Wednesday, December 19, 2012

டெல்லி லேடி டாக்டர் ரேப்பிஸ்ட் வாக்குமூலம்

பாடம் கற்பிக்க விரும்பினோம்': டெல்லி சம்பவ குற்றவாளி 



Posted Date : 18:19 (18/12/2012)Last updated : 18:31 (18/12/2012)
புதுடெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 23 வயது மாணவிக்கு  பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்குற்றத்தை புரிந்ததாக கைது  செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவன் விசாரணையின்போது தெரிவித்ததாக  காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.


டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக  4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் தேடப்பட்டு  வருகின்றனர்.


இதனை டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்த காவல்துறை  ஆணையர் நீரஜ் குமார்,இவ்வழக்கை விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்  என்று நீதிமன்றத்தை டெல்லி காவல்துறை கேட்டுக்கொள்ளும் என்றும்,அப்படி  அமைத்தால்தான் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என்றும் கூறினார்.

குற்றவாளிகள் மீது பாலியல் பலாதகார வழக்கு மட்டுமல்லாது, கொலை முயற்சி  வழக்கும் பதிவு செய்யப்படும் என தெரிவித்த நீரஜ் சிங், கைது செய்யப்பட்ட 4  பேர்களும் அப்பேருந்தின் டிரைவர் ராம் சிங், அவனது சகோதரன் முகேஷ், உடற்பயிற்சி  கூடத்தின் பயிற்சியாளர் வினய் ஷர்மா, பழ வியாபாரி பவன் குப்தா ஆகியோர் ஆவர்  என்றும், தப்பி ஓடிய இரண்டு பேரும் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

பாடம் கற்பிக்க விரும்பினோம்

இதனிடயே கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், அப்பெண்ணுடன் வந்த நண்பரை முதலில்  தாக்கியபோது,அப்பெண் அதனை தடுக்க முயற்சித்ததாகவும்,இதனால் அப்பெண்ணுக்கு  பாடம் கற்பிக்க வேண்டி தாங்கள் இச்செயலை செய்ததாகவும் விசாரணை நடத்திய  போலீஸ் அதிகாரிகளிடம் குற்றவாளி ஒருவன் கூறியதாக காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி  டெல்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள்  என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே,நாடாளுமன்றத்தில்  தெரிவித்துள்ளார்.



கற்பழிப்பு தலைநகராகும் டெல்லி!
Posted Date : 15:18 (18/12/2012)Last updated : 18:05 (18/12/2012)
டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட  சம்பவம்,ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி உள்ள நிலையில் 'டெல்லி-கற்பழிப்புக்கு  தலைநகர்'என்ற நிலையை நோக்கி செல்வதாக சொல்லி அதிரவைக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு  அமைப்பின் புள்ளிவிவரம் ஒன்று!

டெல்லியில் கடந்த ஞாயிறன்று இரவில், 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி  ஒருவர் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் பேருந்தில் வீடு  திரும்பிக்கொண்டு இருந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணின் நண்பரை  தாக்கிவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது.பின்னர் அவர்கள்  இருவரையும் ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் டெல்லிவாசிகளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில்,மகளிர் தேசிய  ஆணையம் முதல் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் வரை இவ்விவகாரத்தில்  தலையிட்டதால், காவல்துறை முழு வீச்சில் குற்றவாளிகளை பிடிக்க களமிறங்கியது.

பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், அம்மாணவியின் நண்பர்  குற்றவாளிகளின் அடையாளம் குறித்து தெரிவித்த சில தகவலின் அடிப்படையில் 3 பேர்  கைது செய்யப்பட்டனர்.
24 மணி நேரத்தில் வ்ளைககப்பட்ட குற்றவாளிகள்

தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவின் உதவியோடு, அந்த  பேருந்தை அடையாளம் கண்ட காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள பேருந்துகள்  நிறுத்துமிடத்தில் சோதனை செய்ததில், அந்த பேருந்து கண்டறியப்பட்டது. அதன்  ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தியதில், பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்ல  அந்த பேருந்து பயன்படுத்தப்பட்டு வந்ததும், அதன் ஓட்டுநர் ராம்  சிங் என்ற விவரமும்  தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர்களின் செல்போன்களை  குற்றவாளிகளை பிடுங்கி வைததிருந்தனர். அந்த செல்போன்களுக்கு காவல்துறையினர்  எஸ்எம்எஸ் அனுப்பிய போது, அதில் ஒன்று செயல்பாட்டில் இருந்ததால், அந்த  இடத்தை தொலைத்தொடர்பு உதவியோடு கண்டறிந்த காவல்துறையினர், அதன் மூலம்  இரண்டாவது குற்றவாளியையும் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் அளித்த தகவலின்  அடிப்படையில் மேலும் 2 குற்றவாளி கள் கைது செய்யப்பட்டு, மேலும் 2 பேர் தேடப்பட்டு  வருகின்றனர்.
டெல்லியில்  செய்தியாளர்களிடம் இது தொடர்பான விவரங்களை தெரிவித்த
டெல்லி காவல்துறை ஆணையர்  நீரஜ் குமார்,  கைது செய்யப்பட்ட 4 பேர்களும் அப்பேருந்தின் டிரைவர் ராம் சிங், அவனது சகோதரன் முகேஷ், உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர் வினய் ஷர்மா, பழ வியாபாரி பவன் குப்தா ஆகியோர்  என்றும், தப்பி ஓடிய இரண்டு பேரும் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேற்று பல்வேறு அறுவை சிகிச்சைகள்  செய்யப்பட்டு, தற்போது ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள  மருத்துவர்கள், அவரது அடிவயிற்றுப் பகுதி சரி  செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
மாணவ, மாணவிகள் போராட்டம்

இந்நிலையில் இந்த சம்பவம் டெல்லி மாணவ,மாணவியர்களிடையேயும் மிகுந்த  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்கள் இன்று டெல்லியின் வீதியில் இறங்கி  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை  என்றும் மாணவிகள் கூறினர். 

அதிர்ந்த நாடாளுமன்றம்

இதுஒருபுறம் இருக்க டெல்லி மாணவி பலாதகார நிகழ்வு நாடாளுமன்றத்திலும் இன்று  எதிரொலித்தது.

மக்களவையில் இன்று இப்பிரச்னையை எழுப்பிய பா.ஜனதாவினர் கேள்வி நேரத்தை ரத்து  செய்துவிட்டு இந்த சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் வலியுறுத்தியதோடு,  உள்துளை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்  என்றும் கோரினர்.

இப்பிரச்னை தொடர்பாக பேசிய மக்களவை எதிர்கட்சித்தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்,  பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத் தண்டனை விதிக்க வேண்டும்  என்று கூறினார்.

நாட்டின் தலைநகரில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது என்று கூறிய  அவர், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாகவும்  குற்றம்சாட்டினார்.மேலும் பல்வேறு கட்சி உறுப்பினர்களும் இப்பிரச்னை குறித்து தங்களது  கவலையை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில்,நாடாளுமன்றத்தின் முன்பாக புதன்கிழமையன்று தர்ணா போராட்டம்  நடத்தவும் பா.ஜனதா எம்.பி.க்கள் தீர்மானித்துள்ளனர்.

டெல்லிக்கு முதலிடம்

இதனிடையே பாலியல் பலாத்கார நிகழ்வில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக தேசிய  குற்றப் புலனாய்வு அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள், விஷமிகளால் பாலியல்  பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ளனர்.டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பையில் 239  பெண்களுக்கு இக்கொடுமை நிகழ்ந்துள்ளது.

இத்தனைக்கும் டெல்லியைவிட மும்பையில் சுமார் 2 மில்லியன் மக்கள் அதிகமாக  உள்ளபோதிலும்,பாதுகாப்பு அதிகம் உள்ளதாக கூறப்படும் டெல்லியை ஒப்பிடுகையில்  மும்பையில் பாதி அளவே இக்குற்றங்கள் நிகழ்வதாகவும் அது தெரிவிக்கிறது.

தவிர கடந்த ஆண்டு கொல்கத்தாவில் 47 கற்பழிப்பு குற்றங்களும், சென்னையில் 76  மற்றும் பெங்களூரில் 96 கற்பழிப்பு குற்றங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் அந்த தகவல்  கூறுகிறது.

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கற்பழிப்பு குற்றங்களில் மிக மோசமாக  இருக்கும் மாநிலம் டெல்லிதான் என்கிறது அந்த அறிக்கை.

நாட்டின் தலைநகராக இருப்பதில்தான் டெல்லிக்கு பெருமையே தவிர,கற்பழிப்புக்கு  தலைநகராக இருப்பதில் அல்ல...!




டெல்லி மாணவியின் முக்கிய உடல் உறுப்புகள் சேதம்!
Posted Date : 12:16 (19/12/2012)Last updated : 12:22 (19/12/2012)
புதுடெல்லி: 6 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான டெல்லி  மாணவியின் சில முக்கிய உடல் உறுப்புகள் நிரந்தரமாக சேதமடைந்துள்ளதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி சரப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வரும்  அம்மாணவியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு நேரில் சென்று  பார்த்து, அம்மாணவியின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ஒருபுறம் குற்றவாளிகளை விரைவில் தண்டிக்க வேண்டும் என நாடு முழுவதும் குரல்கள்  பலமாக ஒலித்துவரும் நிலையில்,மறுபுறம் பாதிக்கப்பட்ட அம்மாணவி உயிருக்கு போராடி  வருகிறார்.

குறிப்பாக அம்மாணவியின் சில அதிமுக்கிய உடல் உறுப்புகள் நிரந்தரமாக  சேதமடைந்துவிட்டதாக, அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை அம்மாணவியின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட  நிலையில்,இரவில் மீண்டும் மோசமடைந்ததாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், இது  மிகவும் கடுமையான மற்றும் வழக்கத்தில் இல்லாத 'மருத்துவ கேஸ்' என்றும்  கூறியுள்ளனர்.  

ஒருவர் தொடர்ந்து 72 மணி நேரத்திற்கு மேல் 


இத்தகைய நிலையில் இருந்தால் அவரது  நுரையீரலில் தொற்று ஏற்பட்டுவிடும் என்றும், இந்நிலையில் அப்பெண்ணுக்கு  செயற்கை  சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு 65 மணி நேரத்திற்கும் அதிகமாகிவிட்டதாகவும்  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


நன்றி - விகடன் 


டில்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்ட சம்பவம், நேற்று பார்லிமென்டின் இரு சபைகளிலும் எதிரொலித்து, கடும் அமளியை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னைக்காக, ராஜ்யசபா அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.""இந்த கற்பழிப்பு சம்பவம், நாட்டையே வெட்கி தலை குனிய வைத்து விட்டது. இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, குற்றவியல் சட்டத்தில், விரைவில், உரிய திருத்தங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், சுசில் குமார் ஷிண்டே கூறினார்.

டில்லியில், கடந்த ஞாயிறன்று இரவு, நண்பருடன் பஸ்சில் பயணித்த, மருத்துவ மாணவி, ஏழு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். அவரது நண்பரும், கடுமையாகத் தாக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்டார். நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய, இந்த கொடூர சம்பவம், நேற்று பார்லிமென்டில் எதிரொலித்தது.காலையில், ராஜ்யசபா கூடியதும் கேள்வி நேரம் ஆரம்பமானது. அப்போது, பா.ஜ., மூத்த தலைவரான வெங்கையாநாயுடு எழுந்து, மருத்துவ மாணவி கற்பழிப்பு பிரச்னையை கிளப்பினார். அவருடன் சேர்ந்து, பா.ஜ., உள்ளிட்ட பிற கட்சிகளின் எம்.பி.,க்களும், குரல் கொடுத்தனர்.

உடன், சபைத் தலைவர் ஹமீது அன்சாரி, ""அரசியல் காரணங்களுக்காகவே, கேள்வி நேரம் இடையூறு செய்யப்படுகிறது. இது மனித உரிமை மற்றும் பலாத்கார விவகாரம். இதை அரசியலாக்க வேண்டாம்,'' என்றார்.

பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் ராஜிவ் சுக்லாவும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களை, சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும், அமளி தொடர்ந்தது. இதனால், சபை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியபோதும், அமளி தொடர்ந்ததால், மறுபடியும் சபை ஒத்திவைக்கப்பட்டது.இதன்பின், பூஜ்ஜிய நேரம் துவங்கியதும், அனைத்து கட்சிகளின், எம்.பி.,க்களும், இந்தப் பிரச்னை குறித்துப் பேசினர்.

மைத்ரேயன் - அ.தி.மு.க.,: இந்த கொடூர காரியத்தை செய்தவர்களுக்கு, அதிகபட்ச தண்டனையான, மரண தண்டனை வழங்க வேண்டும்.
ராம் ஜெத்மலானி - பா.ஜ.,: டில்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமாரை, நீக்க வேண்டும்.
ஜெயா பச்சன் - சமாஜ்வாதி: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்; அதுவும் காலம்தாழ்த்தாது, நடவடிக்கை எடுக் வேண்டும்.
ரேணுகா சவுத்ரி - காங்.,: இளம் பெண்ணின் மீது நடத்தப்பட்டுள்ள, இந்த கொடூர அத்துமீறலுக்கு, எவ்வளவு பணத்தை இழப்பீடாக கொடுத்தாலும், அது ஈடாகாது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல், பொதுமக்கள் மத்தியில், நம்பிக்கையை ஏற்படுத்தும் பொறுப்பு போலீசுக்கு உள்ளது.
மாயாவதி - பகுஜன் சமாஜ்: இதுபோன்ற கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், சட்ட விதிகளை திருத்த வேண்டியது அவசியம்.
வசந்தி ஸ்டான்லி ( தி.மு.க.),: இந்த கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு, மரண தண்டனை வழங்க வேண்டும். இந்த சம்பவம் மூலம், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் வரிசையில், இந்தியாவும் சேர்ந்துள்ளது.

இறுதியாக பேசிய, உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியதாவது:இந்த கற்பழிப்பு சம்பவம், நாட்டையே வெட்கி தலைகுனிய வைத்துள்ளது. இனி, இது போன்ற கொடூர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, கடும் தண்டனை வழங்கும் வகையில், புதிய சட்டங்கள் இயற்றப்படும். இதற்காக, குற்றவியல் சட்டத்தில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பான மசோதா, விரைவில் பார்லிமென்டில் தாக்கலாகும்.இவ்வாறு சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.

லோக்சபாவிலும், டில்லி கற்பழிப்பு விவகாரம் குறித்து, பேச அனுமதிக்கப்பட்டது.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:இந்த கொடூர செயலில், மொத்தம், ஏழு பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில், இன்னும் இரண்டு பேரை, போலீசார் கைது செய்யவில்லை. நாட்டின் தலைநகரான டில்லியில், பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை.டில்லி நகரின் சட்டம் - ஒழுங்கு என்பது, மாநில அரசின் கைகளில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, நடந்துள்ள சம்பவத்துக்கு, மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். பள்ளி பேருந்தில், இதுபோன்ற அநாகரிக சம்பவம், நடைபெற்றுள்ளது.இந்த சம்பவம் குறித்து, உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை அளிக்க வேண்டும்.இவ்வாறு சுஷ்மா பேசினார்.

திருமாவளவன் பேச்சு -எம்.பி.,க்கள் எதிர்ப்பு:
லோக்சபாவில், நேற்று பூஜ்ஜிய நேரம் ஆரம்பித்ததும், தமிழகத்தைச் சேர்ந்த, சிதம்பரம் லோக்சபா தொகுதி, எம்.பி., திருமாவளவன் எழுந்து, தர்மபுரி விவகாரத்தை கிளப்பினார். அவர் பேசியதாவது:தர்மபுரி அருகே, நாய்க்கன் கோட்டையில் உள்ள நத்தம், "காலனி' அண்ணாநகர் போன்ற, தலித் கிராமங்களை, 3,000 பேர் கொண்ட கும்பல், சூறையாடியது. ஏறத்தாழ, 4 மணி நேரம், தொடர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. வன்முறையாளர்கள், நின்று நிதானமாக அனைத்து வீடுகளையும், தாக்கி விட்டு சென்றுள்ளனர். இருந்தும், போலீசார் அவர்களை தடுக்கவில்லை. வன்முறையாளர்களின் தாக்குதலின் போது, போலீசார் வேடிக்கை பார்த்துள்ளனர்.இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

உடன், தம்பித்துரை, செம்மலை, வேணுகோபால் உட்பட, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பலரும் எழுந்து, "மாநில பிரச்னைகளை இங்கு பேசக் கூடாது' என எதிர்ப்புத் தெரிவித்ததால், அமளி ஏற்பட்டது. இதையடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.

சபை மீண்டும் கூடிய போது, அ.தி.மு.க., - எம்.பி., தம்பித்துரை பேசியதாவது:தமிழகத்தில், பொது மக்களின் நன்மை கருதி, அரசு கேபிள் "டிவி' சேவை துவங்கி, நடைபெற்று வருகிறது. குறைந்த கட்டணத்தில், கேபிள் சேவை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்திற்கு, டிஜிட்டல் தொழில் நுட்பம் அவசியம்.என்ன காரணத்தினாலோ, இதற்கான ஒப்புதலை வழங்க, மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய, இது போன்ற திட்டங்களை, மத்திய அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அதனால், விரைவில் இந்த திட்டத்திற்கு, டிஜிட்டல் அனுமதி வழங்கிட வேண்டும்.இவ்வாறு தம்பித்துரை பேசினார்.

- நமது டில்லி நிருபர் -



டில்லியில் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் பார்லி.,யில் குரல் எழுப்பினர்.
டில்லியில் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவியை ஒரு கும்பல் கற்பழித்து தாக்கி பஸ்சில் இருந்து தூக்கி வெளியே வீசி சென்று விட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று லோக்சபா துவங்கியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நோட்டீஸ் வழங்கியது. ஆனால் சபாநாயகர் நிராகரித்தார். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது.

ராஜ்யசபா ஒத்திவைப்பு :


ராஜ்யசபாவில் எழுந்த அமளி காரணாமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மாணவி கற்பழிப்பு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுக்கு பஸ்சில் இருந்த ரகசிய காமிரா உதவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்,


மாணவருக்கு ஆபரேஷன்:


இதற்கிடையில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கும், உடன் இருந்த அவரது நண்பருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவருக்கு ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். கற்பழிக்கப்பட்ட மாணவி இன்னும் மயக்கம் தெளியாமல் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார்.

சுஷ்மா சுவராஜ் பேட்டி:

இந்த கற்பழிப்பு சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இது மிக முக்கிய விஷயமாக கருதுகிறோம். அனைத்து உறுப்பினர்களும் பார்லி.,யில் எழுப்புவோம் என்றார். இந்த விவகாரம் தொடர்பாக மதியம் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே விளக்கம் அளிப்பார் என தெரிகிறது,


போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை:

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து டில்லி வசந்த்விகார் போலீஸ் ஸ்டேஷனை இப்பகுதி மாணவிகள் முற்றுகையிட்டனர். எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


நன்றி - தினமலர் 


0 comments: