Wednesday, January 02, 2013

2012-ம் ஆண்டில் 78 %டெல்லி பெண்களுக்கு செக்ஸ் கொடுமை:, மக்கள் அதிர்ச்சி

புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி, சிகிச்சை பலனின்றி சிங்கப்பூரில் உயிரிழந்தார். அவரது உடல், கடந்த 30ம் தேதி டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. மாணவியின் அஸ்தி நேற்று கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது. 


இந்த சடங்குக்கு பின்னர் மாணவியின் தந்தை கூறியதாவது:-எங்கள் கிராமத்தில் யாருக்காவது உடல் நலக்குறைவோ, விபத்தோ ஏற்பட்டால், 10 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அல்லது 25 கி.மீட்டர் தூரத்தில் உள்ள மாவட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும். கிராம சாலைகள் சரியில்லை. எனவே கிராமத்துக்குள் ஆம்புலன்ஸ் வரமுடியாது.

நோயாளியை கட்டிலில் படுக்க வைத்து, தோளில் சுமந்து சென்று சாலை வரை தோளில் சுமந்து செல்வோம். இதையெல்லாம் பார்த்து மனம் துடித்த என் மகள், ஒரு டாக்டராகி இந்த கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தீவிரமாக படித்தாள். கல்லூரி செலவுகளை சமாளிக்க இரவு 9 மணி முதல், அதிகாலை 5 மணி வரை பி.பி.ஓ.வில் வேலை செய்தாள். குழந்தைகளுக்கு டியூஷன் கற்றுத் தந்தாள்.


அவளது எதிர்காலைத்தைப் பற்றி நாங்கள் நிறைய ஆசைப்பட்டோம். ஆனால், எங்கள் ஆசைகளை எல்லாம், நிராசையாக்கிவிட்டு அவள் போய் சேர்ந்து விட்டாள். அவள் எங்களைவிட்டு மறைந்ததும் எங்கள் நம்பிக்கையும் அவளுடன் மறைந்துவிட்டது. எங்களுக்கு ஆதரவாக இருந்த நம் நாட்டு மக்களுக்கும், அரசு செய்த உதவிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். என் மகளின் கனவை நனவாக்கும் வகையில், அவளது நினைவாக எங்கள் கிராமத்தில் மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவியின் தாத்தா கூறுகையில் 'குற்றவாளிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கடும் தண்டனை விரைவாக வழங்கப்பட வேண்டும். மைனர் என்பதற்காக குற்றவாளிகளில் ஒருவனாக இருந்தவனுக்கு தண்டனையை குறைக்கக் கூடாது. தண்டனை வழங்குவதில் கருணை காட்டினால், அவன் வளர்ந்த பிறகு இந்த சமுதாயத்திற்கு பெரும் தீங்காக மாறி விடுவான். அவன் செய்த குற்றம் குழந்தைத்தனமானது அல்ல.

எனவே அவனை ஏன் மைனர் என்று கருத வேண்டும்? இந்த வழக்கில் எல்லோருக்கும் வழங்கும் தண்டனை அவனுக்கும் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்' என்றார். 


நியூஸ் 2 


 2012-ம் ஆண்டில் 78 சதவீத டெல்லி பெண்களுக்கு செக்ஸ் கொடுமை: ஆய்வில் தகவல்

புதுடெல்லி, ஜன. 2-

டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன்காரணமாக டெல்லி கற்பழிப்பு தலைநகர் என்று அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டில் (2012) டெல்லியில் 78 சதவீத பெண்கள் செக்ஸ் சித்ரவதைக்கு உள்ளாகி இருப்பதாக ஆய்வு தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. ஆங்கில பத்திரிக்கை ஒன்றும், தனியார் அமைப்பு ஒன்றும் நடத்திய ஆய்வில் இது தெரிந்தது.

கடந்த ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக செக்ஸ் கொடுமையில் 661 சம்பவம் நடந்துள்ளது. இதற்கு பெண்கள் அணியும் ஆடை ஒரு முக்கிய காரணம்


நன்றி - மாலை மலர்

0 comments: