Tuesday, December 18, 2012

நான் திரைக்கதை அமைத்திருந்தால்? -கும்கி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-NHNLIgHCEPz_CJEn1lMPVJkFGfPvddamXO3iHdF1B5Zu1XQpRh5SLhrISMFjnaAPQ5E1k7aVgA_K7wmDL42SqGMF3b6iCNyaVSMDnP_7q5TAweaYld_PuDkbp9u63RZHxHJnAqjD9-90/s1600/kumki1.jpg

மைனா படத்தின் பிரம்மாண்டமான வெற்றி ,டி இமானின் இசையில் பாடல்களின் அதிரி புதிரி வெற்றி , ஹாலிவுட் தரத்தில் ஒளிப்பதிவு  இந்த மூன்று பிரமாதமான பிளஸ் இருந்தும்  கும்கி படம் அட்டகாசமான படமாக அமையாமல் ஏதோ ஓக்கே என்ற அளவில்தான் பேர் வாங்க முடிந்தது .பிரபு சாலமன் எங்கே சறுக்கினார்? இந்தப்படத்துக்கு எப்படி திரைக்கதை அமைத்திருந்தால் படம் இன்னும் ஹிட் ஆகி இருக்கும் ? ஒரு அலசல்



1. படத்தோட டைட்டில் கும்கி-ன்னு வெச்சாச்சு . முதல் வேலையா  முதுமலை 10 நாட்கள் கேம்ப் அடிச்சு அங்கே கூட்டம் கூட்டமா யானைகள் சுற்றுவதை  வீடியோ எடுத்துட்டு வந்து தேவையான இடத்துல அட்டாச் பண்ணி இருப்பேன்.கும்கி யானைக்கு எப்படி பயிற்சி தர்றாங்க? அதனோட ந்டவடிக்கைகள் என்ன? என்பதை படம் பிடிச்சுட்டு வரலாம்.ஏன்னா படத்துல மொத்தமே ஒரே ஒரு யானை தான் வருது . வில்லன் கம் கொம்பன் யானை கிராஃபிக்ஸ் , குட்டி யானை கிராஃபிக்ஸ்.இவ்வளவு செலவு பண்ணி படம் எடுத்துட்டு  பிரம்மாண்டமா யானைக்கூட்டத்தை காட்ட வேணாமா? 




2. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல யானை ஒரு பெண்ணை கொல்றது மாதிரி சீன் எடுத்தது க்ளோசப் ஷாட்ல நல்லாவே செட்டப் மாதிரி தெரியுது .3 வருடங்களுக்கு முன் யானைப்பாகனையே தூக்கி அடிச்ச மதம் பிடிச்ச யானையோட செய்லகளை சன் டி வி ல காட்டினாங்க . அதை எடுத்து டச்சப் பண்ணி இதுல அட்டாச் பண்ணி இருக்கலாம்.பொதுவா இந்த மாதிரி காட்சி எல்லாம் லாங்க் ஷாட்ல காட்டினாத்தான் நம்பகத்தன்மை வரும் . சும்மா யானையோட பாதம் மட்டும் காட்டி ஒப்பேத்த இது ராமநாராயனன் படம் அல்ல 



3. படத்தோட திரைக்கதை டிஸ்கஷனுக்கு படத்தில் பணிஆற்றும்   அதாவ்து படத்தில் நடிக்கும் ஆட்களை உட்கார விடக்கூடாது. இந்தப்படத்துல மைனா ஹிட்டின் காரணமா தம்பி ராமையாவை ஸ்டோரி டிஸ்கஷன்ல டைரக்டர் உட்கார வெச்சாராம். அதுதான் தப்பு . இந்தபப்டத்துல தம்பி ராமையாவின் காட்சிகள் நீளம் அதிகம் . மொக்கை காமெடி நிறைய இருக்கு,. அரதப்பழசான ஜோக், சென்சார் கட் பண்ற அளவு வச்னங்கள் பேசி இருக்காரு . அவர் சமப்ந்தப்பட்ட காட்சிகளை குறைக்கனும்



4. படம் போட்டு 2 மணி நேரம் கழிச்சு ஹீரோ ஹீரோயின் கிட்டே லவ்வை சொல்றாரு. அதுக்குப்பின் 40 நிமிஷம் தான் படம் , அதனால ஆடியன்ஸுக்கு ஹீரோ - ஹீரோயின் லவ் ல ஒரு பிடிப்பு வர்லை. அவங்க சேருவாங்களா? சேர மாட்டாங்களா? அப்டினு ஒரு துடிப்பு வர்லை. காதலுக்கு மரியாதை பட்த்துல  ஆடியன்சோட பரிதவிப்பு  நல்லாவே தெரியும் . அதுக்கு இருவரும் காதலிக்கும் காட்சிகள் , காதலின் ஆழம் , இதெல்லாம் படத்தோட 4 வது ரீலில் இருந்து காடிடனும் 



5. அந்த 2 போலீஸ் கேரக்டர்களும் என்ன பண்றாங்க? க்ளைமாக்ஸ்ல ஏதோ டர்னிங்க் பாயிண்ட் இருக்கு. அவங்க தான் வில்லன்களா வரப்போறாங்க என்பது மாதிரி பில்டப் எதுக்கு? அட்லீஸ்ட் அவங்க ஹீரோயினை அட்டெம்ப்ட் ரேப் கூட பண்ணலை. இந்த மாதிரி வெட்டி வில்லன்க இருந்து என்ன யூஸ் ? ஏமாற்றம்தான் மிச்சம் . அதனால அந்த 2 கேரக்டர்ஸ்க்கும் பை பை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjea0jWxXOycMDTrSGrwAOtK_ovUimAb5bjZ4XC-6E-wspDStTZRgwRZDNCF1Cmsuh44FJjzsqrnMryDyRy-JJ7OJ8jodeMVip60TxNK_S10LKjmy-d_saAMbpRKlDGZBOtO1aGrHefn00/s320/1.jpg



6. ஹீரோயினோட அப்பா ஹீரோ கிட்டே உங்களூக்கு எங்களால வாழ்க்கையே போச்சு , உங்க யானையும் போச்சு அதனால நீங்க இங்கேயே இருந்துடுங்க. என் பொண்ணை உங்களூக்கே கட்டி வைக்கிறேன். உங்க லவ் எனக்குத்தெரியும். அப்பாவை மதிச்சு காதலை கை விட்ட பொண்ணுக்கு இது என் அன்புப்பரிசு அப்டிங்கற மாதிரி ஒரு டயலாக் அடிச்சு க்ளைமாசை காதலுக்கு மரியாதை மாதிரி சுபமா முடிச்சுடனும்



7. பருத்தி வீரன் ஹிட்டுக்குப்பின் எல்லாப்படங்களிலும் ஹீரோ கிராமத்தான் என்றால் அவன் ஷேவிங்க் செய்யாம  காட்டான் மாதிரிதான் தாடியோட காட்டறாங்க. ஹீரோவுக்கு எதுக்கு தாடி? நீட்டா காட்டலாமே? 



8. ஹீரோயினுக்கு படத்துல ஓப்பனிங்க் ஷாங்க் இல்லை. இவ்வளவு சூப்பர் ஹிட் பாடல்களை வெச்சுக்கிட்டு ஹீரோயின் அறிமுகக்காட்சி வைக்கலைன்னா எபடி? அந்த சொய்ங்க் சொய்ங்க் பாட்டை ஹீரோயின் ஓப்பனிங்க் ஷாட்டா வெச்சா குதூகலமான ஓப்பனிங்க் வரும்



9. ஹீரோ ஹீரோயின் கிட்டே  தன் லவ்வை சொன்னதும் ஹீரோயின் ஓடிடறார். நோ ரிப்ளை. அவர் லவ்வறாரா? இல்லையா?ன்னே தெரியலை ,. ஆனா அடுத்த சீன்லயே  ஹீரோ கிட்டே “ நீங்க போய்ட்டா நானும் உயிரை விட்டுடுவேன்கறார். ஒப்பிக்கற மாதிரி இருக்கு . ஆல்ரெடி சொன்ன மாதிரி 4 வது ரீல்லயே லவ் ஓப்பனிங்க் சீனை வெச்சு 12 வது ரீல்ல குடும்பத்துக்கு மேட்டர் தெரிய வர்ற மாதிரி எடுக்கனும்



10. க்ளைமாக்ஸ்ல ஹீரோவின் யானையும் , கொம்பன் காட்டு யானையும் மோதற சீனை நல்லா பிரம்மாணடமா ஃபாரஸ்ட்ல போய் நிஜ யானைங்க மோதும்போது காத்திருந்து ஷூட் பண்ணி அப்புறம் அங்கங்கே மானே தே பொன் மானே கும்கி யானே அட்டாச் பண்ணி சி ஜி ஒர்க்  பண்ணி பக்காவா ரெடி பண்ணி இருப்பேன். சும்மா நைட் இருட்டுல  ஏதோ சண்டை நடப்பது போல் பாவ்லா காட்டி இருக்க மாட்டேன்


11. தம்பி ராமையா உட்பட படத்தின் முக்கிய கேரக்டர்களை சாகடிக்கத்தேவை இல்லை . படம் பார்த்த பலரது கருத்து “ படத்துல எல்லாரும் செத்துடறாங்க , ஒரே சோகம் “ என்ற புலம்பல் தான்.



http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/11/director-PRABHU_SOLOMON1.jpg



9 comments:

புரட்சி இணைய வானொலி said...

இது மாதிரி பண்ணீயிருந்தா படம் 100 நாள் சாலிட்....

Unknown said...

Ipdi padam edutha athu normal tamil movie list la add ayidum..:-/

Er.Rajkumar P.P said...

படம் அருமை...(உங்க திரைக்கதையில் சொன்னேன்)

'பரிவை' சே.குமார் said...

உண்மைதான்... சொதப்பிட்டாங்க...
உங்க கதை நல்லாவே இருக்கு.

Mathuran said...

சூப்பர்.. இப்பிடி எடுத்திருந்தா தமிழ் ஒட்டுமொத்த தமிழ்சினிமா சமூகமும் உங்களை தூக்கி வச்சு.................................................................................... யானை லத்தியால அபிஷேகம் பண்ணியிருப்பாங்க :P

”தளிர் சுரேஷ்” said...

உங்க யோசனைகள்ல சிலதை ஏத்துக்கலாம்! ஒட்டுமொத்தமா எல்லாரையும் சாகடிச்சு இருக்க கூடாது! காதல் காட்சிகளை நீட்டி இருக்கலாம்தான்! தாடி ஹீரோ எனக்கும் பிடிக்கலை!

Unknown said...

ஹி ஹி மொக்க படம் கண்டிப்பா வருங்காலத்துல எடுப்பீங்க போல.........

அஞ்சா சிங்கம் said...

காசா பணமா .........அப்படியே டைடானிக் படத்தையும் ஒரு தபா இயக்கிடுங்களேன் ..........

அஞ்சா சிங்கம் said...

காசா பணமா .........அப்படியே டைடானிக் படத்தையும் ஒரு தபா இயக்கிடுங்களேன் ..........