டெல்லி சம்பவம்: உதவ வராமல் சண்டை போட்ட போலீசார்'
Posted Date : 11:48
(05/01/2013)Last updated : 11:49
(05/01/2013)
புதுடெல்லி:
டெல்லியில்
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சாலையில் வீசப்பட்டு
உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த போலீசார் உதவ வராமல் அந்த
இடம் எந்த காவல் நிலைய எல்லைக்குள் உட்பட்டது என்பது குறித்து
தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக மாணவியின் நண்பர்
தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி இரவு ஓடும் பேருந்தில் மாணவியை இரும்பு கம்பியால் தாக்கி பலாத்காரம் செய்த கும்பல்,அவரையும், அவருடன் வந்த ஆண் நண்பரையும் பலமாக தாக்கி சாலையில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்துவிட்ட மாணவி உயிரிழந்துவிட்ட நிலையில்,அவருடன் வந்த ஆண் நண்பர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று

இந்நிலையில் சாலையில் ஆடைகளின்றி காயங்களுடன் தானும், மாணவியும் உயிருக்கு
போராடிக் கொண்டிருந்தபோது தங்களுக்கு யாருமே உதவவில்லை
என்றும்,போலீசாரும் உதவ வராமல் காவல் நிலைய எல்லை குறித்து தங்களுக்குள்
சண்டையிட்டுக்கொண்டிருந்ததாகவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு
அளித்துள்ள பேட்டியில் அந்த ஆண் நண்பர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,"அவ்வழியாக காரிலும்,பைக்கிலும், ஆட்டோ ரிக்ஷாவிலும் சென்றவர்களை தடுத்து

நிறுத்தி உதவி கேட்க முயற்சித்தேன்.ஆனால் தங்களது வாகனங்களில் மெதுவாக
அருகில் வந்து வேடிக்கை பார்த்து விட்டு சென்றனரே தவிர,யாருமே
உதவவில்லை.இதிலேயே 25 நிமிடங்கள் கழிந்துவிட்டது.
பின்னர் அந்த வழியாக சென்ற யாரோ ஒருவர் போலீசுக்கு இது குறித்து தகவல் அளித்தபின்னர்,45 நிமிடங்கள் கழித்து 3 வேன்களில் ரோந்து போலீசார் வந்தனர்.
நாங்கள் ஆடையிலாமல் கிடந்த நிலையில்,போலீசார் உட்பட யாரும் ஒரு சிறிய துணியை கூட கொடுக்கவில்லை.ஆம்புலன்ஸையும் அழைக்கவில்லை.அவர்கள் வெறுமனே எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
எங்களுக்கு உதவ முன்வராமல் இந்த வழக்கு எந்த காவல்நிலைய எல்லைக்குள் வரும் என தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்.இதிலேயே 45 நிமிடங்கள் விரயமாகிவிட்டது.
பின்னர் பலமுறை நான் கேட்டுக்கொண்ட பின்னர் யாரோ ஒருவர் ஒரு போர்வையை கிழித்துக்கொடுத்தார்.அதனைக்கொண்டு மாணவியின் உடலை நான் மூடினேன்.
பின்னர் நானே எனது தோழியை போலீஸ் வேனில் தூக்கி வைத்தேன். காவல்துறையினர் அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நீண்டதூரம் பயணித்து சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்" என்று தெரிவித்துள்ளார்.

நன்றி - விகடன் நியூஸ்
1 comments:
கொடுமையிலும் கொடுமை
Post a Comment