ்! திடீரென்று Athisha Vino எவ்வளவு பேமஸ் ஆயிட்டார்...சாருவின் வித்தைக்கு இதைவிட ஒரு உதாரணம் வேண்டுமா என்ன?
  • Kannan Js Kannan தன்னை விமர்சிப்பவர்களிடம் சாருவும் இதே போல் நடக்கிறார் ஒரு சாதாரண வாசகனான என்னை அவரது வாசகர் வட்டத்தில் அவரை விமர்சித்தேன் என்பதற்க்காக என்னை கேவலமாக திட்டி என்னை வட்டதிலிருந்து நீக்கினார். ஷாஜியும் இளையராஜாவை விமர்சிப்பவர் தான் ஆனால் சாருவை போல அரை வேக்காட்டுதனமாக இருக்காது.
  • Srini Vasan ராஜாவை விமர்சனம் செய்வது தலையில் உள்ள ரோமத்தை பிடுங்கி அதை இரண்டாக பிளந்து எது பெரியது எது சிறியது என்று ஆராய்வதற்க்கு சமம்,
  • Thiyagaarajan Namasivayam அடிப்படை இசை அறிவு இல்லாத ஒருவர் 25 வயதுக்கு மேல் இசை கற்று அதிலும் சிறப்பாக தேறி தான் படித்ததை இசையில் செயல் படுத்தி வெற்றியும் கண்டு தனது இசையின் மூலம் பலரது உணர்வுகளுக்கு ஒரு ஆறுதலாக உள்ளார்.அவரை நாம் போற்றத்தான் இல்லை
    இழிவு படுத்தாமல் இருந்தால் அதுவே நல்லது.
  • Srini Vasan அவருடைய பதிலில் ஒரு மேம்போக்குத்தனம் இருக்கிறது ஆனா அவருக்கு அதற்க்கான தகுதி இருக்கிறது, அவரை ஒரு சாதாரணன் விமர்சனம் செய்வது மற்றவர் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் ஈனசெயல் மட்டுமே







thanks to jeeva sir: ,http://www.facebook.com/lenin.mirni/posts/572526069440904



Ilaiyaraja's speech in Vishnupuram award function 

 

 

Ilaiyaraaja's speach in Vishnupuram award function. In Coimbatore, he participated in Vishnupuram award function on 22nd December 2012. He spoked about music in his point of view. 

சாரு வின் பதிலடி

அய்யாசாமியும் ஸல்மான் ரஷ்டியும்…

ஒரு இசையமைப்பாளர் என்னைப் பற்றி ஒரு பிரபல பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது தொடர்பாக எனக்குப் பல கடிதங்கள் வந்துள்ளன.  அந்த இசையமைப்பாளர் பற்றி எதுவும் எழுதக் கூடாது என்று முடிவு செய்து கடந்த சில ஆண்டுகளாகவே அதைக் கடைப்பிடித்தும் வருகிறேன்.  அதனால் எனக்கு வந்துள்ள கடிதங்களுக்கு  நான் பதில் எழுதவில்லை.  என்னுடைய விலை மதிக்க முடியாத நேரம் இது போன்ற வெட்டிப் பேச்சுக்களில் கழிவதை நான் விரும்பவில்லை.  அதேபோல் ஒரு சாமியாரைப் பற்றியும் நான் வாயே திறக்காமல் இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம்.  பெயரைச் சொன்னாலே பெங்களூர் கோர்ட்டில் கேஸ் போட்டு என்னை பெங்களூருக்கு இழுத்தடிக்கிறார் சாமியார்.  என்னுடைய விலை மதிக்க முடியாத நேரம் பெங்களூருக்கு அலைவதிலும் எனக்கு இஷ்டமில்லை.  செய்வதற்கு எனக்கு எக்கச்சக்கமான வேலை இருக்கிறது.



