Tuesday, December 04, 2012

அ.தி.மு.க.வில் இணைந்த நாஞ்சில் சம்பத் - கறுப்பு சரித்திரம்

சென்னை: ம.தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக இருந்து வந்த பிரபல நாஞ்சில் சம்பத் இன்று காலையில் முதல்வர் ஜெ.,வை சந்தித்து அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இவர் தி.மு.க.,பக்கம் சாய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க.,வில் இன்று சேர்ந்தார். இந்த செய்தி ம.தி.மு.க., தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

மனக்கசப்பில் இருந்தார்:

ம.தி.மு.க.,வில் வைகோவுக்கு இணையாக பெரும் திரளாக நாஞ்சில் சம்பத் பேச்சை கேட்க கூட்டம் சேரும். கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக கட்சி பொதுச்செயலர் வைகோவுடன் மனக்கசப்பில் இருந்து வந்த சம்பத் கட்சிப்பணியில் இருந்து விலகி இருந்தார். பிரசாரத்திற்கு எங்குமே செல்லவில்லை.

இந்நிலையில் இவர் அ.தி.மு.க., பொதுசெயலரை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டார். இவரது இழப்பு ம.தி.மு.க.,வுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.



மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், இன்று முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்ததாக தகவல் வெளியானது.


இது குறித்து அதிகார பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை ஆயினும், அவர் முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை: ம.தி.மு.க.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதை முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

நன்றி - தினமல்ர்



ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலராக வெகுகாலம் செல்வாக்குடன் இருந்தவர் நாஞ்சில் சம்பத். ஆனால், அண்மைக்காலமாக அவருக்கும் மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கும் கருத்து மோதல்கள் இருந்துவந்தன. இதை அடுத்து, மதிமுகவில் ஓரங்கட்டப்பட்டார் நாஞ்சில் சம்பத். அவரை பொதுக்கூட்டங்களுக்கு பேசுவதற்கு அழைக்க வேண்டாம் என்று வைகோ வாய்மொழி உத்தரவு இட்டிருந்ததாக செய்திகள் வந்தன.



இந்நிலையில், நாஞ்சில் சம்பத் திமுகவில் இணையக்  கூடும் என்றும், திமுகவினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாகவும் செய்திகள் கசிந்தன. ஆனால், தாம் திமுக பக்கம் போகப் போவதில்லை என்று நாஞ்சில் சம்பத் கூறிவந்தார். இத்தகைய சூழ்நிலையில் இன்று நாஞ்சில் சம்பத் அதிமுக.வில் இணைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


நன்றி - தினமணி

சென்னை: மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார்.


மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பிரபல பேச்சாளராகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத். கடந்த சில மாதங்களாக அவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.


வைகோவும் நாஞ்சில் சம்பத்தை தமது கட்சி ஏடான சங்கொலியில் மறைமுகமாக விமர்சித்தார். வைகோவை நாஞ்சில் சம்பத்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து நாஞ்சில் சம்பத் ஒப்புக் கொண்ட அனைத்துக் கூட்டங்களும் சட்டென ரத்து செய்யப்பட்டன.



ஆனால் அவரை கட்சியை விட்டு வைகோ நீக்கவில்லை. நாஞ்சில் சம்பத்தும் கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்தார். போட்டி மதிமுகவை உருவாக்கப் போவதாகவும் கூட செய்திகள் வலம் வந்தன. திமுகவில் சேருவார் என்றும் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் இன்று திடீரென அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.



சென்னையில் இன்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்த நாஞ்சில் சம்பத், அதிமுக உறுப்பினராக தம்மை இணைத்துக் கொண்டார்.


இனி நாஞ்சில் சம்பத் அதிமுகவின் பிரச்சார பீரங்கி!


ஒரிஜனல் மதிமுக நாங்களே- உரிமை கோருகிறார் நாஞ்சில் சம்பத்- போட்டி மதிமுக உருவாகிறது!


