அபூர்வம் என்றால் ரஜினி.
மயக்கத்தில் மந்திரன், இயக்கத்தில் எந்திரன், சுண்டும் ஸ்டைலில் சூப்பர்
மேன். 63 வயது அபூர்வ ராகத்தின் ஆச்சர்ய கீதங்கள் இதோ..!
'எவன் ஒருவனும் உன்னை விரும்பிவிட்டால், அதை அடைவதில் இருந்து அவனை உலகின் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது' விவேகானந்தரின் இந்தப் பொன்மொழிதான் ரஜினி வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கிறது!
உலக
சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு அடுத்ததாக இப்போதும் ஆசியாவிலேயே அதிக
சம்பளம் வாங்குவது நம்ம சூப்பர் ஸ்டார்தான்!
தமிழ்ப்
படங்கள் ரஷ்ய மொழியில் டப் ஆகின்றன. முதல் படம் 'சந்திரமுகி'!
ரஜினி
முன்பு தன் கையில் அணிந்திருந்த காப்பு, இப்போது நெல்லையைச் சேர்ந்த ரஜினி
ரசிகர் திருமாறன் என்பவரிடம் இருக்கிறது!
25
தடவைகளுக்கு மேல் ரத்த தானம் செய்துள்ள ரசிகர்களுக்குத் தன் கையெழுத்துப்
போட்ட சர்ட்டிஃபிகேட் தருவது ரஜினியின் வழக்கம்!
'தளபதி'
காலத்தில் வலது கணுக்காலில் கறுப்புக் கயிறு கட்டியிருப்பார் ரஜினி.
பிறகு, இடது கை கட்டை விரலில் தங்க வளையம். இப்போது, ருத்ராட்ச மோதிரம்,
ரஜினி ஸ்பெஷல்!
'செக்ஸ்
என்பது பரமசுகம், ஆனந்தம். வெறுத்து ஒதுக்குற அளவுக்கு இது விஷம் இல்லை.
சோஷியல் சர்வீஸ் பண்றவங்களுக்கு இது இடைஞ்சல், அவ்வளவுதான். பெண் இல்லாமல்
தூங்கவே முடியாதுன்னு ஒரு நிலைமை இருந்தது. இப்போ அது குறைஞ்சிருக்கு.
எதிர்காலத்தில் எப்படி மாறுமோ?'
-1981ம் வருடம் 'சாவி'க்கு ரஜினி
கொடுத்த பேட்டியின் சில வரிகள் இவை.
இப்போதும்
பேருந்தில் ஏற நேர்ந்தால், நின்றுகொண்டே போவதுதான் ரஜினியின் வழக்கம்.
அதுவும் கம்பியைப் பிடிக்காமல்தான் நிற்பார். கேட்டால், 'கண்டக்டர் காலப்
பழக்கம்' என்பது பதிலாக வரும்!
மத்திய
அரசு இந்திய சினிமாவைப் பற்றி ஓர் ஆவணப் படம் தயாரிக்கிறது. தமிழில்
ரஜினி, கமல் இருவரையும் தேர்ந்தெடுத்து அவரவர் பற்றிக் கருத்துக் கேட்டது.
கமல் சொல்லிவிட்டார். ரஜினி மறுத்துவிட்டார். 'என்னைப்பற்றி நான் சொல்ல
முடியாது. என் ரசிகர்களிடம்தான் கேட்க வேண்டும்' என்று சொன்னதால், ரஜினி
ரசிகர்கள் சிலர் அந்த ஆவணப் படத்தில் பேசியிருக்கிறார்கள்!
ரஜினி
ஃப்ரீயாக இருந்தால், அடையாளத்தை மறைக்கும் அளவுக்குச் சின்னதாக கெட்டப்
சேஞ்சுடன் வெளியே கிளம்பிவிடுவார். சமீபத்தில் அப்படிப் போய் வந்த இடம்...
திருப்பதி!
மாப்பிள்ளையான
பிறகு, தனுஷின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் வெள்ளித் தட்டு, வெள்ளி டம்ளர்
பரிசளிப்பது ரஜினியின் வழக்கம்!
திரையுலக
வெளிச்சமோ, புகழ் வெளிச்சமோ படாத ரஜினியின் மிக நெருங்கிய நண்பரின் பெயர்
காந்தி. அக்கவுன்ட்ஸ் ஜெனரல் ஆபீஸில் வேலை பார்க்கும் காந்திக்குக்
கிட்டத்தட்ட தினமும் ஒரு தடவை ரஜினியே போன் செய்து பேசுவார்!
தனுஷ், தன்
மாமனார் ரஜினியை இப்போதும் 'சார்' என்றுதான் அழைக்கிறார். ரஜினியும் தனுஷை
'தனுஷ்' என்றே அழைக்கிறார்!
'முள்ளும்
மலரும்' பார்த்துவிட்டு இயக்குநர் பாலசந்தர் எழுதிய கடிதத்தை இப்போதும்
பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார் ரஜினி!
'எந்திரன்'
படத்தில் ஒரே பாடலில் 100 விதமான ஸ்டைல்களில் தோன்றுகிறார் ரஜினி.
ஒவ்வொரு தோற்றத்துக்கும் ஒவ்வொரு உடை என இந்த ஒரு பாடலில் மட்டும் மொத்தம்
100 விதமான உடைகளில் வருகிறார். ரஜினியின் விருப்பத்தின் பேரில் இந்த ஒரு
பாடலுக்கு மட்டும் நடனம் அமைத்து இருப்பவர் பிரபுதேவா!
ஆன்மிகம்
தவிர, உலகத் தலைவர் களின் வரலாறு தொடர்பான புத்தகங் களில் ரஜினிக்கு
எக்கச்சக்க ஆர்வம்!
கறுப்பு
நிற உடைகளை விரும்பி அணிந்த ரஜினி பிறகு வெள்ளைக்கு மாறினார். இப்போது
ஓய்வு நேரங்களில் காவி, கறுப்பு, நீலம் என கலர் வேட்டிகள் அணிகிறார்!
ரஜினி
நடித்த ஒரே ஆங்கிலப் படமான Blood stone-ல்
ரஜினி பேசும் முதல் டயலாக், 'Your Problem is
bloodstone whereas my problem is stomach'
ரஜினியின்
ஆன்மிகம் பற்றிய விமர்சனங்கள் வந்தபோது அவர் சொன்னது, 'நான்
ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக்
காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரியான
ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை!'
கிருஷ்ணகிரி
அருகே உள்ள நாச்சியார்குப்பம்தான் ரஜினியின் பெற்றோரின் பூர்வீக ஊர்.
அங்கு இப்போது ரஜினியின் பெற்றோர் நினைவாக மண்டபம் ஒன்று கட்டப்பட்டு
வருகிறது. இந்தப் பணிகளை நாச்சியார் குப்பத்துக்கு அடிக்கடி சென்று
பார்வையிடுபவர் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்!
ரஜினிக்கு
மட்டன் பிடிக்கும். குறிப்பாக தலைக்கறி!
'பைரவி'
படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைக்
கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு!
ரஜினிக்குப்
பழக்கமான வாடகை கார் டிரைவர் இருக்கிறார். இரவு நேரங்களில் திடீரென
அவருக்கு போன் செய்து வரச் சொல்லி, எங்காவது கையேந்தி பவனில் சாப்பாடு
வாங்கி காருக்குள்ளேயே உட்கார்ந்து சாப்பிடுவார்!
ஒரு
படத்தின் சூட்டிங் முடியும்போது அந்தப் படத்தில் பணிபுரிந்த உதவி
இயக்குநர்களுக்கு ஒரு தொகையைப் பரிசாகத் தருவது ரஜினியின் பழக்கம்.
குறைந்தது 50 ஆயிரம் ரூபாய்!
ரஜினிக்குத்
தெரிந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், மராத்தி, மலையாளம், ஹிந்தி,
தெலுங்கு!
ரஜினியின்
'பில்லா' ரீ-மேக்கைத் தொடர்ந்து 'அன்புக்கு நான் அடிமை ரீ-மேக் ஆகிறது.
விரைவில் அறிவிப்பு வரும்!
மார்ல்பரோ
சிகரெட்டை விரும்பிப் புகைக்கும் ரஜினி, இப்போது வில்சுக்கு மாறிவிட்டார்.
முன்பெல்லாம் செயின் ஸ்மோக்கராக இருந்தவர் இப்போது டென்ஷன் பொழுதுகளைத்
தவிர மற்ற நேரங்களில் புகைப்பது இல்லை!
ரஜினியை
வைத்து அதிகப் படங்கள் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினி நடித்து
முத்துராமன் இயக்கிய 25 படங்களில் 7 படங்கள் ஏவி.எம். தயாரிப்பு!
பொங்கல்,
தீபாவளி என அனைத்து விசேஷங்களிலும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தன்னுடன்
இருக்க வேண்டும் என்பது ரஜினியின் சென்டிமென்ட். அவர் வரத் தாமதமானால்,
'இன்னும் வரலையா?' என்று போன் செய்துவிடுவார்!
இமயமலை
மட்டும் இல்லாமல், எந்த ஆன்மிக ஸ்பாட்டுக்குச் சென்றாலும் அங்கிருந்து
ருத்ராட்சம் வாங்கி வந்து சேர்த்துவைப்பது ரஜினியின் பழக்கம். இப்படிச்
சேர்த்த ருத்ராட்சங்கள் வீட்டில் எக்கச்சக்கமாகக் குவிந்துகிடக்கின்றன!
ரஜினி
வீட்டில் இருக்கும் நேரங்களில் அவரது அறையில் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம்
ஒலித்துக்கொண்டே இருக்கும்!
ராகவேந்திரா
கல்யாண மண்டபத்தின் தொலைபேசிக்கு இன்னொரு இணைப்பு உண்டு. ரஜினி
மண்டபத்தில் இருக்கும்போது ரசிகர்கள் யாராவது போன் பண்ணினால், அந்த இன்னொரு
இணைப்பு வழியாக எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருப்பார். அந்த
ரசிகருடன் பேச வேண்டும் என்று விரும்பினால் அவரே லைனில் வருவார்!
ரஜினி ஒரு
பாத்ரூம் பாடகர். குஷி மூடில் இருந்தால் அப்போதைய ஹிட் பாடல்களை
முணுமுணுக்க ஆரம்பித்துவிடுவார். அப்படி ஒரு பாடல் மனதுக்குப்
பிடித்துவிட்டால், சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளர், பாடகருக்கு சர்ப்ரைஸாகப்
போன் போட்டுப் பாராட்டுவது ரஜினி ஸ்டைல்!
50 கோடி
ரூபாய் செலவில் ரஜினி, திருவள்ளுவராக நடிக்கும் படத்தைத் தயாரிப்பதற்கான
பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்றது. என்ன காரணமோ
தெரியவில்லை, அது அப்படியே டிராப் ஆகிவிட்டது!
ரஜினியின்
போயஸ் தோட்டத்து வீட்டின் பெயர் 'பிருந்தாவன்'. இது ரஜினியே ஆசையாக வைத்த
பெயர்!
ரஜினியின்
அனைத்துச் சந்திப்புகளையும் சுப்பையா என்பவர்தான் நிர்வகிக்கிறார்.
ரஜினியின் நம்பிக்கைக்கு உரிய ஊழியர் இவர்தான்!
பழமொழிகள்,
குட்டிக் கதைகள், பொன்மொழிகள் இவற்றுக்காகவே தனியாகப் பல நூறு
புத்தகங்களை வாங்கிவைத்திருக்கிறார். அவற்றை மேடையில் பேசும்போது
பயன்படுத்துவார்!
அடிக்கடி
நண்பர்களின் வீடுகளுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது ரஜினியின் பழக்கம்.
வாசலில் தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு நின்றபடி மலர்ந்து சிரிப்பார்!
தன்னுடன்
போட்டோ எடுத்துக்கொள்ள வருபவர்களுடன் குழந்தைகள் இருந்தால், குழந்தையைத்
தூக்கி வைத்துக்கொண்டு போஸ் கொடுப்பதுதான் ரஜினியின் பழக்கம்!
யார்
தன்னைப் பார்க்க வந்தாலும், வயது குறைந்தவர்களாக இருந்தால்கூட எழுந்து
நின்று வரவேற்பது ரஜினியின் வழக்கம். வந்தவர் அமர்ந்த பின்புதான் இவர்
அமர்வார்!
'தலைவா,
உங்க பிறந்த நாளன்று உங்களைச் சந்திக்க ஆசைப்படுகிறேன்' என்று ரசிகர்
ஒருவர் சொன்னதற்கு, ''பிறந்த நாளன்று 'நான் ஏன் பிறந்தேன்?' என்று
சிந்திக்க எனக்கு அவகாசம் தேவை. அன்றைய நாளில் என் ஃபேமிலி மெம்பர்ஸ்கூட
என்னைத் தனியாக விட்டுவிடுவார்கள். அன்னிக்கு வேண்டாமே ப்ளீஸ்!'' என்று
பிறந்த நாள் பற்றிய வித்தியாசமான கோணம் ஒன்றைக் கொடுத்தார் ரஜினி!
ரஜினி
எந்த காரில் வருவார் என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. அம்பாஸடர்,
குவாலீஸ் என்றுதான் அதிகபட்சம் செல்வார். எந்தக் காரணம்கொண்டும் விலை
உயர்ந்த பி.எம்.டபிள்யூ, பென்ஸ் போன்ற கார்களைப் பயன்படுத்த மாட்டார்!
ரஜினி சூ
போடுவதை விரும்புவது இல்லை. சூட்டிங்கின்போதுகூட அவசியப்பட்டால் மட்டுமே
சூ அணிவார். மற்றபடி எப்போதும் செருப்பு அணிவதுதான் தலைவரின் சாய்ஸ்!
விமானப்
பயணத்தைவிட ரயில் பயணம்தான் ரஜினிக்குப் பிடித்தமானது. 'படையப்பா'
வரையிலும் ரயிலில்தான் போய்க்கொண்டு இருந்தார்!
தன்னிடம்
பணியாற்றும் ஊழியர்களுக்கு வெகுகாலம் முன்பே ஒரு பெருந்தொகையை ஃபிக்ஸட்
டெபாசிட்டில் போட்டுவிட்டார். அந்த வட்டிப் பணத்தில்தான் அந்தக்
குடும்பங்களுக்கான விழாச் செலவுகள் நடைபெறும்!
ராகவேந்திரா
மண்டபத்தில் வெயில் காலத்தில் மக்களுக்கு இலவசமாக மோரும், ஐஸ் வாட்டரும்
வழங்குவார்கள். இதைத் தன் அறையில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பார்
ரஜினி!
எந்தக்
காரணத்தைக் கொண்டும் கேரவனில் ஓய்வெடுக்க மாட்டார். காலையில் வந்தவர்,
மாலை சூட்டிங் முடியும் வரைக்கும் செட்டுக்கு உள்ளேதான் இருப்பார். மதிய
இடைவேளையில் அங்கேயே துண்டை விரித்துப்போட்டு சற்றுக் கண்ணயர்வார்!
டான் -
பில்லா, தீவார் - தீ, மர்த் - மாவீரன், திரிசூல் - மிஸ்டர் பாரத்,
குத்தார் - படிக்காதவன் உள்ளிட்ட அமிதாப் பச்சனின் 10 தமிழ் ரீ-மேக்
படங்களில் ரஜினி நடித்திருக்கிறார்!
பாலசந்தர்
மீது ரஜினி வைத்திருக்கும் மரியாதை அளவிட முடியாதது. பாலசந்தர் போன்
பண்ணினால்கூட எழுந்து நின்றுதான் பேசுவார் ரஜினி!
பெங்களூர்
ஃப்ளாட்டில் ரஜினி தனியாகவே இருப்பார். புத்தகங்கள், டி.வி.டி-க்கள் என
ரஜினியின் தனிமை தவம் பெரும்பாலும் இங்கேதான்!
ரஜினியின்
போயஸ் வீட்டுக்கு அருகே ஒரு காலி மனை கிடந்தது. ஐஸ்வர்யா திருமண வரவேற்பு
அங்குதான் நடந்தது. இப்போது அந்த இடத்தில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் கட்டப்பட்டு
இருக்கிறது. விருந்தினர்களை அங்குதான் சந்திக்கிறார்!
யாரிடம்
பேசினாலும் யாரையும் குறை சொல்லிப் பேசவே மாட்டார். சமீப காலங்களில் இதை
மேலும் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்!
கேளம்பாக்க
வீட்டுக்கு ரஜினியைப் பார்க்க யார் சென்றாலும், அவர் அங்கு இருந்தாலும்,
இல்லை என்றாலும் முதலில் இளநீர் வந்துவிடும்!
'ஃபைன்,
குட்' இவைதான் ரஜினியின் உதடுகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள்!
முன்பு
எல்லாம் நெருங்கிய நபர்கள் இறந்துபோனால் அவர்களின் துக்கத்துக்குப் போக
மாட்டார். நடிகர் ஜெய்சங்கரின் மரணத்துக்குக்கூடப் போகவில்லை. 'அவர்களின்
சிரித்த முகம்தான் எனக்கு நினைவில் இருக்க வேண்டும்' என்பதுதான் காரணம்.
பிற்பாடு இந்த நிலையை மாற்றிக்கொண்டார்!
ரஜினி
இதுவரை நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் 'முள்ளும் மலரும்'!
கடந்த
ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பிறந்த நாளுக்குப் பிறகு தனது ரசிகர் மன்ற
நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தும் திட்டம் ரஜினிக்கு
இருக்கிறது. இதற்கான ஆஃப் த ரெக்கார்ட் அழைப்புகள் சென்றுவிட்டன!
சிகரெட்
சர்ச்சைகளுக்காக அன்புமணி ரஜினியிடம் பேசியபோது பேச்சு நீண்டு ஜாலியாக,
'புரவிப்பாளையம் என்ற ஊரில் சாமியார் ஒருவரின் சமாதி இருக்கிறது. அங்கு
அவசியம் ஒருமுறை போய் வாருங்கள்' என அன்புமணிக்கு ஆலோசனை சொன்னாராம் ரஜினி!
'ஏன்
இவ்வளவு சிம்பிளாக இருக்கிறீர்கள்?' என்று மகள்கள் கேட்டால், 'கண்ணா...
உங்க அப்பா சூப்பர் ஸ்டார். நீங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். எங்க
அப்பா சாதாரண போலீஸ்காரர். நான் இப்படித்தான் இருப்பேன்' என்பார்!
சினிமா
நகைச்சுவையில் ரஜினிக்கு இஷ்டமானவர் வடிவேலு. அவ்வப்போது அவருடன் பேசிச்
சிரிப்பார். 'உங்ககிட்ட பேசினா, எனக்குப் புதுசா ரீ-சார்ஜ் பண்ணின மாதிரி
இருக்கு வேலு' என்பார்!
ரஜினி சொன்ன 12 செய்திகள்!
சென்னை:
தனது பிறந்தநாளை பெற்றோரை வழிபடும் நாளாக கொண்டாடுமாறு தனது
ரசிகர்களுக்கு பிறந்தநாள் செய்தியாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக தனது பிறந்த நாளன்று தனிமையில் கழிக்கும் ரஜினிகாந்த்,இன்று தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்களை சந்தித்தார்.
நிருபர்களும், டி.வி.கேமராமேன்களும் போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டு முன்னால் கூடி நின்றனர். திடீரென்று அவர்களை ரஜினி வீட்டுக்குள் அழைத்தார். அப்போது நிருபர்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். பதிலுக்கு ரஜினி நன்றி கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்,"என் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் வாழ்த்து சொல்ல வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை சந்தித்தேன். மகிழ்ச்சியாக உள்ளது. எனது பிறந்த நாள் 12.12.2012 தேதியில் வந்து இருப்பது பெரிய விஷயம்.
‘கோச்சடையான்’ படம் இன்றைய சினிமா தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம். இப்படம் மட்டும் வெற்றிப்பெற்றால் இனி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச படங்களும் இதே தொழில்நுட்பத்தில் வெளிவந்து வெற்றி பெறும்.
நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். எப்போது வருவீர்கள் என்று கேட்கிறீர்கள். அதுபற்றி எத்தனையோ தடவை சொல்லிவிட்டேன். இப்போது சொல்வதற்கு ஒன்றும் இல்லை"என்றார்.
டிசம்பர் 12-12-12 அன்று ரஜினிக்கு பிறந்தநாள் தேதி, மாதம், வருஷம்
எல்லாமே 12-ஆக அமைந்தது தனிச்சிறப்பு ஆகவே ரஜினியைப்பற்றி அவரே சொன்ன
12-செய்திகள் இங்கே...
தெய்வம்...
" பெங்களூர்ல இளமையான காலத்துல ஒரு தடவை வீட்டுல இருக்குறவங்க எல்லாரும்
மோசமா திட்டுனாங்க. மனசே வெறுத்துப் போச்சு.. பேசாம தற்கொலை பண்ணிக்கிற
முடிவுக்கு வந்தேன். சாகறத்துக்கு முன்னாடி எனக்கு ரொம்ப பிடிச்ச ஃப்ரெண்ட்
ஒவியர் ரமேஷை பார்க்கனும்னு தோணுச்சு. அவரோட வீடுதேடி போனேன்.. அவர் அங்கே
இல்லை. அனுமார் மலைக்கோயிலுக்கு போனதா சொன்னாங்க. தேடிப்போனேன் மலையில்
இருக்குற பாறையில விதவிதமா ஒவியம் வரைஞ்சுகிட்டு இருந்தார். அந்த படங்கள்ல
தாடிவச்ச ஒருத்தர் என்னை வெறிச்சு பார்த்து சிரிச்சார். 'உன்னை யாருமே
புரிஞ்சுக்கலையா.. கவலையை விடு.. எல்லாத்தையும் என்கிட்டே விட்டுவிடு..
நான் பார்த்துக்கறேன்'னு பேசினார். பிரமிச்சுப் போயிட்டேன். ரமேஷிடம் 'இவர்
யாருப்பா'னு கேட்டேன் 'அடப்பாவி இதுகூடவா தெரியாது.. இவர்தான்டா
ராகவேந்திரர்'னு சொன்னார்!
பெற்றோர்...
எப்போ
பார்த்தாலும் என்னோட அம்மா ராம்பாய் 'வெயிலுல அலையாதே.. மறக்காம தலைக்கு
எண்ணேய் தேய்ச்சு குளி.. நல்லா சாப்பிடு... வேலையில்லாட்டி பேசாம வீட்டுல
படுத்து தூங்கு..'னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க! என் வாழ்க்கையோட
எதிர்காலத்தைவிட என் உடம்புமேல ரொம்ப அக்கறை. அப்பா கோபக்காரர்..
படிக்கிறப்போ பிடிவாதம் பிடிப்பேன். அதனால் அப்பாவிடம் நிறைய அடிவாங்கிட்டு
அப்படியே துங்கிடுவேன்.
மறுநாள் எதைக்கேட்டு அடம்பிடிச்சோம்... எதுக்காக உதை வாங்கினோம் என்பதே
மறந்து போயிடும்.
குருநாதர்....
'எம்.எஸ்.வி-யை சந்திக்கறதுக்கு முன்னாடி சோத்துக்கு வழியில்லை....
சந்திச்ச பின்னாடி சோறுதிங்க நேரமில்லை'னு எம்.எஸ்.விஸ்வநாதனை பத்தி
பேசறபோது வாலி சார் அடிக்கடி சொல்லுவார். அப்படித்தான் நானும்
கே.பி-சாரைபத்தி சொல்லுவேன். எனக்குள்ளே இருக்குற நடிகனை முதன்முதலா
கண்டிபிடிச்ச கடவுள். அப்புறம்தான் உலகத்துக்கே நான் தெரிஞ்சேன். என்னை
தெரியவச்சார்! 'காமிரா முன்னாடி நடி... பின்னாடி நடிக்காதே..'னு சொன்னதை
இன்னிக்கு வரைக்கும் கடைபிடிச்சுட்டு வர்றேன்.
கண்டக்டர்....
கர்நாடகா ட்ரான்ஸ்போர்ட்ல கண்டக்டரா வேலை பார்த்தப்போ ராஜ்பகதூர் நண்பனா
கிடைச்சான். இப்போகூட ரெஸ்ட் கிடைச்சு பெங்களூரு போனால் வீட்டுலகூட அதிகம்
இருக்க மாட்டேன். நண்பர்களோட பொழுது போக்குவேன். இப்போ பணம், பேர், புகழ்
எல்லாம் இருக்கு.. ஆனா அப்போ இருந்த சந்தோஷம், நிம்மதி இப்போ டெபனேட்டா
இல்லை.
வீடு...
ராயப்பேட்டையில விட்டல் வீட்டு மாடியில் குடியிருந்தேன். அப்பவே அந்த
ஹவுஸ்ஒனர் பாத்திமா அக்தர் நல்லா பழகுவாங்க. இப்போ நான் போயஸ் கார்டன்ல
வசிக்கிற வீடு அந்தக்காலத்துல அவங்களுக்கு சொந்தமானது. நான்தான் விலைக்கு
வாங்கினேன் இப்போ அதுக்கு பிருந்தாவன்னு பேர் வச்சிருக்கேன்.
மனைவி...
திருமணம் முடிஞ்ச பிறகுதான் 'ஏண்டா இவ்வளவு லேட்டா கல்யாணம் செய்தோம்னு
ஃபீல் செய்யுற அளவுக்கு லதா அன்பா இருந்தாங்க. என்னோட முன்கோபம், சினிமா
தொழில்ல இருக்குற ப்ராப்ளம் எல்லாத்தையும் நல்லா உணர்ந்து உறுதுணையா
இருக்குறாங்க. அம்மாவுக்கு என்னோட ஆரோக்கியம் முக்கியம்னா, லதாவுக்கு
என்னோட எதிர்காலத்து மேல் ரொம்ப ரொம்ப அக்கறை.
நட்பு...
நான் கஷ்டபட்டபோதும் சரி... இப்போ வசதியா இருக்கும் போதும் சரி என்மேல ஒரே
மாதிரி அன்பு செலுத்துற ராஜ்பகதூர் ஆச்சர்யமான நண்பன். அதுபோல
இன்ஸ்ட்டியூட்ல படிச்சப்போ பழகிய நண்பர்கள் எல்லாருமே எனக்கு இப்பவும் நல்ல
ப்ரெண்ட்ஸ்! சினிமாவுல, அரசியலுல எல்லாத்துலயும் நண்பர்கள் நிறையபேர்
இருக்காங்க!
வாகனம்...
நான் பெங்களூர்ல கண்டக்டரா வேலை செஞ்ச பஸ் நம்பர் 10ஏ. சென்னையில
முதன்முதலா வாங்கின ஸ்கூட்டர் டிஎன்ஆர்- 4306, அப்புறம் பியட் கார் இப்போ
இன்னோவா!
பட்டம்...
'திரிசூலம்'
வெள்ளிவிழா பங்ஷனுக்கு மதுரைக்கு போயிருந்தேன். அப்போ எல்லாரும் மீனாட்சி
அம்மன் கோயிலுக்கு போய் அவங்க அவங்க பேரைச்சொல்லி சாமிகிட்டே அர்ச்சனை
செஞ்சாங்க. குருக்கள் என்னோட நடத்திரத்தை கேட்டார் 'தெரியாது சாமீ..'னு
சொன்னேன். இப்போதான் உண்மை தெரியுது மக்கள் கொடுத்து இருக்குற பட்டம்தான்
(சூப்பர்ஸ்டார்) என்னோட உண்மையான நட்சத்திரம்னு!
மேக்கப்....
'அபூர்வராகங்கள்' படத்துல முதன்முதலா மேக்கப் போட்ட சுந்தரமூர்த்திதான்
'குசேலன்’வரை எனக்கு மேக்கப் போட்டவர்.
நடிப்பு...
படப்பிடிப்புக்கு போகும்போது முக்கியமான காட்சிகள் இருந்தால் என்னோட
டயலாக்கை முதல்நாளே வாங்கிட்டுப் போய் வீட்டுல ரிகர்சல் செய்வேன். வசனத்தை
ஷூட்டிங் ஸ்பாட்டுல மனப்பாடம் செய்யத் தெரியாம அப்படி செய்யறது இல்லை.
மறுநாள் தேவையில்லாம நேரத்தையும், ஃபிலிமையும் வேஸ்ட் பண்ணாம நடிகனும்னு
ஒரு அக்கறை அவ்வளவுதான்!
ரசிகர்....
'அபூர்வ ராகங்கள் ' படத்தை சென்னை கிருஷ்ணவேணி தியேட்டர்ல முதன்முதலா
பார்த்தேன். நான் நடிச்ச காட்சியை திரையில பார்த்ததும் சீட்டுல உட்கார்ந்து
இருந்த ஒரு சிறுமி என்னை திரும்பி பார்த்தார். படம் முடிஞ்சி வெளியில
வரும்போது என்கிட்டே ஓடிவந்த சிறுமி சினிமா டிக்கட் பின்னாடி கையெழுத்து
கேட்டார்.. நான் போட்டேன். எனக்கு கிடைச்ச முதல் ரசிகை அந்த சிறுமிதான்.
அவர் எங்கேனு தேடிக்கிட்டே இருக்கேன். நான் போட்ட முதல் ஆட்டோகிராப் சினிமா
டிக்கட் பின்னாலதான்!
-திருவாரூர் குணா
எம்.குணா
படங்கள் : ஸ்டில்ஸ் ரவி
ரஜினி இப்போது இந்தியாவின் சூப்பர் ஸ்டார்! கோடம்பாக்க
சாதனைப் புத்தகத்திலும் 'மேனேஜ்மென்ட்’ பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்று
இருக்கும் ரஜினியின் வாழ்க்கை எப்போதுமே ஒரு 'ஓப்பன் புக்’!
இப்போதும் குருநாதர் பாலசந்தர்
தொலைபேசியில் லைனுக்கு வந்தால், எழுந்து நின்றே பேசுவார். 'பைரவி’ படம்
மூலம் தன்னை ஹீரோவாக அறிமுகம் செய்த கலைஞானம் வந்தால், வாசலுக்கே வந்து
வரவேற்று அமரவைப்பார். தான் நின்றுகொண்டே பேசுவார். வாசல் வரை சென்று
வழியனுப்புவார்.
'என்னுடன் வா... தனியாகத்
தொழில் வைத்துத் தருகிறேன்!’ என்று பல முறை அழைத்தும் வராததாலேயே,
ரஜினிக்கு அன்றும் இன்றும் என்றும் நெருக்கமான நண்பராக இருக்கிறார்
ராஜ்பகதூர். 58-வயது வரை கண்டக்டராகப் பணிபுரிந்து சமீபத்தில்தான் ஓய்வு
பெற்றிருக்கிறார் ராஜ்பகதூர்.
'பாபா’
படம்பற்றி எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பிய சமயம், 'சூப்பர் ஸ்டார்
அவ்வளவுதான்’ என்று சினிமா உலகப் புள்ளிகள் சிலர் பார்ட்டி வைத்துக்
கொண்டாடியதைக் கேள்விப்பட்டு, மிகவும் சங்கடப்பட்டுப் போனார். அவர்களுள்
தான் நெருக்கமான நண்பர்களாக நினைத்துப் பழகிய சிலரும் இருந்ததே,
வருத்தத்துக்குக் காரணம்.
'அன்புள்ள ரஜினிகாந்த்’,
'வள்ளி’ பட இயக்குநர் கே.நட்ராஜ், அபரிமிதமான அன்பு காரணமாகத் தன்
மகளுக்கு 'ரஜினி’ என்று பெயர் சூட்டியதில் மிகவும் நெகிழ்ந்துபோனார்
ரஜினி. சமீபத்தில் நடிகர் விஷ்ணு - 'ரஜினி’ திருமணத்தில் கலந்துகொண்டு
ரஜினி வாழ்த்தியதற்கு அந்தப் பிரியமே காரணம்.
'என் வாழ்க்கையில் வந்த
பெண்களில் ஸ்ரீப்ரியாவுக்கு முக்கியமான இடம் உண்டு’ என்பார். இடைவிடாத
படப் பிடிப்பு தந்த அழுத்தம் காரணமாக, ஒரு சமயம் மருத்துவ மனையில்
அனுமதிக்கப்பட்டபோது, அருகில் இருந்து பார்த்துக்கொண்டவர் ஸ்ரீப்ரியா.
அசைவ உணவுகளை வகை பிரித்து
வேட்டையாடுவார். 'இந்தந்த ஹோட்டலில் இன்னின்ன அயிட்டங்கள் வாங்கி வா!’
என்று வரவழைத்து ருசிப்பார். ஆனால், அதெல்லாம் அப்போது. சிங்கப்பூர்
சிகிச்சைக்குப் பிறகு, காலையில் பழங்கள், அதிகபட்சம் இரண்டு இட்லி. மதியம்
கொஞ்ச மாக சாதம், இரவு எண்ணெய் இல்லாத சப்பாத்தி. அவ்ளோதான்.
நண்பர் கிட்டுவின் 'டி போர்ட்’
அம்பாஸடர் காரில்தான் அடிக்கடி ஊர் சுற்றுவார். நினைத்தால் சட்டென்று
காரில் ஏறி ஊரைவிட்டுத் தள்ளிச் சென்று, எங்காவது ஒரு டீக்கடை பெஞ்ச்சில்
டீ கிளாஸும் செய்தித்தாளு மாக அமர்ந்துகொள்வார். சுற்றிலும் இருப்பவர்கள்
பேசுவதை உன்னிப்பாகக் கவனிப்பதுதான் பிடித்த பொழுதுபோக்கு. சமீபமாக
இன்னோவாவில் பயணிக்கிறார்.
'எந்திரன்’
படம் வெளியானபோது தன்னைச் சந்திக்க வந்த நண்பர்களிடம் 'எம்.ஜி.ஆரோட 'உலகம்
சுற்றும் வாலிபன்’ மாதிரி 'எந்திரன்’ படம் எல்லா இடத்துலயும் ரீச்
ஆகியிருக்கா? என்ன பேசிக்கிறாங்க?’ என்று திரும்பத் திரும்பக்
கேட்டுக்கொண்டே இருந்தார். கேள்விக்கான காரணம் புரியாமல் திகைத்து
நின்றிருக்கிறார்கள் நண்பர் கள்.
'என் பெங்களூரு அண்ணன் சத்திய
நாராயணா. சென்னை அண்ணன் எஸ்.பி.முத்துராமன்!’ - இயக்குநர் முத்துராமன்
மீது அந்த அளவுக்குப் பாசம் காட்டுவார்.
எட்டு எட்டாக
வாழ்க்கையைப் பிரித் துக்கொள்ளச் சொன்னவர், தனதுநண்பர் களை நான்கு
வகையாகப் பிரித்து வைத்திருக்கிறார். பெங்களூரு போக்கு வரத்துக் கழக
நண்பர்கள், சென்னை திரைப்படக் கல்லூரி நண்பர்கள், சினிமா உலக நண்பர்கள்,
இமயமலை யாத்ரா நண்பர்கள்.
படங்களில் நடிக்காதபோது மிகவும்
ரிலாக்ஸாக நண்பர்களிடம் அரட்டை அடித்தபடி உற்சாகமாக நேரம் செலவழிப் பார்.
ஆனால், தான் நடிக்கும் பட வேலைகள் ஆரம்பித்தது முதல் படம் வெளியாகி
ரிசல்ட் தெரியும் வரை டென்ஷன்... டென்ஷன்... டென்ஷன் மட்டுமே.
ரஜினியின் செல்போன் எப்போ தும்
அவருடைய உதவியாளர் சுப்பையாவிடம் இருக்கும். ரஜினி யின் எண்ணுக்கு வரும்
அழைப்பு களுக்கு முதலில் காது கொடுப் பதும் சுப்பையாதான். ரஜினி பேச
விரும்புபவர்களை சுப்பையா லைனில் பிடித்துக் கொடுத்த பிறகு, 'வணக்கம்...
நான் ரஜினி பேசுறேன்!’ என்று கணீரென ஆரம்பிப்பார் ரஜினி.
கடவுளுக்கு இணையாக ரஜினி மனதில்
போற்றுபவர் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர். தன்னுடைய பூஜை அறையில்
தேவர் படத்தை வைத்து வணங்கி வருகிறார்.
சென்சேஷனல் இளைஞர்களை
வீட்டுக்கு வரவழைப்பார். நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசி, புகைப்படங்கள்
எடுத்து என... அந்த நாள் முழுவதும் அவர்களுக்குத் தான் டெடிகேடட்.
தான் நடித்த படங்களில் ரஜினி
யின் மனதுக்கு நெருக்கமானது 'ராகவேந்திரா’. மிகவும் பிடித்தது 'அண்ணாமலை’,
'பாட்ஷா’. அவரே ஒரு ரஜினி ரசிகனாக ரசிப்பது 'எந்திரன்’.
இப்படி ஒரு விழா இதுவரை தமிழகத்தில் நிகழ்ந்தது இல்லை!
அரங்கமெல்லாம் மக்கள் வெள்ளம், ஆறரை மணி நேரம், ரஜினி முதல் ரஹ்மான்
வரை, பாலசந்தர் முதல் இளையராஜா வரை, மம்மூட்டி முதல் மோகன்லால் வரை
ஒட்டுமொத்தத் தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள். கமல்ஹாசன் என்பதாலேயே
இது சாத்தியமாகி இருக்கிறது. கமல் 50 தொடரும் ஒரு சரித்திரம் என்ற கமலின்
கலையுலகப் பொன்விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விஜய்
டி.வி. நிகழ்த்திய விதம் வியப்பூட்டியது!
பாலசந்தரின் பாதம் தொட்டு ஆசி வாங்கிய கமலை, கட்டிப்
பிடித்துக்கொண்டார் ரஜினி. பதிலுக்கு கமல் ரஜினிக்கு முத்தம் கொடுக்க,
அருகில் இருந்த நடிகைகளிடம், ''உங்களுக்குக் கொடுத்த முத்தங்களைவிட இந்த
முத்தம்தான் பெஸ்ட்!'' என்று ரசித்துச் சிரித்தார்!
நெகிழ்வாய் இருந்தார் கே.பாலசந்தர் ''கமலுக்கு நான்தான் குருனு
எல்லாரும் சொல்றாங்க. ஆனா, என் இடத்தில் ஒரு குப்பனோ சுப்பனோ
இருந்திருந்தால்கூட கமல் இந்த உயரத்தைத் தொட்டிருப்பார். அவர் ஒரு யுக
புருஷன். 'தசாவதாரம்' வரை சாதித்துவிட்டார். அதையெல்லாம் மிஞ்ச அடுத்து
என்ன செய்யப்போகிறார் என்பதுதான் என் கவலை. கமல் அதையும் மிஞ்சிக்
காட்டுவார். அவர் என்றுமே 'மை டியர் ராஸ்கல்'தான்!'' என்றார்
உணர்வுபூர்வமாக.
ராதிகா பின்னிவிட்டார். ''காதல் காட்சிகளில் நடிக்கும்போது கமல்
உண்மையிலேயே காதலிக்கிற மாதிரியே இருக்கும். ஆனா, ஹீரோயின்களுக்குப் பதிலா
அங்கே ஒரு எருமை மாடு இருந்தாக்கூட அதையும் இவர் காதலோடு பார்ப்பார்னு
அப்புறம்தான் எனக்குப் புரிஞ்சது!'' என்றவர், கமலுடன் நடித்த ஹீரோயின்கள்
12 பேரை மேடையேற்றினார். அப்போது கமல்
''சினிமாவில் ஹீரோ - ஹீரோ யின் காதல் பண்றதை வெளியே இருக்கிறவங்க பொறாமையாப் பார்ப்பாங்க. ஆனா, அதுல இருக்கிற கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். பல சமயம் ஹீரோயின்களைத் தம் பிடிச்சுத் தூக்க முடியாமக் கீழே போட்டிருக்கேன்!'' என்றார். உடனே ராதிகா, ''அப்படி எத்தனை பேரைப் போட்டிருக்கீங்க?'' என்று அப்பாவியாகக் கேட்க, முதலில் அதிர்ந்து பிறகு குபீரெனச் சிரித்துவிட்டார் கமல் (மொத்த அரங்கமுமே!) ''இல்லைங்க, நான் போட்டது கொஞ்ச பேரைத் தான். தானா கீழே விழுந்தவங்கதான் நிறைய!'' என்று 'ஒரு பொருட் பன்மொழி'யாகச் சமாளித் தார் கமல்.
''சினிமாவில் ஹீரோ - ஹீரோ யின் காதல் பண்றதை வெளியே இருக்கிறவங்க பொறாமையாப் பார்ப்பாங்க. ஆனா, அதுல இருக்கிற கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். பல சமயம் ஹீரோயின்களைத் தம் பிடிச்சுத் தூக்க முடியாமக் கீழே போட்டிருக்கேன்!'' என்றார். உடனே ராதிகா, ''அப்படி எத்தனை பேரைப் போட்டிருக்கீங்க?'' என்று அப்பாவியாகக் கேட்க, முதலில் அதிர்ந்து பிறகு குபீரெனச் சிரித்துவிட்டார் கமல் (மொத்த அரங்கமுமே!) ''இல்லைங்க, நான் போட்டது கொஞ்ச பேரைத் தான். தானா கீழே விழுந்தவங்கதான் நிறைய!'' என்று 'ஒரு பொருட் பன்மொழி'யாகச் சமாளித் தார் கமல்.
ஹீரோயின்கள் சங்கமம் முடிந்தவுடன் சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்தது பிரபுதேவா.
''கமல் சாருக்காக நடக்கும் விழாவில் அப்பாவோடு சேர்ந்து ஆடணும்னு
தோணுச்சு. அப்பாகிட்ட கேட்டேன். 'எனக்கு உடம்பு சரியில்லையே டா'ன்னாரு.
'அப்பா... கமல்ப்பா'ன்னேன். உடனே 'ஓ.கே!' சொல்லிட்டாரு!'' என்றவர், தன்
அப்பா மாஸ்டர் சுந்தரத்துடன் 'காசு மேல காசு வந்து' எனத் தொடங்கி
ஏழெட்டுப் பாடல்களுக்குக் கலக்கல் காக்டெயில் நடனம் ஆடினார். பாடலுக்கு
இடையே ஒற்றை ரோஜாவை கமலிடம் பிரபுதேவா கொடுக்க, கட்டியணைத்து நெகிழ்ந்தார்
கமல்.
மலையாள
தேசத்தில் இருந்து மம்மூட்டி, ''கமல், எங்கள் மண்ணுக்கும் சொந்தக்காரர்.
எனக்கும் கமலுக்கும் ஒரு சவால் இருக்கிறது. நானும் அவரும் இதுவரை சிறந்த
நடிப்புக்காக ஆளுக்கு மூன்று தேசிய விருதுகள் வாங்கியிருக்கோம். நான்காவது
முறையா விருது வாங்கப்போவது யார் என்பதில் எங்கள் இருவருக்கும்
ஆரோக்கியமான போட்டி நடக்கிறது!'' என்று முடித்தார்.
மைக் பிடித்தார் ரஜினி. சட்டென அரங்கில் ஓர் அமைதி. '' 'அபூர்வ
ராகங்கள்' படத்துக்குப் பிறகு மூணு படங்களில் நானும் கமலும் சேர்ந்து
நடிச்சோம். அப்பவே ஃபீல்டுல கமல் பெரிய பிஸ்தா. 'இந்தப் படத்துல ரஜினியைப்
போட வேண்டாம்'னு கமல் ஒரு வார்த்தை சொல்லி இருந்தார்னா, கண்டிப்பா எனக்கு
அந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கும். ஆனா, கமல் அப்படிச் சொல்லலை.
கமல்தான் என்னோட கலையுலக அண்ணா.
நீங்களெல்லாம் கமல் படங்களைப் பார்த்து நடிக்கக் கத்துக்கிட்டேன்னு
சொன்னீங்க. நான் கமல் நடிக்கிறதையே பார்த்துப் பார்த்து நடிக்கக்
கத்துக்கிட்டவன். 'அவர்கள்' படத்தோட ஷூட்டிங் நடந்துட்டு
இருக்கும்போது எனக்கு ஷாட் இல்லைன்னா, நைஸா செட்டைவிட்டு வெளியே
கிளம்பிடுவேன். ஒருநாள் கே.பி சார், 'எங்கேடா போற... தம்மடிக்கவா?'ன்னு
கேட்டார். எதுவும் சொல்லாம நின்னேன். 'உள்ளே போடா. கமல்னு ஒருத்தன் அங்கே
நடிச்சுட்டு இருக்கான்ல. அவனைப் பாருடா. அவன் எப்படி நடிக்கிறான்னு பாரு.
கொஞ்சமாச்சும் கத்துக்கோ'ன்னு சொன்னாரு. அதுக்கப்புறம் கமல் நடிக்கும்போது
நான் வெளியே போனதேஇல்லை.
கமல் மட்டும் எப்படி இப்ப டின்னு நான் அடிக்கடி யோசிப்பேன். அதுக்குக்
காரணம், அவருக்கு கலைத்தாயின் அம்சம் இருக்கு. அதனால்தான் கலைத்தாயே
அவரைப் பல ரூபங்களில் ரசிக்கிறாள். இங்கே நான், மோகன்லால், மம்மூட்டி,
வெங்கடேஷ், சரத்குமார் மாதிரியானவங்களை கலைத் தாய் கையைப் பிடிச்சு
அழைச்சுட்டுப் போறா. ஆனா, கமலை மட்டும் தோள்ல
தூக்கிவெச்சு மார்போடு அணைச்சுட்டுப் போறா. நான் கலைத் தாய்கிட்டே
கேட்டேன், 'ஏம்மா... இது உனக்கே நியாயமா? நாங்களும் உன் குழந்தைங்கதானே?