உலகின் நம்பர் ஒன் பதிப்பாளர் என்னிடம் இரண்டு நாவல்களை ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார்.  கேட்டு ஒன்றரை மாதம் ஆயிற்று.  எக்ஸைலை ஏப்ரலில்தான் தருவேன் என்று சொல்லி விட்டேன்.  தேகம் அளவில் மிக மிகச் சிறியது என்பதால் ஜனவரி முதல் வாரம் தருகிறேன் என்று வாக்குக் கொடுத்து விட்டேன்.  ஆனால் இன்னும் எடிட்டிங் வேலை நான் நினைத்தது போல் இல்லாமல் இழுத்துக் கொண்டு போகிறது.  literary agent பின்னால் நாய் அலை அலைய வேண்டுமே என்று விசனத்தில் இருந்தேன்.  நான் வணங்கும் மஹா அவ்தார் பாபாவும் Mahanta வும் அந்தப் பிரச்சினை இல்லாமல் பதிப்பாளரே என்னிடம் கேட்கும்படியான நல்வினையை அருளி விட்டார்கள்.



ஸல்மான் ரஷ்டி நம்மூர் வண்ணாரப்பேட்டையில் உள்ள தாலியறுத்தான் சந்து முனையில் உள்ள டீக்கடைக்கு வந்து டீ குடித்து விட்டு காசு கொடுத்தால் டீக்கடைக்காரர் திரு அய்யாசாமி “சில்லறை இல்ல பாயி… சில்லறையாக் குடு” என்றுதானே சொல்வார்?  ”அய்யாசாமிக்கு என்னை அடையாளம் தெரியாமல் போயிற்றே?” என்று ஸல்மான் ரஷ்டி புலம்ப முடியுமா சொல்லுங்கள்?

thanx - charu,kumutham, related fb, twitters


4 comments:

Unknown said...

Ji,

This is my new comedy short film "Sombu". Please watch and give comments.

http://www.youtube.com/watch?v=Bakw_AjhR8Y&feature=youtu.be

'பரிவை' சே.குமார் said...

சாரு ராசாவை திட்டும்போது ஒன்றும் சொல்லாத எல்லாரும் ராசாவின் பதிலுக்கு மட்டும் குய்யோ முறையோ என்று சொல்வது எதனால் என்று புரியவில்லை. ராசாவின் பதிலில் சில விசயங்கள் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருந்தாலும் சாரு சொன்னது தவறு என்று சொல்பவர்கள் எதிர்த்தால் தப்பில்லை... எல்லாருமே ராசவின் மேல் இவ்வளவு கோபம் கொள்வது ஏன்?

Ivan Yaar said...

Read this you will know about charu. Charu is a person who likes cheap publicity :: http://charuonline.com/blog/?p=36

கும்கி
இன்று நண்பர் கார்த்திக்குடன் கும்கி போனேன். படம் பிடிக்கவில்லை. மைனா அளவுக்கு இல்லை. இமான் தான் போட்டு சாகடித்து விட்டார். இமானை கொஞ்சம் டீ குடிக்க வெளியே அனுப்பி இருந்தால் கூட படம் பிழைத்து இருக்கும். பொறுமைசாலிகள் ஒருமுறை பார்க்கலாம். நீதானே என் பொன் வசந்தம் சாய்ந்து சாய்ந்து கேட்டேன். எனக்குப் பிடித்த யுவனின் குரலாக இருந்தும் கூட பாடல் பிடிக்கவில்லை. யுவன் இப்படியெல்லாம் த்ராபை ம்யூஸிக் போட மாட்டாரே, இவருக்கு என்ன ஆயிற்று என்று இசையமைப்பாளர் பெயரைப் பார்த்தேன். விளங்கி விட்டது.

வரும் ஞாயிறு காலை பத்தரை மணிக்கு வின் டிவியில் கும்கி பற்றிப் பேசுவேன்.

Unknown said...

உங்கள் வலைத்தளத்தின் முகப்பு பக்கங்கள் ஏதோ பாத்திரக்கடையோ ,துணிக்கடை விளம்பரத்தை போல் உள்ளது #ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து