Thursday, January 31, 2013

தன்னிகரற்ற தானைத்தலைவியின் தன்னிலை விளக்கம்

வன்முறை வெடிக்கலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையால்தான் விஸ்வரூபம் படத்திற்கு தடை: ஜெயலலிதா 
 
 
 
Posted Date : 12:32 (31/01/2013)Last updated : 13:47 (31/01/2013)
சென்னை: வன்முறை 
வெடிக்கலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையால்தான் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.



 விஸ்வரூபம் பிரச்னை தொடர்பாக  செய்தியாளர்கள் கூட்டத்தில் தற்போது விளக்கம் அளித்து பேசிய  ஜெயலலிதா, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பல்வேறு விஸ்வரூபம் தொட்பாக பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுக்கள், பல்வேறு விவாதங்கள், நடந்துகொண்டே இருக்கிறது. முறையாக புரிந்துகொள்ளாமல், நிலைமையை புரிந்துகொள்ளாமல். அதனால் இதுபற்றி விளக்க வேண்டி விரும்புகிறேன்

படம் தடை செய்யப்படக்கூடாது, திரையரங்குக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். உண்மையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது பற்றி புரிந்துகொள்வதில்லை. முதல் கடமை முதலமைச்சராக மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றி மக்கள் மத்தியில் அமைதி நிலைநாட்டுவது, தினசரி வாழ்க்கையை கடைபிடிக்க நடவடிக்கை எடுப்பது முக்கிய கடமை.

எப்படி சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுகிறது. காவல் துறையைக் கொண்டு இதை செய்கிறோம். போராட்டத்தை பொருட்படுத்தாமல், ஒருவேளை இந்த படத்தை நாங்கள் அனுமதித்தோம் என்றால், இந்த படம் 524 திரையரங்களில் வெளியிடுவதாக இருந்தது. ஏரளாமான முஸ்லிம் அமைப்புகள் 24 அமைப்புகள் மற்றும் இதுதவிர சில அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர். மாநில உள்துறை அமைச்சரை சந்தித்து படத்தை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர். இவர்கள் கோரிக்கையை புறக்கணித்துவிட்டு, பல்வேறு பேராட்டங்களை அறிவித்துள்ளன இந்த அமைப்புகள்.

இத்தனை திரையரங்குக்கு பாதுகாப்பு அளிப்பது சாத்தியமா? 1 லட்சத்து 30 ஆயிரம் 780 போலீசார் உள்ளனர். 21 ஆயிரம் காலியிடம் உள்ளது. 91,807 போலீசார்தான் உள்ளனர். இதுதவிர பல்வேறு சிறப்புப் பிரிவுகள் உள்ளன. இந்த சிறப்பு பிரிவுகளைக் கழித்தால் 87, 226 போலீசார்தான் உள்ளனர். 7 கோடி 8 லட்சம் பேருக்கு இவ்வளவு போலீசார் உள்ளனர்- சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும்.  திரையரங்க பாதுகாப்புக்கு 31440 பேர் பாதுகாப்புக்கு தேவை

படம் வெளியானமல் பாதுகாப்புக்கு மட்டும் 50, 440 போலீசார் தேவைப்படுவார்கள். ஆனால் வெறும் 9 ஆயிரம் பேர்தான் உள்ளனர். எப்படி ஒரு மாநில அரசால் இப்படி பாதுகாப்பு அளிக்க முடியும். எங்களிடம் போதுமான காவல்துறை இல்லாதநிலையில் எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும்? சட்டம் ஒழுங்கை காப்பது என்றால் என்ன?

உளவுத் துறை பல இடங்களில் வன்முறை நடக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கிறது? அரசு என்ன செய்யும்? அந்த வன்முறை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்.


விஸ்வரூபம் படம் தமிழகத்தில் 524 திரையரங்குகளில் திரையிடப்பட இருந்தது. இப்படத்திற்கு 24 இஸ்லாமிய கூட்டமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், படம் வெளியிடப்பட்டால், வன்முறை வெடிக்கலாம் என்றும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம் என உளவுத் துறை தகவல் அனுப்பி இருந்தது.

இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் படத்தை திரையிட அனுமதித்தால் அப்படம் திரையிடப்படும் 524 திரையரங்குகளிலும் 56,446 காவலர்கள் தேவை.அந்த அளவுக்கு போதுமான காவலர்கள் படை இல்லை.



கமல்ஹாசன் மீது  தனிப்பட்ட விரோதம் இல்லை.


சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அரசுக்கு உண்டு. இதில் அரசியல் பழிவாங்கும் எண்ணம் எதுவும் இல்லை. கமல்ஹாசன் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை.


இப்படம வெளியாகமல் போனால் தனது வீடு, சொத்தை இழக்க வேண்டியது வரும் என்று கமலஹாசன் கூறியுள்ளார்.கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பிறகு என்னைப் பார்க்க கமல் நேரம் கேட்டிருந்தார். வழக்கு தொடர்ந்தபிறகு பார்ப்பதில் என்ன இருக்கிறது...



கமலஹாசனுக்கு 58 வயதாகிறது..அவர் சில கணக்குகளை போட்டு,  100 கோடி ரூபாய் செலவில் தனது ரிஸ்க்கில் படம் எடுத்து, இழப்பை சந்தித்தால் அதற்கு அரசாங்கம் எப்படி பொறுப்பேற்க முடியும்?


மேலும் விஸ்வரூபம் படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெயா தொலைக்காட்சிக்கு விற்காததாலும்,.ப.சிதம்பரத்தை குறிப்பிட்டு வேட்டி கட்டிய தமிழன் பிரதமர் ஆக வேண்டும் என்றும் கமலஹான கூறியதாலும்தான் அப்படத்திற்கு நான் தடை விதித்ததாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களிலும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. திமுக தலைவர் கருணாநிதியும் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார்.



ஜெயா தொலைக்காட்சிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும், இல்லை. அது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு ஆதரவாக செயலபடுகிறது அவ்வளவுதான்.அதேப்போன்று அரசியலில் நான் பல ஆண்டு காலம் உள்ளேன். அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்களே தவிர, கமலஹாசன் சொல்லி அல்ல என்பது எனக்கு தெரியும். என்று அவர் மேலும் கூறினார்.


திமுக தலைவர் கருணாநிதி என்ன பிரச்னை எழுந்தாலும் அதில் அரசியல் செய்யத்தான் பார்ப்பார்.


சுமூக தீர்வு:


சில பகுதிகளை அகற்றுவதாக கமல் உறுதி அளித்துள்ளதாக கூறிய்ளள்ளார் அதை முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக்கௌர்வதாக தெரிவித்துள்ளர். சுமூக தீர்வு ஏற்பட முஸ்லிம் தலைவர்கள், கமல் அமர்ந்து முடிவெத்தால் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் காவல்துறை டிஜிபி ராமானுஜம்,அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இன்று காலை அவசர ஆலோசனை நடத்தினார்.

 விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது சரிதான்: சோ 

சென்னை: விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது சரிதான் என்று அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், நடிகருமான சோ கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு சோ அளித்த பேட்டியில்," தமிழக அரசு ‘விஸ்வரூபம்’ படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும். ஒருதிரைப்படத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை பொறுத்துக்கொள்ள முடியாது.

பொதுமக்கள் நலன் உள்ள திசையிலேயே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்" என்று கூறியுள்ளார்.



'விஸ்வரூபம்' தடைக்கு அரசியல் காரணமில்லை: சந்திரஹாசன்  

'விஸ்வரூபம்' தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணமில்லை என்று நடிகர்  கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் கூறியுள்ளார்.

ராஜ்கமல் நிறுவனத்தின் பங்குதாரரான சந்திரஹாசன் இது தொடர்பாக இன்று  செய்தியாளர்களிடம் பேசுகையில், 'விஸ்வரூபம்' படம் வெளியான எல்லா இடங்களிலும்  நன்றாக ஓடுகிறது. ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது என்றார்


விஸ்வரூபம்' தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணமில்லை என்று நடிகர்  கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் கூறியுள்ளார்.

ராஜ்கமல் நிறுவனத்தின் பங்குதாரரான சந்திரஹாசன் இது தொடர்பாக இன்று  செய்தியாளர்களிடம் பேசுகையில், 'விஸ்வரூபம்' படம் வெளியான எல்லா இடங்களிலும்  நன்றாக ஓடுகிறது. ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது என்றார்.



தமிழ்நாட்டில் விஸ்வரூபம் தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணம் இருப்பதாக  கூறுகிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “விஸ்வரூபம் படம் தடை  செய்யப்பட்டதற்கு அரசியல் காரணம் அல்ல. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே தமிழக  அரசு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக கூறுகிறார்கள்” என்று பதிலளித்தார் அவர்.



நன்றி - விகடன்

4 comments:

Unknown said...

சரியான விளக்கம்

Unknown said...

முதல்வரின் விளக்கம் பலரின் குழப்பங்களுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது.

தமிழ்மகன் said...

ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் - இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

R. Jagannathan said...

இதே வாதத்தை வக்கீல் கோர்ட்டில் சொல்லியிருந்தால் முடிந்திருக்கும். ஏன் சொல்லவில்லை? கமல் கோர்ட்டுக்குப் போகுமுன் ஏன் அரசை நாடவில்லை என்றும் ஜெ கேட்டிருக்கிறார். அத்தனை கலெக்டர்கள் ஒரே மாதிரியான தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு முதல்வர் உத்தரவு (வாய் மொழியாகக் கூட) இல்லாமல் இருக்குமா? பிறகு அவர் என்ன சொல்லியிருப்பார் - இப்போது சொன்னதை தவிர? ஏன் நடிகர் சங்கத்தலைவர், ஜெ கூட்டனியில் இருக்கும் சரத்குமார் முதல்வருக்குக் கோரிக்கை வைத்தாரே, ஜெ என்ன பதில் அளித்தார்? இது வரை எல்லோர் அனுபவமும், ஜெ யை யாராலும் எளிதாகப் பார்க்கமுடியாது என்பதுதான். திரு ஞாநி அவர்கள் தன் 'ஓ ' பக்கங்களில் இதை எழுதியிருக்கிறார். விவகாரம் முற்றியதால் இன்று அம்மா வாய்திறந்திருக்கிறார். - ஜெ .