Tuesday, January 22, 2013

ட்விட்டரில் தமிழில் ட்வீட்டிய அமிதாப் - பக்க விளைவுகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKKFmT1W8PLuHWUoi5uh2Pgj2gKz-R_BI8x2Xc-maKVT862h22wtlqqwNG26osLBv5Dmtj655cF7c79icJ2J1h2cs-kUf_qENiPhmUoXuL1WXHN3Ps9maFYKqBmFH2qtk6XPZvkSX9Tkg/s1600/b.jpg
 இன்னைக்கு ட்விட்டர்ல ஒரு ஆச்சரியம் + விநோதம் - அதாவது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழ்ல ட்வீட் போட்டுட்டார் . இது பல சந்தேகங்களை கிளப்புச்சு. அதாவது தமிழனே இங்க்லீஷ்பீஸ் ல அரைகுறையா ட்வீட்டிட்டு இருக்கும்போது  ஹிந்தி பேசும் அமிதாப் தமிழில் ட்வீட்டும் மர்மம் என்ன? இது எல்லார் மனசுலயும் எழுந்துச்சு 


அவர் போட்ட தமிழ் ட்வீட்ஸ் 


T 998 - ஹலோ .... எல்லோரும் எப்படி இருக்கும் ... மரியாதையும் அன்பும் 


2. T 998 - தமிழ் சில பெரிய இசை கேட்டு ... அதன் வசீகரிக்கும்! குறிப்புகள் singing முயற்சி ... உண்மையில் கடினமான இருந்தது! 



3. T 998 - AR Rehman மூலம் 'kadal' என்ற ... இசை குறிப்பாக ஒரு பாடல் விதிவிலக்கான குறிப்புகள் உள்ளன! அவரை சென்னை திருமண நேரடி விளையாட கேள்வி! 


4. T 998 - It is Tamil ... one of the most developed languages in Southern India .. its literature immense .. !! ( தமிழைப்பற்றி பாராட்டி )



5. T 998 - நம்முடைய விட ஒழுக்கமான தமிழ் சினிமாவில் .. பெரிய ஸ்டூடியோக்கள் சில சென்னை தொழிலாள ஆரம்ப ஆண்டுகள் 





 சிலர் அமிதாப் செல் வேற யாரோ யூஸ் பண்றாங்க  என கிண்டல் அடிச்சாங்க . 


 நான் அந்த டைம்ல போட்ட ட்வீட்ஸ்




1 சார், நீங்க தமிழர் தானே? அமிதாப் தமிழ்ல கீச்சறார்.



 ஓஹோ, இப்போ நான் ஹிந்தில கீச்சனுமா? எனக்கு அது தெரியாதே?



---------------------------



2  இன்ஸ்பெக்டர், என் செல் ஃபோனைக்காணோம் .



 இப்போதான் உங்க ட்வீட்டை படிச்சேனே? 



ஹய்யோ, அவன் தான் திருடன், ட்ரேஸ் அவுட் ஹிம்

-----------------------


 அப்போ இந்தியாவின்  நெம்பர்  ஒன் ட்வீட்டர்  அதாவது அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட தமிழ் ட்வீட்டர் ஐ ஆம் கார்க்கி  போட்ட ட்வீட்ஸ் , அதுக்கு எதிர் வினையா  பெங்களூர் ரைட்டர் போட்ட ட்வீட்ஸ் சுவராஸ்யங்கள்



பார். முழுசா தங்கர்பச்சனா மாறியிருக்கிற அமிதாப்பச்சன பார் 

குஷ்பூ ஜெயில் பாரோன்னா திட்றாங்க. அமிதாப் தமிழ்ல சொன்னா பாராட்டுறாங்க. சம்திங் இஸ் ராங். 









தங்கர்பச்சானை context-ஏ இன்றி கேலி செய்வது அத்தனை உவப்பில்லை. 


அவரையெல்லாம் கன்டெக்ஸ்டோடுதான் கேலி செய்ய வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடில்லை


ஓ, சரி! கேலியோ, சீரியஸோ எதுவாகினும் அதில் குறைந்தபட்ச நேர்மை இருக்க வேண்டும் என‌ எதிர்பார்ப்பது என் பிழையே! 


