இளையராஜாவின் பதில்:ஒரு படத்துக்குக் Re-recording செய்யும்போதே, அந்தப்
படத்தின் வெற்றி/தோல்வியை உங்களால் கணிக்க முடியுமா?
♫ ஒரு கதை தேறும்-தேறாது என்பது ஒருவர் வந்து கதை சொல்லும்போதே
தெரிந்துவிடும். Just imagine.. நான் தொள்ளாயிரத்து சொச்சம் படம்
பண்ணியிருக்கிறேன் என்பது பெரிய விஷயமில்லை. அதற்குப்பின் எவ்வளவு
சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.
நீங்கள் ஒரே ஒருமுறை பார்த்துவிட்டு, “ச்ச.. படமா எடுத்திருக்கிறான்?”
என்று எண்ணி, அதைப் பார்க்கமுடியாமல் பாதியில் எழுந்து போன படங்கள் எத்தனை
இருக்கும்? அதுபோன்ற படங்களையும் நான் நான்குமுறை பார்த்தாகவேண்டும்.
முதல்முறை எனக்கு முழுவதும் போட்டுக்காட்டுவார்கள். அதன்பின்னர் Music
Compose பண்ணுவதற்காக Theater’ல் வந்து ஒவ்வொரு ரீலாக பார்க்கவேண்டும்.
அதன்பின்னர் Music எழுதிமுடித்து, அத்துடன் Conduct செய்து காட்டும்போது
ஒருமுறை பார்க்கவேண்டும். Take’ன் போது எத்தனை Takes ஆகும் என்று தெரியாது.
அத்தனை முறை மறுபடி மறுபடி பார்க்கவேண்டும்.
ஆக, நீங்கள் ஒருமுறை பார்த்து
”பிடிக்கவில்லை” என்று கூறும் படத்...தை நான் இத்தனை முறை
பார்த்தாகவேண்டும். அப்போதும்கூட, ‘இந்தப் படம் இப்படி இருக்கிறதே.. இதற்கு
எப்படி Music போடுவது?’ என்று எனக்குத் தோன்றாது. மாறாக, ‘இந்தப் படத்தை
எப்படிப் பிழைக்கவைப்பது?’ நம் இசை இதற்கு எப்படி உதவியாக இருக்கும்?”
என்றே தோன்றும். இல்லையென்றால், நிறைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்,
ஹீரோக்களை நீங்கள் பார்த்தேயிருக்கமாட்டீர்கள்.
பாடல்கள் நன்றாக இருந்தும் படம் ஓடவில்லை என்பது ரொம்ப Normal’ஆன
விஷயம்தானே? பாடல்களுக்காக படம் என்று சொன்னால், ‘தென்றல் வந்து
தீண்டும்போது’ என்ற பாடலுக்காகவே அந்தப் படத்தை நீங்கள்
ஓட்டியிருக்கவேண்டும். அது உங்கள் தவறுதானே தவிர என் தவறு அல்ல. பாடலுக்காக
அந்தப் படத்தில் இருந்த தவறை எல்லாம் நீங்கள் மன்னித்திருக்கலாம் அல்லவா?
‘காதல் ஓவியம்’ படத்தின் ஒவ்வொரு பாடலுக்காகவும் அந்தப் படம் Silver
Jubilee’ஐ தாண்டியிருக்கலாம்.
ஆக, படம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், தவறு என்னிடத்திலில்லை.
பாடல்கள் நன்றாயிருக்கிறது என்று இன்றைக்கும் சொல்கிறீர்களா இல்லையா?”
#ilayaraja
இளையராஜா - பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் கூட்டணியில் உருவான பாடல்களை
விட இளையராஜா - பாலுமகேந்திரா கூட்டணி உருவாக்கிய பாடல்கள் மனத்திற்கு
இதமாக இருக்கிறதே.. என்ன காரணம்?
- கருப்பையா பாலகிருஷ்ணன், மதுரை.
நான் என்ன கட்சி வைத்துக் கொண்டா இருக்கிறேன்? கூட்டணி சேர! யாருடனும் நான் இல்லை! இவர்கள் வருகிறார்கள்! போகிறார்கள்! - எல்லாப் பாடல்களும் அவர்களின் கதைக்காக நானாகிய நானே உருவாக்கியதுதான்!
இளையராஜாவை கேளுங்கள், குமுதம் (26.12.2012) ,
- கருப்பையா பாலகிருஷ்ணன், மதுரை.
நான் என்ன கட்சி வைத்துக் கொண்டா இருக்கிறேன்? கூட்டணி சேர! யாருடனும் நான் இல்லை! இவர்கள் வருகிறார்கள்! போகிறார்கள்! - எல்லாப் பாடல்களும் அவர்களின் கதைக்காக நானாகிய நானே உருவாக்கியதுதான்!
இளையராஜாவை கேளுங்கள், குமுதம் (26.12.2012) ,
நன்றி -
பகிர்வு
நன்றி: திரு. ஜெகதீஷ் ஜெயராமன்., புது மாப்ளை பறவை,இளையராஜா ஃபேன்ஸ்
0 comments:
Post a Comment