படத்தோட
கதை என்ன? 2 போட்டி கம்ப்பெனிகள் . நம்ம தமிழ் நாட்டில் ஜெ , கலைஞர் மாதிரின்னு வெச்சுக்கலாம். கம்பேனி ஜெ என்ன நினைக்குதுன்னா
கலைஞர் கம்பெனிதான் நமக்கு போட்டி . அங்கே மு க ஸ்டாலின் கலைஞர் கூட கொஞ்சம் மனஸ்தாபமா
இருக்கார் , அவரை தூண்டி விட்டு குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்தி வாரிசு உரிமைப்பிரச்சனை அல்லது கம்பெனிக்கு நான்
தான் ஓனர் அப்டினு ஒரு போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தி பலவீனப்படுத்தினா தான் நெம்பர்
ஒன் ஆகிடலாம்னு நினைக்கறவர் ஜெ கம்பெனி .
அதுக்காக
ஹீரோவை நியமிக்கறாங்க . நம்ம ஹீரோ யாரு? அவர் ஒரு ஆர்க்கிடெக். அது போக
கனவுகளை கண்ட்ரோல் பண்ணுபவர்.அதாவது ஒரு ஆள் தூக்கத்துல இருக்கும்போது கனவு காண்பார்
இல்லையா? அப்போ அவர் சிந்தனைல போய் அவர் ஐடியாக்களை திருடுபவர் , சில ஐடியாக்களை எதிரியின் மூளையில் விதைத்து ஆட்டுவிப்பவர். ஹிபனாடிசம்
மாதிரி
இப்போ
இவர் வேலை என்னான்னா ஸ்டாலின் கனவுல போய் இவர் நினைக்கும் சில நினைவுகளை விதைச்சுட்டு
குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்தனும்.
இதை
ஏன் இவர் பண்றார்னு நியாயக் கற்பிக்க ஒரு ஃபிளாஸ்பேக். ஹீரோவோட இரு குழந்தைகளை வில்லன்
கடத்தி வெச்சு மிரட்றான். குழந்தைகளை காப்பாத்தனும்னா இந்த பிராஜக்ட்டை அவன் பண்ணியே
ஆகனும்
ஹீரோவுக்கு
ஒரு சம்சாரம். அவரு ஹீரோவோட கனவு வேட்டை பிராஜக்ட்டால மன நிலை பாதிக்கப்பட்டு ஒரு குழப்பமான
சூழல்ல தற்கொலை செஞ்சவரு.
இப்படியே
விட்டா கதை ட்ரையா இருக்குமேன்னு இந்த பிராஜக்ட் செய்ய ஹீரோவுக்கு உதவியா ஒரு 75 மார்க்
ஃபிகரு உதவிக்கு, அதுதான் ஹீரோயின்.
எம்
ஜி ஆர் பட ரேஞ்சுக்கு 3 மணி நேரத்தையும் தாண்டி படம் ஓடிட்டே இருக்கு
பொறுமையா
பார்க்கனும். குறுக்கே ஃபோன் வந்துச்சுனு எந்திரிச்சுப்போய்ட்டு வந்தா படம் புரியாது
இயக்குநர்
பாராட்டு பெறும் இடங்கள்
- ஹீரோ ஹீரோயின் 2 பேரும் கனவு
தேசத்துல வாக்கிங்க் போகும்போது கட்டிடங்கள் எல்லாம் என்னமோ பேப்பர் கட்டு மாதிரி
மடங்கும் சீன் கிராஃபிக்ஸ் கலக்கல்
- படத்துல யாரும் குறை சொல்ல
முடியாதபடி திரைக்கதை அமைத்த சாமார்த்தியம் ( நல்லா ஃபுல்லா புரிஞ்சாத்தானே குறை
சொல்ல முடியும் ?)
- ரசிகர்களுக்கு இது முற்றிலும்
புதிய களம். சைக்காலஜி , சைக்கோ சம்பந்தப்பட்ட படங்கள் நிறைய பார்த்திருந்தாலும்
கனவு சமப்ந்தப்பட்ட வித்தியாசமான கோணம் அனுபவம் புதுமை
- ஹீரோ அவர் சம்சாரம் , ஹீரோயின்
3 பேர் சமப்ந்தப்பட்ட காட்சிகள் பொழுது போக்குக்கு . நல்லாருக்கு
- ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்சன், வசனங்கள் நீட்
இயக்குநரிடம்
சில கேள்விகள்
- ஹீரோயின் தற்கொலை பண்ணிக்க
கட்டிடத்தின் விளிம்பில் நிற்கிறார். அப்போ ஒரு வசனம் “ நீங்களும் என் கூடவே வந்துடுங்க”ன்னு மனைவி சொல்றா. ஹீரோ
“ குதிக்காதே”ன்னு பதட்டமா சொல்றார். இந்த சீன்ல ஈசியா ஹீரோ ஹீரோயினை காப்பாத்தி
இருக்க முடியும். அங்கேயே இரு, இதோ நானும் அங்கே வந்துடறேன், 2 பேரும் சேர்ந்தே
குதிப்போம் அப்டினு சொல்லி பிரெயின் வாஷ் பண்ணி கிட்டே போய் காப்பாத்தி இருக்கலாம்,
சரி தொலையுது , புது ஜோடி கிடைக்கட்டும்னு விட்ட மாதிரி இருக்கு . அந்த சீன்ல
ஹீரோயின் தற்கொலை பண்ணும்போது தனிமையில் இருந்தா அப்டினு காட்டி இருக்கலாம். ஏன்னா
ஹீரோ முன்னால ஹீரோயின் தற்கொலை பண்ணும்
காட்சி வெச்சுடா ஆடியன்ஸ் மனசுல எப்பவும் ஹீரோ மேல ஒரு குற்ற உணர்ச்சி வந்துட்டே
இருக்கும்
2.
ஹீரோவுக்கு உதவியா வர்ற பொண்ணு நாசர் மாதிரி எதுக்கு தேவை இல்லாம ஹீரோவோட பர்சனல் மேட்டர்ல தலையிடுது. சரி ஹீரோ மேல லவ் போலன்னு நினைச்சா அதுவும் இல்லை . சும்மா டெம்ப்போ ஏத்தவா?
3. ஹீரோவோட மனைவியின் தற்கொலைக்கு ஹீரோ தான் காரணம். தற்கொலைக்கு தூண்டிய வழக்குல அவருக்கு ஏன் தண்டனை கிடைக்கலை? 2 வதா வர்ற ஹீரோயின் அது பற்றிக்கண்டுக்கவே இல்லை , போதாததுக்கு அடிக்கடி “ உன் மனைவி டெத்துக்கு நீ காரணம் இல்லை”ன்னு ஆறுதல் வசனம் வேற
மனம்
கவர்ந்த வசனங்கள்
1. கனவுகள் இவன் பேரைக்கேட்டாலே
கதி கலங்கி நிக்கும், கனவுகளை வேட்டையாடுபவன், தன் கட்டுக்குள் கொண்டு வருபவன்
2.
உலகத்துலயே அபாயகரமான விஷயம் எது?
வைரஸ்? எய்ட்ஸ்? பாக்டீரியா? ட்யூமர்?
நோ.. ஐடியா. ஒரு ஐடியா உங்க வாழ்க்கையையே மாத்திடும் , உள்ளுக்குள்ளேயே இருந்து
கொல்ற சக்தி ஐடியாவுக்கு உண்டு
3.
கனவு காணும்போது ஒருவனோட சுய நினைவு கம்மியா
இருக்கும்
4.
பிஸ்னெஸ்மேனோட இலக்கணம் என்னான்னா கணக்கற்ற அளவில் சொத்து சேர்த்து தன் எல்லா ரகசியங்களையும் வைப்பாட்டி கிட்டே சொல்றதுதான்
5. என் கனவுல நான் வெச்சதுதான் சட்டம்
ஆனா இது உங்க கனவு இல்லை, என் கனவு
6. நீ அவனை போட்டுத்த்ள்ளப்போறியா?
செத்த பாம்பை அடிச்சு எனக்குப்பழக்கம் இல்லை
7. ஒருத்தரோட ஆழ்மனசுல இருந்து ஒரு ஐடியாவை நமக்கு பிடிச்ச மாதிரி உருவாக்கனும், அதான் என் பிளான்
புரியலையே?
யானையை மனசுல நினைக்காதீங்கன்னு உங்க கிட்டே நான்
சொன்னா நீங்க என்ன செய்வீங்க?
யானையையே நினைச்சுட்டு இருப்பேன்
அப்போ நான் ஜெயிச்சேன்னுதான் அர்த்தம், உங்க நினைவு இப்போ என் கட்டுப்பாட்டில்
8. ஒருத்தனோட ஐடியாவைத்தூக்கி இன்னொருத்தன்
மூளைல வைப்பது சாதா விஷயம் இல்லை
9. எனக்கு ஆபஹ்ட்து எல்லா இடத்துலயும் இருக்கும், போற பக்கம் எல்லாம்
10. பொம்மையும் , ஆசைப்பட்ட பொருலை மட்டும் வாங்கித்தா மட்டும் குழந்தைங்க ஒரு போதும்
அப்பாவை உணர முடியாது , சமீபம் வேணும்.
11.
எனக்கு உங்க கிட்டே ஒரு உதவி வேணும்
என் கிட்டே இருக்கும் ஒரே ஒரு
பி ஏ வை உனக்கு தரச்சொல்றே..
12
. பெரிய பெரிய ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்றாங்கன்னா ஒருத்தரோட மூளை அவர் விழித்திருக்கும்போது வேலை செய்வதை விட தூங்கிட்டு இருக்கும்போதுய்தான் நல்லா வேலை செய்யுமாம்
13. என்னைக்குமே ஒரு கனவோட நடுப்பகுதிதான் எல்லாருக்கும் நினைவுக்கு வரும் ஓப்பனிங்க் நோ படி
நோ
14. என் ட்ரீம் ஷேர் பண்ணிக்கறியா?
15.
ஆர்க்கிடெக்க்கு இதுல என்ன வேலை?
கனவை டிசைன் பண்ண ஒரு ஆள் வேணாமா?
16.
நிஜ வாழ்வுல 5 நிமிஷம் = கனவுல 1 மணி நேரம்
17.
என் உள்ளுணர்வுகளை எப்பவும் என்னால கட்டுப்படுத்த முடியாது
18.
களவாடுனா மட்டும் போதாது , நடிச்சு ஏமாத்தவும் தெரியனும்
19. உலகத்துலயே நெம்பர் ஒன் கம்ப்பெனி என்னுதாத்தான்
இருக்கனும், என் எதிரியை
நான் குழப்பனும்
20.
அவர் பாலிசி என்ன தெரியுமா? “ எந்தப்பிரச்சனையிலும்
மாட்டாம இருப்பது “
இதை
அவர் வாயால சொல்ல வைக்க முடியுமா?
21.
நான் என்ன நினைக்கறேனோ அதை அவனுக்கே தெரியாம
அவன் நினைவில் விதைக்கனும்
22.
சுய நினைவில் எந்தப்பையனும் தன் சொந்த அப்பாவுக்கு எதிரா எதுவும் செய்ய மாட்டான்
23.
நல்ல உணர்ச்சி எப்பவும் கெட்ட உணர்ச்சியை பின்னுக்குத்தள்ளும்
24.
நீ ஏன் எப்பவும் கனவுல அவளை நினைக்கறே?
ஏன்னா அவ கனவுல மட்டும் தான் வருவா , என் காதலை எப்படி என்னால அழிக்க
முடியாதோ அதே மாதிரி என் ஞாபகங்கள் பூரா அவ மட்டும் தான் ஆக்ரமிச்சுட்டு இருக்கா
25.
இங்கே என்ன பண்றே?
என் பேரு.......
உன்
பேரைக்கேட்கலை.. நீ இங்கே என்ன பண்றே? ன்னு கேட்டேன்
26.
நீ என்ன தெரிஞ்சுக்கனும்?
எனக்கு சொந்தமானதை உனக்கு சொந்தமாக்கிக்க ட்ரை பண்றியா?ன்னு தெரிஞ்சுக்கனும்
27.
உங்களைப்புரிஞ்சவங்க உன் கூட இருப்பது நல்லது
28.
ஓ சி ல கிடைச்சா லிட்டர் கணக்குல சரக்கு அடிப்பியோ?
29.
கனவுல யாராவது செத்துட்டா மறுபடியும் நினைவு உலகத்துக்கு போக முடியாது , மீளா மாயச்சுழல்ல சிக்கிக்க வேண்டியதுதான்
30.
கொஞ்சம் ஜாக்கிரதையா இரு , சிரிச்சு சிரிச்சே அவ ஆளை மயக்கிடுவா
சி.பி கமெண்ட் - வித்தியாசமான KNOT என்பதால் எல்லாரும் பார்க்கலாம்.நோல்னின் மைல் கல் படங்களில் இது முக்கியமான படம் .ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் 2 வருஷம் முன் பார்த்தேன்.
3 comments:
Ha ha....
Inception ku ivlo naal kaluchu review pottathu neengala than irrukkum....
First of all, neenga ketta moonu kelviyume thappu.
Kolanthaigala villan ethuvum kadathi vaikkala. Ana, hero Decaprio avorada naatukku pogamudiyathu, karanam ennana avar maniviyoda tharkkolai, ivar than kolai pannittarnu case anathu naala.
Neenga english la paartheengana neraiya vasanathula solliruppanga...
Inception is very highly intelligent script.
Neenga arasiyalvathigala vachu katha sollurathu nallarukku, ana oru rasiganoda arivaiyum, intelligent a cinema parkkum thiramaiyai ookkuvikkum vagaila intha vimarchanam illa...
படத்தை ஒழுங்கா பாத்து விமர்சனம் எழுதணும் ...... 4 காமெடி யே எல்லா விமர்சனதுலயும் போடுறது ....... 4 வசனம் பிழையா போடுறது ,plzz தமிழ் படங்களோட உங்க காமெடி விமர்சனத்தை நிப்பாட்டுறது நல்லது ........ தப்பா இருந்த மன்னிக்கணும் .....
Dhayavu seidhu idhu madhiri review inimelum eludhatheenga plese....
Post a Comment