ஆமா. வேல்யூஸ் மாறும்.ஜஸ்ட் லைக் தட் உங்ககிட்ட பேசுற பொண்ணுங்கள வச்சு பொதுவா மட்டம் தட்டுவீங்களே. அப்ப எனக்கும் இப்படி தோணு


பிறகு ஏன் அதே தவறை நீங்கள் செய்கிறீர்கள்? ஒவ்வொரு முறையும் விதிவிலக்குகள் உண்டுனு சொல்லிட்டிருக்க முடியாது. (1/8) 


மற்றபடி பெரும்பான்மைப் பெண்களுக்கு நான் சொல்லும் கருத்துக்கள் செல்லுபடியாகும். அதில் இப்போதும் மாற்றமே இல்லை. (2/8) 

தங்கரை (சுய விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில்) நீங்கள் மேலோட்டமாக அணுகுவதற்கும் இருபது வருட (3/8)  

அனுபவங்களின் வழி பெண்களைப் பற்றி நான் வந்தடைந்திருக்கும் கருத்தும் ஒன்றா? நீங்கள் நான் ஜஸ்ட் லைக் தட் பெண்களைப் (4/8) 

பற்றி கேலி பேசுவதாக நினைத்தால் அது உங்கள் பிரச்சனை. ஆனால் இந்தக் குறிப்பிட்ட ட்வீட்டில் தங்கர் பற்றி அப்படி நீங்கள் (5/8)  


மேலோட்டமாகத் தான் பேசி இருந்தீர்கள். தமிழ் சினிமாவிற்கான, தமிழ் இலக்கியத்திற்கான அவரது சில முக்கியமான பங்களிப்புகளை (6/8) 

மதிக்கிறவன் என்ற அடிப்படையில் அதை நான் எதிர்த்தேன். அதே போல் உலகப் பெண்கள் அத்தனை பேருடனும் பழகிய பின்னரே (7/8)  

பெண்களைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்ல வேண்டும் என்றால் ஸாரி, எனக்கு அத்தனை பெண் சகவாசம் கிடையாது தான். (8/8)




 ரைட்டர் 1 /8 போடும் அளவு  கார்க்கி போட்ட ட்வீட் லாங்கர்












எனக்கும் தங்கருக்கும் எந்த சைடுவிரோதமும் கிடையாது. அழகியில் ஆச்சரியப்படுத்தியவர் தொடர்ச்சியாம ஏமாற்றியே வந்திருக்கிறார். அவரது இலக்கிய பங்களிப்புகளை அப்படி ரைட்டுக்கா வைப்போம். நான் போட்ட ட்வீத் தங்கரின் சந்தர்ப்பவாதத்தை முன்வைத்து. அழகியில் நந்திதாதாசை தாங்கியவர் அடுத்த படத்தில் தமிழ்ப்படத்தில் தமிழ்ப்பெண் தாண் நடிக்க வேன்டுமென 1/120 சைசில் பொங்கினார். 




குமரிபொண்ணு வெத்தலைக்குன்னு பாட்டு வைத்தவர் இரட்டை அர்த்த பாடல்களை வறுத்தார். ராஜாவுக்கு ஈடான ஒருவர் உலகிலே இல்லையென்றவற் வித்யாஸாகர் ராஜாவுக்கு = என்றார்.இன்னுமாயிரம் உண்டு. இதையெல்லாம் ஏன்சொல்கிறேன் என்றால் நீங்கள் 20 ஆண்டுகளாக கூர்ந்து பெண்களை கவனித்தது போலதான்நானும் தங்கரை கவனித்து இந்த முடிவுக்கு வந்தேன்.அமிதாப்பின் தமிழ் ட்விடுக்கு பின்னால் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகசில ட்வீத்களை பார்த்தேன்.



 அதன் நம்பகத்தன்மைகுறித்தெல்லாம் ஆராய விருப்பமில்லை.. பார்த்தேன். அந்த சமயம்சந்தர்ப்பவாத சந்நியாசி தங்கர் நினைவுக்கு வந்தார். ட்வீட் போட்டேன்.பச்சன் என்ற ரைமிங் மட்டுமே உம் கண்ணில் பட்டதென்றால் உமக்கும் உம் பெயருக்கு முன்னால் இருக்கும் அடைமொழிக்கும் பயொவில் இருந்த இன்ட்டெலெக்சுவல் என்ற வார்த்தைக்கும் ஸ்நானபிராப்தியே இல்லையோ என ஐயுறுகிறேன்.


ரைட்டரின் ரிப்ளை



//எனக்கும் தங்கருக்கும் எந்த சைடுவிரோதமும் கிடையாது. அழகியில் ஆச்சரியப்படுத்தியவர் தொடர்ச்சியாம ஏமாற்றியே வந்திருக்கிறார். //

ஏற்கிறேன். அழகி படமும், பாரதி, பெரியார், குட்டி, கருவேலம்பூக்கள், பாண்டவர் பூமி உள்ளிட்ட சில‌ படங்களின் அபார ஒளிப்பதிவும் தாம் தங்கரின் சினிமாச் சாதனைகள். கடைசி சில ஆண்டுகளில் அவர் படங்கள் அனைத்தும் மொக்கை தான் (ஒன்பது ரூபாய் நோட்டு மட்டும் நான் இன்னும் பார்க்கவில்லை). ஆனால் அப்படிப் பார்த்தால் மணிர‌த்தினத்தையும் இப்படி கலாய்ப்பீர்களா? அவரும் நல்ல படம் எடுத்து தசாப்தம் ஆகிறது. அவருக்கும் இப்படி பகடி வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாமே. நேரடியாக இருவரையும் ஒன்று என்று சொல்வதாக‌ தட்டையாகப் புரிந்து கொள்ள வேண்டாம். அதாவது நான் சொல்ல வருவதன் சாரம் மணி போன்ற பிம்பங்களை எல்லாம் நம்பி விட்டு, தங்கர் மீது மட்டும் வெளிப்படும் உங்கள் அலட்சியம் பற்றியது. உங்கள் இருவரையுமே தனிப்பட்ட முறையில் தெரியாது என்பதால் உங்களுக்குள் ஏதேனும் விரோதம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நான் சொல்வதற்கில்லை.

//அவரது இலக்கிய பங்களிப்புகளை அப்படி ரைட்டுக்கா வைப்போம்.//

குடி முந்திரி, வெள்ளை மாடு ஆகிய தொகுப்புகளில் இருக்கும் அவரது சிறுகதைகள் நிச்சயம் முக்கியமானவை. ஒன்பது ரூபாய் நோட்டு நாவலும் ஓரளவுக்கு அப்படியே. தங்கர் என்ற ஆளுமையில் பாதி அவர் எழுத்து தான். மீதி தான் சினிமா. இதைத் தவிர தமிழர், தமிழுணர்வு, தமிழ்க்கலைகள் குறித்த அவரது சில கருத்துக்களுக்கு என் ஆதரவு உண்டு. அதைத் தொடர்ச்சியாகத் தன் படங்களில் பதிவு செய்து வருகிறார். அதை மதிக்கிறேன். பாலாஜி சக்திவேல் மீது எப்படி மொக்கையாய்ப் படம் எடுப்பதையும் தாண்டி தொடர்ந்து மாற்று சினிமாவுக்கு முயல்கிறார் என்ற வகையில் மரியாதை உண்டோ, அதே அடிப்படையில் தங்கர் மீதும் மதிப்பு உண்டு.

//நான் போட்ட ட்வீத் தங்கரின் சந்தர்ப்பவாதத்தை முன்வைத்து. அழகியில் நந்திதாதாசை தாங்கியவர் அடுத்த படத்தில் தமிழ்ப்படத்தில் தமிழ்ப்பெண் தாண் நடிக்க வேன்டுமென 1/120 சைசில் பொங்கினார். குமரிபொண்ணு வெத்தலைக்குன்னு பாட்டு வைத்தவர் இரட்டை அர்த்த பாடல்களை வறுத்தார். ராஜாவுக்கு ஈடான ஒருவர் உலகிலே இல்லையென்றவற் வித்யாஸாகர் ராஜாவுக்கு = என்றார்.இன்னுமாயிரம் உண்டு. //

சினிமாவுக்கென சில எல்லைகள் உண்டு. அதன் வணிகத்திற்காக மானத்தையும் மனசாட்சியையும் கடாசிப் பேசிய பல ஜாம்பவான்கள் உண்டு. கமல் மன்மதன் அம்பின் போது டிஎஸ்பியை எம்எஸ்வி, ராஜாவுக்கு அடுத்து நல்ல ம்யூஸிக் டைரக்டர் என்றார். அன்பே சிவம் படத்தின் போது மாதவனை தமிழின் மிகச்சிறந்த நடிகர் என்றார். அதை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது. கமல் வெறியனான நானே அதைப் பொருட்படுத்தியதில்லை. அதற்காக கமலின் மற்ற சாதனைகளை நிராகரிக்க முடியுமா? தங்கரும் அது போல் பல பச்சைப்பொய்கள் சொல்லி இருக்கலாம். போலி அறச்சீற்றங்கள் செய்திருக்கலாம். அதைக் காரணம் காட்டி அவரது பங்களிப்புகளை ரத்து செய்து விட முடியாது. அதைத் தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

//இதையெல்லாம் ஏன்சொல்கிறேன் என்றால் நீங்கள் 20 ஆண்டுகளாக கூர்ந்து பெண்களை கவனித்தது போலதான் நானும் தங்கரை கவனித்து இந்த முடிவுக்கு வந்தேன். //

ஒரு புன்னகை செய்து கொள்கிறேன். நீங்கள் ஐந்து நிமிடம் யோசித்ததும், நான் ஆயுள் முழுக்க அனுபவித்ததும் ஒன்றா, கார்க்கி? வாதத்திற்காகப் பேச‌ வேண்டாம்.

//அமிதாப்பின் தமிழ் ட்விடுக்கு பின்னால் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக சில ட்வீத்களை பார்த்தேன். அதன் நம்பகத்தன்மைகுறித்தெல்லாம் ஆராய விருப்பமில்லை.. பார்த்தேன். அந்த சமயம்சந்தர்ப்பவாத சந்நியாசி தங்கர் நினைவுக்கு வந்தார். ட்வீட் போட்டேன்.//

நேரடியாகவே சொல்கிறேன். இப்போது பிரச்சனை என்று து எதிர்க்கேள்வி எழுப்பட்டவுடன் தான் ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்து இந்த விளக்கத்தைத் தேடிப் பொருத்திச் சொல்கிறீர்கள் என்பது என் புரிதல். ஏற்கனவே இதை மனதில் வைத்துத் தான் போட்டீர்கள் என்பதை நம்பவில்லை. பொதுப்புத்தியில் ஒரு கோமாளி என்ற பிம்பம் தங்கருக்கு இருப்பதை வைத்துப் போட்டிருக்கிறீர்கள் என்றே நான் நினைத்தேன். இப்போதும் அதையே நினைக்கிறேன். இந்த ரைமிங்கைத் தாண்டி நீங்கள் சொல்லி இருக்கும் சம்பவங்களை நினைத்து, நீங்கள் முன்வைக்கும் "சந்தர்ப்பவாதம்" என்ற பொருளில் உங்கள் ட்வீட்டை விளங்கிக் கொண்ட ஒருவரேனும் இங்கே இருக்கிறார்களா எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அப்படிச் சொல்பவர்களின் மற்ற விஷயங்களின் புரிதல்களை கவனித்துக் கேள்வி கேட்க நினைக்கிறேன். "கை தட்டினாயா?" என்பதை "கை அடிச்சியா?" எனக் கேட்கலாம் தான். தமிழ் தடை செய்வதில்லை. ஆனால் பொதுவாக பெரும்பான்மையானோர் தவறான பொருள் கொள்ளக் கூடும் என அப்படிக் கேட்க மாட்டோம் அல்லவா? அதை இங்கே ஒப்பிட்டுக் கொள்ளவும்.

//பச்சன் என்ற ரைமிங் மட்டுமே உம் கண்ணில் பட்டதென்றால் உமக்கும் உம் பெயருக்கு முன்னால் இருக்கும் அடைமொழிக்கும் பயொவில் இருந்த இன்ட்டெலெக்சுவல் என்ற வார்த்தைக்கும் ஸ்நானபிராப்தியே இல்லையோ என ஐயுறுகிறேன்.//

என் ஹேண்டிலின் முன்னொட்டும், பயோவும் பலருக்கும் உறுத்தல் தான் என்பதை உணர்ந்தே இருக்கிறேன். உங்களுக்கும் அது கண்ணிநுண் சிறுத்தாம்பாய் இருப்பதில் தவறில்லை. தொடர்ந்து ஐயுற உங்களுக்கு உரிமையும் சுதந்திரமும் உண்டு.

//நானும் 20வருடங்களாக பெண்களைகடந்து வருகிறேன். என் அனுபவம் வேறாக இருக்க்றது. ஆளுக்குஏற்றார் போல அளந்து பழகும் பெண்களின் புத்திசாலித்தனத்தை கண்டு வியக்கேன். //

ஓ! சரி. பெண்களுக்கு அபாரமான நடிப்புத் திறமை உண்டு என்பதையும், அதைப் பல ஆண்கள் உண்மை என்றே நம்ப விரும்புகிறார்கள் என்பதை இங்கே நினைவிற் கொள்ள வேண்டும்.

//போகட்டும். எல்லா விவாதமுமெனக்கு ஏதோ ஒன்றை சொல்லித்தருகிறது. இன்று, 1/ 8ஐ விட ட்வீட்லாங்கர் எழுதவும் படிக்கவும் எளிது என அறிந்து கொண்டேன் .//
அப்படிப் பார்த்தால், ப்லாக்கில் போடுவது இன்னமும் வசதி. எடிட், கமெண்ட் எனப் பல வகைகளில். ஆனாலும் எளிமை வசதி எல்லாம் கடந்து, ப்லாக், ட்வீட்லாங்கர் தவிர்த்து ஏன் 1/8 போடுகிறேன் என்பதை ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். ஒரு விஷயத்தில் கவனிக்க வேண்டியதை விட்டு வேறு எதையோ கவனிப்பதைப் பற்றி பொட்டும் இன்னொன்றும் என்று சாரு ஒரு கதை சொல்லி இருக்கிறார். நீங்கள் மென்மேலும் பல விவாதங்களை நிகழ்த்தி இது போல் பல விஷயங்களை அறிந்து கொள்ள வாழ்த்துக்கள்!

//நன்றி. வணக்க்க்க்க்க்க்க்கம் //
நன்றி. 



 நன்றி - கார்க்கி , ரைட்டர் , அமிதாப் ஜி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkRYbUBBAXxH3zzzo57Hdpl2iJuFdFaEt9JTf_l19AJsLZ-SSHVJgeofzVF2dgv3gPZnrKkYgdvIVEY6ViLADPTCIGUouz91FaGQoxBa2nl58ZXPn_STgDHBktZqrWGlA3lygRfFiGy4ah/s400/amitabh-jaya-wedding-004.jpg


டிஸ்கி - இந்தப்பதிவில் முறைப்படி கார்க்கியிடமோ , ரைட்டரிடமோ அனுமதி வாங்கலை , அவர்கள் ஆட்சேபித்தால்  இந்தப்பதிவு 6 மணி நேரம் கழித்து அகற்றப்படும் , எனவே எல்லாரும் சீக்கிரம் படிச்சுக்குங்க

1 comments:

Unknown said...

Anna. Please ungalukku konjam time irnthal intha blogkku our visit pannunga.www.panithulishankar.com by Logu