டெல்லி சம்பவம்: முதல்வர் ஷீலா தீட்சித் -
போலீஸ் இடையே மோதல்!
Posted Date :
16:03 (25/12/2012)Last updated :
16:06 (25/12/2012)
புதுடெல்லி:
டெல்லியில் பலாத்காரத்திற்குள்ளான மாணவியிடம், மாஜிஸ்திரேட் வாக்கு மூலம்
பெற்றது குறித்த விவகாரத்தில் முதலமைச்சர் ஷீலா தீட்சித்திற்கும்,
காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியிடம் டெல்லி துணை டிவிஷனல் மாஜிஸ்திரேட் உஷா சதுர்தேவி,அண்மையில் வாக்கு மூலம் பெற்றார்.
அதனை தாம் விடியோவில் பதிவு செய்தபோது, டெல்லி காவல்துறையை சேர்ந்த 3 அதிகாரிகள் அதனை தடுத்ததாகவும்,தாங்கள் தயாரித்து வைத்துள்ள கேள்வி-பதில் அடங்கிய கேள்வித்தாளை கொடுத்து அதனை வாக்கு மூலமாக பெறுமாறு வற்புறுத்தியதாகவும், அதனை ஏற்க தாம் மறுத்தபோது, போலீஸ் அதிகாரிகள் தம்மை மிரட்டி தவறாக நடந்துகொண்ட்தாகவும் மாஜிஸ்திரேட் உஷா சதுர்தேவி புகார் கூறியிருந்தார்.

இது மிகவும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில்,டெல்லி முதலமைச்சர் ஷீலா
தீட்சித் இது தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சர்
சுஷில் குமார் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஏற்கனவே மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் வெடித்தபோது,டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இச்சம்பவத்திற்கு தாம் பொறுப்பேற்க முடியாது என்று தீட்சித் கூறியிருந்தார்.
டெல்லி காவல்துறையை மற்ற மாநிலங்களில் உள்ளதுபோன்று,மாநில அரசு பொறுப்பின்
கீழ் ஒப்படைக்க வேண்டும் என்று ஷீலா தீட்சித் நீண்ட காலமாகவே மத்திய அரசை
வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் மாஜிஸ்திரேட்டை தடுத்ததாக, மத்திய உள்துறை அமைச்சருக்கு ஷீலா
தீட்சித் எழுதிய கடிதத்தை ஊடகத்திற்கு கசியவிட்டதற்கு கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ள டெல்லி காவல்துறை, இதுகுறித்து உயர்மட்ட அளவிலான
விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த காவல்துறை செய்தி
தொடர்பாளர் ராஜன் பஹத், மாஜிஸ்திரேட்டை போலீஸ் அதிகாரிகள்
மிரட்டவோ,தடுக்கவோ இல்லை என்று கூறினார்.
இந்நிலையில் காவல்துறைக்கும், முதலமைச்சர் ஷீலா தீட்சித்திற்கும் இடையே
ஏற்பட்டுள்ள இந்த மோதல் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
thanx - vikatan
thanx - vikatan
0 comments:
Post a Comment