விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை!
Posted Date : 21:37 (23/01/2013)Last updated : 21:43 (23/01/2013)
சென்னை: கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து நடித்துள்ள 'விஸ்வரூபம்' படத்தை வெளியிட, தமிழக அரசு 15 நாட்களுக்குத் தடை விதித்துள்ளது. இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதனால், வருகிற 25-ம் தேதி வெளிவருவதாக இருந்த விஸ்வரூபம் ரிலீஸ் ஆவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த திங்கட்க்கிழமை விஸ்வரூபம் படத்தை இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு திரையிட்டு காட்டினார் கமல்.
அதையடுத்து, அந்தப் படத்தில் தங்கள் மதத்தினரை மிக மோசமாக சித்தரித்தரித்திருப்பதாக இஸ்லாமிய அமைப்பினர் குற்றம்சாட்டினர். இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தி காட்சிகளை வைத்திருப்பதால் விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் என அவர்கள் கோரினர்.
இதுதொடர்பாக, இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் அளித்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை - கோட்டையில் உள்துறை செயலாளர் ராஜகோபாலை 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சந்தித்தது. அப்போது முஸ்லிம்களை காயப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படத்தை தடை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.
இந்த நிலையில், விஸ்வரூபம் படத்தை வெளியிட 15 நாட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, டி.டி.எச். ரிலீஸ் பிரச்னை காரணமாக, விஸ்வரூபம் வெளியிடுவது தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.
இதனால், வருகிற 25-ம் தேதி வெளிவருவதாக இருந்த விஸ்வரூபம் ரிலீஸ் ஆவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த திங்கட்க்கிழமை விஸ்வரூபம் படத்தை இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு திரையிட்டு காட்டினார் கமல்.
அதையடுத்து, அந்தப் படத்தில் தங்கள் மதத்தினரை மிக மோசமாக சித்தரித்தரித்திருப்பதாக இஸ்லாமிய அமைப்பினர் குற்றம்சாட்டினர். இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தி காட்சிகளை வைத்திருப்பதால் விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் என அவர்கள் கோரினர்.
இதுதொடர்பாக, இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் அளித்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை - கோட்டையில் உள்துறை செயலாளர் ராஜகோபாலை 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சந்தித்தது. அப்போது முஸ்லிம்களை காயப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படத்தை தடை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.
இந்த நிலையில், விஸ்வரூபம் படத்தை வெளியிட 15 நாட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, டி.டி.எச். ரிலீஸ் பிரச்னை காரணமாக, விஸ்வரூபம் வெளியிடுவது தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.
விஷ்வரூபம் தடையா?- தமிழக அரசு க்கு கமல் பதில் அறிக்கை
விஸ்வரூபம் படத்தை திரையிட எழுந்த எதிர்ப்புக்களை எல்லாம் கடந்து படம் வெளிவர இறுக்கும் நேரத்தில் தமிழக அரசு இந்தப்படத்திற்கு இஸ்லாமிய மக்களின் எதிர்ப்பைக் காரணம் காட்டி தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கமல் இது சம்பந்தமாக விடுத்துள்ள அறிக்கையின் மொழிபெயர்ப்பு..
எனக்கும், எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால்
மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில், எனது படம் எந்த வகையில்,
இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை. அச்சமூகத்தினருக்கு ஆதரவான
எனது அறிக்கைகள், பேச்சுக்கள் அனுதாபியாக என்னை முத்திரை குத்தியுள்ளன.
அதேசமயம், ஒரு நடிகனாக, எது மனிதாபிமானமோ அதற்காக நான் பல படி மேலே போய்
குரல் கொடுத்துள்ளேன்.
மேலும் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடும் ஹார்மோனி இந்தியா
அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறேன். ஒரு மதத்தின் உணர்வுகளை, மதத்தை நான்
புண்படுத்தி விட்டதாக என் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்கள்
என்னைக் காயப்படுத்தியுள்ளதோடு, அதை நான் ஒரு அவமரியாதையாகவும்
கருதுகிறேன்.
சில சிறிய குழுக்கள் தங்களது அரசியல் லாபத்திற்காக இரக்கமே இல்லாமல்
என்னை ஒரு வாகனமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது எனது கருத்து. ஒரு
பிரபலத்தை தொடர்ந்து குறி வைத்து இப்படி காயப்படுத்துவது என்பது தொடர்ந்து
நடந்து கொண்டு தான் உள்ளது. எந்த ஒரு நடுநிலையான முஸ்லீமும், தேசபக்தி உள்ள
முஸ்லீமும் இந்தப் படத்தால் நிச்சயம் பெருமைப்படச் செய்வார்.
