காதல் திருமணத்தை பா.ம.க. எதிர்க்கலை... எதிர்க்கலை...
எதிர்க்கலை! அதைத் தெளிவாப் புரிஞ்சுக்கோங்க. காதல் திருமணங்களையோ,
கலப்புத் திருமணங்களையோ நாங்க எதிர்க்கலைனு எழுதிக் கையெழுத்துப் போட்டுத்
தரத் தயார். எங்களுக்கும் காதல் பிடிக்கும். எங்களை ஏதோ காதலுக்கு வில்லன்
மாதிரியே எல்லோரும் சித்திரிச்சுட்டு இருக்காங்க. நானே பல காதல்
திருமணங்களை நடத்திவெச்சவன்தான்!'' - தடதடக்கத் தொடங்கினார் அன்புமணி
ராமதாஸ்.
''ஆக, தர்மபுரிக்
கலவரத்தில் பா.ம.க-வுக்குச் சம்பந்தமே இல்லை என்கிறீர்களா?''
'' 'என் பொண்ணைக் கடத்திட்டுப் போய் வெச்சுக்கிட்டு அஞ்சு லட்ச ரூபாய்
பணம் கேட்டு மிரட்டுறாங்க’னு பொண்ணைப் பெத்த எந்த அப்பனாவது உங்ககிட்ட
வந்து கதறி இருக்காங்களா? என்கிட்ட கதறி இருக்காங்க. தர்மபுரிக் கலவரம்
மட்டும்தானே உங்களுக்குத் தெரியும்... அதுக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்தை
உங்களுக்கு நான் சொல்றேன்... தர்மபுரியைச் சேர்ந்த ஒரு முக்கியப்
பிரமுகரோட பொண்ணு. ஸ்கூல் படிக்கிற வயசு. அவளை தலித் பையன் ஒருத்தன்
காதலிச்சு இழுத்துட்டு ஓடிப் போயிட்டான்.
அஞ்சு கோடி ரூபாய் பேரம் பேசி,
பணத்தை வாங்கிட்டு அந்தப் பொண்ணைத் திரும்பக் கொண்டுவந்து விட்டுட்டுப்
போயிட்டான். அந்த மாவட்டத்துல காதலைப் பணம் பறிக்கிற ஒரு பிசினஸாவே
பண்ணிட்டு இருக்காங்க. வசதியான வீட்டுப் பொண்ணுங்களாப் பார்த்து,
காதல்ங்கிற பேர்ல மனசை மயக்கி, பெத்தவங்ககிட்ட பணம் பறிக்கிறதுதான் இவங்க
வேலை.
நாய்க்கன்கொட்டாய் சம்பவத்துக்கு வன்னி யர்களோ, பா.ம.க-வினரோ காரணம்
இல்லை. அந்தச் சம்பவத்தில், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க.,
தே.மு.தி.க., கம்யூனிஸ்ட்டுனு அத்தனை கட்சி களைச் சேர்ந்தவங்களுக்கும்
பங்கு இருக்கு. பெண்களைக் கேலி செய்வது சாதிப் பிரச்னை கிடையாது. அது
சமூகப் பிரச்னை. நடந்த சம்பவத்தை நாங்க நியாயப்படுத்த விரும்பலை. நிச்சயம்
கண்டிக்கிறோம். ஆனா, ஒட்டுமொத்த அசம்பாவிதத்துக்கும் நாங்கதான் காரணம்னு
உருவாக்கப்பட்ட மாயத் தோற்றத்தை விலக்கச் செய்யும் பொறுப்பும்
எங்களுக்குத்தான் உண்டு. இந்த விவகாரத்தை எங்களுக்கு எதிரா சிலர்
தூண்டிவிடுறாங்க.''
''யார் அப்படித்
தூண்டிவிடுறாங்கனு சொல்ல முடியுமா?''
''வன்னியர்களும் தலித் மக்களும் ஒண்ணு சேரக் கூடாது. அப்படிச்
சேர்ந்துட்டா, திராவிடக் கட்சிகளுக்கு வேலை இல்லாமப் போயிடும். அதனால,
இரண்டு சமுதாயத்துக்கும் இடையில் குழப்பத்தை உண்டாக்க, 'தமிழினத்தின்
தலைவர்’ என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் கருணாநிதி, எங்களுக்கு எதிராக
திருமாவளவனைத் தூண்டிவிடுறார். திருமாவளவனும் அதைப் புரிந்துகொள்ளாமல்
வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிட்டு இருக்கார். திருமாவளவனைத் தூண்டிவிட்டுக்
குளிர் காய்ந்துகொண்டு இருப்பது கருணாநிதிதான்.''
'' 'வன்னியர்
சமூகத்துப் பெண்களை வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால், கையை
வெட்டுங் கள்’னு பேசி பிரச்னையை ஆரம்பிச்சது பா.ம.க-வின் காடுவெட்டி
குருதானே?''
''குரு சொன்னா, மக்கள் எல்லாரும் அப்படியே கேட்டுருவாங்களா?
'பா.ம.க-வுக்கு ஓட்டுப் போடுங்க’னு குரு சொல்லி, எல்லாரும் எங்களுக்கு
ஓட்டுப் போட்டாங்களா? வீட்ல பள்ளிக்கூடம் படிக்கிற பொண்ணை எவனாவது
காதல்ங்கிற பேர்ல இழுத்துட்டு ஓடினா, எப்படி வலிக்கும்? அந்த வலியும்
வேதனையும் கொடுத்த ஆதங்கத்துலதான், குரு அப்படிப் பேசினார். அவரும் காதலை
வெறுக்கலை. காதல்ங்கிற பேர்ல ஏமாத்துறவங்களைத்தான் திட்டினார். திரும்பவும்
சொல்றேன்... நானோ, அய்யாவோ, குருவோ, காதலுக்கு எதிரானவங்க இல்லை. உண்மையான
காதல்னா, உயிரைக் கொடுத்தாவது சேர்த்துவைக்கத் தயாரா இருக்கோம்.''
''எந்த நம்பிக்கையின்
அடிப்படையில், 2016-ல் ஆட்சியைப் பிடிப்போம்னு சொல்றீங்க?''
''நான் கேட்கிற ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுங்க... ஒரு தமிழன்
கர்நாடகாவிலேயோ, ஆந்திராவிலேயோ, கேரளாவிலேயோ போய் முதலமைச்சர் ஆக முடியுமா?
ஆனா, இங்கே பாருங்க... ஜெயலலிதா எந்த ஊர்னு நான் சொல்லித் தெரிய வேண்டியது
இல்லை. விஜயகாந்த், தமிழர் கிடையாது... பூர்வீகம் ஆந்திரா. வைகோவோட
பூர்வீகமும் தமிழ்நாடு கிடையாது. யாருக்கும் தெரியாத இன்னொரு தகவலும்
சொல்றேன்... 'தமிழினத் தலைவர்’னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிட்டு
இருக்கும் கருணாநிதியோட பூர்வீகமும் ஆந்திராதான். ஆனா, அவரு அதை ஏத்துக்க
மாட்டார். கருணாநிதியோட பூர்வீகம் ஆந்திரா என்பதற்கான ஆதாரங்கள் சீக்கிரமே
வெளிவரும். அதனால், தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆள வாய்ப்புக் கொடுங்கள் என
மக்களிடம் கேட்கப்போகிறோம். திராவிடம் அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து
ஆட்சியைப் பிடிப்போம்.''
''திராவிடம் இல்லாத
கட்சிகள்னா, தி.மு.க., அ.தி.மு.க, தே.மு.தி.க., ம.தி.மு.க. இல்லாம
ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வேறு யாருடன் கூட்டணி வைக்கப்போறீங்க?''
''இவங்க கூட்டணியே எங்களுக்குத் தேவை இல்லைங்க. தமிழ்நாட்டு மக்கள்
இருக்காங்க. அவங்க எங்களுக்கு ஓட்டுப் போடப்போறாங்க. தமிழனின் அடையாளத்தோடு
இருக்கும் கட்சி களோடு, நாங்க கூட்டணிவைப்போம். அந்தக் கூட்டணிக்கு நாங்க
தலைமை ஏற்போம். எங்களுக்கு அதற்கான எல்லாத் தகுதிகளும் இருக்கு.''
''நீங்கள்
மதுவிலக்குப் பிரசாரம் செய்துவருகிறீர்கள். ஆனால், 'ராமதாஸும் அவரது மகன்
அன்புமணியும் பெருங்குடிகாரர்கள்’ என்று வன்னியர் கூட்டமைப்பின் தலைவர்
சி.என்.ராமமூர்த்தி பேசியிருக்கிறாரே?''
''அவர் யாருன்னே எனக்குத் தெரியாதுங்க. செருப்புல இருக்கிற தூசியைப்
பத்தி எப்பவாச் சும் கவலைப்பட்டு இருக்கோமா? அப்படித்தான் இதுவும்.''
''பா.ம.க-வில்
உங்களுக்கு முக்கியப் பொறுப்பை ராமதாஸ் கொடுத்துவிட்டார். ஆனா,
தி.மு.க-வில் தலைவர் பதவிக்குப் போட்டி இருந்துட்டே இருக்கு. அந்தப்
பதவிக்கு ஸ்டாலினா... அழகிரியா... யார் உங்க சாய்ஸ்?''
''அய்யாவையும் கருணாநிதியை யும் தயவுசெஞ்சு ஒப்பிடாதீங்க. எந்தப்
பதவியிலும் இல்லாத ஒரே தலைவர் எங்க அய்யாதான். தி.மு.க-வில் அப்படியா சொல்
லுங்க? அப்பா, பையன், பேரன், மகள்னு ஒட்டு மொத்தக் குடும்பத்தோட
பிடியில்தானே அந்தக் கட்சி இருக்கு. அவங்க கட்சியைப் பத்திப் பேச எனக்கு
உரிமை கிடையாது. யாருக்கு அவங்க கட்சிக்குள் அதிக செல்வாக்கு இருக்கோ,
அவங்களுக்குப் பொறுப்பு கொடுக்கட்டும்!''
''சினிமாவைத்
தொடர்ந்து எதிர்த்து வந்த நீங்கள், இப்போது அமைதியாகிவிட்டீர்களே?''
''கட்-அவுட்டுக்கு பீர் அபிஷேகம், பால் அபிஷேகம் பண்றதைத்தான் நாங்க
எதிர்க்கிறோம். மத்தபடி எந்தக் காலத்திலும் நாங்க சினிமாவுக்கு எதிரானவங்க
கிடையாது. நானும் சரி... அய்யாவும் சரி... நிறையவே சினிமா பார்ப்போம். நல்ல
படம்னு சொன்னாங்கன்னா, மனைவி, குழந்தைங்களோட தியேட்டருக்குப் போய்ப் படம்
பார்ப்பேன். தீபாவளிக்குப் பிறகு 'துப்பாக்கி’, 'அம்மாவின் கைப்பேசி’,
'லைஃப் ஆஃப் பை’னு மூணு படங்கள் பார்த்துட்டோம்.''
''ஜெயலலிதா
ஆட்சிபற்றி?''
''இருண்ட காலம்... இருண்ட ஆட்சி. மின்சாரம் மட்டும் அல்ல... நிர்வாகமும்
சரியாக இல்லை. மக்களின் கோபத்துக்கு ஜெயலலிதா பதில் சொல்லியே ஆகணும்.
கருணாநிதிக்கு மாற்றாக இருக்கும்னு நினைச்சு, இந்தம்மாவுக்கு ஓட்டுப்
போட்டாங்க. இப்போ தப்பு செஞ்சுட்டோம்னு நினைச்சு மக்கள் வருத்தத்துல
இருக்காங்க.''
''தமிழகத்தில்
எதிர்க் கட்சியின் செயல்பாடு?''
''எவ்வளவு பெரிய பொறுப்பு அது? எவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் எல்லாம்
அந்தப் பதவியை அலங்கரிச்சு இருக்காங்க. இப்போ தமிழ்நாட்ல எவ்ளோ பிரச்னைகள்
இருக்கு... அதைப் பத்தி சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் குரல்
கொடுக்க வேண்டிய எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த், சொந்தக் கட்சிக்காரங்க
ளையே அடிக்கிறதும்பத்திரி கைக்காரங்களைத் திட்டுற துமா இருக்கார்.
அநாகரிகத் தின் உச்சத்தில் செயல்படு றார். ஒரு தலைவன் எப்பவும்
மத்தவங்களுக்கு எடுத்துக் காட்டா இருக்கணும். ஆனா, நிலவரம் அங்கே அப்படியா
இருக்கு? விஜயகாந்தைப் பத்தி இன்னும் எவ்வளவோ பேசலாம். ஆனா, இப்போ அது
வேணாம்!''
நன்றி - விகடன்
0 comments:
Post a Comment