1. உங்க கட்சித்தொண்டர்கள் பச்சை கலர் டிரஸ் தான் போடனும்னு வாய் மொழி உத்தரவு இட்டீங்களாமே?
பச்சைப்பொய்
---------------------
2. அவன் சரியான சினிமாப்பைத்தியம்னு எப்படி சொல்றே?
கேட்கறவன் கேனயனா இருந்தா கரண்டை கண்டு பிடிச்சது காஜல் அகர்வால், கரண்ட் கட்டை கண்டு பிடிச்சது சோனியா அகர்வால்னு சொல்வே போல ங்கறாரே?
-------------------------
3. மாப்ளை டெம்ப்பரவரி ஜாப் என்பதால் பொண்ணு தர மாட்டேண்ட்டீங்களாமே?
ஆமாய்யா, தமிழக மினிஸ்டர்னா நித்ய கண்டம் , பூரண ஆயுசு
------------------------
4. இருட்டும் திருட்டும் பேர் போன இடம் எது?
இண்ட்டர்வியூவுல இவ்ளவ் ஈசியாவா கேள்வி கேப்பாங்க? தமிழ்நாடு சார்
-------------------
5. அமைச்சரே! மாதம் மும்மாரி பெய்கிறதா?
மன்னா! தினம் முப்பது முறை கரண்ட் போகிறது
----------------------------
6. நாட்டை விற்க அனுமதிக்க மாட்டேன்னு தலைவர் சொல்றாரே?
அடமானம் வைக்க ஐடியா போல
-------------------------
7. சிறுககட்டி பெருக வாழ் ங்கறதை தலைவர் தப்பா நினைச்சுட்டார் போல
எப்டி சொல்றே?
சிறுசை கட்டி பெருசு நீ வாழ்!னு எழுதி வெச்சிருக்காரே?
----------------------
8. தலைவர் விஜய் ரசிகர்னு எப்படி சொல்றே?
மின் வெட்டு பிரச்சனை எப்போ தீரும்?னு மக்கள் கேட்டதுக்கு ஐ ஆம் வெயிட்டிங்க்னாரே?
---------------------
9. ஜட்ஜ் - கிரானைட் ஊழல்ல நீ ஈடுபடலை என்பதற்கு ஆதாரம் இருக்கா?
கைதி - யுவர் ஆனர் எனக்கு மாலைக்கண் வியாதி இருக்கு, நான் எப்படி கிரா “நைட்” ஊழல் புரிய முடியும்?
------------------
10. உட் கட்சிப்பிரச்சனையை சரி பண்ணனும்
தலைவரே! முதல்ல உங்க குடும்பப்பிரச்சனையை சரி பண்ணுங்க , பெரிய அக்கப்போர்
-------------------------------
11. அவரு சரியான டுபாக்கூர் பார்ட்டின்னு எப்படி சொல்றே?
தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் மின் வெட்டு பிரச்சனையை சமாளிக்க காணாமப்போன கரண்டை தேடி கமல் போகும் ஃபாரீன் டூர் என்கொயரிதான் விஸ்வரூப படக்கதை
----------------------
12. உங்க படத்துக்கு மாட்றான்னு ஏன் டைட்டில் வெச்சிருக்கீங்க?
வில்லன் ஹீரோ கிட்டே மாட்றான். அதான்
----------------------
13. ஐ பி எஸ் மாப்ளையே வேணாம்னு உங்க பொண்ணு சொல்லிடுச்சா? ஏன்?
யு பி எஸ் பிராடக்ட் பண்ற கம்ப்பெனி ஓனரைத்தான் மேரேஜ் பண்ணிக்குமாம்
------------------------
14. தலைவரே!இப்போ எதுக்கு ஆலோசனைக்கூட்டம் போட்டிருக்கீங்க?
இப்போ , இன்னைக்கு நிலவரத்துக்கு யாரெல்லாம் மினிஸ்டரா இருக்கோம்னு தெரிஞ்சுக்க
-----------------------------
15. நாய் , பூனை வளர்க்காம உங்க வீட்ல பெட் அனிமல்ஸா எருமை, பசு வளர்க்கறீங்களே?
கட்சிக்கட்டுப்பாடுதான் அம்மாங்க்ற சத்தம் தான் வீட்டை நிறைக்கனுமாம்
-----------------------
16. டாடி, சிங்கத்துக்கு அருகம்புல் ஜூஸ் தரலாமா?
என்னடா உளர்றே?
பின்னே ? புரட்டாசி மாசம்னு சாக்கு சொல்லி வெறும் இட்லி மட்டும் சாப்பிடக்குடுத்தா எப்படி?
---------------------------
17. அதிரடியா ஆடறது டோனியா? ஷேவாக்கா?
2 பேரும் இல்லை அமைச்சரை அடிக்கடி அதிரடியா மாற்றும் ஜெ தான்
--------------------------------
18. எப்படியாவது எனக்கு ஒரு வேலை வாங்கிக்குடுங்க , அது போதும்
ஓஹோ அப்போ சம்பளம் வேணாமா? வேலை மட்டும் போதுமா?
--------------------------------
1 comments:
எல்லா ஜோக்குக்கும் சிரிப்பு வரலேங்க.
Post a Comment