Monday, December 24, 2012

எம் ஜிஆர் - ஒரு சகாப்தம்

http://www.envazhi.com/wp-content/uploads/2011/02/rajini-petham1.jpg

மக்கள் திலகம்' என புகழப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1917 ஜன., 17 ல் பிறந்தார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என, பன்முகம் கொண்டவர். மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவர்.

பெற்றோர், மருதூர் கோபால மேனன் - சத்தியபாமா. வேலை நிமித்தமாக இலங்கை கண்டியில் வசித்தனர். தந்தை மறைவிற்கு பின், தாய் மற்றும் சகோதரருடன், கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர்., சகோதரர் சக்ரபாணியோடு இணைந்து, நாடகங்களில் நடித்தார்.



 அரிதாரக் கலையின் அரிச்சுவடியை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., அந்த அனுபவத்தின் அடிப்படையில் திரைத்துறையில் கால்பதித்தார். அயராத உழைப்பு, கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கனிவான பார்வை, கருணை உள்ளம், உயர்ந்த கருத்துக்களை பிரதிபலிக்கும் பிடிவாதம் என பல பரிணாமங்களில் ஜொலித்தார். "பிஞ்சு மனதில் நஞ்சை கலக்கக் கூடாது' என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர்., சினிமாவில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதையும், நல்வழிப்படுத்துவதையும் கொள்கையாக கொண்டிருந்தார்.


http://www.envazhi.com/wp-content/uploads/2012/01/p72a.jpg

தேசிய விருது :
எம்.ஜி.ஆர்., நடித்த முதல் படம் "சதிலீலாவதி', 1936ல் வெளி வந்தது. இருப்பினும் 1947ல் வெளிவந்த "ராஜகுமாரி' தான், எம்.ஜி.ஆருக்கு புகழை ஈட்டித் தந்தது. 1971ல் வெளியான "ரிக்ஷாக்காரன்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான "தேசிய விருது' பெற்றார். நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை தயாரித்த எம்.ஜி.ஆர்., நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை அவரே இயக்கி நடித்தார்.


 தி.மு.க., உறுப்பினராகவும், பொருளாளராகவும் நீண்டகாலம் பணியாற்றினார். "என் இதயக்கனி' என, அண்ணாதுரையால் உச்சிமோந்து போற்றப்பட்டார். 1967ல் முதல்முறையாக எம்.எல்.ஏ., ஆனார். அண்ணாதுரை மறைவிற்கு பின், முதல்வரான கருணாநிதியுடன் ஏற்பட்ட "கருத்து வேறுபாடு' காரணமாக, தி.மு.க.,வில் இருந்து வெளியேறினார்,

தமிழக முதல்வர் :
1972ல் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அ.இ.அ.தி.மு.க., ) தொடங்கினார். 1977 சட்டசபை தேர்தலில், இவரது கட்சி வெற்றி பெற்று எம்.ஜி.ஆர்., முதல்வரானார். 1980 ல், 2 வது முறையாக முதல்வரானார். இதன்பின் 1984 தேர்தலில், நோய்வாய்ப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்து கொண்டே, ஆண்டிபட்டி தொகுதியில் வென்றார்; முதல்வர் பதவியையும் தக்க வைத்தார். "படுத்துக் கொண்டே ஜெயித்தவர்' என, மக்கள் புகழாரம் சூட்டினர். பதவியில் இருந்த போதே, உடல்நலக்குறைவால், 1987 டிச., 24 ல் மறைந்தார்.
பாரத ரத்னா:


முதல்வராக இருந்த போது, பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு உள்ளிட்ட நல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மறைவுக்குப் பின் இவருக்கு, 1988 ல், உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கப்பட்டது. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPdV-N-Cs-jqa6Wz6Bx9wgpe1BqnmL31G6BZnn05mel-Jcpmhr3cuUZ5vemTiq_FqKnLO7ZBW5MRFYbg8Q2XXj5y8kI24tXJwoFu79l6VN7M_B6XTMOeo_qeFYao0k7W_cHCTaOdpQQgjw/s1600/indira_mgr.jpg



மக்கள் கருத்து 


1. MGR அவர்கள் ஒரு நடிகராக மக்களுக்கு அறிமுகம் ஆனவர்தான்,ஆனால் நடிகராக மக்களால் மட்டும் நினைத்துக்கொள்ளப்பட்டு இருப்பவர் அல்ல,MGR அவர்களை விட மிகப்பெரிய நடிகர்கள் எல்லாம் அந்த காலகட்டத்தில் வாழ்ந்தார்கள். அவர்களை எல்லாம் மக்கள் இன்னும் நினைத்துகொண்டு இருக்கவில்லை, அந்த நடிகர்களின் ரசிகர்களே அந்த நடிகர்களை மறந்து விட்டார்கள். 


ஆனால் MGR அவர்கள் அப்படி மறக்கப்படவில்லை.ஆக,MGR அவர்களை மக்கள் மட்டும் பார்க்கவில்லை.MGR அவர்கள் அரசியல்வாதி என சொல்லப்பட்டார்.அவர் அரசியல்வாதி என்பதற்காக அவரை மக்கள் முதல்வராக ஆக்கவில்லை,ஏனன்றால்,அவர் வாழ்ந்த காலத்தில் அவரைவிட அரசியல் சாணக்கியம் அறிந்த அரசியல்வாதிகள் பலர் இருந்தார்கள்.ஆனால்,மக்கள் MGR அவர்களைத்தான் முதல்வராக்க விரும்பினார்கள்.ஆக,மக்கள் MGR அவர்களை நாட்டை காக்க வந்த அரசியல்வாதியாகவும் பார்த்து முதல்வராக்கவில்லை என்பதும் தெளிவு. 



இரண்டாவது முறையாக முதல்வர் ஆக மக்களால் ஆக்கப்பட்டதும்,அவர் முதல்முறை மாநிலத்தை மிக மிக சிறப்பாக ஆண்டார் என்பதற்காவும் அல்ல..ஆக, MGR அவர்கள் ஒரு மிகச்சிறந்த நடிகரல்ல,மிகச்சிறந்த அரசியல்வாதியும்அல்ல,ஆனால்,இன்றளவும்,மக்களால்,அரசியல்வாதிகளால்,அவரின் விரோதிகளால்,நண்பர்களால், ஏன் அவர் காலத்தில் வாழாத சந்ததியினர் கூட நினைவு கூறும் ஓர் " சக்தி" ஆக MGR அவர்கள் இருகின்றார் என்றால் அதுதான் MGR , அவர்தான் "மக்கள் திலகம்" 


http://tamil.oneindia.in/img/2010/10/30-murugan-mgr-200.jpg



2. எம்.ஜி.யாரின் இரண்டு செயல்கள் - மதிய உணவு , விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தமிழகத்தை முன்னேற செய்துள்ளது. அரசியளில் இரண்டு விதமான அரசியல்வாதிகள் உள்ளார்கள். பொருளாதரத்தை வளர்ப்பவர்கள். இன்னுமொருவர் இருக்கிர சொத்தை பகி்ர்ரவர். எம்.ஜி.யார் இந்த இரண்டாவது வகையை சேர்ந்தவர். எம்.ஜி.யார் காலத்தில் தமிழகம் தொழில் துறையில் அதிகம் வளர்ச்சி இல்லை. ஆனால் ஏழை எளியவர்களை பார்த்துக்கொண்டார். அந்த கால கட்டத்திர்க்கு எம்.ஜி.யார் போன்ற தலைவர் தேவை. ஆனால் இப்போ தமிழகம் சிறந்த , தமிழகத்தை பொருளாதரத்தில் வளர்க்கும் தலைவர் தேவை. 



3. MGR என்ற பெயரை சொன்னாலே, பிறருக்கு கொடுக்கும் உணர்வு தூண்டப்படுகிரது ஏன்? அவரைப்பற்றி விமர்சிக்க தகுதி வேண்டும்?? இன்று பல நடிகர்கள் விளம்பரமில்லாமல் ஏழைகளுக்கு உதவலாம்???? யார்? முன்னோடி?


 தங்கத் தலைவர்....தானைத்தலைவர்....புரட்சித்தலைவர்....பொன்மனச்செம்மல்.... இதய தெய்வம்....இதில் ஏதாவது ..உனக்கு..?????. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்..எம் ஜி ஆர் நாமம் வாழ்க. என் இதய தெய்வத்தை வீண் விமர்சனம் செய்யாதீர்...முடிந்தால் ஏழை ஒருவருக்கு ஒரு வேளை உணவு கொடுத்துப்பார்..மூன்றெழுத்தின் உண்மை விளங்கும்(மனம்+நிறைவு) 



4. MGR இறக்கும் போதும், ஆட்சியில் இருந்த போதும் சரி தனக்கென்று எந்த சொத்தும் சேர்த்து கொள்ளாதவர். இறந்த பின் அனைத்தையும் அனாதை குழந்தைகளுக்கும், காது கேளாத குழந்தைகளுக்கும் விட்டு சென்றவர். சத்துணவு திட்டத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் விரிவுபடுத்தியவர். முரசொலி மாறன் கல்லூரியில் படிக்க பணம் இல்லாத போது கல்லூரியில் படிக்க உதவியவர். தமிழ் நாட்டில் நக்சல்களின் கொட்டத்தை அடக்கியவர். திரைப்படங்களில் (ரஜினி போல் இல்லாமல்) சிகரெட்டே குடிக்காமல், மது குடிக்காமல் நல்ல கருத்துகளை சொல்லி அன்றைய இளைஞர்களை நல்ல பாதைக்கு திருப்பியவர். 



அவர் காலத்தில் மது கடையின் முன் நிற்பவனை கேடு கேட்டவன் என்று சொன்ன காலம் அவர் காலம். பெரும்பாலும் அவர் காலத்திய இளைஞர்களை உடற்பயிற்சி போன்ற நல்வழிகளில் கொண்டு சென்றவர். முக்கியமாக தேசிய ஒருமைபாட்டை வளர்த்தவர். இங்கு ஒருவர் கேட்கிறார். அவர் என்ன செய்தார் என்று. இவ்ளோ பேசும் நீ, வாங்கும் மாத சம்பளத்தில் ஒரு ஐந்து சதவீதம் ஏழை மக்களுக்கு செலவிடுவாயா ... மாட்டாய்.. MGR வாழ்க்கையில் செய் மிக பெரிய தவறு அண்ணா இறந்தவுடன் கருணாநிதியை முதல்வராக முன் மொழிந்ததுதான் 


http://www.envazhi.com/wp-content/uploads/2012/04/solai1.jpg


 5. எனக்க தெரிந்து நான் பல வருடங்களாக பல பேரிடம் கேட்டுள்ளேன் அப்படி என்னதான் செய்தார்? இந்த எம்.ஜி.ஆர் என்று ஒருவரும் சரியான பதில் சொல்லவில்லை,பத்து வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்தார், ஆனால் தனது அரசியல் செல்வாக்கு,திரைபடத்தில் நடித்து வந்த வருமானத்தில் சில ஆயிரங்களை விளம்பரமாக மக்களுக்கு கொடுத்து உதவினார் அவ்வளவே-இன்றைக்கி சில நடிகர்கள் அதிக விளம்பரம் இல்லாமல் இதற்கு நூறு மடங்குக்கு மேல் செய்கிறார்கள். அதே போல் இந்த கண்ணதாசனை தனக்கு சாதகமாக எழுத வைத்தே போலியாக புகழ் பெற்றார்.


