சேலம்:""உத்திரமேரூர் கல்வெட்டில், மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்களுக்கு
என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். அதற்கான தகுதி நிர்ணயம் குறித்த
தகவலும், திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது. நேர்மையானவர்கள்
மட்டுமே பதவிக்கு வரவேண்டும் என்பது பற்றியும், அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது, அதுபோல் ஆட்சியாளர்கள் வரவேண்டும்,'' என,கோ
ஆப்டெக்ஸ் மேலான் இயக்குனர் சகாயம் பேசினார்.
லஞ்ச, ஊழலற்ற சமுதாயம் என்ற தலைப்பில், சேலம் குஜராத்தி திருமண மண்டபத்தில், சிறப்பு கருத்தரங்கு நேற்று நடந்தது. கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம் பேசியதாவது:ரத்தம் சிந்தி வாங்கிய தேசத்தில், லஞ்சமும், ஊழலும் பெருகி கிடக்கிறது. நாமக்கல் கலெக்டராக பணியாற்றியபோது, ராசிபுரத்தில் கல்லூரி விழாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற, இரு வாலிபர்கள், அங்கும், இங்குமாக ஓடியபடி சென்றனர்.
அவர்களை மறித்து, என்னுடைய உதவியாளர்கள் சோதனை செய்தபோது, அவர்கள் மது அருந்தியிருந்ததும், லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதும் தெரியவந்தது. உடனடியாக அவர்களை எச்சரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.அப்போது, அதில் ஒரு வாலிபர், 100 ரூபாயை எடுத்து என்னுடைய கையில் கொடுத்தான். லஞ்சம் கொடுத்தால், தப்பித்து விடலாம் என்ற பழக்கத்தை, இந்த சமூகம் உருவாக்கியுள்ளது.
மூன்று ஆண்டுக்கு முன், அப்போதைய முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அதில், "நான் சரியாக வேலை செய்யவில்லையென்றால், என்னை பணி நீக்கம் செய்யுங்கள். ஜாதி, மத ரீதியாக யாருக்காவது உதவியிருந்தால் கைது செய்யுங்கள். 19 ஆண்டு காலத்தில், யாரிடமாவது, ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்றிருந்தால், தூக்கிலிடுங்கள்' என, கூறினேன். என்னுடைய இருக்கைக்கு பின்புறம், "லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற வாசகம் தான் இருக்கும்.
உத்திரமேரூர் கல்வெட்டில், அப்போதே, மக்கள் பிரதிநிதிகள் எப்படியிருக்க வேண்டும். அவருக்கு உண்டான தகுதிகள் என்னன்ன, திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே வரவேண்டும் என, கூறப்பட்டுள்ளது.ஊழல் நாடுகள் பட்டியலில், இந்தியா, 140வது இடத்தில் உள்ளது. இது, இந்தியாவுக்கு நேர்ந்த தேசிய அவமானம். அரசு பள்ளிகளில், முன்பு ஆய்வு செய்தபோது, அங்குள்ள மாணவர்களிடம், உன்னுடைய லட்சியம் என்னவென்று கேட்டால், சம்பாதித்து அரிசி வாங்க வேண்டும் என்கின்றனர். அந்த அளவுக்கு வறுமையின் பிடியில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
லஞ்சத்தை ஒழிப்பதை பற்றி பேசுகின்றனர், ஆனால், பின்னர், அவர்களே லஞ்ச ஒழிப்பு போலீஸில் சிக்குகின்றனர். ஊழல், லஞ்சம் என்பது புற்றுநோய் போன்றது. அது தொற்றுநோயாக உருவெடுத்து, தேசத்தையே அழித்து விடும்.
தமிழகத்தில், கடந்த காலங்களில், 40 சதவீதம் இருந்த ஊழல், தற்போது, 80 சதவீதமாக உயர்ந்து விட்டது. கோவணம் தான், இன்றைய விவசாயியின் தேசிய அடையாளமாக மாறிவிட்டது. ஒவ்வொரு மாணவரும், லஞ்சம், ஊழலற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என, சபதம் ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ஜெயராம் கல்லூரி தலைவர் ராஜேந்திரபிரசாத், கன்ஸ்யூமர் வாய்ஸ் பூபதி, ஐந்தாவது தூண் ராசமாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

மக்கள் கருத்து =
1. என்றோ ஊழலுக்கு படித்து இருந்த அன்பழகனும், நெடுஞ்செழியனும், இன்னும்
பலரும் பலியாகி விட்டதின் பலன் இன்று ஊழல் பெருத்து விட்டது.எங்கும்
எதுலும், எவரிடமும் ஊழல்.மாற்றுவது கடினம்.அரசன் எவ்வழி மக்கள் அவ்வ்வழி.
2. என்றோ ஊழலுக்கு படித்து இருந்த அன்பழகனும், நெடுஞ்செழியனும், இன்னும்
பலரும் பலியாகி விட்டதின் பலன் இன்று ஊழல் பெருத்து விட்டது.எங்கும்
எதுலும், எவரிடமும் ஊழல்.மாற்றுவது கடினம்.அரசன் எவ்வழி மக்கள் அவ்வ்வழி.
3.
எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளை குறை சொல்வது நம் பழக்கம் ஆகி விட்டது.
நம்மில் எத்தனை பேர் சுத்தம்? கடையில் பொருள் வாங்கும்போது ரசீது கேட்டு
வாங்குகிறோமா? இதுவும் வரி ஏய்ப்புதானே? எத்தனை டாக்டர் பில்
கொடுக்கிறார்கள்? தனியார் பள்ளியில் எவ்வளவு பணம் கொடுத்தாவது பிள்ளைகளை
படிக்க வைக்கவில்லையா? சாலை விதிமுறைகளை எத்தனை பேர் கடை பிடிக்கிறோம்?
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்வதில்லையா? நம் குறைகளை மறைக்க
அடுத்தவர்களை குறை சொல்வது பழக்கம் ஆகி விட்டது
4. சகாயம் சொல்வது மிகவும் சரியானது ,.,. ஆனால் ரவுடி தனம் இருந்தால் தான்
அரசியலில் இருக்க முடியும் என ஆகிவிட்டது,. நல்லவர்களுக்கு vote போட ஆள்
இல்லை,. மொழி, இனம் என மகளை பிரிக்கும் அரசியல் வாதிகள் , புதிய ரத்தம்
வந்தால்தான் இது சாத்தியம்,. சில IAS காரர்கள் மதம் மாற்றுவதில் கவனம்
செலுதுகின்றேனர்,. அரசாங்க வேலையை சொந்த உபயோகம் சைகின்றேனர்,.
5. ஊழல் நாடுகள் பட்டியலில், இந்தியா, 140வது இடம் இதுகூட உலக சாதனைதானே.இந்த
ஊழல் பட்டியல் நிச்சியம் அதிகாரிகள் மக்களை தாண்டி அரசியல் வியாதிகள்தான்
முன்னணியில் இருப்பர் அவர்களில் முதல் ஐந்து இடங்களில் 1 தாத்தாவின்
திமுக.. 2 தியாக தீபத்தின் காங்கிரஸ். 3 மாயவதி கட்சி. 4லல்லு கட்சி. 5
அம்மா கட்சி. என்று வகுத்தாலும் தமிழனுக்குத்தான் முதலிடமும் கடைசி இடமும்.
6. சகாயம் சொல்வது கேட்க கஷ்டமாக இருக்கிறது ஊழல் ஒழிப்பை பற்றிபேசும்
அதிகாரிகள் சில நாட்களில் லஞ்ச ஊழல் ஒழிப்பு போலீசிடம் சிக்குகிறார்கள்
என்றார். உண்மையில் நடப்பது என்ன?( நேர்மையான) அதிகாரிகள் மிக குறைந்த
அளவில் இருப்பவர்களை, மாட்டி விட்டு அசிங்கபடுத்த ஒரு கூட்டம் அரசு
அலுவலகங்களில் முழு நேரமாக வேலை செய்வது திரு சகாயத்திற்கு தெரிந்து இருக்க
வேண்டுமே என் அனுபவத்தில், தற்போது வேலைக்கு சேரும் அரசு ஊழியர்கள்
அதிகபட்சம் நேர்மையாகவே இருக்கிறார்கள்.
என் 30 வருஷ அரசு பணி
அலுவலகத்தில், தற்போது வேலைக்கு சேரும் இளைஞர்கள் கொஞ்சம் முரட்டு தனமாக
பேசுகிறார்களே தவிர, லஞ்சத்தை கேட்பதில்லை அவர்கள் கொஞ்சம் கூட
மரியாதையுடன் இனிமையாக பழகினால், இன்னும் 20 ஆண்டுகளில் அரசு பணி நன்றாக
ஆகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது கடந்த 20=30 ஆண்டுகளில், ஊழல்
செயல்பாடுகளில் ஈடுபட்டவரை தண்டிக்க உபயோகபடுத்தவேண்டிய சட்டங்கள், பலவும்
ஊழலில் ஈடுபடாத உண்மை ஊழியர்களுக்கு எதிராக மிரட்டுவதற்கே
பயன்படுத்தப்பட்டு இருக்கிறது
7. பெருசுகள் ரிட்டயர் ஆனபின் பார்க் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு பேசும்
பேச்சு போல இருக்கு. இன்றைய நுகர்வோர் கலாசாரம் பெருகிய காலக் கட்டத்தில்
அவனவன் யாரைக் கொள்ளையடித்து ,அதை வைத்து தான் மட்டும் நன்றாக வாழலாம் என
நினைக்கும்போது .இதெல்லாம் எடுபடுமா?
அட தேவாலயங்களில் கூட பாவ மன்னிப்பு
கேட்பவர் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக பத்திரிக்கையில் வெளிவந்தது., தான்
செய்வதை பாவம் என நினைப்பதே பாவம் என நினைக்கும் காலம் இது .அரசு சம்பளம்
வாங்கிக்கொண்டு முழு நேர மதபோதகராக ஒரு சீனியர் ஐ ஏ எஸ் ஆபீசர்
பணிபுரிகிறார்.அதனை எதிர்ப்பீர்களா? நீங்க நல்ல உள்ளம் உள்ளதால் சூது வது
தெரியாம பேசறீங்க. உங்க போதகர் வேலை பலன் தருவதற்கு வாய்ப்பு மிக மிகக்
குறைவே .செவிடர்கள் காதில் சங்கு ஊதுறீங்க.அவங்க திரும்ப உங்களுக்கு அதையே
செய்யாமலிருந்தா சரி
8. சகாயம் அவர்கள் தவறான இடத்தில் இருக்கிற சரியான மனிதர். இவர் இருக்க
வேண்டிய இடம் பள்ளிக்கூடம் அங்கு இளம் வயதில் படிக்கும் மாணவர்கள் மனதில்
இது போன்ற விஷயங்களை விதைத்தால் எதிர்காலத்தில் சமுதாயம் பயனடையும்.
ஊழல்வாதிகள் அரசுயந்திரத்தில் உள்ளவர்கள் தான் திருவாளர் பொது ஜனங்கள் அல்ல
இது சாதாரண பொது அறிவு, அதுகூட தெரியாமல் அறிவுரை கூறவரக்கூடாது. கிரனைட்
வெட்ட அனுமதி கொடுக்கிறாயா? சரியான விதிப்படி அனுமதி கொடு. அரசு இடத்தை
ஆக்கிரமித்து, வீடுகட்டி, மின்சார இணைப்பு பெற்று, குடி நீர் இணைப்பு
பெற்று, வரியும் கட்டியபின் சுமார் ஒரு பத்து ஆண்டுகளுக்கு பின் அது
ஆக்கிரமிப்பு என்று வந்து அதை இடிப்பதை என்னென்பது.
இதுவரை இருந்த
அதிகாரிகளுக்கு அது தெரியாதா, இல்லை லஞ்சம் பெற்றுக்கொண்டு எல்லாம் செய்து
கொடுத்தார்களா, எப்படி எடுப்பது.எத்துனை கட்டடங்களை இடித்து இருப்பீர்கள்
இதுவரை அதை அனுமதித்த எத்துனை அதிகாரிமேல் இதுவரை நடவடிக்கை
எடுத்துள்ளீர்கள். மதுரை ஆட்சியர் அலுவலக எரிந்ததற்கு காரணம் அதில்
அதிகாரிகள் இடமாற்றம் , புரோமோஷன் சார்ந்த கோப்புகளே அதிகம் இருந்ததாக
நாளேடுகளில் செய்தி வந்ததை பார்க்கும் பொழுது கிரனைட் ஊழலில் சம்பந்தபட்ட
அதிகாரிகளை கண்டுவிடுவார்கள் என்று சதி செய்து எரிய விட்டு இருக்கலாம்
அல்லவா? அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும்.
தமிழ்நாட்டில் லஞ்சம் கொடுக்காமல் ஒரு பத்திர பதிவு செய்ய முடியுமா ஒரு
சாதாரண குடிமகனால்.
நன்றி - தினமலர்
0 comments:
Post a Comment