சென்னை: தமிழக அரசியலில் கட்சிகள் உடையும் அல்லது உடைக்கப்படும் காலம் இது! மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெரிய கட்சிகள் தங்களுக்கு அடுத்த கட்சிகளை உடைப்பது கால்ந்தோறும் தமிழக அரசியலில் நடைபெற்று வரும் ஒன்றுதான்! அண்மையில்தான் தேமுதிகவை அதிமுக உடைத்து வைத்திருக்கிறது. இந்நிலையில் ஓசையின்றி மதிமுகவும் உடையக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. உருவாகப் போகும் போட்டி மதிமுகவின் தலைவராக தற்போதைய கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் இருக்கக் கூடும் என்றே தெரிகிறது.



மதிமுக பொதுசெயலர் வைகோ மற்றும் நாஞ்சில் சம்பத் இடையேயான கருத்து வேறுபாடு உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. வைகோவோ, நாஞ்சில் சம்பத்தே கட்சியைவிட்டு விலகட்டும் என்று எண்ணுகிறார். ஆனால் நாஞ்சில் சம்பத்தே. வைகோவை விட கட்சிக்காக அனைத்து வகைகளில் அதிகம் உழைத்த நான் ஏன் என் கட்சியைவிட்டு விலகுவேன்... அது நடக்காது.. வேண்டுமானால் நீக்கிப்பாருங்கள்..நடப்பது என்னவென்று தெரியும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.



இன்று சன் நியூஸ தொலைக்காட்சிக்கு நாஞ்சில் சம்பத் அளித்த சிறப்புப் பேட்டியில் அவரது "போட்டி மதிமுக" மனநிலை வெளிப்படையாகவே வெளிப்பட்டது. அந்தப் பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியிருந்தாவது:



கடந்த 43 நாட்களாக என்னைப் பற்றி ஊடகங்களில் செய்தி வருவது என்பது தானாக வெளியிடப்படுவதல்ல.. யாரோ பற்ற வைத்துவிட வெளிவரும் செய்திகள்தான். என்னை மதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்களே இப்படி செய்தியை கசியவிட்டிருக்கின்றனர். ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த என்னை இப்படி பேசவைக்கிறவனாக மாற்றியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.



கருத்து வேறுபாடுகளுக்கு கதவு திறந்து வைக்கிற பழக்கம் என்னிடத்தில் இருந்தது இல்லை. எந்த ஒரு அத்துமீறலையும் நான் செய்ததும் இல்லை. எந்த ஒரு சிபாரிசுக்கும் சென்றது இல்லை. எம்.எல்.ஏ. பதவிக்கோ எம்.பி. பதவிக்கோ கோரிக்கை வைத்ததும் கிடையாது. எனக்கு விதிக்கப்பட்ட கடமையை நான் செவ்வனே செய்து வந்திருக்கிறேன்.


என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று வைகோ நீண்டகாலமாகவே திட்டமிட்டிருக்கிறார். அதற்கான ஒத்திகைதான் தற்போது நடைபெற்று வருகிறது.


கடந்த 43 நாட்களாக சர்ச்சைக்குரிய செய்திகள் வந்த பிறகும் என் மகளின் மீது சத்தியமிட்டு என்னால் எந்தப் பிரச்சனையும் வராது என்று சொன்ன பிறகும் சம்பத்துக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று வைகோ சொல்லாமல் சங்கொலி இதழில் என்னை இழித்தும் பழித்தும் எழுதுகிற வைகோவை ‘சாரைப் பாம்பு' என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?


தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் உட்கட்சி பிரச்சனையில் வெளியேற்றறப்பட்டிருக்கிறார். சிலர் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது என் உருவப்பொம்மையை என் சொந்த ஊரிலேயே கொளுத்தியிருக்கின்றனர். நான் கொளுத்தியவன் மீது குற்றம்சாட்டவில்லை. என் உருவபொம்மையைக் கொளுத்தச் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு என் சொந்த ஊரில் செல்வாக்கு இல்லை என்பதற்காகவே வைகோ திட்டமிட்டு நடத்திய நாடகம்தான் இது!



வைகோவுக்கு அதிமுக கூட்டணியைவிட்டால் வேறு கதி இல்லை. அதனால்தான் அதிமுக அரசு குறித்து விமர்சிப்பது இல்லை. அவர் அங்குதான் போய்சேருவார். அதற்காகத்தான் நாஞ்சில் சம்பத்துக்கு எம்.பி. பதவி கேட்டார் என்றெல்லாம் பரப்பிவிடுகின்றனர். செப்டம்பர் 7-ந் தேதி மாவட்ட செயலர்கள் கூட்டம் கூட நடைபெற்றது. அப்பொழுது யாரும் இதுபற்றி பேசவில்லையே!



என்னை மதிப்பவர்களை மட்டுமே நான் மதிப்பேன்.. என்னை மதிக்காதவர்களை மதிக்க மனசு வராது. ஒவ்வொரு ஊரிலும் யார் யார் கட்சிக்காக உழைக்கிறவர்கள் என்று வைகோவால் நிச்சயம் அடையாளம் காட்ட முடியாது. என்னால் முடியும். வைகோ பரப்பிவிடுவது போல் மதிமுக மாவட்ட செயலாளர்களை ஓரணியில் திரட்டவெல்லாம் முயற்சிக்கவும் இல்லை.. முயற்சிக்கவும் மாட்டேன். என்னிடத்தில் நாள்தோறும் என் தம்பிமார்கள் ஆதரவு தெரிவித்து பேசினாலும் அவர்களை எனக்கு ஆதரவாக இருக்கச் சொல்லி கேட்பதும் இல்லை.


மதிமுகவுக்காக வைகோவைக் காட்டிலும் கடுமையாக உழைக்கிறேன். அவரைக் காட்டிலும் தொண்டர்களின் அன்பைப் பெறுகிறேன். கட்சி எல்லைகளைக் கடந்து இலக்கியக் கூட்டங்கள், பட்டிமன்றங்களில் பங்கேற்கிறேன். கடல் கடந்து நாடுகளிலெல்லாம் பேசிவருகிறேன். என் இமேஜ் ஏறி வருகிறது. அதை அவரால் பொறுத்துக் கொள்ளவில்லை.


தரம்கெட்ட, அடுத்தவர்களின் இருப்பை ஒத்துக் கொள்ளாத வியாதியின் விளைவுதான் இது. நான் ஒருபோதும் அவருக்கு போட்டியாக என்னைக் கருதியது இல்லை. நான் பிகராக இருப்பதுதான் இப்பொழுது பிரச்சனை.


என்னைப் பொறுத்தவரை என்னை ஆட்கொண்ட தலைவனின் பெருமையைத்தான் பேசுவேனே தவிர அவர்களின் சிறுமையை ஒருபோதும் கோடிட்டுக் காட்டியது கிடையாது. நான் நாகரிகமாக பேசுவேனே தவிர நாலாந்தரமாக பேசமாட்டேன்...


நான் பாலைவிட பரிசுத்தமாவன். நான்குபேர் நகைக்கும்படியாக நடக்கமாட்டேன். நான் அரசியல்வாதியைப் போல் நடந்து கொள்ளமாட்டேன். மனிதனைப் போல் நடந்து கொள்வேன்.


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நான் வளர்த்த இயக்கம்.. அதில் இருந்து விலகமாட்டேன்.. விலகமாட்டேன்.



நான் வைகோவைக் காட்டிலும் அதிக மேடைகளில் பேசியிருக்கிறேன். அதிக வழக்குகளை சந்தித்திருக்கிறேன். அதிக அளவு பயணம் செய்திருக்கிறேன். ஒரு ஊருக்குப் போய் கூட்டம் நடத்தினால் 10 இளைஞர்களை கட்சிக்கு கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன். மேடைப் பேச்சு பேசிக் கொண்டு தின்றுவிட்டு உறங்குகிறவன் அல்ல இந்த நாஞ்சில் சம்பத்! நஞ்சு அருந்தச் சொன்னால் முதல் ஆளாக நிற்பவன் நாஞ்சில் சம்பத்!



என்னால் மதிமுகவுக்கு எப்போதும் பிரச்சனை வந்தது. தள்ளாடிய நிலையில் தலைமை எடுத்த முடிவு. அதனால் தத்தளித்தவர் நாங்கள்.


