உங்க உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு. டைம் கிடைக்கும்போதெல்லாம் சாப்பிடனும், அதாவது கரண்ட் கட் ஆகும்போதெல்லாம் சாப்பிடனும்
------------------
2. அத்தான்! ஆஃபீஸ்ல என்னைப்பற்றி நினைப்பீங்களா?
உன்னை நினைச்சுடக்கூடாதுன்னு நினைப்பேன்
--------------------------
3. உங்க கணவரை டைவர்ஸ் பண்ண மூல காரணம் என்ன?
அவருக்கு தீர்க்க முடியாத மூலம்.அதான்
-------------------------------------
4. நம்ம காதல் அத்தியாயம் முடிவுக்கு வந்துடுச்சு
அய்யய்யோ, இது என்ன புதுக்கதை?
-------------------
5. உங்க வீட்ல டெயிலி முடக்கத்தான் கீரை பொரியலா? ஏன்?
அப்டியாவது என் மனைவி வாய்ல இருந்து அத்தான்கற வார்த்தை வரட்டும்னுதான்
---------------------------
6. டிக்கெட் எடுக்காமல் டி டி ஆரிடம் மாட்டிய தலைவர் - 3 தடவை தொடர்ச்சியா தேர்தல்ல தோத்தா டிக்கெட் கிடையாதுன்னு ராகுல் சொன்னாரே?
---------------------------
7. எங்க ஆஃபீஸ்ல எல்லா பொண்ணுங்களும் துடிப்பா வேலை செய்வாங்க
எங்க ஆஃபீஸ்ல எல்லா பொண்ணுங்களும் சதைப்பிடிப்பா வேலை செய்வாங்க
----------------
8. நடிகைட்ட வேலைக்கு சேர்ந்த நீ அவங்களையே கிண்டல் பண்ணி ஓட்டிட்டு இருக்கியே?
அவங்களைப்பற்றி உனக்குத்தெரியாது, 10 வருஷமா கார் ஓட்டுனா அவங்க காரை கார் டிரைவருக்கே பரிசா குடுத்தவரு. அவங்களை ஓட்டுனா அவங்களையே பரிசாத்தர வாய்ப்பு இருக்கே?
---------------------
9. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளில் முறைகேடு நடந்திருக்குன்னு எப்படி தலைவரே சொல்றீங்க?
அவங்க 10 சுரங்கம் டேக் ஓவர் பண்ணிக்கிட்டு எனக்கு 4 தான் குடுத்தாங்க
------------------
10. மூணாவது அணி அமைக்க தலைவர் ஏன் முயற்சிக்கலை?
மூணுன்னா நாமம் தான்னு யாரோ பயமுறுத்திட்டாங்களாம்
---------------------
11. குடும்பப்படம்னீங்க, ஆக்ஷன் மூவி போல?
அதாவது படத்தோட டைரக்டர் அப்பா , பையன் ஹீரோ, ஹீரோயின் மருமக இப்படி
---------------------
12. புதுசா வந்த சட்டப்படி என் சம்பளத்துல 20 % என் சம்சாரத்துகிட்டே குடுத்துடுவேன்,
மீதி 80 % ?
மாமியார் பிடுங்கிக்குவாங்க :-0
---------------------
13. நந்தி விருது ஏன் உங்களுக்கு கிடைக்கலை?
நந்தி மாதிரி இன்னொருத்தர் குறுக்கே வந்து வாய்ப்பை தட்டி பறிச்சுட்டார்
----------------------
14. சாம்பார் , சட்னி இருந்தும் எதுக்கு இட்லிக்கு பொடி கேட்கறீங்க?
பொடி வெச்சு பேசரதுல மட்டும் இல்லை பொடி வெச்சு சாப்பிடறதுலயும் மன்னன்ன்னு பேர் எடுக்க
------------------------
15. சென்னைல ஏன் மின் வெட்டு கம்மியா இருக்கு?
ஓஹோ,. இப்போஒ உங்க பிரச்சனை உங்க ஊர்ல ஏன் மின் வெட்டு அதிகமா இருக்கு அப்டிங்கறது இல்லை, சென்னைல ஏன் கம்மினு தான்?
-----------------
16. காவேரி நதியின் சிறப்பு என்ன?
தன்னிஷ்டப்படி ஓடுனா அது சாதா நதி , சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி ஓடுனா அது காவேரி நதி
------------------------
17. டெங்கு காய்ச்சலால் பீதி வேணாம்னு தலைவர் சொல்றாரே?
ம் ம் அவருக்கு என்ன? அவனவனுக்கு பயத்துல பேதி போகுது
--------------------
18. தலைவர் நாத்திகவாதி என்பதால் எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதை ஒத்துக்க மாட்டேன்கறார்
எழுத்தறிவை வித்தவன் தலைவன் அப்டினு சொல்லுங்க, ஒத்துக்குவார்
---------
19. நாங்கள் ஆட்சிக்கு வந்தா மின் தடையே இருக்காது
2ம் நடக்கற மாதிரி தெரியலையே?
-----------------
20. மினிமம் , மேக்சிமம் என்ன வித்தியாசம்?
சென்னையில் மின் வெட்டு MIN வெட்டு மற்ற இடங்களில் MAX வெட்டு
-----------------
21. சி எம் ஆனா தமிழக மக்களை சந்தோஷமா வெச்சிருக்க என்னால முடியும்னு தலைவர் எந்த தைரியத்துல சொல்றார்?
சி எம் ஆக மாட்டோம்கற தைரியத்துல தான்
-----------------------
22. மன்னா! ஈமுக்கோழிகள் கேட்பாரற்று ஏகப்பட்டது கிடக்கிறது, ஓசியில் கிடைக்கிறதுஈமுக்கோழிப்படை உருவாக்கினால் என்ன?
--------------------------
23. நாட்டு நடப்பு தெரிஞ்சவர்னு எப்படி சொல்றே?
ஐ பி எஸ் படிச்சிருந்தாலும் ஆத்திரக்காரன்னா புத்தி மட்டு. யு பி எஸ் இல்லைன்னா வீட்ல எப்பவும் கரண்ட் கட்
---------------
3 comments:
எப்படி உங்களால மட்டும் இப்படி யோசிக்க முடிகிறது......எங்களுக்கும் கொஞ்சம் சொல்லி தாங்க.....நாங்களும் உங்களை போல ஜீனியஸ் ஆகிடுவோம்.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
18. அருமை உண்மை
நகைச்சுவைகள் அருமை...
பெரியவர் பாராட்டுக்குறியவர்....
வாழ்த்துக்கள்.
Post a Comment