சரி சத்துணவு திட்டம் என்றாலே இவர் பெயர் அடிபடுகிறது, ஆனால் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை பெயர் மாற்றி ஊரை ஏமாற்றினார். இதெல்லாம் விட உச்சகட்ட சிரிப்பு இவரது நடிப்புக்கு சிறந்த நடிகர் விருது வேறு. அப்புறம் அதைவிட உச்சகட்ட காமெடி இவருக்கு என்ன காரணத்திற்கு பாரத ரதனா விருது கொடுக்கப்பட்டது என்று இன்று வரை எனக்கு விளங்கலை.இது ஒன்றும் இறந்து போன அவரை பற்றி தப்பான விமர்சனம் அல்ல, அதே சமயம் இறந்து போன ஒருவரை விமர்சிக்க கூடது என்பதை ஏற்று கொள்ளவும் முடியாது-உண்மை அவ்வளவே 


6. முன்னாள் முதல்வர் எம்ஜியார் பெரியதாக என்ன செய்துவிட்டார்? என்று ஒரு கேள்வியை கேட்டுள்ளார். ஒர் பெரும் கொள்ளைக்கூட்டத்தினை தமிழகத்தின் அரியணையிலிருந்து இறக்கி அது மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல் வைத்திருந்த்தது அவரது மிகப்பெரும் சாதனை. அவர் இல்லாமல் இருந்திருந்தால் தமிழகத்தின் வளங்களை எல்லாம் குடும்ப ஆட்சிக் கொள்ளை கொண்டிருக்கும். மாண்புமிகு எம்ஜியாரின் ஆட்சியில் தான் தமிழகம் முழுவதும் எல்லா கிராமங்களும் போக்குவரத்து வசதியை பெற்றன. பசுமைப்புரட்சியின் விளைவால் கடன் சுமையில் மூழ்கியிருந்த விவசாயிகளின் துயர் துடைக்க வட்டியை தள்ளுபடி செய்தவர் முதல்வர் எம்ஜியார். தமிழகத்தின் முடிசூடா மன்னனாக விளங்கி தமிழகத்தை தொடர்ந்து ஆண்டவர். தனது சொத்துக்களை ஏழைகளுக்கு வழங்கியவர். 


தனது வீட்டையும் குழந்தைகளுக்கு எழுதிவைத்தவர் பொன்மனச்செம்மல். ஈர்ங்கைவிதிரார் கயவர் எனத்தக்க அரசியல் தலைவர்கள் மத்தியில் வள்ளலாக விளங்கியவர் எம்ஜியார். சத்துணவுத்திட்டத்தின் வித்து பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத்திட்டம் என்றாலும் அதன் விரிவில் சத்துணவுத்திட்டத்தின் பரப்பு மிகப்பெரியது. 


பள்ளி செல்லும் எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டதும் சாப்பாட்டில் காய்கறிகள், பருப்புகள், கீரை என்று உணவின் தரமும் அளவும் கூட்டப்பட்டது வள்ளலின் சத்துணவுத்திட்டத்தில் தான். அந்த சத்துணவுத்திட்டத்தினால் தான் தமிழ்கத்தின் கல்வி சதம் அதிகரித்தது. ஏழைகுழந்தைகள் இடைனிற்றல் குறைந்தது. பொன்மனச்செம்மல் அண்ணல் எம்ஜியார் ஆட்சி ஏழை வர்கம், நடுத்தரவர்கம், விவசாயிகள், கிராமப்புற மக்களின் சேம நல அரசாக விளங்கியது. திராவிட பாரம்பரியத்தவர் என்றாலும் பொன்மனச்செம்மல் ஒரு உண்மையான தேசபக்தர், தேசியவாதி பரந்த மனத்தவர். அவர் ஒரு அரசியல் வாதி அல்லர் ஸ்டேட்ஸ்மேன்.அந்த தன்னிகரற்ற தமிழர் தலைவருக்கு அஞ்சலி. சிவஸ்ரீ... 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZstPp6ILB3aLiLUSyFMbFjzBUxA3rv4pFoSIOK-VTJ5GRkJhFi4uQwAEUKfAP3kkh1_tv0lPkAiQ2WblckRUjSv84Iq32MKBcT3knCb2Z4fHygEfYuzyrChMR9HZJE49DN6_1B3UPDQ/s1600/MGR%2526NAMBIYAR.jpg


