Friday, January 04, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 4.1.2013 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை

இந்த ஆண்டில் முதல் வெள்ளிக் கிழமையிலேயே 10 படங்கள் வெளிவருகிறது. ‘நண்பர்கள் கவனத்திற்கு’, ‘குறும்புக்கார பசங்க’, ‘கள்ளத்துப்பாக்கி’, ‘கனவு காதலன்’, ‘காதல் கிளுகிளுப்பு’, ‘மயில்பாறை’, ‘நிமிடங்கள்’ ஆகிய நேரடித் தமிழ்ப் படங்களும், ‘கமாண்டோஸ் ஏகே 47’, ‘மாய கத்தி’, ‘அருந்ததி வேட்டை’ ஆகிய டப்பிங் படங்களும் வெளிவருகிறது.  பொங்கலுக்கு கமலின் ‘விஸ்வரூபம்’, கார்த்திக்கின் ‘அலெக்ஸ் பாண்டியன்’, விஷாலின் ‘சமர்’, சந்தானத்தின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ஆகிய படங்கள் வெளிவருவதால் அடுத்த வாரம் சிறு பட்ஜெட் படங்கள் வெளிவராது என்று தெரிகிறது. 

 http://www.tamil.cinebuzzz.com/img_articles/1103b.jpg

1.கள்ளத்துப்பாக்கி -கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் கே.சி.ரவிதேவன். இவர் இயக்கி உள்ள படம் கள்ளத்துப்பாக்கி. தமிழ் செல்வன், குட்டி ஆனந்த், ஷாவந்திகா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். ஏ.வி.வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், எஸ்.கே.பாலச்சந்திரன் இசை அமைத்துள்ளார். வேலை வெட்டி இல்லாமல் திரியும்.  5 சிறுவர்களிடம் ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் கதை.

விஜய் நடித்துள்ள துப்பாக்கி படத்தின் பெயரை பயன்படுத்த கூடாது. அதில் எங்கள் படத்தின் தலைப்பான துப்பாக்கி உள்ளது. என்று இயக்குனர் பிரச்னையை கிளப்பினார். இது தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், நீதிமன்றம் வரை சென்று ஒரு வழியாக சமாதானத்தில் முடிந்தது. இருந்தாலும் கோபம் தீராத இயக்குனர். துப்பாக்கி வெளியாகும் தீபாவளி அன்றே தன் படத்தையும் வெளியிடுவது என்று விளம்பரங்கள் செய்து வந்தார். 


இந்த நிலையில் படத்துக்கு அடுத்த பிரச்னை வந்திருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர். படம் வன்முறை நிறைந்ததாக இருக்கிறது என்று சொல்லி சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். இதனால் கள்ளத்துப்பாக்கி தீபாவளிக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ரவிதேன் கூறியதாவது, கூலிக்காக கொலை செய்வதுதான் படத்தின் கதை களம். ஆட்டோ டிரைவர், தள்ளுவண்டியில் காய்கறி விற்பவர், செருப்பு தைப்பவர்களில் சிலர் கூலிக்காக கொலை செய்வர்கள் கொலை செய்யப்படுபவர் யார், யாருக்காக கொலை செய்கிறோம் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. 


ஆனால் அதை ஒரு கடமை போல செய்து விட்டு வருவார்கள். இதைத்தான் படத்தில் காட்டியிருக்கிறோம். இதுபோன்ற படங்கள் இந்தியில் நிறைய வந்திருக்கிறது. ஆனால் இதை அனுமதிக்க மறுத்து விட்டார்கள். இதற்கு பின்னால் யாருடைய சதியும் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை. ரிவைசிங் கமிட்டிக்கு விண்ணப்பத்திருக்கிறோம். அங்கும் நியாயம் கிடைக்காவிட்டால் நீதிமன்றம் வரை சென்றாவது படத்தை வெளியிட்டே தீருவோம் என்றார்.

கள்ளத்துப்பாக்கி என்றாலும் சிக்கல் அப்படி பெயர் வைத்தாலுமா சிக்கல்....?!

ஈரோடு ஸ்டார் ல் ரிலீஸ் 

 http://pakindmp3.com/media/346/images/1356032950_Table%20No%2021.jpg

2. TABLE NO 21 - பாலிவுட்டில், வித்தியாசமான கதைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களின் வரிசை தொடர்கிறது. அந்த வரிசையில், இப்போது, "டேபிள் நம்பர்-21ம் சேரும் என, பாலிவுட் வட்டாரங்கள் உறுதியாக நம்புகின்றன. இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் தம்பதி, பிஜி தீவுக்கு, சுற்றுலா செல்கின்றனர்; ஆடம்பர ஓட்டலில் தங்குகின்றனர். அங்கு இருக்கும் ஒருவர், டாக்டர் தம்பதியை, ஒரு புதுமையான போட்டியில் விளையாட அழைக்கிறார். இந்த போட்டியில், எட்டு கேள்விகள் கேட்கப்படும். எட்டு கேள்விகளுமே, சம்பந்தப்பட்டவர்களின் சொந்த வாழ்க்கையை மையமாக வைத்தே கேட்கப்படும். 




வெற்றி பெற்றால், 21 கோடி ரூபாய் பரிசு நிச்சயம். ஒரே ஒரு நிபந்தனை; எந்த காரணத்தைக் கொண்டும், போட்டியிலிருந்து, பாதியிலேயே வெளியேற முடியாது. இதில், டாக்டர் தம்பதி, ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இக்கட்டான சூழல் ஏற்படும்போது, போட்டியிலிருந்து வெளியேற முயற்சித்தும், அவர்களால் முடியவில்லை. தங்களை திட்டமிட்டு, சூழ்ச்சியில் சிக்க வைத்துவிட்டதை, அவர்கள் உணர்கின்றனர். இந்த ஆபத்திலிருந்து, அவர்கள் வெளியேறுகின்றனரா இல்லையா என்பதே கதை. ஆதித்யா தத் இயக்கியுள்ள இப்படத்தில், பரேஷ் ராவல், தீனா தோசே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 


ஈரோடு அண்ணா வில் ரிலீஸ்  

TABLE NO 21 - சினிமா விமர்சனம்


http://www.adrasaka.com/2013/01/table-no-21.html
 

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/4/4f/Chemistry_film.jpg/220px-Chemistry_film.jpg


3. அருந்ததி வேட்டை - மித்து மூவிஸ் ஜெயராம் வேல் பிலிம்ஸ் வேல் முருகன் ஆகியோர்  இணைந்து  தயாரிக்கும் படம் அருந்ததி வேட்டை. இதில் சரண்யா மோகன், வினித், மனோஜ் கே.ஜெயன், ஆகியோர் நடிக்கின்றனர். மலையாளத்தில் கெமிஸ்ட்ரி என்ற பெயரில் வெளியான படத்தின்  தமிழாக்கமே இப்படம்.

நாடெங்கிலும் தற்போது பிரச்சினைக்குரிய விஷயமாக உள்ள பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரமே படத்தின் கதை. வினித் ஒரு கல்வி நிலையத்தில் ஆசிரியர். அவர் புனிதமான ஆசிரியர் வேலையை வைத்து  பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்.

அப்படி படுகொலையான ஒரு பெண்ணின் ஆவி சரண்யா மோகன் உடலில் புகுந்து வினித்தையும் அவரது கூட்டாளிகளையும் பழி தீர்ப்பதே கதை. பயங்கர திகில் படமாக தயாராகியுள்ளது. விஜி தம்பி இயக்கியுள்ளார்.


ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணா வில் ரிலீஸ் 


http://mjcdn.motherjones.com/preset_16/red-dawn-2012-poster.jpg

4.   Red Dawn (2012) - தமிழில் கமாண்டோ ஏகே 47-ஆக வரும் ரெட் டான்!
1984ம் ஆண்டு வெளியான படம் ரெட் டான். அப்போதே வசூலையும் குவித்து பல பிரச்சினைகளையும் கிளப்பிய படம். தற்போது அதே பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள். டேன் பிராட்லி இயக்கி உள்ளார். இவர் ஸ்பைடர்மேன், இண்டிபெண்டன்ஸ் டே படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிவர். 



2000ல் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து இப்போதுதான் வெளிவருகிறது. க்ரிஸ் ஹென்ஸ்வொர்த், இசபெல் லூக்காஸ், நடித்திருக்கிறார்கள். வாஷிங்டன் நகரத்தின் மீது எதிரிகள் வான்வெளி தாக்குதல் நடத்துகிறார்கள். அந்த ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் வான் வரின்ஸ் என்ற கொரில்லா போராட்ட குழுவை அமைத்து எதிரிகளை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதுதான் கதை.



 இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் டப் செய்து வெளியிடுகிறார்கள். தமிழில் புளூ மாட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது. படத்திற்கு "கமாண்டோ ஏகே 47" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.


ஈரோடு  ராயல் இல் ரிலீஸ் 

http://cdn3.supergoodmovies.com/FilesFive/nanbargal-kavanathirku-d9e150fe.jpg

5.நண்பர்கள் கவனத்திற்கு - கிரீன் சேனல் எண்டர்டெயின்மென் படநிறுவனம் சார்பாக சகாதேவன் தயாரிக்கும் புதியபடம் நண்பர்கள் கவனத்திற்கு. இப்படத்தின் நாயகனாக குளிர் 100 பட நாயகன் சஞ்சீவ் நடிக்க அவருக்கு ஜோடியாக கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மனிஷாஜித் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஜெயமணியின் மகன் வர்ஷயனும் அறிமுகமாகிறார். இவர்களுடன் ராஜ்கபூர், மகாதேவன், தலைவாசல் விஜய், டாக்டர் சூரி, சங்கர், தெனாலி, அழகப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

நட்புக்கும், காதலுக்கும் இடையில் உள்ள உணர்வை பிரதிபலிப்பது தான் நண்பர்கள் கவனத்திற்கு படத்தின் கதை. டைரக்டர் ஆர்.வி.உதயகுமாரிடம் உதவியாளராக இருந்த கே.ஜெயக்குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.  சினேகனின் பாடல்வரிகளுக்கு பிரம்மா இசையமைக்க, பால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சிதம்பரம், கொள்ளிடம், மாயவரம், தரங்கம்பாடி, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றது.


ஈரோடு அன்னபூரணியில் ரிலீஸ் 

 http://mmimages.maalaimalar.com/Articles/2012/Jun/df98e275-e990-4928-aa94-103f7bebdf7e_S_secvpf.gif

6. குறும்புக்கார பசங்க - ஸ்ரீ பூங்காவனம் சினி கிரியேஷன்ஸ், ஸ்ரீ பெரியாயி பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் புதிய படம் குறும்புக்கார பசங்க. ஊரில் படித்துவிட்டு வேலை செய்யாமல் சுற்றி திரியும் நான்கு இளைஞர்கள் செய்யும் குறும்புத்தனங்கள். அவர்கள் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போட்டது என்பதே இப்படத்தின் கதை. இதில் எதார்த்த‌த்தை மீறாமல் திரைக்கதை அமைத்து இருக்கிறார் புதுமுகம் டி.சாமிதுரை. டைரக்டர்கள் லாரன்ஸ் மற்றும் மனோஜ் குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். மேலும் இவர் ஒரு மாற்றுதிறனாளியும் கூட.

இப்படத்தின் ஹீரோவாக சஞ்சீவ்வும், ஹீரோயினாக மோனிகாவும் நடிக்கி்ன்றனர். இவர்களுடன் பாண்டியராஜன், நெல்லை சிவா, செல்லதுரை, தவசி, பேபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை தயாரிப்பதுடன் வில்லனாகவும் நடிக்கிறார் ரவிராஜன். அருள்ராஜ் இசையமைக்க, பாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாமிதுரை.


 http://moviegalleri.net/wp-content/gallery/mayil-paarai-tamil-movie-stills/mayil_paarai_movie_stills_4003.jpg

7.  மயில் பாறை -ஓம் ஸ்ரீ லட்சுமி பிலிம்ஸ் சார்பில் டி.சக்கரவர்த்தி தயாரிக்கும் படம் மயில் பாறை. இதில் புதுமுகங்கள் அரசகுமார், தேவிநம்பியார் ஜோடியாக நடிக்கின்றனர். சசிரேகா, யுவராஜ், சரவணன், தேவி, சுரேஷ், ஆதவன், சிம்பு, சத்யமூர்த்தி, பிரியா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சிவக்குமார் பா. டைரக்டு செய்கிறார்.

கோவிலில் உள்ள வைர வேலை அபகரிக்க ஒரு கும்பல் முயற்சிக்கிறது. அவ்வூர் பஞ்சாயத்து தலைவர் பாதுகாப்பில் இருப்பதால் அவரை கொல்ல திட்டமிடுகின்றனர். அந்த கும்பலை பிடிக்க போலீசாரும் முனைகின்றனர்.
ஒளிப்பதிவு: அலெக்ஸ், இசை: ரவிவர்மா, எடிட்டிங்: துரைராஜ். 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBpfGZNZQusbqq4xfnisjI2EsepIDnWfO_axbmpQLqAztaCCdRaKXbUxutIIlSVIpWjwTH96VRABNBcKwUc0b23iG3hAC3fc2JK-7EwFGGxCI93PQHFzY0YpMbny0mGeK7MrP1pZvO-X0/s1600/NIMIDANGAL-TAMIL-AUDIO-CD.jpg

8.  நிமிடங்கள் - இந்தப்படம் 2009லயே ரெடி ஆகியும் இப்போதான் ரிலீஸ் ஆகி இருக்கு. க்ரைம் த்ரில்லர் போல .







http://moviestalk.doyouknow.in/images/2012.11/Kanavu-Kadhalan-Movie-Review-270712260136852.png


9. கனவுக்காதலன் - இந்தபப்டத்தைப்பற்றி கூகுள் பூரா தேடிட்டேன். ஒரு விபரமும் இல்லை. என்னய்யா மார்க்கெட்டிங்க் பண்றீங்க?



10.  ஏதோ ஒரு மலையாளப்படம்

2 comments:

vs.siva said...

Nice// 9. கனவுக்காதலன் - இந்தபப்டத்தைப்பற்றி கூகுள் பூரா தேடிட்டேன். ஒரு விபரமும் இல்லை. என்னய்யா மார்க்கெட்டிங்க் பண்றீங்க?
//Sir Remba Strictu..

Sivakasikaran said...

//இந்தபப்டத்தைப்பற்றி கூகுள் பூரா தேடிட்டேன். ஒரு விபரமும் இல்லை. என்னய்யா மார்க்கெட்டிங்க் பண்றீங்க?// அதான் உங்க ப்ளாக்ல வந்திருச்சே? வேற பெரிய மார்க்கெட்டிங் இனிமேல் தேவைப்படாது.. ஆனால் சினிமா சம்பந்தமாக இவ்வளவு விசயங்களை ஞாபகம் வைத்து அனைத்து தகவல்களையும் சரியா தருவதற்கு உங்களுக்கு நன்றிகள் & பாராட்டுகள்