நெஞ்சிலே வக்கிரமத்தை வைத்துக் கொண்டு கருப்பை தேக்கி வைத்துக் கொண்டு என் கொடும்பாவியை கொளுத்தச் சொன்ன மனசாட்சியற்றவர் என்பதை தெரிந்து கொண்டதால்தான் வைகோவை என் மகள் திருமணத்துக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டேன்.


என்னை கட்சியைவிட்டு வைகோ நீக்கிப் பார்க்கட்டும். அப்போது என் தம்பிமார்கள் அனைவருடனும் சேர்ந்து முடிவெடுப்போம். காலம்தான் அதை தீர்மானிக்கும் என்றார்.


தாம் உருவாக்கிய வளர்த்த மதிமுகவை விட்டு தாம் ஒருபோதும் விலகமாட்டேன் என்றும் தமக்குப் பின்னால் தம்பிமார்கள் இருக்கிறார்கள் என்று மதிமுக தொண்டர்களைக் குறிப்பிட்டு நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதும் வைகோவைவிட மதிமுகவுக்காக பாடுபட்டவன் நானே என்று பிரகடனம் செய்திருப்பதும் நாஞ்சில் சம்பத் ஒரு தெளிவான முடிவாக அதாவது போட்டி மதிமுகவை உருவாக்கத்தான் போகிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.


இதனை உணர்த்தும்விதமாகத்தான் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், நான் எடுக்கப் போகும் முடிவால் எதிரிகள் அச்சப்படுவர் என்று கூறியிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாகர்கோவில்: எனது சொந்த ஊரில், அதுவும் என் தாய் பிறந்த ஊரில் எனது கொடும்பாவியை எரித்துள்ளனர். சொந்த ஊரில் எனக்கு செல்வாக்கு இல்லை என்று காட்டுவதற்காக இப்படிச் செய்துள்ளனர். யாருக்கு சொந்த ஊரில் செல்வாக்கு இல்லை என்பதை கலிங்கப்பட்டியில் போய் விசாரித்தால் தெரியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
வைகோ, நாஞ்சில் சம்பத் இடையே என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. இந்த நிலையில் நக்கீரன் இதழுக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில், அவரை சாரைப்பாம்பு என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இந்த நிலையி்ல சம்பத்தின் சொந்த ஊரில் அவரது கொடும்பாவியை மதிமுகவினர் கொளுத்தினர்.


கலிங்கப்பட்டி போய்ப் பார்த்தால் வைகோவின் செல்வாக்கு தெரியும்.. சம்பத் கடும் தாக்கு


இதுகுறித்து ஒரு இதழுக்கு சம்பத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
நாஞ்சில் சம்பத்தின் சொந்த ஊரில் அவருக்கு செல்வாக்கு இல்லை என்று காட்டுவதற்காக சிலர் நடத்திய நாடகமே எனது கொடும்பாவி கொளுத்தப்பட்ட சம்பவம். இதை கொளுத்த சொன்னவர்களுக்கும், கொளுத்தியவர்களுக்கும் இதனால் மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் அந்த மகிழ்ச்சிக்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன்.



ஆனாலும் பிதாவே இவர்களை மன்னியும். இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்கிறார்கள் என்று பிரார்த்தனை செய்வேன்.

மதிமுகவில் இருந்து என்னை புறக்கணிப்பதற்கான காரணத்தை தேடுகிறேன். மதிமுக இயக்கத்தின் வளர்ச்சிக்காக போராடியவன். மதிமுகவில் கொள்கை பிடிப்போடு இருந்ததால் முதலில் கைது செய்யப்பட்டவனும், முதலில் வழக்கை சந்தித்தவனும், முதல் விபத்தில் சிக்கியவனும் நான்.

இப்போது எனக்கு எதிராக கொடும்பாவி கொளுத்தியதன் மூலம் இன்னும் நான் இயக்கத்தில் இருக்கிறேன் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் என்னை புறக்கணிப்பதற்கான காரணத்தை இதுவரை யாரும் தெரிவிக்கவில்லை.

நான் இதுவரை 4 பேர் நகைக்கும்படி, முகம் சுழிக்கும்படி, பழிச்சொல் பேசும்படி நடந்ததில்லை. கழகத்தின் நிர்வாகத்தில் தலையிட்டதோ, அத்துமீறி நடந்து கொண்டதோ இல்லை. யாருக்காகவும் சிபாரிசுக்கும் போய் நின்றதில்லை. இயக்கத்தை சேதாரமின்றி வழி நடத்த இரவு பகலாக, பகல் இரவாக உழைத்துள்ளேன். இதற்கு பின்பும் நான் புறக்கணிக்கப்படுவதற்கான காரணத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.


மதிமுகவில் எனக்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை என்று காட்டுவதற்காகவே திட்டமிட்டு எனது சொந்த ஊரில், அதுவும் எனது தாய் பிறந்த ஊரில் என் கொடும்பாவி கொளுத்தப்பட்டுள்ளது. இது வைகோ நடத்திய நாடகம். சொந்த ஊரில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது பற்றி கலிங்கப்பட்டியில் போய் விசாரித்தால் தெரியும்.

திராவிட இயக்கத்தின் சமகால தமிழக அரசியலில் இதுவரை யாரும் தொடாத உச்சத்தை தொட்டவன் நான். எல்லா கட்சிகளும் என்னை விரும்புவார்கள். ஆனால் இதுபற்றி முடிவு எடுக்க நான் பலமுறை யோசிக்க வேண்டும்.
ஆனால் என்னை விட காலம் முக்கியமானது. காலம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்.

இன்னொன்று, அரசியலில் சேராமலேயே நான் சுடர் விட முடியும். அரசியல் எல்லை தாண்டி நான் இலக்கிய தளத்தில் கொடி பறக்கவிட்டவன். அந்த தளத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால் என்னால் மேலும் உயர முடியும்.

எனது இல்ல திருமண விழாவில் பங்கேற்க வைகோவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தேன். இப்போது ஏற்பட்ட நிலைமைக்கு பிறகு அவர் என் வீட்டு திருமண விழாவில் பங்கேற்க வரவேண்டாம் என்று கூறுகிறேன் என்றார் அவர்.

வைகோவை ‘சாரைப் பாம்பு’ என்று கூறிய நாஞ்சில் சம்பத்தின் உருவபொம்மை எரிப்பு

திருவட்டார்: திருவட்டார் அருகே நாஞ்சில் சம்பத்தின் சொந்த ஊரில் அவரின் உருவபொம்மையை மதிமுகவினர் தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


மதிமுகவின் முக்கிய பிரமுகரான நாஞ்சில் சம்பத் கடந்த வாரம் நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியில், வைகோ சத்தமில்லாமல் கடிக்கிற சாரைப்பாம்பு போல என்னை கடித்து எனக்கு வலியை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியிருந்தார்.


இந்த பேட்டி வெளியான உடன் மதிமுக வினர் பலரும் நாஞ்சில் சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரு அருகே உள்ள வேர்கிளம்பியில் திருவட்டாரு ஒன்றிய செயலாளர் சேம்ராஜ் தலைமையில் கூடிய மதிமுகவினர், நாஞ்சில் சம்பத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மதிமுகவை விட்டு வெளியேறு என்று கூறிய அவர்கள், நாஞ்சில் சம்பத்தின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர்.


இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த குமரி மாவட்ட பொறியியல் அணி அமைப்பாளர், சுரேஷ் குமார், தலைவர் வைகோவைப் பற்றி மதிமுக வில் இருந்து கொண்டே அவதூறு பரப்பி வருகிறார் நாஞ்சில் சம்பத் என்று கூறினார்.



அதிமுக ஆட்சிக் காலத்தில் நாஞ்சில் சம்பத்தின் வீட்டினை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அப்போது பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த வைகோ சங்கொலியில் கடிதம் எழுதினார். இதனை கண்ட மதிமுக தொண்டர்கள் பணம் அனுப்பி நாஞ்சில் சம்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்தனர் என்றார். இதனைக் கூட மறந்துவிட்டு அவர் தலைவரைப் பற்றியே அவதூறாக பேசி வருகிறார் என்று கூறினார். இதன் காரணமாகவே அவரது சொந்த ஊருக்கு அருகிலேயே இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம் என்றார்.