7. இந்த உலகில் எத்தணையோ நாடுகளில் இருந்து எத்தணையோ மொழிகளில் திரைப்படம் வெளிவருகின்றது. மக்களில் தங்களுக்கு பிடித்த திரைப்பட கலைஞர்களை உயர்ந்த சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்த்து வருகின்றனர். ஆனால் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் என்கின்ற எம்.ஜி.ஆர். என்ற மாமனிதருக்கு தமிழக மக்கள் அளித்த அங்கீகாரம் போல உலகில் வேறு எந்த மக்களும் எந்த ஒரு கலைஞருக்கும் அளித்ததில்லை அளிக்க போவதில்லை என்பது தான் வரலாற்று உண்மை. 


 பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக இருந்து திமுகவின் வளர்ச்சிக்கு உரமாக வேராக இருந்து உழைத்து 1967ல் திமுகவை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதில் எம்.ஜி.ஆரின் பங்கு மிக பெரியது. திரை உலகிலும் அரசியல் உலகிலும் ஒரு சேர பயணித்து அந்த இரண்டு துறைகளிலும் ஒரே நேரத்தில் வெற்றி கொடியினை நாட்டிய ஒரு மனிதர் இந்தியாவிலேயே ஏன் இந்த உலகிலேயே எம்.ஜி.ஆர். ஒருவராக தான் இருப்பார். மேலும் அரசியலில் கிடைக்கும் பதவியினை ஒரு பொருட்டாகவே அவர் என்றைக்கும் கருதியதில்லை. 1969ல் அண்ணா மறைந்த பிறகு அவர் நினைத்திருந்தால் அவரே கூட தலைமை பதவிக்கு போட்டியிட்டு இருக்க முடியும் வென்று இருக்க முடியும். 



ஆனால் அப்பொழுது, தான் ஒரு கிங் மேக்கராக இருந்து தன் நண்பருக்கு அந்த பதவியினை பெற்று தந்தார். 1972ல் அவர் ஒன்றும் அதிமுகவை தானாக தொடங்கவில்லை. அவர் தூக்கி பிடித்த ஏணி படியில் ஏறி உயர சென்ற அதிபுத்திசாலிகளின் நிர்பந்தத்தால் வேறு வழியில்லாமல் அந்த நிலையினை எடுத்தார். அந்த சம்பவத்தை நினைத்து இன்றளவிலும் அந்த அதிபுத்திசாலி நிச்சயமாக வருந்தி கொண்டிருப்பார். 


அவருடைய அரசியல் வாழ்க்கையில் தோல்வி என்ற வார்த்தையினை உச்சரிக்க கூட அவரை தமிழக மக்கள் விட வில்லை. 1980 நாடாளுமன்ற தேர்தல் முடிவு கூட இந்திராவை பிரதமராக்க தானே ஒழிய எம்.ஜி.ஆரை தோற்கடிப்பதற்கு இல்லை என்பதனை அடுத்த சில மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகளில் தமிழக மக்கள் உணர்த்தினர். காலத்தை வென்ற நம் பொன்மன செம்மலின் பெருமைகளை நினைத்து அவர் இந்த மண்ணுக்கு செய்த நன்மைகளை அவருடைய இந்த நினைவு நாளில் நினைவு கூறுவோம். 


நன்றி - தினமல்ர் 


http://i46.tinypic.com/2hwdv9z.png

0 comments: