எங்கடா அந்தக் கதை?
க.ராஜீவ்காந்தி
அது ஒரு படத்தின் டிரெய்லர். திரையில் இருள்.
பின்னணியில் குரல்.
''ஏய்... கொஞ்சம் காட்டேன்...''
- ஆண்.
''ச்சீய்...'' - பெண்.
''கொஞ்சம் காமியேன்...''
''போடா!''
''யாரும் பார்க்க மாட்டாங்க, நான் மட்டும் பார்த்துக்குறேன்.''
''சரி, பார்த்துத் தொலை!''
காட்சி தெரிகிறது. தேர்வு அறையில் பெண்ணின் விடைத்தாளைப் பார்த்து ஹீரோ
காப்பி அடிக்கும் காட்சி. டிரெய்லர் முழுக்கவே குறும்புச் சேட்டைகள். 5
லட்சம் ஹிட்கள் தாண்டிக் கதறடிக்கிறது 'யாருடா மகேஷ்?’ பட டிரெய்லர்.
படத்தின் இயக்குநர் மதனைச் சந்தித்தேன்.
''யாருங்க நீங்க?''
''சும்மா ஜாலி கேலி ஃப்ரெண்ட்ஸ். நான் யார்கிட்டயும் அசிஸ்டென்ட்டா வேலை
பார்க்கலை. சில விளம்பரப் படங்களில் வேலை பார்த்திருக்கேன். ஒரு கேரக்டர்
அடிக்கடி எல்லாத்தையுமே மறந்தா என்ன ஆகும்? இதுதான் படத்தின் ஒன் லைன். இதை
ஒரு குறும்படமா பண்ண லாம்னுதான் ஐடியா. ஆனா, அதுக்கான வேலைகள்
ஆரம்பிச்சப்போ, சினிமாவே பண்ணிரலாம்னு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துட்டோம்.
ஹீரோவுக்கு சின்னச் சின்ன மறதிகள். என்ன பரீட்சைன்னே தெரியாம, எக்ஸாம்
ஹால்ல போய் உட்காருவான். பயங்கர சோம்பேறி, டெட் ஸ்லோ கேரக்டர். அவனுக்கு
ஒரு காதல் வருது. அந்தக் காதல் அவனை எப்படி புத்தி சாலியா மாத்துது. மகேஷ்
என்ற கேரக்டரை ஹீரோ இன்டர்வெல்ல தேட ஆரம்பிப்பான். இதுதான் கதை.
இன்டர்வெல்லதான் டைட்டில் கார்டே போடுவோம்!''
'' 'ரத்னவேலுவை
ராண்டினு சொல்றோம். அப்ப குழந்தைவேலுவை..?’ எந்தத் தைரியத்தில் இப்படி
வசனம் வைக்கிறீங்க? சென்சார் பயம் இல்லையா?''
''இந்த வசனம் டிரெய்லர்ல செம ஹிட். ஆனா, படத்துல மியூட் ஆகிடும். படம்
முழுக்க ஜாலி சேட்டை மட்டும்தான். யார் மனசையும் புண்படுத்தும் எண்ணம்
எங்களுக்குச் சத்தியமா இல்லை. இத்தனைக்கும் முடிஞ்ச அளவுக்கு எங்களை
நாங்களே கன்ட்ரோல் பண்ணித்தான் டயலாக் வெச்சிருக்கோம்.
எல்லாக் கிண்டலும்
எல்லாரும் ரசிக்கிற மாதிரிதான் இருக்கும்.
ஹீரோ
சந்தீப், தெலுங்குல நான்கு படங்கள் நடிச்சிருக்கார். ஹீரோயின் டிம்பிள்,
புனே பொண்ணு. 'நண்டு’ ஜெகன், சுவாமிநாதன், ஸ்ரீநாத், லிவிங்ஸ்டன்னு பெரிய
காமெடிப் பட்டாளமே இருக்கு.
ஒரு சீன்ல ஜெகன் தூங்கி எந்திரிச்சுப்
பார்த்தா, பக்கத்துல ஜட்டியோட ஹீரோ படுத்திருப்பான். அந்த சீன்ல நாங்க
டயலாக்கே வைக்கலை. ஆனா, ஜெகன் டைமிங்கா, 'என்னை என்னடா பண்ணே..? நான் நல்ல
குடும்பத்தைச் சேர்ந்த பையன்டா’னு பேச, அதை டயலாக்ல சேர்த்துட்டோம்.
ஜெகனுக்கு இந்தப் படம் பெரிய பிரேக்கா இருக்கும்!''
''ஹீரோயின் எப்படி
டபுள் மீனிங் வசனம் பேச ஓ.கே. சொன்னாங்க?''
''அவங்களுக்குத் தமிழ் புரிஞ்சாதானே கேள்வி கேட்க? அர்த்தத்தை மாத்திச்
சொல்லி ஷாட்ல பேசவெச்சோம். யூனிட்ல எல்லாரும் சிரிக்கும்போது
கண்டுபிடிச்சுக் கேட்பாங்க. சமாளிச்சுடுவோம். படத்துக்கு யார் வந்தாலும்,
ஒரு 20 வயசு இளைஞனா நினைச்சுட்டு வந்து பாருங்க. புதுசா எந்த முயற்சியும்
பண்ணலை. ஆனா, படம் முழுக்க ஜோக் ஜோக்கா இருக்கும். தவிர, படத்துல கதைனு
ஒண்ணு இருந்தா... நீங்களே கண்டுபிடிச்சு எங்களுக்கும் சொல்லுங்க!''
thanx - vikadan
thanx - vikadan
நன்றி -விக்டன்
கலக்கல் ட்ரெய்லர்
1 comments:
யாருடா மகேஸ்!
மாப்பு நீண்ட நாளுக்குபிறகு நாம சந்திக்கிறோமில்லை.
முதலில் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Post a Comment