a
கும்கி’ குஷியில் லட்சுமி
நீ அழகா இருக்கே!
ராகவ்குமார்
‘கும்கி’
படத்தைப் பார்த்துவிட்டு லட்சுமி மேனனுக்குப் போன் செய்தால், ‘பொண்ணு ஸ்கூலுக்குப் போயிருக்கு. கூட்டிக்கிட்டு வரப் போறேன். வந்தவுடனேயே பேசச் சொல்கிறேன்’ என்கிறார் லட்சுமியின் அம்மா. அரை மணி நேரத்தில் லைனில் வருகிறார் லட்சுமி. சாரி சார். நான் டென்த் படிக்கறதால ஸ்பெஷல் கிளாஸ் இருந்தது. அதனால்தான் உங்ககிட்ட பேச முடியலை," என்று மன்னிப்புடன் பேசத் தொடங்குகிறார் இந்த மாணவி கம் நடிகை.
ஸ்கூல் - சினிமா எப்படி பேலன்ஸ் பண்றீங்க?
என்னுடைய
ஸ்கூலில் எனக்கு ஃபுல் சப்போர்ட் பண்றாங்க. நான் ஷூட்டிங்கிக்காக லீவு போட்டாலும் எப்படியும் படிச்சிடுவேன்னு தெரியும். அதனால ஈஸியா பேலன்ஸ் பண்ண முடியுது."
நடிகையாகிட்டீங்க... இனி படிப்புக்கு முற்றுப்புள்ளி தானே?
ஏன்
சார் இப்படியெல்லாம் கேட்கறீங்க. சினிமா இன்டஸ்டரியை நான் தேடிப் போகலை. அதுவா வந்தது. ஒரு டான்ஸ் புரோக்ராமில் என்னை பார்த்த விஜயன் சார் மலையாளச் சினிமாவுக்கு என்னை கூட்டி வந்தார். ‘கும்கி’ வாய்ப்பும் தானா வந்தது. இப்ப முழுமையா சினிமாவை நேசிச்சாலும் படிப்பை விட முடியாது. ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ, டிகிரின்னு என் படிப்பு தொடரும்.
நான்
நிறைய படங்கள் கமிட் பண்ணாததுக்கு அடுத்த மாசம் வரப்போற பப்ளிக் எக்ஸாம்தான் காரணம்."
‘கும்கி’யில் யானையோட இவ்வளவு அன்பா இருக்கீங்களே? யானைன்னா ரொம்ப பிடிக்குமா?
நான் கேரளாவை சேர்ந்தவள் என்பதால் யானையை பிடிக்குமான்னு நிறைய பேர் என்கிட்ட கேட்பாங்க. உண்மையில் யானையால் நிறைய பிரச்னைகள் வர்றதும் கேரளாவில்தான். ‘கும்கி’ முதல்நாள் ஷூட்டிங்கில் யானைகிட்ட பழகறது கொஞ்சம் பயமாகதான் இருந்தது. போகபோக யானைகிட்ட பழகி அன்பு செலுத்த ஆரம்பிச்சேன்."
விக்ரம் பிரபுவுடன் நடித்த அனுபவங்கள் எப்படி?
‘கும்கி’
ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது ஒருநாள் பிரபு சார் திடீரென வந்துட்டார். உடனே விக்ரம் ‘அப்பா இருந்தால் என்னால் நடிக்க முடியாது. பிரேக் - அப் சொல்லுங்க’ என கேட்டுக்கொண்டார், பிரபு சாரிடம் பேசி வழியனுப்பிய பின்புதான் நடிக்க ஆரம்பித்தார்.
பெரிய
குடும்பத்திலிருந்து
வந்திருக்கிறோம் என்ற பந்தா இல்லாமல் பழகக்கூடியவர் விக்ரம்.
‘கும்கி’ ஆடியோ ரிலீஸில் ‘லட்சுமி நீ அழகா இருக்க, நல்லா வருவ’ என்று வாழ்த்தியது மறக்க முடியாது."
மலைவாசி பெண்களுடன் பழகியிருக்கீங்களா?
‘கும்கி’ ஷூட்டிங் நடந்த அரக்கவேலி மலைப்பகுதியில் தலையில் மூன்று குடங்களைத் தூக்கி வைச்சு, கையால் பிடிக்காமல் நடந்து செல்லும் மலைவாசி பெண்ணைப் பார்த்தோம். பிரபுசாலமன் என்னை இடுப்பிலிருந்த குடத்தைத் தலையில் தூக்கி வைக்கச் சொன்னார். ‘கும்கி’யில் தலையில் குடங்களைத் தூக்க அந்த மலைவாசி பெண்தான் காரணம். மலைவாசிகளுடன் பழகிய அனுபவம் இல்லை."
கும்கி லட்சுமிக்கும், ‘சுந்தரபாண்டியன்’ லட்சுமிக்கும் என்ன வித்தியாசம்?
‘கும்கி’
தமிழில் என் முதல் படம். அதில் நடித்தது பத்து படத்தில் நடித்ததற்குச் சமம். பிரபுசாலமன் என் குரு. ‘சுந்தர பாண்டியனி’ல் எஸ்.ஆர். பிரபாகரன் பலவித நடிப்பைக் கற்றுத் தந்தார்."
எந்த ஹீரோயின் மாதிரி பெயர் வாங்க ஆசை?
ரேவதி, வித்யாபாலன்."
கிளாமரா நடிப்பீங்களா?
சில படங்கள் நடித்துவிட்டு எனக்கு ஏத்த மாதிரி, லிமிட் மீறாத கிளாமரில் நடிப்பேன்."
எந்த பையனாவது லவ் லெட்டர் கொடுத்துருக்கானா?
இந்தக் கேள்வியைக் கேட்காம இன்டர்வியூ முடியாதே. இது வரைக்கும் யாரும் லவ்லெட்டர் தந்ததில்லை. தந்தாகூட அந்தப் பையனைத் திட்டமாட்டேன். உன் இஷ்டம் என்னை லவ் பண்றது பண்ணிக்கோன்னு சொல்லி போய்க்கிட்டே இருப்பேன்."
நன்றி - கல்கி
நன்றி - கல்கி
0 comments:
Post a Comment