விகடன் மேடை - மு.க.ஸ்டாலின் பதில்கள்
வைகோவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?''
''வெற்றி - தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாத அயராத உழைப்பு!''
தங்க.நாகேந்திரன், செம்போடை.
''தங்கள் உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்தி பரவியபடியே உள்ளதே?''
''எனது தொடர் சுற்றுப்பயணங்களும் இடையறாது கலந்துகொள்ளும்
நிகழ்ச்சிகளுமே அந்த வதந்திகளுக்கான பதில். 'உலை வாயை மூடலாம், ஊர் வாயை
மூட முடியுமா?’ என்பது முதுமொழி!''
ஊர் வாயை மூட முடியுமா?’ என்பது முதுமொழி!''
கே.ஹரி நாராயணன், மதுரை.
''விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, 'ஜெயம்’ ரவி, ஜீவா ஆகியோர் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படம் எது?''
''விஜய் - காதலுக்கு மரியாதை
அஜித் - வரலாறு
விக்ரம் - அந்நியன்
சூர்யா - ஏழாம் அறிவு
சிம்பு - விண்ணைத் தாண்டி வருவாயா?
தனுஷ் - யாரடி நீ மோகினி?
ஆர்யா - மதராஸபட்டினம்
'ஜெயம்’ ரவி - சந்தோஷ் சுப்ரமணியம்
ஜீவா - ராம்.''
தா.சூர்யா, வேதாரண்யம்.
''உங்கள் பார்வையில் மு.க.ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கை எப்படி இருக்கிறது?''
''தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே நினைத்து உழைத்திடும்
தளராத தி.மு.க. தொண்டன். கழகத்துக்கும் அதன் மூலமாக தமிழ்ச் சமுதா
யத்துக்கும் இறுதி வரை சிறந்த பணியாற்ற நினைக்கும் சேவகன். அரசியல்
நடவடிக்கைகளில் கடிகாரம்போல் கச்சிதமாகச் சுழல்வதும், கடமை - கண்ணியம் -
கட்டுப்பாடு போற்றி நடப்பதும் அவருடைய பண்புகள்!''
தங்க.நாகேந்திரன், செம்போடை.
''உங்கள் மாணவப் பருவ நினைவொன்றைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்..?''
''அப்போது நான் சேத்துப்பட்டு பகுதியில் இருந்த கிறிஸ்துவக் கல்லூரி
மேனிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தேன். ஒருநாள், பள்ளி முடிந்து
சினிமாவுக்குச் செல்வதற்காக அண்ணா சாலையில் உள்ள தியேட்டருக்குசைக்கிளில் வந்தேன். என் நண்பன் ஒருவன் சைக்கிளை ஓட்டி வந்தான்.
அப்போது
எல்லாம் சைக்கிளில் டபுள்ஸ் செல்லக் கூடாது. இன்றைக்கு ஸ்பென்சருக்கு முன்
இருக்கும் சிக்னலில் நாங்கள் நின்றுகொண்டு இருந்தோம். அப்போது டபுள்ஸ்
வந்ததற்காக ஒரு போலீஸ்காரர் எங்க ளைப் பிடித்து காவல் நிலையத்துக்கு
அழைத்துச் சென்றார். என் பெயர், வீட்டு விவரம், எந்தப் பள்ளி என்பதை
விசாரித்தார்கள். சொன்னேன். குறித்துக்கொண்டார்கள்.
'உங்க அப்பா பெயர் என்ன?’ என்று கேட்டார் கள். 'கருணாநிதி’ என்று
சொன்னேன். 'என்ன வேலை பார்க்கிறார்?’ என்று கேட்டார்கள். 'செக்ரட்டரியேட்ல’
என்றேன். 'எந்த டிபார்ட்மென்ட்?’ என்று கேட்டார்கள். 'பொதுப்பணித் துறை
மந்திரியாக இருக்கிறார்’ என்றேன். அதற்குப் பிறகுதான் நான் மந்திரியின்
மகன் என்பதே அவர்களுக்குத் தெரிந்தது. அதன் பிறகு வீட்டுக்கு
அனுப்பிவிட்டார் கள்!''
ப.பிரேம்குமார், தேனி.
''நீங்கள் மனம் விரும்பிக் கேட்கும் பத்து பாடல்களை இங்கு பட்டியலிடுங்களேன்..?''
'' 'காகித ஓடம் கடல் அலை மீது...’ - தலைவர் கலைஞர் எழுதியது.
'செந்தமிழ் நாடெனும்போதினிலே...’ என் செல்போனுக்கு அழைத்தால், இந்தப் பாடலைத் தான் நீங்கள் கேட்பீர்கள்.
'நீ இல்லாத உலகத்திலே...’ - கண்ணதாசன் எழுதி பி.சுசீலா பாடியது.
'கா... கா... கா... ஆகாரம் உண்ண’ - கலைஞர் எழுதி சி.எஸ்.ஜெயராமன் பாடியது.
'எங்கள் திராவிடப் பொன்னாடே’ - புரட்சிக் கவிஞரின் எண்ணவோட்டம் எப்போது கேட்டா லும் சிலிர்க்கும்.
'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ - இன்றைய காலகட்டத்துக்கு இது தானே பொருத்தமானது.
'விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ - சி.எஸ்.ஜெயராமன் குரல் இப்போதும் வசியப்படுத்தும்.
'தப்பித்து வந்தானம்மா... காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல்’ - கவிஞர் மாயவநாதன் எழுதி, கே.பி.சுந்தராம்பாள் பாடியது.
'இது ஒரு பொன்மாலைப் பொழுது’- கவிப்பேரரசு வைரமுத்துவின் காவியத் தொடக்கம்.
'எம்மா எம்மா காதல் பொன்னம்மா’- 'ஏழாம் அறிவு’ படத்துக்காக கபிலன் எழுதிய சுந்தர கீதம்.
- இவை நான் விரும்பிக் கேட்கும் பாடல்களில் சில. நீங்கள் பத்துப்
பாடல்கள் என்று கேட்டதால் இதனை மட்டும் சொன்னேன். இன்னும் என்னால்
சொல்லிக்கொண்டே இருக்க முடியும். செவிச்சுவை மூலமாக இப்புவியை வாழவைப்பது
இசைதானே!''
'நீங்கள் இப்போது வாசித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?''
''திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி தொகுத்த
'வடநாட்டில் பெரியார்’ என்ற புத்தகம். பம்பாய், லாகூர், அமிர்தசரஸ்,
கல்கத்தா, செகந்திராபாத், லக்னோ ஆகிய பகுதிகளுக்குச் சென்று, பெரியார்
கொள்கை முழக்கம் இட்டதை நம் மனக்கண் முன் கொண்டுவந்து காட்டுகிறது அந்தப்
புத்தகம். இன்றைக்கு பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகள் அனைத்து
மாநிலங்களிலும் பரவிவிட்டது. அதற்கு அடித்தளம் அமைத்த பயணத்தைப் பற்றிய
முழுமையான நூல் இது. அய்யாவின் அடிச்சுவட்டில் பயணிக்கும் ஆசிரியர் தொகுத்த
இரண்டு பாகங்களும் இன்றைய தலைமுறை அறிய வேண்டியது!''
ஆதிபகவன், கும்பகோணம்.
''தி.மு.க-வை வளர்த்த எழுத்து, பேச்சு
எல்லாம் காணாமல் போய்விட்டனவே? இளைய தலைமுறைக்கு அதில் ஆர்வம் இல்லையே?
எழுத்தாற்றல், பேச்சாற்றல் உள்ளவர்களை வளர்க்க நீங்கள் முயற்சி
எடுக்கவில்லையே?''
'' 'எங்களுடைய கால்கள் நடையை நிறுத்தா...
நாங்கள் நடந்துகொண்டே இருப்போம்.
எங்கள் கைகள் எழுத்தை நிறுத்தா...
நாங்கள் எழுதிக்கொண்டே இருப்போம்.
எங்களுடைய உதடுகளும் நாவுகளும் பேசுவதை நிறுத்தா...
நாங்கள் பேசிக்கொண்டே இருப்போம்!’
- என்று தலைவர் கலைஞர் அவர்கள் இளைஞர்
அணியின் தொடக்க விழாவில் குறிப்பிட்டார்கள். தி.மு.க-வின் அடிப்படைத்
தொண்டர் முதல் அனைவருமே எழுத்தாற்றல், பேச்சாற்றல் பெற்ற வர்களே. இன்றைக்கு
இளைஞர் அணியின் புதிய அமைப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கு
தடை இல்லாமல் எழுச்சியாகப் பேசுவார் கள்.
வருங்காலத் தலைமுறையினருக்கும் திராவிட இயக்கத்தின் லட்சியத்தில்
ஈடுபாடு வேண்டும் என்பதற்காகவே, பள்ளி மாணவ - மாணவியருக்கு மாவட்ட அளவில்
பேச்சுப் போட்டிகள் வைத்து பரிசுகள் அளித்துவருகிறோம். சமீபத்தில் தஞ்சா
வூரில் அத்தகைய போட்டிகள் நடந்தன. காலை முதல் இரவு வரை நடந்த இந்தப்
போட்டிகளில் மாணவ - மாணவியர் பேசியதைக் கேட்டபோது, எதிர்காலத் தலைமுறை மீது
எனக்குப் பெரிய நம்பிக்கையே வந்துவிட்டது.
'தமிழகம் அம்மா ஆசையால் ஆட்சி கண்டு, இருளில் மூழ்கி இன்று அமாவாசையாய் இருண்டுகிடக்கிறது’ என்று ஒரு மாணவர் பேசினார்.
'ஏ.எம்., பி.எம். பார்க்காமல் உழைத்த சி.எம். நம் தலைவர் கலைஞர்’ என்று ஒரு மாணவி முழங்கினார்.
அண்ணா, கலைஞரின் வாரிசுகளாக இந்த மாணவச் செல்வங்கள் திகழ்கிறார்கள்.
இவர்கள் எதிர்கால மேடைகளில் ஒளிவீசுவதை நீங்கள் பார்க்கலாம். எனவே,
தி.மு.க. சும்மா இருக்க வில்லை; விதைத்துக்கொண்டு இருக்கிறது. விளைச்சலின்
விளைவுகள் வியக்கவைக்கும்!''
அடுத்த வாரம்...
நன்றி - விகடன்
டிஸ்கி - 1 அழகிரி உங்களுக்குப்போட்டியா ?
ஸ்டாலின் பேட்டி
( பாகம் 1) http://www.adrasaka.com/2012/ 12/blog-post_27.html
( பாகம் 1) http://www.adrasaka.com/2012/
டிஸ்கி 2 - -கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கி
பாகம் 2 http://www.adrasaka.com/2013/
டிஸ்கி 3 - திராவிடக் கட்சிகள் தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டனவா? 2016-ன் தமிழக சி .எம் .மு. க .ஸ்டாலின் பேட்டி
பாகம் 3 http://www.adrasaka.com/2013/
1 comments:
பகிர்வுக்கு நன்றி.
Post a Comment