அப்புறம் ஏன் இந்தப் பாரபட்சம்?'னு. அதுக்கு கலைத் தாய், 'ரஜினி! நீ போன
ஜென்மத்துலதான் நடிகனாகணும்னு ஆசைப்பட்டே.
ஆனா, கமல் ஒரு ஜென்மத்துல டான்ஸ் மாஸ்டர், இன்னொரு ஜென்மத்துல அசிஸ்டென்ட் டைரக்டர், வேறொரு ஜென்மத்துல நடிகர், இன்னும் ஒரு ஜென்மத்துல டைரக்டர்னு கடந்த 10 ஜென்மங்களாப் போராடிட்டு இருக்கான். அதனாலதான் கமலைத் தோளில்வெச்சுக் கொண்டாடு றேன்!'ன்னு சொன்னா. கமல் வாழ்ந்த காலத்தில், கமல் நடித்த காலத்தில், நானும் வாழ்ந்தேன், நானும் நடித்தேன்கிற பெருமையே எனக்குப் போதும்!'' என்று படபடவெனப் பேசி ரஜினி அமர, அரங்கமே ஒரு கணம் ஸ்தம்பித்து, சுதாரித்து, கைத்தட்டல்களால் பிரதேசத்தையே அதிரவைத்தனர்.
ஆனா, கமல் ஒரு ஜென்மத்துல டான்ஸ் மாஸ்டர், இன்னொரு ஜென்மத்துல அசிஸ்டென்ட் டைரக்டர், வேறொரு ஜென்மத்துல நடிகர், இன்னும் ஒரு ஜென்மத்துல டைரக்டர்னு கடந்த 10 ஜென்மங்களாப் போராடிட்டு இருக்கான். அதனாலதான் கமலைத் தோளில்வெச்சுக் கொண்டாடு றேன்!'ன்னு சொன்னா. கமல் வாழ்ந்த காலத்தில், கமல் நடித்த காலத்தில், நானும் வாழ்ந்தேன், நானும் நடித்தேன்கிற பெருமையே எனக்குப் போதும்!'' என்று படபடவெனப் பேசி ரஜினி அமர, அரங்கமே ஒரு கணம் ஸ்தம்பித்து, சுதாரித்து, கைத்தட்டல்களால் பிரதேசத்தையே அதிரவைத்தனர்.
ஏற்புரைக்கு எழுந்த கமல் முகத்தில் அத்தனைக் கலவையான உணர்ச்சிகள்.
''இங்கே வர்றதுக்கு முன்னாடி ரெண்டு விஷயங்களை முக்கியமா முடிவு பண்ணிட்டு
வந்தேன். 'சுருக்கமா பேசணும்... அழாமப் பேசணும்'னு. ஆனா, அது ரெண்டுமே
சாத்தியமில்லைன்னு நினைக்கிறேன்.
நான் சினிமாவுக்குள் நுழைந்தபோது போட்டுவெச்சிருந்த லிஸ்ட்ல என்னென்ன
செஞ்சிருக்கோம்னு பார்க்கும்போது முழுசா எதுவுமே முடிக்கலைன்னு தோணுது.
பாதியைக்கூட இன்னும் செய்யலை. இது அவையடக்கம் இல்லை... உண்மை! எனக்கான
நேரம் குறைவு, செய்ய வேண்டிய வேலை அதிகம் இருப்பதை இந்த விழா
உணர்த்துகிறது.
சினிமாவில் என்னையும் ரஜினியையும் போல நண்பர்கள் யாரும் கிடையாது. ஒரு
சக நடிகனைப்பத்தி ஒரு பொது மேடையில் மனசுவிட்டு எவன் இப்படிப் பேசுவான்?
அந்த மனசு ரஜினிகிட்ட இருக்கு. தன்னைத் தாழ்த்தி என்னை உயர்த்திப்
பேசி இருக்காரு. நான் ஒரு சவால் விடுறேன். தமிழ் சினிமாவில் ரெண்டு
ஹீரோக்கள் இருந்தாங்கடா. கமல் - ரஜினின்னு. அவங்களைப் போல நட்பு சினிமாவில்
யார்கிட்டே இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்.
நிச்சயம் அப்படி யாரும் இருக்க மாட்டாங்க. இதுக்கு முன்னாடியும் கிடையாது... இனிமேலும் அப்படி ஒரு நட்பு யார்கிட்டயும் துளிர்க்காது. அவர் தான் யார் என்பதைத் தேடி இமயமலைக்குப் போறார். நான் இங்கே அலைஞ்சுட்டு இருக்கேன்.
நிச்சயம் அப்படி யாரும் இருக்க மாட்டாங்க. இதுக்கு முன்னாடியும் கிடையாது... இனிமேலும் அப்படி ஒரு நட்பு யார்கிட்டயும் துளிர்க்காது. அவர் தான் யார் என்பதைத் தேடி இமயமலைக்குப் போறார். நான் இங்கே அலைஞ்சுட்டு இருக்கேன்.
நான் கடவுள் இல்லைன்னு சொல்லலை. இருந்தால் நல்லா இருக்குமேன்னுதான்
சொல்றேன். நான் வளர்த்தாலும் என் மகள் ஸ்ருதி ஆத்திகம் பேசுபவள்.
கோயிலுக்குச் செல்கிறாள். பொட்டு வைத்துக்கொள்கிறாள். சமயங்களில் எனக்கும்
வைத்துவிடுகிறாள்.
ஆனால், அதை நான் அழிக்க மாட்டேன். அன்பு கருதி அழிப்பதில்லை. அந்த அன்புதான் உங்களை இங்கு வரவழைத்திருக்கிறது. நான் தந்தையாக மதிக்கும் சிவாஜி, நாகேஷ் இங்கு இல்லை. அவர்களுக்கு நிகராக நீங்கள் இருக்கிறீர்கள். தயவுசெய்து மேடைக்கு வாருங்கள். குரூப் போட்டோ எடுத்துக்கொள்வோம். அதை என் வீட்டில் மாட்டிவைக்கணும்!'' என்று திரைத் துறையினரை மேடைக்கு அழைத்த கமல், ஒரு கணம் யோசித்தார். பிறகு தடாலென மேடையில் மண்டியிட்டு கூட்டத்தினை நோக்கி வணங்கினார்.
ஆனால், அதை நான் அழிக்க மாட்டேன். அன்பு கருதி அழிப்பதில்லை. அந்த அன்புதான் உங்களை இங்கு வரவழைத்திருக்கிறது. நான் தந்தையாக மதிக்கும் சிவாஜி, நாகேஷ் இங்கு இல்லை. அவர்களுக்கு நிகராக நீங்கள் இருக்கிறீர்கள். தயவுசெய்து மேடைக்கு வாருங்கள். குரூப் போட்டோ எடுத்துக்கொள்வோம். அதை என் வீட்டில் மாட்டிவைக்கணும்!'' என்று திரைத் துறையினரை மேடைக்கு அழைத்த கமல், ஒரு கணம் யோசித்தார். பிறகு தடாலென மேடையில் மண்டியிட்டு கூட்டத்தினை நோக்கி வணங்கினார்.
அந்த மகா கலைஞனுக்கு வேறு என்ன செய்து தன் நன்றியைத் தெரிவிப்பது என்று
தெரியவில்லை!
நன்றி - விகடன்
சென்னை: ரஜினி தன்
காதலச் சொல்லி திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டதற்கு லதா
வெட்கப்பட்டுக் கொண்டு தனது பெற்றோரிடம் சம்மதம் கேட்டுமாறு கூறியுள்ளார்.
தில்லு முல்லு ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் ரஜினிகாந்த் லதா ரங்காச்சாரியை
முதன் முதலாக சந்தித்தார். லதாவின் தந்தை பெங்களூரில் பணியாற்றியதால்
அவர்கள் மல்லேஸ்வரம் பகுதியில் வசித்தனர். சென்னை எத்திராஜ் கல்லூரியில்
படித்த லதா கல்லூரி பத்திரிக்கைக்காக ரஜினியை பேட்டி எடுக்கச் சென்றபோது
தான் அவரை முதன் முதலாக சந்தித்தார்.
அவரை முதல் தடவைப் பார்த்ததுமே எனக்கு பிடித்துவிட்டது. ஒரு சினிமா
நடிகரைச் சந்தித்தோம் என்ற மாதிரியே இல்லை. ஏதோ நீண்ட காலம் பழகியவரை
சந்தித்தது போன்று இருந்தது என்றார் லதா.
ரஜினி உதவியாளர் சத்யநாராயணா கூறுகையில்,
அந்த பேட்டியின்போதே ரஜினி லதாவிடம் தன்னை மணக்க இஷ்டமா என்று கேட்டார்.
அவர் வெட்கப்பட்டுக் கொண்டு எனது பெற்றோரிடம் கேளுங்கள் என்றார். லதா
ரஜினியை சந்தித்தபோது தான் அவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு தேறி
வந்தார். அந்த சந்திப்பிற்கு பிறகு அவர்களுக்கு இடையேயான அன்பு வளர்ந்தது
என்றார்.
ரஜினி சிறுவனாக இருந்தபோது கஷ்டப்பட்டது, குடும்பப் போராட்டம், இளம் வயதில்
தாயை இழந்தது பற்றி லதா கொஞ்சம், கொஞ்சமாக தெரிந்து கொண்டார்.
அவருக்கு தாயின் அன்பு தேவைப்பட்டது என்பதை நான் உணர்ந்தேன் என்றார் லதா.
பெரிய ஹீரோவாக ஆன ரஜினிக்கு ஒரு துணை தேவைப்பட்டது. அந்த நேரத்தில் தான்
லதா வந்தார்.
லதாவின் பெற்றோரை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளச் செய்யும் பொறுப்பு நடிகர்
ஒய்.ஜி. மகேந்திரனின் தலையில் விழுந்தது. அபூர்வ ராகங்கள் படத்தில்
இருந்தே ரஜினிக்கு ஒய்.ஜி. மகேந்திரனைத் தெரியும். லதாவின் சகோதரி சுதாவை
ஒய்.ஜி. மகேந்திரன் மணந்திருந்ததால் ரஜினிக்கு பெண் கேட்கும் வேலை
ஈசியாகிவிட்டது.
மேலும் சத்யநாராயணாவும் லதாவின் பெற்றோரை சந்தித்து திருமணம் குறித்து பேசி
சம்மதம் வாங்கினர். இதையடுத்து ரஜினியின் நண்பர் ராஜா பாதர் போயஸ் கார்டன்
வீட்டுக்கு சென்று மணப்பெண் பற்றி கேட்டார். ரஜினி தன் காதலைப் பற்றியும்
லதாவை மணக்க விரும்புவதைப் பற்றியும் ராஜாவிடம் தெரிவி்த்தார். உடனே ரஜினி
லதாவை போன் செய்து வரவழைத்து இவர் தான் நான் மணக்க விரும்பும் பெண்
என்றார். அதன் பிறகு ராஜா பாதர் பெண் குறித்து பல கேள்விகளை கேட்டுவிட்டு
ஓ.கே. கல்யாணம் செய்துகொள் என்றார்.
Read more at: http://tamil.oneindia.in/movies/news/2012/12/rajinikanth-proposes-latha-accepts-166147.html
Read more at: http://tamil.oneindia.in/movies/news/2012/12/rajinikanth-proposes-latha-accepts-166147.html
சென்னை: ரஜினி தன்
காதலச் சொல்லி திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டதற்கு லதா
வெட்கப்பட்டுக் கொண்டு தனது பெற்றோரிடம் சம்மதம் கேட்டுமாறு கூறியுள்ளார்.
தில்லு முல்லு ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் ரஜினிகாந்த் லதா ரங்காச்சாரியை
முதன் முதலாக சந்தித்தார். லதாவின் தந்தை பெங்களூரில் பணியாற்றியதால்
அவர்கள் மல்லேஸ்வரம் பகுதியில் வசித்தனர். சென்னை எத்திராஜ் கல்லூரியில்
படித்த லதா கல்லூரி பத்திரிக்கைக்காக ரஜினியை பேட்டி எடுக்கச் சென்றபோது
தான் அவரை முதன் முதலாக சந்தித்தார்.
அவரை முதல் தடவைப் பார்த்ததுமே எனக்கு பிடித்துவிட்டது. ஒரு சினிமா
நடிகரைச் சந்தித்தோம் என்ற மாதிரியே இல்லை. ஏதோ நீண்ட காலம் பழகியவரை
சந்தித்தது போன்று இருந்தது என்றார் லதா.
ரஜினி உதவியாளர் சத்யநாராயணா கூறுகையில்,
அந்த பேட்டியின்போதே ரஜினி லதாவிடம் தன்னை மணக்க இஷ்டமா என்று கேட்டார்.
அவர் வெட்கப்பட்டுக் கொண்டு எனது பெற்றோரிடம் கேளுங்கள் என்றார். லதா
ரஜினியை சந்தித்தபோது தான் அவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு தேறி
வந்தார். அந்த சந்திப்பிற்கு பிறகு அவர்களுக்கு இடையேயான அன்பு வளர்ந்தது
என்றார்.
ரஜினி சிறுவனாக இருந்தபோது கஷ்டப்பட்டது, குடும்பப் போராட்டம், இளம் வயதில்
தாயை இழந்தது பற்றி லதா கொஞ்சம், கொஞ்சமாக தெரிந்து கொண்டார்.
அவருக்கு தாயின் அன்பு தேவைப்பட்டது என்பதை நான் உணர்ந்தேன் என்றார் லதா.
பெரிய ஹீரோவாக ஆன ரஜினிக்கு ஒரு துணை தேவைப்பட்டது. அந்த நேரத்தில் தான்
லதா வந்தார்.
லதாவின் பெற்றோரை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளச் செய்யும் பொறுப்பு நடிகர்
ஒய்.ஜி. மகேந்திரனின் தலையில் விழுந்தது. அபூர்வ ராகங்கள் படத்தில்
இருந்தே ரஜினிக்கு ஒய்.ஜி. மகேந்திரனைத் தெரியும். லதாவின் சகோதரி சுதாவை
ஒய்.ஜி. மகேந்திரன் மணந்திருந்ததால் ரஜினிக்கு பெண் கேட்கும் வேலை
ஈசியாகிவிட்டது.
மேலும் சத்யநாராயணாவும் லதாவின் பெற்றோரை சந்தித்து திருமணம் குறித்து பேசி
சம்மதம் வாங்கினர். இதையடுத்து ரஜினியின் நண்பர் ராஜா பாதர் போயஸ் கார்டன்
வீட்டுக்கு சென்று மணப்பெண் பற்றி கேட்டார். ரஜினி தன் காதலைப் பற்றியும்
லதாவை மணக்க விரும்புவதைப் பற்றியும் ராஜாவிடம் தெரிவி்த்தார். உடனே ரஜினி
லதாவை போன் செய்து வரவழைத்து இவர் தான் நான் மணக்க விரும்பும் பெண்
என்றார். அதன் பிறகு ராஜா பாதர் பெண் குறித்து பல கேள்விகளை கேட்டுவிட்டு
ஓ.கே. கல்யாணம் செய்துகொள் என்றார்.
Read more at: http://tamil.oneindia.in/movies/news/2012/12/rajinikanth-proposes-latha-accepts-166147.html
Read more at: http://tamil.oneindia.in/movies/news/2012/12/rajinikanth-proposes-latha-accepts-166147.html
0 comments:
Post a Comment