அதற்காகவே இந்தப் படமும் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது நான்
சட்டத்தையும், எதார்த்தத்தையும் நம்பி நிற்கப் போகிறேன். இதுபோன்ற கலாச்சார
தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் இணையதளம்
மூலம் எனக்கு ஆதரவாக எழுந்தோருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று
கூறியுள்ளார் கமல்ஹாசன்.
இந்தப் படத்தில் தவறுகள் இருந்திருந்தால் தணிக்கைக் குழுவுக்கு படம்
போன பொது அங்கு வைத்தே தடை செய்திருக்கலாமே ஏன் இறுதி வரை பொறுத்திருந்து
தமிழ் நாட்டு அரசும் இஸ்லாமியக்குழுக்களும் இந்த தடையைக் கொண்டு வந்துள்ளன
என்பதே தற்போதைய சூடான கேள்வி.
நன்றி - http://www.myoor.com/kamal-release-his-thoughts-about-viswaroopam-banning/
மக்கள் கருத்து
1. இந்த படத்தை மிக பெரிய அளவில் வெற்றி பெற வைத்து எதிர்ப்பவர்களுக்கும், தடை
செய்தவர்களுக்கும் உண்மையை உணர்த்த அனைத்து மக்களும், ரசிகர்களும் துணை
புரிய வேண்டும்.
இதன் மூலம் கமலுக்கு நமது பக்க பலத்தை காட்ட வேண்டும், மற்றவர்கள் போல இவர் ஷாப்பிங் சென்டரையோ, சொத்துக்களையோ வாங்கி குவிக்கவில்லை. சம்பாரித்த அனைத்தையும் சினிமாவிற்கே செலவழித்து தமிழ் சினிமா வளர உதவி செய்கின்றார், இவரை தமிழன் கை விட்டால் புரட்சி கவிஞர் பாராதியாரை வாழும் பொழுது கை விட்ட தமிழகம் போல ஆகி விடும், ஆம் இவரிடம் இப்பொழுது எந்த சொத்துக்களும் இல்லை ஆழ்வார் பேட்டை வீடும் கடனில்
இதன் மூலம் கமலுக்கு நமது பக்க பலத்தை காட்ட வேண்டும், மற்றவர்கள் போல இவர் ஷாப்பிங் சென்டரையோ, சொத்துக்களையோ வாங்கி குவிக்கவில்லை. சம்பாரித்த அனைத்தையும் சினிமாவிற்கே செலவழித்து தமிழ் சினிமா வளர உதவி செய்கின்றார், இவரை தமிழன் கை விட்டால் புரட்சி கவிஞர் பாராதியாரை வாழும் பொழுது கை விட்ட தமிழகம் போல ஆகி விடும், ஆம் இவரிடம் இப்பொழுது எந்த சொத்துக்களும் இல்லை ஆழ்வார் பேட்டை வீடும் கடனில்
2. என்னமோ முஸ்லிம்களில் தீவிரவாதிகளே இல்லாதது போலவும், அனைத்து உலக
முஸ்லிம்களுக்கு இவர்களே பாதுகாவலர்கள் போலவும்
நடந்துகொள்கிறார்கள்....தாலிபான் எல்லாம்.... மும்பை குன்டு வச்சு இப்ப
பாகிஸ்தானுல இருக்கிர ...??!!! எல்லாம் எப்ப ஹின்டுவா மாரினாங்க...??????
3. இப்படி சினிமாவை சினிமாவாக பார்க்காமல், மத ரீதியாக எல்லோரும் பார்த்தால்
என்னாவது? முஸ்லிம் கோபபடாமல் ஒரு படமாக பாருங்கள். இல்லாவிட்டால் இந்த
படத்தை முஸ்லிம்கள் யாரும் பார்க்காதீர்கள். உங்களுக்காக நாங்களும் ஏன்
பார்க்காம இருக்கணும்?..........
4. என்னமோ முஸ்லிம்களில் தீவிரவாதிகளே இல்லாதது போலவும், அனைத்து உலக
முஸ்லிம்களுக்கு இவர்களே பாதுகாவலர்கள் போலவும் நடந்துகொள்கிறார்கள்.
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக வைத்து உலகத்தில் உள்ள மொழிகளில் எல்லாம் படம்
வருகிறது, அதை தடுக்க முடியுமா? அமிர் போன்ற இயக்குனர்கள், சீமான் போன்ற
இயக்குனர்கள், இந்துக்களை மட்டமாக சித்தரித்து படம் மட்டும் எடுக்கலாம்.
ஆர்யா,கான் நடிகர்கள் அவர்களுடைய படங்களில் இந்துக்களை ஏதாவது ஒரு வகையில்
புன்படுத்தி படமே எடுப்பதில்லையா? அரசு தடை செய்ததுக்கு காரணம் அவர்களுடைய
ஓட்டு. முஸ்லிம்கள் மாதிரி இந்துக்களும் ஒன்றாக ஒரே கட்சிக்கு ஒட்டு போட்டா
இந்த அரசியல் கட்சிகள் என்ன செய்ய முடியும். நாடு உருப்படனும்னா
எல்லோருக்கும் ஒரே சட்டம் இருக்கனும். இந்துக்களின் ஒற்றுமையின்மையை
இவர்கள் சிருபான்மை இனத்தவர்கள் என்ற பெயரில் நன்கு
பயன்படுத்திக்கொள்கிறார்கள்
5. இப்படித்தான் டான் பிரௌன் எழுதிய டாவின்சி கோட் படம் வெளியிட தமிழகம் தடை
விதித்தது. அந்த தடையை உயர்நீதிமன்றம் நீக்கியது. இது வெறும் கண்துடைப்பு
மட்டுமே. உயர்நீதிமன்றம் இந்த தடையையும் நீக்கும்.
6. விஸ்வருபம் படத்துக்கு காசு கொடுக்காம விளம்பரம் கிடைத்துவிட்டது
.துப்பாக்கி படம் வெற்றி பெற்றதற்கு தாங்களும் ஒரு காரணம்.நீங்கள் என்ன
தான் கூவினாலும் அங்கே ஒன்றும் நடக்கபோவதில்லை.சினிமாவையும் நிஜத்தையும்
பிரித்து பார்க்க தெரியாத நீங்கெல்லாம்.....
7. கமல் படத்துக்கு செலவில்லாமல் விளம்பரம் கிடைத்தது. கமல் தன்னை நடிப்புக்கு அர்ப்பணித்தவர். அதனால் இந்த விளம்பரத்தில் குட தவறில்லை
முஸ்லிம் நண்பர்களே .... உங்கள திவிரவாதியா காட்டின தப்பு. ஆனா உங்க ஆளுங்க பண்ணுற திவிரவாதத்தை மட்டும் எதிர்க்க மாட்டீங்க. நல்ல இருக்குபா நியாயம். கமல் சொல்ற மாதிரி முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதின்னு சொல்லலை, தீவிரவாதி முஸ்லிம்மா இல்லாம இருந்தா நல்ல இருக்கும் தான் சொல்றேன்....
நன்றி - விகடன்
முஸ்லிம் நண்பர்களே .... உங்கள திவிரவாதியா காட்டின தப்பு. ஆனா உங்க ஆளுங்க பண்ணுற திவிரவாதத்தை மட்டும் எதிர்க்க மாட்டீங்க. நல்ல இருக்குபா நியாயம். கமல் சொல்ற மாதிரி முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதின்னு சொல்லலை, தீவிரவாதி முஸ்லிம்மா இல்லாம இருந்தா நல்ல இருக்கும் தான் சொல்றேன்....
நன்றி - விகடன்
இது சம்பந்தமா நான் போட்ட ட்வீட்ஸ்
1. குற்றப்பத்திரிக்கை படத்தை ரிலீஸ் பண்ண ஆர் கே செல்வமணி படாத பாடுபட்டாரு.அடுத்து கமலின் விஸ்வரூபம் # சோதனை மேல் சோதனை
2. எந்த அளவு படம் தள்ளிப்போகுதோ அந்த அளவு எதிர்பார்ப்பு எகிறும்.படத்துக்கு ஓப்பனிங் பிரம்மாண்டமா இருக்கும் # சியர் அப் கமல்
3. இந்த அளவு தடை மேல் தடங்கல் வர அப்படி என்னதான் படத்தில் இருக்கும் என எண்ண வைத்ததே கமலின் வெற்றி!
4. சகலகலாவல்லவன் மாதிரி மசலாப்படத்தை எடுத்து காசு பார்க்க நினைக்காமல்
தமிழனின் ரசனையை முன்னேற்ற உழைத்த கமலுக்கு தமிழகம் தரும் பரிசு தடை
5. சார்.கமலுக்கு நீங்க ஏன் சப்போர்ட் பண்ணலை ?
ரஜினி - என் படத்துக்கு ஏதாவது பிரச்சனை வந்தா மட்டும்தான் வாய்ஸ் தருவேன்
6. தமிழ் சினிமாவில் மிகப்பெரும் போராட்டத்தை ,எதிர்ப்பை சம்பாதித்த படங்கள் 1
உலகம் சுற்றும் வாலிபன் 2 குற்றப்பத்திரிக்கை 3 சண்டியர் 4 ,விஸ்வரூபம்
7. சிலர் டேம் 999 படத்தடையை உதாரணம் காட்டுகிறார்கள்.அது முற்றிலும் வேறு மாதிரியான பிரச்சனை
8. இந்தப்படத்துல முஸ்லீம் கேரக்டரே கிடையாது.எதுக்கு தடை ? ஹீரோயின் ஒரு சீன் ல "எனக்கு பாய் பிரண்ட்ஸ் நிறைய பேர் "னு சொல்றா
9. உங்க படத்துல வில்லன் கேரக்டர் வேற்றுக்கிரகவாசின்னு காட்டின சாமார்த்தியம்
பிரமாதம்.ஆனா அவர் என்ன மதம்? ஜாதி?னு தெளிவாக்குறிப்பிட்டாதான்் ரிலீஸ் பண்ண விடுவோம்
10. முழுக்க முழுக்க இந்துக்களை மட்டுமே காட்டி இருக்கீங்க.சமத்துவ சமுதாயம்
உருவாக ஒரு படத்துல எல்லா மத ,சாதிப்பிரிவுகளும் சரி சமமா வரனும்
11. ஹீரோயின் ஜிலேபி ஜீரா சாப்பிடும் சீனை ஏன் கட் பண்றீங்க? அது நா"ஜிரா" முஸ்லீம் பேரை அவமானப்படுத்துவது போல் இருக்கே?
12. சாதிக்க்கப்பிறந்தவன் டைட்டில் ஏன் தடை பண்ணிட்டாங்க ?
சாதிக் ஒரு முஸ்லீம் பேராச்சே?
13. RT
14. RT @Kaattu_Paiyaa: உங்களுக்கு சண்டை கமல் கூட தான்,உங்க சண்டையில ஸ்ருதி மேல ஒரு சின்ன கீறல் கூட விழுந்தாலும் நான் மனுசனா இருக்க மாட்டேன்.
14 வது ட்வீட் மட்டும்
14 வது ட்வீட் மட்டும்
8 comments:
We should support Kamal, You are correct.
ஸலாம் சகோ... கமல்ஹாசன் அவர்களின் அறிக்கையையும், மக்களின் கருத்தையும் அறியத் தந்ததற்கு நன்றிகள்...
அத்துடன் முஸ்லிம்களின் மனநிலை என்ன என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்...
http://sunmarkam.blogspot.com/2013/01/blog-post_24.html
அன்புடன்
ரஜின்
கமல் என்னும் கலைஞன் மதமென்னும் சுனாமிக்குள் சிக்கித் தவிக்கிறார்... நடப்பது நல்லதாகவே இருக்கட்டும்.
ஆம் சே.குமார்...சரியாக சொன்னீர்கள்..கமல் தற்போது இஸ்லாமியர்களை குறிவைத்தே தாக்குதல் நடத்துகிறார்..அவராகவே விளங்கி திருந்தினால் நடப்பது நல்லதாகவே அமையும்..
நான் ஒரு முஸ்லிம். இந்த தளத்தின் ஒரு ரசிகன்.ஆயினும் மக்கள் கருத்து பகுதியில் 2,3,4 மற்றும் 7 ஆகிய கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். இது உண்மையிலே மக்கள் கருத்துதானா??.. ”சினிமாவையும் நிஜத்தையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத நீங்களெல்லாம்..??” என்று நீங்கள் என்ன சொல்ல வரீங்க?? சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா வில ஒரே ஒரு பாட்டுல 10 வினாடிகள் வருகிற ஒரு காட்சியில் இந்து சமயத்தை புண்படுத்துபோல் உள்ளது என இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி படத்திற்கு தடைவிதிக்க கோரியதை தாங்கள் அறியவில்லை போலும்..
அதென்ன முஸ்லிம் இனத்தில் தீவிரவாதிகளே இல்லையா என்று ஒரு கருத்து?. ஏன் வேறு மதங்களில் தீவிரவாதிகளே இல்லையா? ஏளனம் செய்வது போல் உள்ளது இது. ஏன் கமலுக்குத் தைரியம் இருந்தால் இந்துக்களை தீவிரவாதிகள் போல் காட்டி படம் எடுத்து வெளியிட்டிருக்க வேண்டியதுதானே? அப்படி ஒரு படம் எடுக்க முடியுமா? எடுத்தாலும் திரையிடத்தான் முடியுமா? சிறுபான்மை இனத்தை சீண்டி சீண்டியே படம் எடுக்க நினைப்பார் போல.. தயவு செய்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.. என் கருத்தையே பதிவு செய்கிறேன். எந்த மதத்தையும் இழிவாக சித்தரிக்காமல், யார் மனதையும் புண்படுத்தாமல் படம் எடுப்பதே ஒரு நல்ல கலைஞனுக்கு அடையாளம்.. கமலஹாசன் தன் அடையாளத்தினை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு வருகிறார் என்பதே நிஜம்..
சினிமாவை சினிமாவாக பார்ப்போம்னு சொல்றாங்க, அப்புறம் ஏன் முஸ்லிம்களை தீவிரவாதிகளா சித்தரிக்கனும்..... சினிமாதானே, உண்மையில்லையே ஒரு கற்பனைக்காக என்று இந்துக்களை தீவிரவாதிகளா சித்தரித்து ஒருதடவை எடுக்கலாமே? (உண்மையில் இந்து தீவிரவாதிகளும் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்) முதலில் சினிமாவை சினிமாவாக பார்க்கும் சூழல் இங்கு உள்ளதா? இன்னும் முதல்வர்களை தமிழ்சினிமாவில் இருந்தே தேர்ந்தெடுக்கும் மனமுதிர்ச்சியில்தானே தமிழன் இருக்கிறான்?
முஸ்லிகள் விவாகாரம் வந்தவுடன் மட்டும் பல நடுசென்டர்கள், கருத்து சுதந்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆடுவதை பார்க்கும் போது அச்சமாகவே இருக்கிறது.
அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் என்று போர்னோகிராபிகள் கூடத்தான் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டு ஓடுகின்றன. அது போல் இங்கும் கருத்து சுதந்திரம் செய்யலாமே? பரிந்துரைப்பீர்களா? மாட்டீர்கள் ஏன்? ஒரே ஒரு நிமிடம் சிந்தித்தால் உங்களுக்கு எல்லாமே புரியும். ஆனால் மாட்டிக் கொண்டது முஸ்லிம்கள், அதனால் மௌனம் சாதிப்பீர்கள்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்து இயக்கங்கள் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்ட செய்திகள் வருகின்றன. உள்துறை அமைச்சர் இதை சொன்னதற்கே பரிவாரங்கள் சாமியாடுகின்றன. இந்து தீவிரவாதத்தை வைத்து படம் எடுக்க இதே கமல் முன்வருவாரா? படம் எடுப்பது இருக்கட்டும், அதைப்பற்றி பேசித்தான் பார்க்கட்டுமே, அப்புறம் தெரியும் உங்கள் கருத்து சுதந்திரத்தின் லட்சணம்.
குஜராத் கலவர வழக்குகளின் நிலையை அறிவீர்கள். அதே நேரத்தில் கோத்ரா வழக்குகள் எவ்வளவு வேகமாக நடத்தி முடிக்கப்பட்டன என்றும் அறிவீர்கள், மும்பை கலவரம் குண்டுவெடிப்பு, கோவை கலவரம், குண்டுவெடிப்பு எல்லாம் இதுபோலவே கையாளப்பட்டன. குஜராத், மும்பை, கோவை என்று நீதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் திரைத்துரை, மீடியாக்கள், பத்திரிக்கைகள் அனைத்தும், இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே முஸ்லிம்களை தவறான கண்ணோட்டத்திலேயே சித்தரித்து வருகின்றன. இதே கமலின் உன்னைப்போல் ஒருவன் முஸ்லிம்களை எப்படியெல்லாம் காயப்படுத்தும் விதமாக இருந்தது என்பதையும் பெரும்பாலோனோர் அறிவோர்கள். அதன் தொடர்ச்சியான விளைவே இந்த விஸ்வரூப எதிர்ப்பும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். சற்று நேரம் அவர்கள் பக்கம் இருந்து புரிந்து கொள்ள முயல்வோம். காயப்பட்டுக்கிடக்கும் ஒரு சமூகத்தை இப்படி அன்னியப்படுத்த வேண்டாம். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வக்கிரங்களை ஆதரிக்க வேண்டாம்.
சமூகதளங்களில் ரஜினையையோ, விஜயையோ விமர்சித்துப்பாருங்கள். எவ்வளவு தரக்குறைவான தாக்குதல்கள் வருகின்றன என்று பார்க்கலாம். இப்படிப்பட்ட முதிர்ச்சியான சமூகத்தை வைத்துகொண்டு விஷப்பரிட்சைகள் எதற்கு? ஏன் இந்த விஷ்வரூபம் தடை செய்யப்பட்டதற்கே கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் எத்தனை பேர் விஷம் கக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கின்றீர்கள்தானே? சர்ச்சையான விஷயங்களை ஆரோக்கியமாக விவாதிக்கும் அளவுக்கு மனமுதிர்ச்சியான சமூகமாக நாம் மாறும் வரையில் இது போன்ற தடைகள் அவசியமே.
சாதி ,சமயம்,மதம் என்ற போர்வையில் நாட்டை அழித்துக் கொண்டு இருக்கும் மதவாதிகளை வெளிச்சம்போட்டு காட்டுவதில் தவறில்லை ,நாம் அனைவரும் சகோதரர்கள் எனற உணர்வில் இருந்தாலும் ,முஸ்லிம் எனற மதவாதிகளும் இந்துத்துவா என்ற மதவாதிகளும் மத வெறிபிடித்தவர்கள என்பது உலகமே அறியும் .அதே நேரத்தில் இன்று உலகத்தில் தீவிரவாதி களும்,கடத்தல்காரர்களும் ,நக்சல் பார்ட்டிகளும்,எந்த மதத்தில் அதிகம் உள்ளார்கள் என்று பார்ப்போமானால் முஸ்லிம்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ,இதை நடிகர் கமலதாசன் துணிச்சலுடன் படம் எடுத்து காட்டுவதில் தவறில்லை ,விஸ்வருபம் படத்தை பார்த்தாவது மக்கள் திருந்தினால் நல்லதுதான் .தங்களுடைய தவறை காட்டிவிட்டால் தாங்கள் குற்றவாளிகள் என்பது மக்களுக்கு தெரிந்துவிடும் என்ற பயத்தில் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு உளார்கள்.உலக குற்றவாளிகளில் முதல் இடத்தில் இருப்பவர்கள் முஸ்லிம் மதத்தை சார்ந்தவர்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.அவர்கள் தவறு செய்யாமல் ,மனிதனாக வாழ பழகிக் கொண்டால் நாடே நலம் பெரும் .எல்லோரும் ஓர்குலம் எல்லோருக்கும் ஒரே இறைவன் என்பதை அறியாத இந்த மதவாதிகள் குருடன் யானையைக் கண்ட காட்சிபோல் அலைந்து அழிந்து கொண்டு உள்ளார்கள் .இவர்கள் எல்லாம் எப்போது திருந்துவார்கள் இவர்களை நினைத்தால் பரிதாபமாகவும் வேதனையாகவும் உள்ளது.மனம் திருந்துங்கள் மனிதனாக வாழுங்கள்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் நடத்துவது சரியான முறை அல்ல !சட்டம் ஒழுங்கை காப்பாற்ற படத்தை திரையிடப்பட நிறுத்திவிட்டால் சரியாகிவிடுமா ?சென்சார் போர்டும் ,தணிக்கை குழுவும் முட்டாள்களா ?என்ற கேளிவிக்கு என்ன பதில் சொல்லப்போகிறது தமிழக அரசு.படத்திற்கும் தியோட்டர்களுக்கும் மக்களுக்கும் பாதுகாப்புக் கொடுத்து திரையிட சொல்வதுதானே சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதாகும் .சிந்திக்க வேண்டும் தமிழக அரசு.எதையும் சிந்தித்து செயல்படும் கமலதாசனுக்கே இந்த சோதனை என்றால் மற்றவர்கள் எப்படி உண்மையை எடுத்து மக்கள் மத்தியில் விதைக்கமுடுயும்.மக்கள் எப்படி திருந்துவார்கள்.மக்கள் எப்படி அழிந்து போனாலும் பரவாயில்லை என்பதுதானே அரசின் கடமையாகும்.
அன்புடன் ஆண்மநேயன்.--கதிர்வேலு.
@மேலூர் ராஜா ராஜா
neer oru abrakamia samayathai serntha adivarudi .......allathu antha samaya aaluku kuninthu nipavan.....
Post a Comment