Wednesday, January 23, 2013

ட்விட்டரில் ஃபேக் ஐ டி களை அடையாளம் காண்பது எப்படி?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxLHiKn7kj9Nm7S9mTCItUOEMniDhaHMs2VpYC-Cqq3aJa6P38b7xJ3jk-TeyRyXUpIZ5GNBqaM3p-xLdwxwpNqIktPv3o5jdINQRpbJAaDL_e2-GK9SceVnaY1jPeC4Sr-DlcrltqDP4/s1600/Trisha3.jpg

எங்க ஊர்ல ஒரு பழமொழி உண்டு . யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை? ன்னு , ஆனா அது இந்தக்காலத்துல செட் ஆகாது , ஏன்னா டோட்டல் தமிழ்நாடே பாதி நேரம் இருட்டுல தான் இருக்கு. ட்விட்டர்ல நாம பாட்டுக்கு வர்றோம், ட்வீட் போடறோம், பிளாக் லிங்க் ஷேர் பண்றோம் , போறோம், இதுல யார் ஒரிஜினல் , யார் ஃபேக்கா இருந்தா நமக்கென்ன? என இருப்போர் ஒரு வகை . இப்படி இருப்பதுதான் நமக்கு நல்லது. 


 ஆனா பாருங்க  எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க .ராதா பொண்ணுங்களையே எடுத்துக்குங்குங்க , கார்த்திகா ஒரு டைப் , துளசி இன்னொரு டைப் . அந்த மாதிரி ட்விட்டர்கள் பலர் ஃபேக் ஐடிங்கள் யார் அப்டினு ஆராய்ச்சி பண்ணிட்டே இருக்காங்க . 



எதுக்காக ஃபேக் ஐடி கள் உருவாகுது? அதாவது சில ட்வீட்டர்கள் ஃபிகர்ட்ட கடலை போடுவாங்க . அது பலருக்கு பிடிக்காது . அவங்களை காய விடுவதற்கும் , பழி வாங்குவதற்கும்  பெண் பெயரில்   ஒரு ஐ டி ஆரம்பிச்சு உசுப்பேத்தி விட வேண்டியது . அவருக்கு டைம் வேஸ்ட் ஆகும்  , இவர் தன் நண்பர்கள் எல்லார் கிட்டேயும்  “ நான் அவரை ஏமாத்திட்டேன், நல்லா ஏமாந்தான், வழிஞ்சான் “ அப்டினு பெருமை பேசிக்குவாங்க . இதுக்குத்தான் பெரும்பாலான ஃபேக் ஐ டிகள் உருவாகுது. 


 அப்புறம் 2 ட்வீட்டர்களுக்குள் ஏதோ சண்டை . பரஸ்பரம் பிளாக் பண்ணிக்கறாங்க . அதனால  பூட்டு போட்டிருப்பாங்க. ஆனா பரஸ்பரம் ஒருவர் ட்வீட்டை இன்னொருவர் படிக்க முடியாது . ஆனா படிக்கனும். இதுக்கு என்ன வழி? வேற ஒரு ஃபேக் ஐ டி மூலம் அவரை ஃபாலோ பண்ணி ஃபாலோ பண்ண வெச்சா அது சாத்தியம் 


 99 % ஃபேக் ஐ டி கள் ஆண்கள் தான். ஏன்னா பொண்ணுங்களுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கும். அவங்க இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யறதில்லை . 



 ஓக்கே கமிங் டூ த மேட்டர்.. ஃபேக் ஐ டிகளை கண்டு பிடிப்பது எப்படி ? 


 கம்ப்யூட்டர் புலியா இருந்தா  அவங்க ட்விட்டர் ஹேண்டில் வெச்சு லொக்கேஷன் கண்டு பிடிக்கலாம் .  அது போக டெக்னிக்கலா பல வழிகள் இருக்கு . இந்த பதிவு வந்தே மாதரம் சசி மாதிரி டெக்னிக் ஆளுங்க தான் எழுதனும். நாம என்ன பண்ணலாம்? சராசரி ட்வீட்டர் ஒரு ஃபேக் ஐ டியை கண்டறிய சில குறுக்கு வழிகள் ஃபாலோ பண்ணலாம் . தமிழனுக்கு குறுக்கு வழின்னா அல்வா சாப்பிடுவது மாதிரி .. 



1. முதல்ல நீண்ட நாட்கள் ட்விட்டர்ல இருக்கும் பெண் ஐ டிகள் 10 பேரை ஃபாலோ பண்ணி  ஃபிரண்ட்ஷிப் பிடிச்சுக்குங்க . பெங்களூர் , கோவை , மதுரை ,இங்கே தான் அப்படிப்பட்ட ட்வீட்டர்ஸ் இருக்காங்க . உங்களுக்கு டவுட்டா இருக்கும் ஹேண்டில் பற்றி அவங்க கிட்டே சொல்லி விசாரிக்க சொல்லுங்க . இப்போ பல பெண் ட்வீட்டர்கள் தங்கள் ஃபோன் நெம்பரை ஆண் ட்வீட்டர்களிடம் பாதுகாப்பு கருதி தர மாட்டாங்க . ஆனா பெண்களிடம் சகஜமா  பேசுவாங்க . ஃபோன் நெம்பர் ஷேர் பண்ணிக்குவாங்க . 


உண்மையான பெண் ஐடிகளிடம் கூட தங்களை வெளிப்படுத்திக்க விரும்பலை , ஃபோன் நெம்பர் தர மாட்டேன் , பேச மாட்டேன் என சொல்லிட்டா 90 % அவங்க ஃபேக் ஐ டி தான் 



2. பிரபல ட்வீட்டர்களான  கட்ட துர , ரைட்டர் சி எஸ் கே இவங்க 2 பேரும் யார் கிட்டே அதிகமா பேசிட்டு இருக்காங்கன்னு பாருங்க . அவங்க கண்டிப்பா ஃபேக் ஐடியா இருக்காது . ஏன்னா கோலப்போட்டிங்கற பேர்ல கட்டதுர எல்லா பெண்  ஐ டிகளிடமும் ( எல்லா = பெரும்பாலான )  மெயில் ஐ டி வாங்குனதன் நோக்கமே வேற . ஒரிஜினலை ட்ரேஸ் அவுட் பண்ணத்தான். ராஜேஷ் மூலம் அவர் கண்டு பிடிச்சிருப்பாரு . அதனால கட்டதுரக்கு எல்லாம் தெரியும் 


 அதே போல் தான் ரைட்டரும். அவர் ஆத்ம நண்பர் சென்னைல  கம்புயூட்டர் புலி . அவருக்கு டவுட்டா இருக்கும் பெண் ஐ டிகளை அவரை விட்டு ட்ரேஸ் அவுட் பண்ணி எது ஃபேக் ஐ டி என கண்டு பிடிச்சுடுவார். அதனால இவங்க 2 பேரும் பேசும் ஐ டி கள் ஒரிஜினலாகத்தான் இருக்கும் 




3. நாம மொக்கை ட்வீட் போட்டாலே அபாரம் , சூப்பர் அப்டினு சம்பந்தமே இல்லாம பாராட்டுனா  அவங்க நிச்சயம் ஃபேக் ஐ டி தான் 


 4. கொச்சின் பார்ட்டி கனல் கிட்டே ஜாக்கிரதையா இருந்துக்குங்க . அவர் 8 ஐ டி வெச்சிருக்கார் .  ஒரே டைம்ல  8 ஐ டி கள் ல இருந்தும் ட்வீட் போடும் சாமார்த்தியம் உண்டு . அவரோட ஃபேக் ஐ டிகளை எப்படி கண்டுக்கறது? அவர் டைம் லைன்ல இருக்கும்போது பெரும்பாலும் அவங்க ( 8) இருக்காது 



5.  எந்த  புது ஐ டி யிடமும் நீங்களா போய் ஆஜர் ஆகி “ சாப்டாச்சா? காலை வணக்கம் , இன்னைக்கு என்ன குழம்பு? என முறை வாசல் வைக்காதீங்க. 


6. வலை பாயுதே , வலைப்பேச்சு  இந்த மாதிரி பத்திரிக்கைகளில்  ட்வீட்ஸ் ரெகுலராக வரும் ஐடிகள்  ஃபேக் ஐ டியா இருக்க வாய்ப்பு கம்மி . ஏன்னா  பொய்யான புனைப்பேர் ஃபேமஸ் ஆவதற்கு யாரும் விரும்ப மாட்டாங்க 



7. பொதுவா தமிழ் நாட்டில் வாழும் பெண்கள் நைட் டைம்ல 11 டூ 4 இந்த டைம்ல ரெகுலரா ட்விட்டர் வர மாட்டாங்க . கரண்ட் கட் ஆனா எப்பவாவது வரலாம் . அதே போல் ஃபாரீன் ட்வீட்டர்கள் கணக்கில்லை . உள்ளூர் பெண் ட்வீட்டர்கள் அந்த அன் டைம் ல அடிக்கடி வந்துட்டு இருந்தா அவங்க ஃபேக் ஐ டியா இருக்க வாய்ப்பு அதிகம்



8. அழகி சீரியல் ல க்ரேசி கோபால் நடிக்கறாரே, அவர் ட்விட்டர்ல இருக்கார் . இவர் பெண் குரலில் பிரமாதமாக மிமிக்ரி பண்ணுவார். அண்ணன் ஷூட்டிங்க் ஸ்பாட்ல அங்கே இருக்கும் ஃபிகரை கரெக்ட் பண்ண நம்மளை பகடைக்காயா யூஸ் பண்ணுவார் , அதாவது நமக்கு ஃபோன் போட்டு பெண் குரலில் ஏதோ ஒரு பேரை சொல்லி உங்க ஸ்கூல் மேட்டு எப்போ நம்ம அடுத்த மீட்டு? அப்டினு பிட்டைப்போடுவார், நாம பேசறதை ரெக்கார்டு பண்ணி அவங்க கிட்டே போட்டுக்காட்டி கலாய்ப்பார் . அவர் ஃபோன் நெம்பர் 90951***** இது போக  90951 ல   4 நெம்பர் இருக்கு ( நெம்பரே 4 இருக்கே? )


 இந்த மாதிரி பார்ட்டி கிட்டே நாம உஷாரா இருக்கனும், அறிமுகம் இல்லாத புது நெம்பர் ல திடீர்னு ஒரு பொண்ணு கூப்பிட்டு வழிஞ்சா  நயன் தாரா மேல சத்தியமா அது இந்த ஆள் தான் .;-) ஜாக்கிரதை  . வாரம் ஒரு டைம் அந்தாள் போடும் ட்வீட்டை ஒரு ஆர் டி போட்டு வெச்சுக்குவது நல்லது , எதுக்கு பெரிய மனுஷன் பொல்லாப்பு நமக்கு ?



9. கரூர் ஜெகன் தெரியும் . எல்லாருக்கும் ஆனந்த விகடனின் பர்மணண்ட் ட்வீட்டர் , ஆல் தோட்ட பூபதி என்னும் தோட்டா குங்குமம் பத்திரிக்கையின் ஆஸ்தான கட்டுரை  ஆசிரியர் இன்னும் இன்ன பிற பல திறமை உள்ளவர் . இவர் டைம் லைன் வந்தா தான் உண்டு தன் வேலை உண்டு தன் பி ஏ கொஞ்சம் குண்டு என  பொடுவாட்டம் ( அதாவது அமைதியா )  இருப்பார் . இவர் யார் கிட்டேயும் வம்பு வெச்சுக்க மாட்டார் .

 எப்பவாவது அறச்சீற்றத்தை காட்டினா அது சத்தியமா ஃபேக் ஐ டி தான் . இவர் யார் யார்  கிட்டே எல்லாம் ஃபைட் பண்றார்னு நோட் பண்ணிக்குங்க  . அவங்க எல்லாம் ஃபேக் ஐ டி தான்



10 . அடுத்து அண்ணன் கானாப்ரபா . இவர் சிட்னி டைம் ட்வீட்டர். நம்ம இந்திய நேரப்படி  அதிகாலை 3 மணீல இருந்து ட்வீட்டிட்டு இருப்பார் .  அண்ணன் செம விபரம் . இவர் யார் கூட எல்லாம் பேசிட்டு இருக்கார்னு நோட் பண்ணிக்குங்க . அவங்க எல்லாரும் ஒரிஜினல் ஐ டி தான்


11. ஃபேக் ஐ டிங்க பெரும்பாலும் லாங்க் லைஃப் இருக்காது . அவங்கவங்க யாரைப்பழி வாங்கனுமோ அந்த வேலைக்காக அவ்வப்போது  உருவாகின்றன அதனால புரோஃபைல் செக் பண்ணிக்குங்க . 4 வருஷம் , 2 வருஷமா அந்த அக்கவுண்ட் இருந்தா ஃபேக் ஐடியா இருக்காது . மீறி இருந்தா அவங்க டி எல் செக் பண்ணிப்பாருங்க , ட்வீட்ஸ் எல்லாம் படிச்சா தெரிஞ்சுடும்




12. பெண் ஐ டிகள் பெரும்பாலும் அவங்க ட்வீட்ல ஸ்மைலி  :) இப்படி சிக்கனமாத்தான் போடுவாங்க , ஆண்கள் தான் ;-))  ;-)) இப்படி போடுவாங்க
 அப்பறம் பெண்கள் ட்வீட்ல  எப்பவும் வெறும் ட்வீட் மட்டும் இருக்காது , ஏதாவது சிம்பல் இருக்கும் ! ? ;)   வெவ்வெவேவே , ம்க்கும் , கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்,  இப்படி ஏதாவது எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் இருக்கும்


 13 . ஆண் ட்வீட்டர்கள் வந்தமா  , ட்வீட் போட்டமா? , போனமான்னு இருப்பாங்க . பொண்ணுங்க உள்ளே வரும்போதே விஜய் மாதிரி எண்ட்ரி பில்டப் குடுப்பாங்க .1.  உள்ளே வரலாமா?  2  என்ன நடக்குது ? 3  உள்ளே  4 -------------  வந்தாச்சு   5 காலை வணக்கம் , கையை வணக்கம் , புருஷனை நல்லா வணக்கும்  இப்படி ஏதாவது 1



14. ஆண் ட்வீட்டர்கள்னா  சமுதாய பிரச்சனைகள் , சினிமா செய்திகள் பற்றி தட்ஸ் தமிழ் , தினமலர் கட் நியூஸ்  2 லைன் போட்டு # ஒரு கமென்ட் போடுவாங்க , பொண்ணுங்கன்னா   இன்னைக்கு என்ன சமைச்சாங்க ? கோலம் போட்டது  இப்படி நாட்டுக்கு முக்கியமான நிகழ்ச்சிகள் பற்றி ட்வீட்ஸ் போடுவாங்க



15. ஒரிஜினல் ஐ டிங்க பெரும்பாலும்  அவங்க சொந்த ஃபோட்டோவை டி பியா வெச்சிருப்பாங்க . தங்கள் முகத்தை வெளிக்காட்ட விருப்பமில்லா ட்வீட்டர்களா இருந்தாலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல அவங்களையும் அறியாம அவங்க ஃபோட்டோவை போட்டுடுவாங்க , நாம டக்னு அதை ஸ்டோர் பண்ணி  வெச்சுக்கனும் . உதாரணத்துக்கு  ஆனந்த விகடன் ல  வலைப்பூக்கள் அறிமுகம் ஒரு கட்டத்துல நடந்தது . அப்போ  பிளாக்கர் கம் ட்வீட்டர்கள் எல்லாம்  5 லட்சம் பிரதிகள்ல நம்ம ஃபோட்டோ வர்ற இது ஒரு வாய்ப்பு அப்டினு ஒரிஜினல் ஃபோட்டோ வெச்சு டக்னு அவங்க காரியம் முடிஞ்சதும் பழைய படி மாத்திக்கிட்டாங்க , அவங்க எல்லாம் ஒரிஜினல் தான்




 டிஸ்கி -  1 மேலே சொன்னதெல்லாம் ஒரு சமூகசேவை தான் . யார் மனமாவது புண்பட்டா மன்னிப்பு கேட்டுக்கறேன். தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு தான் அப்டினு  பஞ்ச் டயலாக் சொல்ல நான் ரமணா ரசிகன் இல்லை , தமனா ரசிகன் . மன்னிப்பு கேட்க த்தயங்க மாட்டேன் . அதுவும் இல்லாம ஈரோட்ல 5 ரூபாக்கு 10 மன்னிப்பு



டிஸ்கி 2 - அப்புறம்  மேலே நான் சொல்ல வந்தது ஃபேக் ஐ டி களைப்பற்றி , அதுல என்னையும் மீறி ஆணாதிக்கம் தென் பட்டிருந்தா அதுக்கும் ஒரு மன்னிப்பு ,இதை யாராவது நீக்கனும்னு வேண்டிக்கிட்டா  6 மணி நேரத்துல நீக்கிடுவேன் , ஏன்னா  இப்போ இருக்கும் ஆன் லைன் நிலவரப்படி ஒரு பதிவோட ஹிட் ஆயுள் 6 மணி நேரம் தான் ,  அதுக்கப்புறம் அந்தப்பதிவு இருந்தாலும் , இல்லாட்டாலும் 1 தான்  நாஞ்சில் சம்பத் மாதிரி வால்யூ இல்லாம போயிடும்


 
டிஸ்கி 3 - நாம சொல்ல வந்ததை  யாராவது படிச்சுட்டா நம்ம நோக்கம் நிறைவேறிடுது , அதுக்கப்புறம் அதை அழிச்சுட்டா ஒண்ணும் பிரச்சனை இல்லை, சில பேரு பதிவு அழிச்சுட்டா பயங்கர லாஸ் மாதிரி நினைக்கறாங்க , நாம என்ன தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதுன சரித்திரக்குறிப்புகளையா எழுதறோம்?



டிஸ்கி 4 - மேலே உள்ள கட்டுரைக்கும் த்ரிஷாவுக்கும் என்ன சம்பந்தம்?  பெண்களை நான் மதிக்கிறேன் என்பதற்கான புரூஃப் அது, ஹி ஹி 

9 comments:

premkhumar said...

கோவாலுகிட்ட பர்மிசன் வாங்கினீங்களா? அவர் நம்பர பப்ளிக் பண்றதுக்கு?

Anonymous said...

தமிழ் ட்விட்டர்ல நீங்க பி.எச் டி யே வாங்கிடுவீங்க போல, எவ்கோ மேட்டரு, நாமும் விழிப்பாக இருப்போம் ..

Unknown said...

செம யூஸ்புல்

பாசக்கார பய said...

எவ்வளவு யூஸ்புல்லான மேட்டர்கள்.. அருமை.! உங்கள் குசும்புடன் எழுதப்பட்ட வரிகள்.. சிரிப்புடன் முடிக்கிறேன்.!

விக்னேஸ்வரி சுரேஷ் said...

செம! :-) // பாருங்க சிம்பிள் ஸ்மைலி

கட்டதொர said...

கோலபோட்டியில் வந்த மெயில் ஐடி 14, அதுல 4 போலி என்பதை கண்ணில் வெளக்கெண்ணெய் ஊற்றி கண்டுபிடித்தோம். தவிற எங்கள் ரகசிய திட்டத்தை கண்டுபிடித்து உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டிய சிபியை பல்லை கடித்து கொண்டு வன்மையாக கண்டிக்கிறோம். இனி மேல் யாரும் கண்டுபிடிக்க முடியாத திட்டங்களை செயல் படுத்துவோம் என உறுதி கூறி...லஞ்சாக கொண்டு வந்திருக்கும் உப்புமாவை சாப்டபோகும், கட்டம் சரியில்லா கட்டதொர!

”தளிர் சுரேஷ்” said...

பயனுள்ள யோசனைகள் இதுக்குத்தான் நான் இப்ப ட்விட்டர் பக்கமே வர்றது இல்லே! நன்றி!

பிரின்ஸ் said...

ஆஹா.. ஈரோட்டுகாரவுக என்ன அழகா ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க. அருமை.. ;)

chinnapiyan said...

ஓ! இதுல இவ்வளவு. இருக்கா ? எது எப்படியோ . நகைச்சுவையாக இருந்தது . நானும் ரசித்தேன்