சென்னை: மலரக்கூடாது என்று மறுக்கப்படுகிற மொட்டாகவும், தாயின் மார்பகத்தில் பால் குடிக்கக் கூடாது என்று விலக்கப்படுற கன்றாகவும் என்னை ஒவ்வொரு நாளும் உதாசீனப்படுத்தி சத்தம் இல்லாமல் கடிக்கிற சாரைப்பாம்பு போல என்னை கடித்து எனக்கு வலியை ஏற்படுத்தி வருகிறார் வைகோ என்று கூறியுள்ளார் மதிமுகவின் முக்கியப் பிரமுகரான நாஞ்சில் சம்பத்.



விரைவில் இவர் மதிமுகவிலிருந்து வெளியேறப் போகிறார் அல்லது வெளியேற்றப்படப் போகிறார் என்று ஒரு பேச்சு நிலவி வரும் நிலையில் 'நக்கீரன்' இதழுக்குப் பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார் சம்பத். அதன் சில துளிகள்...



என் தரப்பில் நான் குற்றம் நினைக்கவில்லை. இயல்பாகவே எந்தத் தவறும் இழைக்கிற மனோபலம் எனக்கில்லை. வைகோ மனம் சுழிக்கும்படி அவரிடம் நான் எதுவும் கேட்கவும் இல்லை


18 ஆண்டு கால ம.தி.மு.க. பயணத்தில் 3 சட்டமன்றத் தேர்தல், 3 நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து ஒரு நாடறிந்த சொற்பொழிவாளன் என்ற நிலையில் எனக்கு ஒரு தொகுதி தாருங்கள் என்று கேட்கவும் இல்லை என்று கூறியுள்ள நாஞ்சிடம், ஒருவேளை நீங்கள் சீட் கேட்டிருந்தால் வைகோ தந்திருப்பாரா? என்ற கேள்விக்கு, அவர் முடிவை நம்பிக்கையோடு என்னால் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் நாஞ்சில்.



மேலும் உங்களை வைகோ, கட்சியில் இருந்து நீக்கிவிடுவார் என்ற அரசல் புரசல் செய்திகளை நீங்கள் நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, ஆமாம். 18 ஆண்டுகளாக எதிர்நீச்சல் போடுற மதிமுக கரை சேர வேண்டுமென்று அக்கறையோடு கடமையாற்றிய என்னை வைகோ சங்கொலியில் நான் ஒரு குடிலன் என்றும், விஷ விதை தூற்றுகிறவன் என்றும் மனசாட்சியற்ற முறையில் எழுதியிருக்கிறார்.


இதேபோல மலரக்கூடாது என்று மறுக்கப்படுகிற மொட்டாகவும், தாயின் மார்பகத்தில் பால் குடிக்கக் கூடாது என்று விலக்கப்படுற கன்றாகவும் என்னை ஒவ்வொரு நாளும் உதாசீனப்படுத்தி சத்தம் இல்லாமல் கடிக்கிற சாரைப்பாம்பு போல என்னை கடித்து எனக்கு வலியை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.


நீங்கள் தேமுதிகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, நான் தேமுதிகவை ஒரு இயக்கமாகவே நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.



கடைசியாக இரண்டு தலைவர்களுக்கு (கருணாநிதி, வைகோ) தொண்டனாக இருந்திருக்கிறீர்கள். அந்த இரு கட்சிகளுக்குமிடையே உள்ள வேறுபாடு என்ன என்ற கேள்விக்கு, இது விரிவாக எழுத வேண்டிய ஒரு புத்தகம். ஒன்றுமட்டும் சொல்வேன்; கலைஞர் அரை நூற்றாண்டு கால தமிழகத்தின் தலைப்புச் செய்தி என்று கூறியுள்ளார் சம்பத்.



இதன்மூலம் மதிமுகவிலிருந்து விலகினால் அவர் திமுக பக்கம் வரக் கூடும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் அவரை அதிமுகவுக்கு இழுக்கவும் முயற்சி நடக்கிறதாம்.


நன்றி - நக்கீரன் , தட்ஸ் தமிழ்

0 comments: