ஆச்சர்ய சுனேனா
அழ வைத்தார் சீனுராமசாமி!
ராகவ்குமார்
ஒரு சிறிய இடைவெளி, அதுக்குள்ள இத்தனை நாளாய் எங்கிருந்தாய்ன்னு கேட்டா எப்படி?" என்று அழகாகச் சிரிக்கிறார் சீனுராமசாமியின் ‘நீர்ப்பறவை’யில் எஸ்தராக நடித்து, நம்மையெல்லாம் அழவைத்த சுனேனா.
என்னோட கலரை கம்மியா காட்டறதுக்காக, டைரக்டர் சீனுராமசாமி தூத்துக்குடி மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் கடும் வெயிலில் நடக்க விட்டார். ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்த சமயத்தில் நான் ஒரு பாறையில மோதி காலில் அடிபட்டேன். கால் சரியாகற வரைக்கும் ஷூட்டிங்கை தள்ளி வைச்சார். ஒருநாள் ஸ்பாட்டில் எங்க யூனிட் ஆட்களுடன் கலகலப்பா சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தேன். திடீரென வந்த சீனு சார் இப்படியா சத்தம் போட்டு சிரிச்சுக்கிட்டிருப்பன்னு சொல்லி நல்லா திட்டி விட்டாரு. எனக்கு அழுகை முட்டிக்கிட்டு வந்திடுச்சு. அடக்கிக்கிட்டேன். உடனே டேக். ஒரு இறப்புக்காக வாய்விட்டு அழ வேண்டிய சீன். டைரக்டர் திட்டியது எனக்குள் குமுறிக்கிட்டே இருந்தது. டேக்கில் நிஜமாகவே கத்தி அழுதுட்டேன். டேக் முடிஞ்சதும் எல்லோரையும் கைதட்டச் சொன்னார் சீனு ராமசாமி.
என்கிட்ட வந்து, உன்னைத் திட்டினது உண்மையிலேயே நீ அழுது நடிக்கணும்ன்றதுக்காகத்தான், நான் திட்டியதால்தான் கிளசரின் போடாம உன்னால நடிக்க முடிஞ்சது. சூப்பர்’ன்னு பாராட்டினார்.
சர்ச்சில் வேலை செய்யும் பெண் கேரக்டரில் நடித்த நான் அமைதியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக ஷூட்டிங் நடக்கும் ஸ்பாட்டில் கூட அதிகமாக பேச விடமாட்டார் டைரக்டர். ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, திட்டு வாங்கி, ஷூட்டிங்கில் யார்கிட்டேயும் பேசாம நடிச்சதுக்குப் பலனை, ‘நீர்ப்பறவை’யின் ரிசல்ட்டில் உணர முடியுது. தேங்க்ஸ் டு டைரக்டர்."
இவ்வளவு சிவப்பா இருக்கீங்களே? கருப்பா காண்பிச்சது வருத்தமில்லையா?
கடல் பகுதியைச் சார்ந்தவங்க கொஞ்சம் கலர் கம்மியாத்தான் இருப்பாங்க. இருக்கறதை உள்ளபடியே காட்டியதில் வருத்தமில்லை. சந்தோஷம்தான்."
உங்களுக்குப் பிடித்த ஹீரோ யார்?
எல்லா ஹீரோக்களையும் பிடிக்கும்ங்றதுதான் இதமாதிரி வம்புல மாட்டிவிடும் கேள்விக்கு நான் சொல்ற பதில்."
நாம் செய்ய முடியவில்லையே என ஏங்கும் கேரக்டர் எது?
‘பிளாக்’ படத்தில் ராணிமுகர்ஜி செய்த கேரக்டர்."
‘ஐ லவ் யூ’ன்னு யாராவது உங்ககிட்ட சொல்லியிருக்காங்களா?
நான் கோபக்காரி. அதனால பயந்துகிட்டே ஐ லவ் யூன்னு யாரும் சொன்னதில்லை."
அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்...?
ஜி.வி. பிரகாஷின் இசையில் வெளிவந்த ‘பறபற’ பாடல்."
அடிக்கடி வரும் கனவு...?
மேலே
உயரமான இடத்திலிருந்து கீழே விழுற மாதிரி அடிக்கடி கனவு வருது."
கீழே விழாம தாங்கிப் பிடிக்கும் ஹீரோ யாரு?
இப்படி விபரீதமா எதையாவது கற்பனை பண்ணாதீங்க. அதிகாலை கனவுகளோட தூங்கிக்கிட்டிருக்கும்போது நான் வளர்க்கும் நாயும், பூனையும் என் காலை பிராண்டி எழுப்பி விட்டுடும்."
எந்த டைரக்டர் படத்தில் நடிக்க ஆசை?
நல்ல ஸ்க்ரிப்ட் இருக்கும் அனைத்து டைரக்டர்களின் படங்களில் நடிக்க ஆசை."
படித்த நாவலில் பிடித்தது?
தி அல்கமிஸ்ட்’ நாவல்."
உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்சது?
என் சிரிப்பு."
எப்ப கல்யாணம்...?
சின்னப் பொண்ணுகிட்ட கேட்கற கேள்வியா இது?"
நன்றி - கல்கி , புலவர் தருமி
1 comments:
இருக்கிறதை உள்ளபடியே காட்டியதில் வருத்தமில்லை சந்தோஷம் தான்னு போட்டுட்டு கீழ இப்புடி ஒரு போட்டோ!///அப்புறம் பார்ரா,எப்ப கல்யாணம் அப்புடீன்னு ஒரு கேள்வி,கீழ போட்டோ!!யோவ் என்னய்யா இது?
Post a Comment