விகடன் மேடை - ஸ்டாலின்
படங்கள் : சு.குமரேசன்
என்.எஸ்.மாதேஸ்வரன்,
ஓசூர்.
''நீங்கள் பின்பற்றும்
தாரக மந்திரம் எது?''
''கலைஞர்! என் ரத்தத்தில், என் மூச்சில், என் செயலில் கலந்து
இயக்கிக்கொண்டிருக்கும் மந்திரச் சொல். என்னை மட்டுமல்ல... லட்சக் கணக்கான
உடன்பிறப்புகளை எழுச்சியும் உணர்ச்சியும் கொள்ளச் செய்து, எப்போதும்
இயக்கிக்கொண்டு இருக்கும் வார்த்தையும் அதுதான்!''
அம்மா..?''
''அவர் பாசத்தின் ஊற்று. அனைவரையும் அரவணைக்கும் தென்றல் காற்று.
சோர்ந்து வருகையில் தலை கோதி ஆறுதல் வார்த்தை களால் கவலைகளைக் கரைந்துவிடச்
செய்பவர். தெளிவானவர். குழப்பமான நேரங்களில் சிக்க லான பிரச்னைகளைக்கூடத்
தனது அனுபவ ஆற்றலால் எளிதில் தீர்க்கும் ஆலோசனைகளைச் சொல்லக்கூடியவர்.
தயாளு அம்மாவைப் பற்றித் தானே நீங்கள் கேட்டீர்கள்!''
கே.தமிழகன், உளுந்தூர்பேட்டை.
''உங்களது சகோதர,
சகோதரிகள்பற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன?'
'
''முத்து - மூத்தவர். கலை வசமானவர். 'அந்த மனதில் குடியிருக்கும் நாகூர்
ஆண்டவா’ பாட்டை இப்போதும் கேட்கலாம். அந்தக் குரல் வசியப்படுத்தும்.
அழகிரி - அடுத்தவர். துணிச்சலானவர். 'அன்பே துணை’ என்பவர்.
செல்வி - தனது சிரிப்பால் குடும்பத்தை வழிநடத்தும் திறமை சாலி.
பலமாகவும் பாலமாகவும் இருப்பவர்.
தமிழரசு - அடக்கமானவர். அதே சமயம் ஆற்றலாளர்.
கனிமொழி - என் அன்பான சகோதரி. கற்பனைத் திறன்மிக்க கவிஞர்!''
ம.கார்த்தி,
அவனியாபுரம்.
''எம்.ஜி.ஆருடனான உங்களது
அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளுங்களேன்?''
''எம்.ஜி.ஆர். தன்னுடைய படங்கள் வெளியாகும்போது எல்லாம் என்னிடம்
பார்க்கச் சொல்வார். கருத்துக் கேட்பார். நான் என்ன சொல்கிறேன் என்பதை
அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவை
நான் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில் நடத்தியபோது கலந்துகொண்ட
எம்.ஜி.ஆர். அவர்கள், 'இந்த இளைஞர்களைப் பார்த்து நான் பெருமைப்படு கிறேன்.
இவர்கள் முகத்தில் இருந்த ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் பார்த்தபோது,
தியாகம் செய்யும் பரம்பரை என்பது தெரிகிறது. இந்தப் பரம்பரை
பாதுகாக்கப்பட்டால், நாட்டின் எதிர்காலம் சிறப்பு அடையும்’ என்று சொன்னது
இன்றும் என் நினைவில் நிற்கிறது.
1971-ம் ஆண்டில் 'முரசே முழங்கு’ என்ற பிரசார நாடகத்தை நான் நடத்தினேன்.
அதற்குத் தலைமை தாங்க எம்.ஜி.ஆரை அழைத்தேன். அவரும் வருவதற்கு
ஒப்புக்கொண்டார். நாங்கள் அரங்கேற்றம் செய்த இடம் சைதை தேரடித் திடல்
திறந்தவெளி அரங்கம். தலைமை தாங்கிப் பாராட்டிய அவர், தரையில் அமர்ந்து
இறுதி வரை நாடகத்தைப் பார்த்தார். நாற்காலியில் உட்கார்ந்து பார்த்தால்
பின்னால் கீழே உட்கார்ந்து பார்ப்பவர்களுக்கு மறைக்கும் என்பதால், அவர்
அப்படித் தரையில் உட்கார்ந்தார்!''
சு.பாஸ்கர், சேலம்-4.
'' 'ஒரு கல் ஒரு கண்ணாடி’
படத்தை எத்தனை தடவை பார்த்தீர்கள்? உதயநிதி நடித்த காட்சி கள்
உங்களுக்குப் பிடித்தனவா?''
''திரை அரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பும் வெளியிட்ட பின்புமாக இரண்டு
முறை பார்த்தேன். உதயநிதி மிக நன்றாக நடித்து இருந்தார். அனைவருமே அவரது
நடிப்பைப் பாராட்டியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி!''
சில்வியா ஜோஸஃபின், ஈரோடு.
''இன்றைய மின்வெட்டுப்
பிரச்னைக்கு முந்தைய தி.மு.க. ஆட்சியும்தானே பொறுப்பு ஏற்க வேண்டும்?''
''தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டு இருப்பதைப்போல, 'கழக ஆட்சியில்
மின்வெட்டு கடுகளவு; அ.தி.மு.க. ஆட்சியில் கடல் அளவு’! கழகம் ஆட்சியில்
இருந்தபோது, வளரும் மின்சாரத் தேவையையும் எதிர்காலத் தேவையை யும்
கருத்தில்கொண்டு சுமார் 7,000 மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டங்கள்
தீட்டப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன.
மின்சாரம் என்பது இன்று நினைத்து,
நாளையே உற்பத்தி செய்யக் கூடிய பொருள் அல்ல. கழக ஆட்சியில் பணிகள்
தொடங்கப்பட்டவை என்ற காழ்ப்பு உணர்ச்சி காரணமாகவே அ.தி.மு.க-வினர் அந்தத்
திட்டங் களைக் கவனிப்பாரற்றுக் கிடப்பில் போட்டு விட்டனர். அதனால்தான்,
இன்றைக்கு வரலாறு காணாத மின்வெட்டு தமிழகத்தை வாட்டி வதைத்துக்கொண்டு
இருக்கிறது!''
கே.அன்வர் பாட்ஷா, பெரம்பலூர்.
''அழகிரி உங்களுக்கு
போட்டித் தலைவரா?''
''அது சிலரது கற்பனை. சிலர் அமில எண்ணத்தோடு ஊன்றும் நச்சு விதை.
சகோதரர்களாகிய எங்களுக்கும் கட்சியில் உள்ள சகல ருக்கும் கலைஞர் ஒருவரே
தலைவர்!''
கே.சுரேஷ்பாபு,
ஜோலார்பேட்டை.
''உங்கள்
நினைவில் நிற்கும் ஒரு கடை நிலைத் தொண்டர் பெயரைச் சொல்லுங்கள். அவர்
எதனால் உங்களது மனதில் இடம்பிடித்தார்?''
''இளைஞர் அணி வளர்ச்சி நிதி சேர்த்திடுவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்னர்
கொடிஏற்று விழா, பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் நான்
கலந்துகொள்வதற்காக 100 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து வசூலித்தோம்.
நாகப்பட்டினத்தில் அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அப்போது
நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு இருந்த ஒரு தோழரிடம், 'கொடிஏற்றுவதற்கான 100
ரூபாய் நிதி எங்கே? கொடுங்கள்!’ என்று கேட்டேன்.
அவர், 'கொடியை ஏற்றுங்கள்
தருகிறேன்’ என்று என்னிடம் கூறிக்கொண்டே, 'வட்டச் செயலாளர் எங்கே? வட்டச்
செயலாளர் எங்கே?’ என்று கேட்டுக்கொண்டு இருந்தார். கடைசி வரை பணம்
வரவில்லை. பின்னர் அங்கிருந்து வேறு நிகழ்ச்சிக்குப் போகும்போது ஒரு நண்பர்
சொன்னார், 'கொடி ஏற்றுங்கள்’ என்று உங்களிடம் சொல்லிக்கொண்டே வட்டச்
செயலாளரை அழைத்தாரே... அவர்தான் வட்டச் செயலாளர்’ என்று. அவர் நிதி தராமல்
ஏமாற்றிவிட்டாரே என்று நான் வருத்தப்படவில்லை. கட்டணம் இல்லாமலேயே எப்படியோ
சமாளித்து தனது கட்சிப் பணியைத் திறம்பட நிறைவேற்றிவிட்டாரே என்றுதான்
நினைத்தேன். அந்த வட்டச் செயலாளரை என்றுமே என்னால் மறக்க முடியாது!''
ஆர்.ராஜேந்திரன், திருநெல்வேலி.
''நீங்கள் உடல் தானம்
செய்துள்ளீர்கள். அதற்கு உங்களைத் தூண்டியது எது? அல்லது யார்?''
''மியாட் மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்யும் நிகழ்ச்சியைத்
தொடங்கிவைக்க என்னை அழைத்து இருந்தார்கள். அந்த நிகழ்ச்சி யில் பங்கேற்ற
எனது துணைவியார், உடல் உறுப்பு தானம் செய்வதாக முடிவு எடுத்து,
முன்கூட்டியே அதற்கான விண்ணப்பத்தினை மருத்துவமனையில் பெற்று, பூர்த்தி
செய்து அதை நிகழ்ச்சியில் வழங்கினார். அப்போது எனக்கும் அந்த உந்துதல்
ஏற்பட்டு, என் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்கான முடிவை அந்த
நிகழ்ச்சியிலேயே அறிவித்தேன்!'
கே.ரீகன், உடுமலைப்பேட்டை.
''எப்போதும் ஒல்லியாகவே
இருக்கிறீர்களே? குண்டாக மாட்டீர்களா?''
''தலைக்கனம் மட்டுமல்ல, சதைக்கனமும் கூடாது. குண்டாகாத உடல்வாகு
இயற்கையாகவே எனக்கு அமைந்தது!''
எஸ்.கஸ்தூரி, ராஜபாளையம்.
''அண்ணாவுடன் உங்களுக்கு
நல்ல அறிமுகம் இருந்ததா?''
''பேரறிஞர் பெருந்தகையை வைத்து ஒரு விழா நடத்த முயற்சித்தேன்.
'கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.’ என்ற அமைப்பை நான் 1968 காலகட்டத்தில்
நடத்திவந்தேன். அப்போது அண்ணா முதல்வராக இருந்தார். அண்ணாவின் பிறந்த
நாளுக்கு அண்ணாவை அழைப்பதுதான் எங்களது திட்டம். நாங்கள் ஒரு தேதியைச்
சொல்லிக் கேட்டோம். அண்ணா அவர்கள் வேறு தேதி சொன்னார்கள். ஆனால், நாங்கள்
குறித்த தேதியில்தான் அண்ணா வர வேண்டும் என்று சொன்னோம். அதற்கு அண்ணா
ஒப்புக்கொண்டார்.
'உங்க அப்பாவைப் போலவே அடம்பிடித்துக் காரியத்தைச் சாதித்துவிட்டாயே!’
என்று அண்ணா அவர்கள் அப்போது சொன்னார்கள். அதற்குள் அவரது உடல்நலன்
பாதிக்கப்படுகிறது. அமெரிக்கா செல்கிறார். அப்போதும் விழாவுக்கான
வாழ்த்துச் சொல்லிவிட்டுத்தான் சென்றார்.
காலம் நம்மிடம் இருந்து அந்தக் காவியத் தலைவரை வெகு சீக்கிரமாகப்
பிரித்துவிட்டது!''
ஜே.ஜான் பிரிட்டோ, தஞ்சாவூர்-5.
''ஏன்டா அரசியலுக்கு
வந்தோம் என்று நினைத்தது உண்டா?''
''இல்லை. அரசியலை விரும்பி ஏற்றுக்கொண்டு இவ்வளவு தூரம் வந்துவிட்ட
பிறகு, ஏன் வந்தோம் என எண்ணுவதில் என்ன பயன்? நான் எதிர்மறை எண்ணங்களுக்கு
எப்போதும் இடம்கொடுப்பது இல்லை.''
ஆ.சரவணன், கோவில்பட்டி.
''ஜெயலலிதாவிடம்
உங்களுக்குப் பிடித்த விஷயம்?''
''பிடிவாத குணம். அது நல்ல விஷயங்களில் இருந்திருந்தால் பாராட்டலாம்.
பிடிக்காத விஷயங்களே நிறைந்து இருக்கும்போது, பிடித்த விஷயம் இருக்கிறதா
எனத் தேடுவதில் என்ன பயன்?''
அடுத்த
வாரம்...
'' 'கொள்கை... கொள்கை’
என்று பேசுகிறீர்களே... உங்கள் கட்சிக்கு என்னதான் கொள்கை?''
''காலம்
கடந்து நடந்த டெசோ மாநாட்டால் என்ன பயன்?''
''கருணாநிதி
தனது மகனைத் தலைவராக நியமனம் செய்யவிருக்கும் கட்சியை, ஜனநாயக இயக்கம்
என்று எப்படிச் சொல்ல முடியும்?''
- இன்னும் பேசுவோம்...
நன்றி - விகடன்
-கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கி றீங்க...? ஏன்? மு க ஸ்டாலின்
பேட்டி பாகம் 2 http://www.adrasaka.com/2013/ 01/blog-post_1472.html
திராவிடக் கட்சிகள் தமிழகத்தைக் குட்டிச்சு வராக்கிவிட் டனவா? 2016-ன் தமிழக
சி .எம் .மு. க .ஸ்டாலின் பேட்டி பாகம் 3 -
http://www.adrasaka.com/2013/
\
டிஸ்கி - பாகம் 4 - எனது உடல்நிலைகு றித்து ஊகமான விபரீத வதந்திகள் - மு க ஸ்டாலின் பேட்டி @ விகடன்
http://www.adrasaka.com/2013/ 01/blog-post_17.html
-கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கி
திராவிடக் கட்சிகள் தமிழகத்தைக் குட்டிச்சு
http://www.adrasaka.com/2013/ 01/2016.html
டிஸ்கி - பாகம் 4 - எனது உடல்நிலைகு
http://www.adrasaka.com/2013/
டிஸ்கி -இந்த வார விக்டனில் என் ஜோக்ஸ் 2 வந்திருக்கு
ஜோக்ஸ் 8
ஓவியங்கள் :
ஹரன்
ஜோக்ஸ் 7
ஓவியங்கள் :
ஹரன்
அ
3 comments:
நல்லா தான் பதில் சொல்றாரு
அன்பரே. வணக்கம்
எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
அன்பரே. வணக்கம்
எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
Post a Comment