Saturday, December 29, 2012

கேடி பில்லா கில்லாடி ரங்கா - பாண்டிராஜ் பேட்டி

http://static.moviecrow.com/marquee/kedi-billa-killadi-ranga-first-look/8226_thumb_665.jpg

பாண்டிராஜ் பேட்டி

நல்ல சாப்பாடு மாதிரி சினிமா!

அமிர்தம் சூர்யா

2010-ல் சிறந்த வசனகர்த்தாவுக்கான தேசிய விருது, ஆசிய அளவில் சிறந்த இயக்குனருக்கானதங்கயானைவிருதுகளைப் பெற்றவர் பாண்டிராஜ். ‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினாவை அடுத்துகேடி பில்லா கில்லாடி ரங்காவை இயக்கும் அவரிடம் உரையாடியபோது ஈழ ஆதரவு, இன்றைய சினிமா ரசிகர்கள் தன்மை, தொப்புள் அநாகரிகம் பற்றியெல்லாம் காரசாரமாக பேசினார்
இந்தப் படத்தின் ஸ்பெஷாலிட்டி என்ன? காலத்துக்கு ஏற்ற குத்துப்பாட்டு உண்டா?
அப்பா, அம்மா, பிள்ளைகளின் உறவைப் பற்றிப் பேசும் படம்கேடி பில்லா கில்லாடி ரங்காவை பார்த்துட்டு பிள்ளைங்க அப்பாவுக்கு ஒரு போனை போட்டுஅப்பா சாப்பிட்டீங்களா?’ன்னு அக்கறையா கேட்பாங்க. அப்படி கேட்டா அதுதான் இந்தப் படத்தின் அசல் வெற்றி. பெற்றோர்கள் பாராட்டப் போகும் இந்தப் படத்தில் குத்துப்பாட்டு உண்டு. ஆனால் அது குடியின் கொடுமையைச் சொல்லும்படி இருக்கும்... ‘எவன் தண்ணி அடிக்ககத்துக் கொடுத்தானோ அவனை எங்காவது பார்த்தா சுடணும்டான்னு வரிகள் வந்து அட்வைஸ் பண்ணும்."
படத்தில் ஏதாவது ஒரு அட்வைஸ் சொல்றது, ஹீரோயின் இடுப்பு, தொப்புள் தெரியுதுன்னு ஊக்கு குத்தி மூடி ஷூட் பண்றதுன்னு - இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கே ஸார்?
தொப்புள் என்பது தாய்க்கும், சேய்க்குமான உன்னதமான உறவின் அடையாளம். தொப்புளை ஒரு செக்ஸியான பொருளாக மாற்றி பம்பரம் விட்டு, ஆம்லெட் போட்டு அபத்தமாக்கியது சினிமாவில்தான். தொப்புளைக் காட்டி வசூல் செய்யறதைவிட, ஊர்ல போய் வேற வேலை பார்க்கலாம்."



http://www.cutmirchi.com/upimages/1356491310_Killadi%20Movie%20Stills%2006.jpg
கோபப்படாதீங்க. தமிழ் சினிமா, ரசிகர்கள் டேஸ்டு மாறியிருக்கு இல்லையா?
நல்ல சாப்பாடு மாதிரி சினிமா, நல்ல டேஸ்டுக்காக 10 கிலோ மீட்டர் டிராவல் செய்து கூட சாப்பிடுறவங்க நம்ம ஆளுங்க. டேஸ்டான சினிமாவை நிச்சயம் ஜெயிக்க வைப்பாங்க. இன்னிக்கு இருக்கும் ரசிகன் ரொம்ப புத்திசாலி. பின்னணி இசையைக் கூட ஒரிஜினலா, காப்பியான்னு சொல்லிடுவான்."

இவ்வளவு வெளிப்படையான நீங்க ஈழ விஷயத்தில், சினிமா சங்க பிரச்னையில் கருத்து சொல்லாம ஒதுங்கி இருப்பது ஏன்?
பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றிக் கவலைப்படாம, சக மனிதனுக்கு உதவாத பலர் ஈழ மனிதர்களுக்கு குரல் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். தொடர்ந்து தன் முகத்தை மீடியாவில் ரிஜிஸ்டர் செய்து பதவியைக் கைப்பற்ற செய்யும் யுக்தியாக கருத்துச் சொல்லும் பல சினிமாக்காரர்களை எனக்குத் தெரியும். சினிமா என் தொழில். அதை நேர்மையா உண்மையா செய்யறேன். அதுதான் எனக்குத் தெரியும்."
கேடி பில்லா கில்லாடி ரங்காசீரியஸான கதையா?
திருச்சி பொன் மலையை ஒட்டியுள்ள இரயில்வே ஸ்டேஷனில் வலம் வரும் கதை இது. செட்டு போடாம லைவ்வா அங்கேயே எடுத்து இருக்கோம். ஒரிஜினல் பில்லா, ரங்காவும் இதுக்கும் சம்பந்தமில்லை! கேடித்தனத்தைக் கில்லாடித்தனத்தை ஜாலியாகச் சொல்லும் இளைஞர்களின் கதை. எதையும் போகிற போக்கில் காமெடியோடு சொன்னா மனசுல பதிஞ்சிடும்."
ஜாலியா, காமெடியா கதை சொல்லும் யுக்தியை யாரிடமிருந்து கற்றீர்கள்?
பெரிய விஷயத்தைக் கூட நகைச்சுவையோடு மெல்லிய வலியோடு சொல்லி நம்மைச் சிரிக்க வைக்கும் சார்லி சாப்ளின் யுக்தி என் திரைக் கதையில் இருக்கும்."
உங்கள் தனித்துவம் எது?
என்னுடைய தன்னம்பிக்கையை நானே பாராட்டிக் கொள்வது. இல்லாவிட்டால் படிக்காத குடும்பத்தில், வசதியற்ற கிராமத்தில், +2 வரை மட்டுமே படித்த நான் இப்படி வந்திருக்க முடியுமா? படிப்பை விட படிப்பினை தான் அவசியம்."
thanx - Kalki 25-12-12/30-12-12/



http://www.gtamilcinema.com/wp-content/uploads/2012/11/tamil-actress-kedi-billa-killadi-ranga-heroine-bindu-madhavi-stills23.jpg

0 comments: