அப்பாவுக்கு கங்கிராட்ஸ்... பெரியப்பாவுக்கு
தேங்க்ஸ்!"
உற்சாக உதயநிதி ஸ்டாலின்
பாரதி தம்பி
படங்கள் :
ஜி.வெங்கட்ராம்
ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்று காமெடிக் கபடி ஆடிய
உதயநிதி ஸ்டாலின், அடுத்து காதல் கதகளி ஆட வந்துவிட்டார் நயன்தாராவுடன்!
''ஆமாங்க... படத்தோட பேர்லயே காதல் வெச்சிட்டோம்... 'இது கதிர்வேலன்
காதல்’. அப்பாவுக்கும் மகனுக்குமான பாசப் போராட்டம்தான் படம்.
'சுந்தரபாண்டியன்’ இயக்குநர் பிரபாகர் கதையைச் சொன்னதுமே, 'நானே
நடிக்கிறேன்’னு ஆசையா கேட்டு வாங்கிப் பண்றேன். சந்தானம் படம் முழுக்க
வர்றார். ஹாரிஸ் ஜெயராஜ்
மியூஸிக்.
பாலசுப்ரமணியெம் கேமரா. இப்போதைக்கு இவ்வளவுதான் ஃபிக்ஸ் ஆகியிருக்கு.
பிப்ரவரியில் ஆரம்பிக்கிறோம்... தீபாவளிக்கு ரிலீஸ்!''
''நயன்தாராதான்
ஹீரோயினா வேணும்னு அடம்பிடிச்சீங் களாமே... ஏன்?''
''அவங்க எனக்கு நல்ல ஃப்ரெண்டுங்க. 'ஆதவன்’ தயாரிக்கும்போது இருந்தே
பழக்கம். 'பாஸ் என்கிற பாஸ்கரன்’ பண்ணும்போதும் அந்த நட்பு தொடர்ந்தது.
'ஓ.கே. ஓ.கே’-வுக்கு அவங்களைத்தான் முதலில் கேட்டேன். ஆனா, 'நான் இனிமே
நடிக்கிறதா இல்லை’னு அப்ப சொன்னாங்க. இப்போ திரும்பிக் கேட்டப்ப, உடனே
ஓ.கே. சொன்னாங்க. நயன்தாரா நடிக்கிறது படத்துக்குப் பெரிய ப்ளஸ்!''
''இந்தப் படத்திலும்
அப்படியே சாஃப்ட்டா காதலிச்சு, சந்தானம் பார்ட்னர்ஷிப்போட காமெடி
பண்ணித்தான் நடிக்கப்போறீங்களா?''
''நமக்கு என்ன வருதோ அதை மட்டும் அழகாப் பண்ண வேண்டியதுதான். இந்தப்
படத்தில் சின்னதா ஒரு சண்டை இருக்கு. அதுக்காக பத்து பேரைத் தூக்கிப்போட்டு
அடிக்கிற மாதிரி எல்லாம் என்னால் நடிக்க முடியாது. என் இயல்புக்கு ஏத்த
மாதிரி, பார்க்கிறவங்களுக்கு உறுத்தாத மாதிரி நடிப்பேன்!''
''கடந்த தி.மு.க.
ஆட்சியில் ரெட் ஜெயன்ட் மூவீஸ், கிளவுட் நைன்னு உங்க குடும்ப நிறுவனங்களின்
பட விளம்பரங்கள்தான் எங்கெங்கும். ஆனா, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அது
அப்படியே குறைஞ்சிருச்சே... ஜெயலலிதா மேல் இருக்கிற பயம் காரணமா?''
''யாரைப் பார்த்தும் எந்தப் பயமும் இல்லை. அதிகாரம் இருக்கிறப்போ
மட்டுமே நாங்க படம் எடுக்கலை. என்னைப் பொறுத்தவரை, எப்பவும் தொடர்ந்து படம்
பண்ணிட்டுத்தான் இருக்கேன். ஆட்சி மாறிய பிறகுதான் 'ஏழாம் அறிவு’, 'ஓ.கே.
ஓ.கே.’ படங்களை பெரிய பப்ளிசிட்டி பண்ணி வெளியிட்டோம். அதனால பயந்து
ஒதுங்கிட்டேன்னு சொல்ல முடியாது. என் தொழிலை நான் நேர்மையா செஞ்சுட்டு
இருக்கேன்!''
'' 'ஸ்டாலினை தி.மு.க.
தலைவராக முன்மொழிகிறேன்’னு கருணாநிதி அறிவிச்சுருக்கார். அப்பாவுக்கு
வாழ்த்துச் சொல்லிட்டீங்களா?''
''இன்னும் சொல்லலை... விகடன் மூலமா சொல்றேன்... கங்கிராட்ஸ் அப்பா!
தலைவருடைய பையன் அப்படிங்கிற காரணத்துக்காக, கட்சியில் அப்பாவுக்கு எதுவும்
சுலபமாக் கிடைக்கலை. ஒவ்வொரு கட்டத்துலயும் ஒரு சாதாரணக் கட்சி உறுப்பினர்
சந்திக்கக்கூடிய எல்லா சிரமங்களையும் தாண்டித்தான் வந்திருக்கார். இப்போ
தலைவரே அப்பாவைப் பத்திச் சொல்லியிருக்கார்னா, அது தான் பெரிய விஷயம்.
என்னைக்கூட 'அடுத்த இளைஞர் அணித் தலைவர்’னு சொன்னாங்க. அதைக் கேட்டப்ப
எனக்கே சிரிப்புதான் வந்துச்சு. கட்சிக் காக உழைச்ச எத்தனையோ பேர்
இருக்காங்க. நியாயமா அவங்களுக்குத்தான் பதவி எல்லாம் போகணும்... போகும்!''
''ஒரு மத்திய
அமைச்சரா உங்க பெரியப்பா அழகிரியின் செயல்பாடுகளை எப்படி
மதிப்பிடுவீர்கள்?''
''ஏங்க, இதெல்லாம் பெரிய விஷயம். அவர் ஒரு பாசக்காரப் பெரியப்பா. நாங்க
பசங்கள்லாம் பயங்கர சேட்டை பண்ணாலும், பெரியப்பாவுக்கு மட்டும்
பயப்படுவோம். ரொம்பக் கண்டிப்பான வர். திடீர்னு கோபம் வரும். இப்பகூட
அவர்னா எல்லோருக்கும் கொஞ்சம் பயம்தான். 'ஓ.கே. ஓ.கே.’ பார்த்துட்டு,
'ரொம்ப நல்லாப் பண்ணியிருக்கடா... எதிர்பார்க்கவே இல்லை’னு மனசுவிட்டுப்
பாராட்டி னார். தேங்க்ஸ் பெரியப்பா!''
THANX - VIKATAN
0 comments:
Post a Comment