Monday, December 10, 2012

HIT LIST -சினிமா விமர்சனம்

http://www.kerals.com/kerala/wp-content/uploads/2012/09/The-Hit-List-Malayalam-Movie-Stills-1.jpgபோலீஸ் ஆஃபீசர் பொண்ணுன்னு தெரியாம 4 ரவுடிங்க அவளை ரேப் பண்ணிடறாங்க . அவர் என்கவுண்ட்டர்ல 3 பேரை கொலை பண்ணிடறாரு.4 வது ஆள் ஓவர் நக்கலாப்பேச  அவனைக்கொலை பண்ணாம “பீஸ்” பிடுங்கி அனுப்பிடறாரு. அவன் செம காண்ட் ஆகி சீரியல் கில்லரா மாறி போலீஸ் ஆஃபீசரா போட்டுத்தள்ளறான். அவனை எப்படி ஹீரோ கம் போலீஸ் ஆஃபீசர் பிடிக்கறார் என்பதே கதை .


தவமின்றிக்கிடைத்த வரமே சூப்பர் ஹிட் மெலோடி தந்த அன்பு பட ஹீரோ பாலா தான் இதுலயும் ஹீரோ, இயக்கம், தயாரிப்பு  எல்லாம்.பீர் சாப்பிட்டு  ஓவரா வீங்குன முகம். காட்டான் மாதிரி இருக்காரு. அதனால போலீஸ் கெட்டப் நல்லா பொருந்தி இருக்கு. பாவம் நடிப்புக்குத்தான் கஷ்டப்படுறாரு . 


மனைவியா காதல் சந்தியா , 13 நிமிஷம் வர்றார். ஒரு பாட்டு சீன்ல  லோ கட் ஜாக்கெட்ல ஸ்லோ மோஷன்ல ஓடி வர்றார். அது போதும்..இன்னொரு ஹீரோயின் இருக்காங்க. புதுமுகம் போல. நல்லா தான் இருக்கு. தேறிடும் .


வில்லன் நடிப்பு டாப் கிளாஸ். படம் பூரா அவர் ராஜ்யம்தான். அபார்ட்மென்ட் வாட்ச்மேனா அல்லது செக்யூரிட்டியா வரும் சசி கலிங்கப்பாவும் ஓக்கே


http://www.top10cinema.com/dataimages/17896/30-11-2012-17896-1-1.jpg



 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. சமுத்ரக்கனியை, நரேனை தலா 3 நிமிஷம் வர்ற காட்சிக்காக என்னமோ அவங்க தான் மெயின் ரோலே பண்ணின மாதிரி போஸ்டர்களில் , தியேட்டர் ஸ்டில்களில் , விளம்பரங்களில் மொள்ள மாரித்தனம் செய்தது .இது ஒரு மலையாளப்படம் என்ற வாசனையே தெரியாமல் பார்த்துக்கொண்டது 



2. ஹீரோ சாட்சியான வாட்ச்மேனை  கிளப் கூட்டிட்டுப்போய் சரக்கு அடிச்சுட்டு வாட்ச்மேனை பில் கட்டச்சொல்லும் எகத்தாளமான சீன்



3. தகதீனா தின்னா அப்டினு ஒரு குத்தாட்ட நைட் கிளப் பாட்டு செம கிக். 


4. வேட்டையாடு விளையாடு போலவே வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் குடுத்தது .. ஏன்னா ஹீரோவே தயாரிப்பாளரா இருந்தும் தங்கர் பச்சான் மாதிரி தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தாம  வில்லன் ரோலை கெத்தா காட்டினது



http://moviegalleri.net/wp-content/gallery/hit-list-movie-audio-launch/hit_list_movie_audio_launch_photos_stills_5a3f56d.jpg




மனம் கவர்ந்த வசனங்கள்



1.  எவன் கிட்டே மோதறோம்னு தெரிஞ்சுக்கிட்டு மோதுங்க . இப்படி ஆள் தெரியாம மோதுனா அட்ரஸ் இல்லாம போய்டுவீங்க ( நோ டவுட் , பஞ்ச் டயலாக்கேதான் ) 



2. பணம் கொடுக்கற மூஞ்சி எனக்குத்தேவை இல்லை. அது எவனா இருந்தா எனக்கென்ன? பணம் தான் தேவை 



3.  எல்லார் வாழ்க்கையிலும் நாம விரும்பும் சிலரும், நம்மை விரும்பும் சிலரும் இருப்பாங்க.. அவங்களை ஒரு நாள் நாம இழக்கத்தான் நேரிடும் 



4. நான் தண்ணி அடிக்கறது  எல்லாத்தையும் மறக்க , நீங்க தண்ணி அடிக்கறது  எதையும் மறக்காம இருக்க 




5. நஷ்டப்பரிகாரத்தை குடுத்துட்டாலும் நஷ்டம் ஆனது ஆனதுதானே? 



6. நீ என் எதிர்காலத்தைப்பத்தி கேட்டுட்டு இருக்கே.. ஆனா நான் இன்னும் கடந்த காலத்துல வாழ்ந்துட்டு இருக்கேன் 


7. உன் வாழ்க்கைல நீ கடைசியாப்பார்க்கப்போகும் முகம் என முகம் தான் ( ஹீரோ வில்லன் கிட்டே சொல்லும் பஞ்ச் )



http://www.kollywoodtoday.net/wp-content/uploads/2012/11/hitlist-movie-stills-32-300x200.jpg



 இயக்குநரிடம் ஏகப்பட்ட கேள்விகள் , லாஜிக் மிஸ்டேக்ஸ் இன்ஃபினிட்டிஸ்




1. ஹீரோ மனைவி இறந்த துக்கத்துல 2 வருஷமா இருக்கார் ஓக்கே, சஸ்பென்ஷன் முடிஞ்சதும்  டியூட்டில ஜாயின் பண்ணும்போது நீட்டா ஷேவ் பண்ணிட்டு ஜம்முனு பொக வேணாம்? 2 வருஷ தாடியோட  பஞ்சப்பரதேசி மாதிரி ( மன்னிக்க - இயக்குநர் பாலா, அதர்வா)  படம் முழுக்க தேவதாஸ் மாதிரி வர்றார்.  சகிக்கலை.. ஆளைப்பார்த்தா நமக்கு சுறு சுறுப்பு வரனும். தூக்கம் தான் வருது 




2. சைடு வில்லன் ஹீரோயினை ரேப் பண்ணனும்னு முடிவு பண்ணீட்டா பண்ணிட வேண்டியதுதானே? கேனயன் போல 20 அடியாளுங்க கூட போய் அவ கிட்டே “ நான் நினைச்சா இப்பவே உன்னை ரேப் பண்ண முடியும், ஆனா பண்ண மாட்டேன், 7 நாள் கழிச்சுத்தான் பண்ணுவேன்னு கெடு குடுத்துட்டு வர்றானே? அது என்ன கோயில் கும்பாபிஷேகமா? நல்ல நாள் பார்த்து பண்ண? ஒன்றே செய் , நன்றே செய் , அதுவும் இன்றே செய்னு பெரியவங்க  சொல்லி இருக்காங்க இல்லை? ராஸ்கல்ஸ்.. 



3. ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர், அவரைத்தவிர மற்ற எல்லாரும் க்ளோஸ் கட்டிங்க் பண்ணி இருக்காங்க. அவர் மட்டும் ஃபங்க் விட்டிருக்கார் . கேட்க ஆள் இல்லை . அவர் தானே தயாரிப்பும்? 



4. முதல் கொலை நடந்தப்ப அந்த போலீஸ் ஆஃபீசர் சட்டை பூரா ரத்தம் , அப்புறம்  பொலீஸ் வந்தப்ப ஒரே ஒரு இடத்துல மட்டும் ரத்தம் 



5. ஹீரோ ஹையர் ஆஃபீசர் அவரே ஒரு ரவுடியை அடிச்சு தோள்ல வேதாளம் தூக்கும் விக்ரமாதித்தன் மாதிரி போறார். அவருக்குப்பின்னால் போகும் ரியாஸ்கான் அவருக்கு கீழே வேலை சேயும் ஆஃபீசர் சம்சாரம் கூட செல் ஃபோன்ல பேசிட்டு வர்றார் ஜாலியா... எந்த ஆஃபீசர் சும்மா இருப்பார்? 


6. அபார்ட்மெண்ட்ல 67  குடி இருப்பு இருக்கு. எல்லா வீட்டு டூப்ளிகேட் சாவியும் எங்காவது செக்யூரிட்டி கிட்டே இருக்குமா? தேவைன்னா  போய் வாங்கிட்டு வருவான். சாவி ஓனர் கிட்டேதான் இருக்கும்


7 . கதைப்படி அபார்ட்மென்ட் வாட்ச்மேன்  வீட்ல ஆள் இல்லாதப்போ ஒவ்வொரு வீடா திறந்து டேபிள்ல இருக்கும் பணத்தை 1000 , அல்லது 2000 அப்டி அடிச்சுட்டு இருக்கார். அந்த கணக்குப்படி  அவர் சராசரி வார வருமானம் மினிமம் 67,000 ரூபா. ஆனா அவர் ரிஸ்க் எடுத்து கொலையாளியை வேவு பார்த்து போலீஸ்ல தகவல் சொல்ல கேட்கும் பணம் ஜஸ்ட் ரூ 50,000 . அதுக்கு அவர் அபார்ட்மெண்ட்லயே திருடிக்கலாமே? இன்னும் அதிகப்ப்ணம் கேட்கற மாதிரி சீன் வெச்சிருக்கலாம் 



8.  படத்துல கொலையாளியை வேவு பார்ப்பது , ஆதாரங்கள் சேக்ரிப்பது எல்லாமே அந்த வாட்ச்மேன் தான், 2 ஹீரோயின்களையும் கரெக்ட் பண்றது தவிர ஹீரோ என்ன தான் செய்யறார்?



http://i.ytimg.com/vi/gEF1Tnh4dnI/mqdefault.jpg



9. ஹீரோ கொலையாளியை அவன் வீட்ல சந்திக்கும்போது “ சர்ச் வாரண்ட் இருக்கா?ன்னு கேட்கும்போது ஹீரோ பம்மறார். வீட்ல அவர் எதிர்பார்த்த ஆதாரம் இல்லைன்னதும் ஏன் ரிட்டர்ன் ஆகறார்? வாட்ச்மேன் சாட்சி இருக்கு. நீ கன் வெச்சிருந்தியே எங்கே? என அப்பவே 2 தட்டு தட்டலாமே?  ஏன் பம்முறாரு? 



10. ஒரு சீன்ல மழை வந்துட்டு இருக்கு , ஹீரோ ஜன்னல் ஓரமா உக்காந்து லேப்டாப்ல என்னமோ பண்ணிட்டு இருக்காரு . மழை சாரல் அடிச்சு  லேப்டாப் நனையுது , அவர் கண்டுக்கவே இல்லை.. 


11. ஹீரோயின் ஏன் கேன்ம் மாதிரி ஒயிட் & ஒயிட் டிர்ஸ் போட்டுக்கிட்டு துப்பட்டா போடாம மழைல நனைஞ்சு ஹீரோ வீட்டு வாசல்ல நின்னு குற்ற வாளியை சீக்கிரம் பிடிங்கன்னு சொல்லிட்டு போகுது.? அதை ஃபோன்லயே சொல்லி இருக்கலாமே? 


12. டம்மி வில்லன் படம் போட்ட 3 வது ரீல்லயே ஹீரோயினை ரேப் பண்ணப்போறதா மிரட்டிடறான். ஹீரோயின் ஹீரோ கிட்டே அதை ஏன் முதல்லயே சொல்லலை? படம் போட்டு `12 வது ரீல்ல போனா போகுது , பெட்ரோல் விலை 2 ரூபா ஏறி இருக்கு என்பது மாதிரி அசால்ட்டா சொல்றாரே? 



13. ஹீரோ ஹீரோயின் கிட்டே உன் பேரு என்னன்னு கூட எனக்குத்தெரியாதுங்கறார். ஆனா அந்த சீனுக்கு முன்னால ஹீரோயின் ஹீரோவுக்கு எஸ் எம் எஸ் அனுப்புது. இவர் கூப்பிட்டு கால் பண்றாரு. அதுல ஹீரோயின் பேர் இருக்கு 


14. படத்தோட மெயின் கதை என்ன? க்ரைம் த்ரில்லர், சீரியல் கில்லர். அதை விறு விறுப்பா சொல்ல சான்ஸ் இருந்தும்  ஹீரோவோட அப்பாவை இழந்து ஹீரோ படும் சோகம், மனைவியை இழந்து படும் சோகம், ஹீரோயின் அண்ணன் இழந்து படும் சோகம் இத்தனை செண்ட்டிமெண்ட் லொள்ஸ் எதுக்கு? படத்துக்கு பயங்கர ஸ்பீடு பிரேக்கர்ஸ் 


15.  ஹீரோயின் லூஸ் மாதிரி “ போராட்டத்துல என் உயிரையும் தரத்தயார்”  அப்டிங்கறார். அவர் என்ன சத்தியாகிரகப்போராட்டத்துல கலந்துக்கிட்டாரா? வில்லனைப்பிடிக்க ஏதும் உதவி பண்ணாரா? எதுவும் இல்லை 



16.  ஹீரோ பளார்னு அறை வாங்கிட்டு அடி வாங்கறதுல ஒரு சுகம் இருக்குன்னு லூஸ் மாதிரி  உளர்றாரே ஏன்?



http://www.cinegoer.com/navigation/telugu-cinema/movies/hit-list/hit-list-telugu-movie-stills-1-10.jpg



17.  கைல போட வேண்டிய வளையலை ஹீரோயின் காதுல போட்டிருக்கே ஏன்? அதுதான் ரிங்கா? நல்ல வேளை தொப்புள்ல போடலை 



18. ஊர்ல கல்யாணம் ஆகாத 1008 நல்ல பசங்க இருந்தாலும் இந்த கேன ஹீரோயின்கள் ஏன் ஆல்ரெடி மேரேஜ் ஆன செக்ண்ட்ஸ் ஹீரோ கிட்டே வலியனா போய் விழுதுங்க?

19 .வில்லன் லூஸா? ஹீரோயினை கொல்லனும்னா கொல்லனும், ரேப் பண்ணனும்னா ரேப் பண்ணனும். எதுவுமே பண்ணாம கேனம் மாதிரி ஹீரோவுக்கு ஃபோனைப்போட்டு உன் ஆள் என் கஸ்டடில இன்ன இடத்துல இருக்கா. உனக்கு 10 நிமிஷம் டைம் தர்றேன், கண்டு பிடிச்சா அவ உனக்கு, இல்லைன்னா எனக்கு அப்டீங்கரான். கண்ணா மூச்சி விளையாட்டா நடக்குது? இந்த லட்சனத்துல வில்லன் மைக்ல  அப்பப்ப ரன்னிங்க் கமெண்ட்ரி வேற செம காமெடி


20. கொலை செஞ்சது இவன் தான் என நல்லா தெரியுது, ஆனா எந்த ஆதாரமும் இல்லைன்னு போலீஸ் சொல்லுது. ஆனா வில்லன் கைல எந்த கிளவுசும் போடாமதான் வாட்ச் மேனை கழுத்தை நெரிச்சு கொல்றான். அவன் கைரேகை வாட்ச்மேன் டெட் பாடில இருக்குமே? மேட்ச் பண்ணி பார்க்கலையா?


21 ஹீரோவுகு டிரஸ்ஸிங்க் சென்ஸ்னா என்னன்னே தெரியாதா? போலீஸ் ஆஃபீசர் அதுவும் க்ரைம் பிராஞ்ச் ஆஃபீசர் சிவில் டிரஸ்ல இருக்கும்போது நீட்டா பிளெயின் சர்ட் தான் போடுவாங்க. டுட்டோரியல் காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி ஸ்டோன் வாஸ் சர்ட்டும், கேவலமான பேண்ட்டும் போட்டிருக்காரு



22. வில்லனோட எண்ணம் போலீஸ்ங்க எல்லாரையும் போட்டுத்தள்ளுவது என்றால் அவர் ஏன் ராகுல் டிராவிட் மாதிரி கட்டை வெச்சு சிங்கிள் சிங்கிள் ரன்னா எடுக்கறாரு? பல இடங்கள்ல டோட்டல் டேமேஜ் பண்ண வாய்ப்பு இருந்தும் ஒரு ஒரு ஆளா ஏன் கொல்றார்?


23.வில்லன் ஒரு இன்ம்பொட்டண்ட். மேட்டருக்கு லாயக்கில்லை. அப்படிப்பட்டவர் ஒரு காட்சில லேடி எஸ் ஐ கிட்டே “ உன் பொண்ணை என் கிட்டே அனுப்பி வை அல்லது நீ வர்றியா?”ன்னு லூஸ் மாதிரி பேசறாரே? அவர்னாலதான் முடியாதே?


24. ஓப்பனிங்க் பில்டப்ல வில்லன் ஒரு ஹிட் லிஸ்ட் போட்டு 8 பேர் கொல்லப்போறேன், 2 பேரை கொன்னாச்சு, மீதி 6 பேர் பாக்கிங்கறார். ஆனா க்ளைமாக்ஸ்ல ஆல்ரெடி நான் பலரைக்கொன்னிருக்கேன், இன்னும் கொல்வேன் , கணக்கில்லைங்கறார். அப்புறம் அந்த 8 லிஸ்ட் என்ன இதுக்கோசரம் சொன்னார்? என்ன லிங்க் அந்த 8 பேருக்கும் ?


25.வாட்ச்மேனா வர்றவர் 8 வது மாடில இருந்து  2 கிமீ தூரத்துல இருக்கும் நீச்சல் குளத்துல இருக்கும் பெண்கள் குளிக்கும் காட்சியை நோக்கியா 62233 மாடல் ஃபோன்ல வீடியோ எடுக்கறார்.ரூ 9000 மதிப்புள்ள அந்த ஃபோன்ல அவ்வ்ளவு ரேஞ்ச் லாங்க் கவரேஜ் வசதி எப்போ வந்தது?அப்புறம் அவர் க்ளோசப்ல ஒரு லேடி குளிப்பதை 2 அடி தூரத்துல க்ளோசப்ல வாட்ச் பண்றார், அப்போ ஏன் வீடியோ எடுக்கலை?


http://www.cinespot.net/gallery/d/1006285-1/Hit+list+malayalam+movie+_11_.JPG




விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40 ( இது மலையாளப்படம் என்பதால் விமர்சனம் போட மாட்டாங்க )


 குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே




 சி பி  கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம். மோசம் இல்லை.. லேடீஸ் நெளிய வைக்கும் சில காட்சிகள் உண்டு. அதனால் பெண்கள் இந்தப்படத்தை தியேட்டரில் பார்ப்பதை தவிர்க்கலாம்




0 comments: