Monday, December 31, 2012

திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது. - சகாயம் ஐ ஏ எஸ் பேட்டி

http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/01/sagayam.jpg 

சேலம்:""உத்திரமேரூர் கல்வெட்டில், மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். அதற்கான தகுதி நிர்ணயம் குறித்த தகவலும், திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே பதவிக்கு வரவேண்டும் என்பது பற்றியும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதுபோல் ஆட்சியாளர்கள் வரவேண்டும்,'' என,கோ ஆப்டெக்ஸ் மேலான் இயக்குனர் சகாயம் பேசினார்.

லஞ்ச, ஊழலற்ற சமுதாயம் என்ற தலைப்பில், சேலம் குஜராத்தி திருமண மண்டபத்தில், சிறப்பு கருத்தரங்கு நேற்று நடந்தது. கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம் பேசியதாவது:ரத்தம் சிந்தி வாங்கிய தேசத்தில், லஞ்சமும், ஊழலும் பெருகி கிடக்கிறது. நாமக்கல் கலெக்டராக பணியாற்றியபோது, ராசிபுரத்தில் கல்லூரி விழாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற, இரு வாலிபர்கள், அங்கும், இங்குமாக ஓடியபடி சென்றனர்.

அவர்களை மறித்து, என்னுடைய உதவியாளர்கள் சோதனை செய்தபோது, அவர்கள் மது அருந்தியிருந்ததும், லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதும் தெரியவந்தது. உடனடியாக அவர்களை எச்சரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.அப்போது, அதில் ஒரு வாலிபர், 100 ரூபாயை எடுத்து என்னுடைய கையில் கொடுத்தான். லஞ்சம் கொடுத்தால், தப்பித்து விடலாம் என்ற பழக்கத்தை, இந்த சமூகம் உருவாக்கியுள்ளது.

மூன்று ஆண்டுக்கு முன், அப்போதைய முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அதில், "நான் சரியாக வேலை செய்யவில்லையென்றால், என்னை பணி நீக்கம் செய்யுங்கள். ஜாதி, மத ரீதியாக யாருக்காவது உதவியிருந்தால் கைது செய்யுங்கள். 19 ஆண்டு காலத்தில், யாரிடமாவது, ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்றிருந்தால், தூக்கிலிடுங்கள்' என, கூறினேன். என்னுடைய இருக்கைக்கு பின்புறம், "லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற வாசகம் தான் இருக்கும்.

உத்திரமேரூர் கல்வெட்டில், அப்போதே, மக்கள் பிரதிநிதிகள் எப்படியிருக்க வேண்டும். அவருக்கு உண்டான தகுதிகள் என்னன்ன, திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே வரவேண்டும் என, கூறப்பட்டுள்ளது.ஊழல் நாடுகள் பட்டியலில், இந்தியா, 140வது இடத்தில் உள்ளது. இது, இந்தியாவுக்கு நேர்ந்த தேசிய அவமானம். அரசு பள்ளிகளில், முன்பு ஆய்வு செய்தபோது, அங்குள்ள மாணவர்களிடம், உன்னுடைய லட்சியம் என்னவென்று கேட்டால், சம்பாதித்து அரிசி வாங்க வேண்டும் என்கின்றனர். அந்த அளவுக்கு வறுமையின் பிடியில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

லஞ்சத்தை ஒழிப்பதை பற்றி பேசுகின்றனர், ஆனால், பின்னர், அவர்களே லஞ்ச ஒழிப்பு போலீஸில் சிக்குகின்றனர். ஊழல், லஞ்சம் என்பது புற்றுநோய் போன்றது. அது தொற்றுநோயாக உருவெடுத்து, தேசத்தையே அழித்து விடும்.

தமிழகத்தில், கடந்த காலங்களில், 40 சதவீதம் இருந்த ஊழல், தற்போது, 80 சதவீதமாக உயர்ந்து விட்டது. கோவணம் தான், இன்றைய விவசாயியின் தேசிய அடையாளமாக மாறிவிட்டது. ஒவ்வொரு மாணவரும், லஞ்சம், ஊழலற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என, சபதம் ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ஜெயராம் கல்லூரி தலைவர் ராஜேந்திரபிரசாத், கன்ஸ்யூமர் வாய்ஸ் பூபதி, ஐந்தாவது தூண் ராசமாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.



 மக்கள் கருத்து =


 1. என்றோ ஊழலுக்கு படித்து இருந்த அன்பழகனும், நெடுஞ்செழியனும், இன்னும் பலரும் பலியாகி விட்டதின் பலன் இன்று ஊழல் பெருத்து விட்டது.எங்கும் எதுலும், எவரிடமும் ஊழல்.மாற்றுவது கடினம்.அரசன் எவ்வழி மக்கள் அவ்வ்வழி. 



2. என்றோ ஊழலுக்கு படித்து இருந்த அன்பழகனும், நெடுஞ்செழியனும், இன்னும் பலரும் பலியாகி விட்டதின் பலன் இன்று ஊழல் பெருத்து விட்டது.எங்கும் எதுலும், எவரிடமும் ஊழல்.மாற்றுவது கடினம்.அரசன் எவ்வழி மக்கள் அவ்வ்வழி. 



3.  CGS 
Kumar எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளை குறை சொல்வது நம் பழக்கம் ஆகி விட்டது. நம்மில் எத்தனை பேர் சுத்தம்? கடையில் பொருள் வாங்கும்போது ரசீது கேட்டு வாங்குகிறோமா? இதுவும் வரி ஏய்ப்புதானே? எத்தனை டாக்டர் பில் கொடுக்கிறார்கள்? தனியார் பள்ளியில் எவ்வளவு பணம் கொடுத்தாவது பிள்ளைகளை படிக்க வைக்கவில்லையா? சாலை விதிமுறைகளை எத்தனை பேர் கடை பிடிக்கிறோம்? ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்வதில்லையா? நம் குறைகளை மறைக்க அடுத்தவர்களை குறை சொல்வது பழக்கம் ஆகி விட்டது



4. சகாயம் சொல்வது மிகவும் சரியானது ,.,. ஆனால் ரவுடி தனம் இருந்தால் தான் அரசியலில் இருக்க முடியும் என ஆகிவிட்டது,. நல்லவர்களுக்கு vote போட ஆள் இல்லை,. மொழி, இனம் என மகளை பிரிக்கும் அரசியல் வாதிகள் , புதிய ரத்தம் வந்தால்தான் இது சாத்தியம்,. சில IAS காரர்கள் மதம் மாற்றுவதில் கவனம் செலுதுகின்றேனர்,. அரசாங்க வேலையை சொந்த உபயோகம் சைகின்றேனர்,. 



5. ஊழல் நாடுகள் பட்டியலில், இந்தியா, 140வது இடம் இதுகூட உலக சாதனைதானே.இந்த ஊழல் பட்டியல் நிச்சியம் அதிகாரிகள் மக்களை தாண்டி அரசியல் வியாதிகள்தான் முன்னணியில் இருப்பர் அவர்களில் முதல் ஐந்து இடங்களில் 1 தாத்தாவின் திமுக.. 2 தியாக தீபத்தின் காங்கிரஸ். 3 மாயவதி கட்சி. 4லல்லு கட்சி. 5 அம்மா கட்சி. என்று வகுத்தாலும் தமிழனுக்குத்தான் முதலிடமும் கடைசி இடமும்.



6. சகாயம் சொல்வது கேட்க கஷ்டமாக இருக்கிறது ஊழல் ஒழிப்பை பற்றிபேசும் அதிகாரிகள் சில நாட்களில் லஞ்ச ஊழல் ஒழிப்பு போலீசிடம் சிக்குகிறார்கள் என்றார். உண்மையில் நடப்பது என்ன?( நேர்மையான) அதிகாரிகள் மிக குறைந்த அளவில் இருப்பவர்களை, மாட்டி விட்டு அசிங்கபடுத்த ஒரு கூட்டம் அரசு அலுவலகங்களில் முழு நேரமாக வேலை செய்வது திரு சகாயத்திற்கு தெரிந்து இருக்க வேண்டுமே என் அனுபவத்தில், தற்போது வேலைக்கு சேரும் அரசு ஊழியர்கள் அதிகபட்சம் நேர்மையாகவே இருக்கிறார்கள். 



என் 30 வருஷ அரசு பணி அலுவலகத்தில், தற்போது வேலைக்கு சேரும் இளைஞர்கள் கொஞ்சம் முரட்டு தனமாக பேசுகிறார்களே தவிர, லஞ்சத்தை கேட்பதில்லை அவர்கள் கொஞ்சம் கூட மரியாதையுடன் இனிமையாக பழகினால், இன்னும் 20 ஆண்டுகளில் அரசு பணி நன்றாக ஆகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது கடந்த 20=30 ஆண்டுகளில், ஊழல் செயல்பாடுகளில் ஈடுபட்டவரை தண்டிக்க உபயோகபடுத்தவேண்டிய சட்டங்கள், பலவும் ஊழலில் ஈடுபடாத உண்மை ஊழியர்களுக்கு எதிராக மிரட்டுவதற்கே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது 



7. பெருசுகள் ரிட்டயர் ஆனபின் பார்க் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு பேசும் பேச்சு போல இருக்கு. இன்றைய நுகர்வோர் கலாசாரம் பெருகிய காலக் கட்டத்தில் அவனவன் யாரைக் கொள்ளையடித்து ,அதை வைத்து தான் மட்டும் நன்றாக வாழலாம் என நினைக்கும்போது .இதெல்லாம் எடுபடுமா?



 அட தேவாலயங்களில் கூட பாவ மன்னிப்பு கேட்பவர் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக பத்திரிக்கையில் வெளிவந்தது., தான் செய்வதை பாவம் என நினைப்பதே பாவம் என நினைக்கும் காலம் இது .அரசு சம்பளம் வாங்கிக்கொண்டு முழு நேர மதபோதகராக ஒரு சீனியர் ஐ ஏ எஸ் ஆபீசர் பணிபுரிகிறார்.அதனை எதிர்ப்பீர்களா? நீங்க நல்ல உள்ளம் உள்ளதால் சூது வது தெரியாம பேசறீங்க. உங்க போதகர் வேலை பலன் தருவதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவே .செவிடர்கள் காதில் சங்கு ஊதுறீங்க.அவங்க திரும்ப உங்களுக்கு அதையே செய்யாமலிருந்தா சரி 



8. சகாயம் அவர்கள் தவறான இடத்தில் இருக்கிற சரியான மனிதர். இவர் இருக்க வேண்டிய இடம் பள்ளிக்கூடம் அங்கு இளம் வயதில் படிக்கும் மாணவர்கள் மனதில் இது போன்ற விஷயங்களை விதைத்தால் எதிர்காலத்தில் சமுதாயம் பயனடையும். ஊழல்வாதிகள் அரசுயந்திரத்தில் உள்ளவர்கள் தான் திருவாளர் பொது ஜனங்கள் அல்ல இது சாதாரண பொது அறிவு, அதுகூட தெரியாமல் அறிவுரை கூறவரக்கூடாது. கிரனைட் வெட்ட அனுமதி கொடுக்கிறாயா? சரியான விதிப்படி அனுமதி கொடு. அரசு இடத்தை ஆக்கிரமித்து, வீடுகட்டி, மின்சார இணைப்பு பெற்று, குடி நீர் இணைப்பு பெற்று, வரியும் கட்டியபின் சுமார் ஒரு பத்து ஆண்டுகளுக்கு பின் அது ஆக்கிரமிப்பு என்று வந்து அதை இடிப்பதை என்னென்பது. 


இதுவரை இருந்த அதிகாரிகளுக்கு அது தெரியாதா, இல்லை லஞ்சம் பெற்றுக்கொண்டு எல்லாம் செய்து கொடுத்தார்களா, எப்படி எடுப்பது.எத்துனை கட்டடங்களை இடித்து இருப்பீர்கள் இதுவரை அதை அனுமதித்த எத்துனை அதிகாரிமேல் இதுவரை நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். மதுரை ஆட்சியர் அலுவலக எரிந்ததற்கு காரணம் அதில் அதிகாரிகள் இடமாற்றம் , புரோமோஷன் சார்ந்த கோப்புகளே அதிகம் இருந்ததாக நாளேடுகளில் செய்தி வந்ததை பார்க்கும் பொழுது கிரனைட் ஊழலில் சம்பந்தபட்ட அதிகாரிகளை கண்டுவிடுவார்கள் என்று சதி செய்து எரிய விட்டு இருக்கலாம் அல்லவா? அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். தமிழ்நாட்டில் லஞ்சம் கொடுக்காமல் ஒரு பத்திர பதிவு செய்ய முடியுமா ஒரு சாதாரண குடிமகனால். 



நன்றி - தினமலர் 

வினோதினியின் அதிர்ச்சிப்பக்கங்கள்

Back to Album · கிரி Blog's photos · கிரி Blog's Page

    
Type any name to tag:

Drag the corners of the transparent box above to crop this photo into your profile picture. Finished cropping | Cancel
Saving your new profile picture

இது ஒரு வழக்கு எண் 18/9-ன் கதை..
-----------------------------------------------------------

``அப்பா நான் செத்துப்போறேன்ப்பா..” கீழ்பாக்கம் ஆதித்யா மருத்துவமனை அறை எண் 114-லிலிருந்து இப்படிதான் ஒலிக்கிறது அந்தக் குரல். அது வினோதினியின் குரல். வினோதினிக்கு தான் எவ்வளவு அழகான முகம். வண்ணத்துப் பூச்சியாகச் சிறகடித்துப் பறந்த அந்தப் பெண்ணின் வாழ்க்கை ஒரே நாள் இரவில் கொடூரன் ஒருவனால் தலைகீழாகிப்போனது....

உடல் முழுக்கக் காட்டுப்போட்ட நிலையில் இருந்த வினோதினியால் பேச முடியவில்லை. மகளின் நிலையைப் பார்த்து அழுது அழுது கண்ணீர் வற்றிப்போய் நின்றிருந்த வினோதினியின் தந்தை ஜெயபாலனிடம் பேசினோம்.

``எனக்குப் பூர்வீகம் திருக்கடையூர். வினோதினி என்னோட ஒரே செல்லப் பொண்ணு. என் பொண்ணு படிப்புக்காகத்தான் காரைக்காலுக்கே வந்தோம். தனியார் ஸ்கூல்ல செக்யூரிட்டியா வேலை. அந்த வருமானத்துலதான் என் சக்திக்கு மீறி கடன் வாங்கி என் பொண்ண படிக்க வச்சேன். அவளும் என் நிலமை புரிஞ்சு நல்லா படிச்சு பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சா. எல்லாம் நல்லபடியாத்தான் போச்சு சார்.. திருவட்டக்குடி ஊர்கார சுரேஷ்ங்கிற அந்தப் பையன் எனக்கு அறிமுகமாகுறவரை. வேறொரு ஃப்ரெண்ட் மூலமா தான் எனக்கு அறிமுகமானான். ஆரம்பத்துல நல்லாத்தான் பழகுனான்.

ஆனா போகப்போகத்தான் அவன் தப்பான நோக்கத்துல தான் எனக்கு அறிமுகமாகியிருக்கான்னு தெரிஞ்சது. என் பொண்ண விரும்புறதா தெரிஞ்சவங்கக்கிட்ட பொய்யா தகவல் பரப்பிருக்கான். இது என் பொண்ணுக்கு தெரிஞ்சதும் என்னைச் சத்தம் போட்டா. நானும் அவனைக் கூப்பிட்டு, என் வீட்டுப்பக்கம் வராதேனு கண்டிச்சேன். ஆனாலும் அவன் தொடர்ந்து தொந்தரவு பண்ணதால போலீஸ்ல புகார் கொடுத்தோம். அவங்களும் அவனைக் கூப்பிட்டு கண்டிச்சாங்க. அதுக்கப்புறம் கொஞ்சம் பிரச்னை இல்லாம இருந்தது. என் பொண்ணுக்கும் தனியார் கம்பெனில வேலைக்கிடைச்சு சென்னைக்குப் போய்ட்டதால நிம்மதியா இருந்தோம். ஆனா அவன் வன்மத்தோட இருந்துருக்கான்னு அப்போ தெரியல.

தீபாவளி லீவுக்கு ஊருக்கு வந்துட்டு மறுநாள் சென்னைக்குக் கிளம்பினாள். பஸ் ஏத்திவிட நானும் கூடப் போனேன். திடீர்னு வழிமறிச்சு `எனக்கு கிடைக்காத இந்த முகம்.. யாருக்கும் கிடைக்கக்கூடாதுனு’ சொல்லிட்டே என் பொண்ணு முகத்துல ஆசிட் வீசிட்டான்யா அந்தக் கொடூரன்..” என்று சொல்லும்போதே அந்தத் தந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் வழிந்து பேசமுடியாமல் திணறுகிறார்.

சிறிது இடைவெளிவிட்டு ``கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்ததுனே தெரியலங்கையா. என் பொண்ணு வலி தாங்க முடியாம கீழ விழுந்து புரளவும் அவளை மடில தூக்கி வச்சேன். அப்போ அவ உடம்புல பட்டு வடிஞ்ச ஆசிட் எம்மேலயும் பட்டு எனக்குக் கைலயும் நெஞ்சுலயும் வெந்துப்போச்சு. என்னாலயே அதைத் தாங்க முடியல.. ஐயோ என் புள்ள எப்படியெல்லாம் துடிச்சா தெரியுமாங்கைய்யா.. ஆசிட் பட்டதால ரெண்டு கண்லயும் பார்வைப் போயிருச்சுனு சொல்றாங்க.. இப்போ வலி தாங்க முடியாம.. `அப்பா இந்த முகம் வேணாம்.. நான் செத்துப்போறேன்.. கொன்னுடுங்கப்பா’னு கதறி அழுறா.

`அப்பா.. இனி நீங்க செக்யூரிட்டி வேலைக்குப் போக வேணாம்ப்பா.. நான் சம்பாதிக்குறேன்.. சென்னைக்கு வந்துருங்க.. நான் உங்களைப் பார்த்துக்குவேன்ப்பா’னு என் பொண்ணு கடைசியா என்கிட்ட சந்தோசமா பேசுன வார்த்தை இதுதாங்க.. ஆனா என் புள்ள கனவு எல்லாத்துலயும் மண்ணள்ளிப் போட்டுட்டான்யா அந்தப்பாவி. சிகிச்சையளிக்கக்கூடப் பணம் இல்லாம இருக்குற நான் இனி என் புள்ளைய எப்படிக் காப்பாத்துவேனு தெரியலையே” என்று கையறு நிலையில் நிற்கும் தந்தையாகக் கதறி அழுகிறார் ஜெயபாலன்.

இறுதியாக அங்கிருந்து கிளம்பிய நம்மிடம், ``எனக்கு ஏற்பட்ட இந்த நிலமை வேற எந்தப் பொண்ணுக்கும் ஏற்படக்கூடாது சார்.. அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கணும்.. ஆதுக்காகவாவது நான் உயிர் வாழணும்னு இப்போ ஆசைப்படுறேன் சார்” என்று உறுதியாக ஒலிக்கிறது வினோதினியின் குரல். ஒருதலைக்காதலின் பெயரால் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசும் சுரேஷ்கள் திருந்தினால் மட்டுமே இந்த `இந்த வழக்கு எண்’ முடிவுக்கு வரும்.

---------------------------------------------------------------------------------------------------

ஆசிட் வீசப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

வினோதினிக்கு சிகிச்சையளிக்கும் கேம்.எம்.சி.யின் ஓய்வுப்பெற்ற தலைமை மருத்துவர் ஜெயராமனிடம் பேசினோம். ஆசிட் சாதாரணமாக எல்லா ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கிறது. அதைத் தான் இப்படிப் பயன்படுத்துகிறார்கள். ஆசிட் மேலேப்பட்டதும் மிக முக்கியமாகச் செய்ய வேண்டியது அந்த இடத்தில் பாலை ஊற்ற வேண்டும் என்பது தான். அதன் பிறகு தீக்காயங்களுக்கான சிறப்பு மருத்துவமனைகளுக்கு அவர்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். ஆசிட் பட்ட இடங்களை முற்றிலும் நீக்கியே ஆக வேண்டும். அதன்பிறகே உடலின் மற்றப் பாகங்களில் இருந்து தோலை எடுத்துப் பாதிக்கப்பட்ட இடங்களில் பொருத்தி சரி செய்ய முடியும். அதுவும் முழுமையாகப் பழைய நிலை வராது. ஓரளவுக்குத் தான் சரி பண்ண முடியும் என்றார்.

ஆண்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்?

-----------------------------------------------------------
டாக்டர்.ருத்ரன்
மனநல மருத்துவர்

தனக்குக் கிடைக்காத அந்தப் பெண்ணின் அழகு வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற வக்கிரமன நிலையிலிருந்து செயல்பட்டிருக்கலாம். இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மனநோயாளிகள் என்று குறிப்பிட முடியாது. இது ஒருவகையான பொறுக்கித்தனமான செயல்பாடு. பெண்கள் மீது ஆசிட் வீசும் விசயம் என்றில்லை, இவர்கள் எல்லா விசயங்களிலும் சமூகத்திற்கு எதிராகத்தாகத்தான் இருப்பார்கள். அதுப்பற்றி அவர்களுக்குக் குறைந்தபட்ச வருத்தம் கூட இருக்காது. பிறப்பிலிருந்து வரும் வக்கிரமான இந்தக் குணத்தைத் திருத்தவும் முடியாது. சிறுவயதிலேயே இதைக் கண்டுபிடித்துத் தவறு செய்தால் கடுமையாகத் தண்டிக்கப் படுவாய் என்று எச்சரிக்கலாம்.

-ஞானபாலா
படங்கள்: ம.செந்தில்நாதன்

நன்றி: குமுதம்

--------------------------------------------------------------

வெளிநாட்டில் வசிக்கும் நண்பர் ஒருவர் வினோதினியின் சிகிச்சைக்கான பண உதவி பெற உதவும் வகையில் இந்த இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார்.. அவருக்கு நன்றி
http://www.helpvinodhini.com/

JAYAPALAN
603899558
INDIAN BANK
KILPAK BRANCH
IFCS CODE: IDIB000k037
Contact : ramesh 9944161416

60-வதாவது தேசிய திரைப்பட விழாவில் நீங்கள் அவார்ட் பெற ஒரு அரிய வாய்ப்பு!


National Award for NON CINEMA Personalities - Content suitable for ALL - Infotainment category - SHARE SHARE SHARE Category



60வதாவது தேசிய திரைப்பட விழாவில் நீங்கள் அவார்ட் பெற பெரிய வாய்ப்பு. இதில் பங்கு பெற நீங்க சினிமா துறையை சார்ந்திருக்க தேவையில்லை. உங்களின் கட்டுரை, ஆர்டிக்கள் மற்றும் சினிமா விமர்சனம் ஏதாவது ஒரு பத்திரிக்கையில் அல்லது ஏதாவது புத்தகத்தில் அல்ல...து எதாவது மீடியாவில் இந்த வருடம் ( 2012 - ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை) இடம் பெற்றிருந்தால் நீங்களும் தேசிய விருதை பெற முடியும். இதை தவிர வழக்கம் போல் திரப்படங்களும் இந்த விருதுக்கு அனுப்பலாம். நான் அனுப்ப போறதில்லை, ஆனால் நிறைய பேர் இப்ப விமர்சனம் எழுதி என்ன கிழிக்க போறீங்கன்னு கேட்ட அத்தனை பேருக்கும் இப்படி ஒரு வாய்ய்பு வரும்னு தெரியுமா - எந்த ஆக்க பூர்வமான எழுத்தும் வீணாவதில்லை.....ஆல் தி பெஸ்ட் - விருது வாங்கினா ட்ரீட் கொடுங்க மறந்திராதீங்க....அப்ளிகேஷன் லின்கு....http://dff.nic.in/60th_NATIONAL_FILM_AWARDS_2012._regulations_doc(1).pdf

60th National Awards invites applications from NON CINEMA personalities with any Cinema articles, stories or film reviews in between 1st Jan - 31st Dec 2012 in any media can apply for the Best Cinema Writer award category. I am NOT applying so please do not forget to give treat if you are a winner and ALL THE BEST. Application Link - http://dff.nic.in/60th_NATIONAL_FILM_AWARDS_2
 
 
நன்றி - ஃபேஸ்புக் , தகவல் சொன்ன

2012 - டாப் 10 மண்ணின் மைந்தர்கள்

2012 டாப் 10 மனிதர்கள்

விகடன் டீம்

போராட்டத்தின் மைந்தர்கள்!

ங்கள் மண்ணையும் மக்களையும் காக்கப் பொங்கி எழுந்த இடிந்தகரை கடல் மைந்தர்களைத் தேசமே திரும்பிப் பார்த்தது. உண்மையான மக்கள் போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு நிகழ்த்திக் காட்டியது, இந்தியாவின் தென்கோடிக் கிராமமான இடிந்தகரை. பொட்டல் மண்ணில் சிறு பொறியாகத் துவங்கிய அணு உலைக்கு எதிரான முழக்கத்தை வரலாறாக வளர்த்தெடுத்தனர் இந்த ஏழை மக்கள். 'பணம் வாங்கிக்கொண்டு போராடுகின்றனர்’ என்று பிரதமர் வரை குற்றம்சாட்டியபோதும், துவளவில்லை ஜனத்திரள்.


 பேச்சுவார்த்தைகள், பேரம், தேசத்துரோக வழக்குகள், குண்டர் சட்டக் கைது கள், கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தடியடிகள் என அரசின் அத்தனைத் தந்திரங்களையும் தவிடு பொடியாக்கியது போராட்டக் குழு. நாளாக நாளாக இவர்கள் நெஞ்சுரம் பெறுவதால், கனல்கிறது போராட்ட நெருப்பு. உண்ணாவிரதப் பந்தலில் பீடி சுற்றியபடியே, அணு உலை அரசியல் பேசும் மூதாட்டியே இதற்கு சரித்திரச் சாட்சி. தங்கள் மண்ணுக்காக மட்டுமல்ல...



ஈழம், முல்லைப் பெரியாறு, மூவர் தூக்கு என இதர சமூகப் பிரச்னைகளுக்காகவும் போராடும் இந்த சமூகப் போராளிகள் நம் ஒவ்வொருவருக்குமான உதாரணங்கள். ஒருவேளை இடிந்தகரை மக்களின் போராட்டம் கடந்தும் கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கலாம். ஆனால், இனி இந்தியாவின் எந்தப் பிரதேசத்திலும் மாபெரும் மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ளாமல் அணு உலை அமைப்பதற்காக ஒரு சிறு கல்லையும் அசைக்க முடியாது. அதுதான் இடிந்தகரை மக்களின் உண்மையான வெற்றி!


இ மெயில் தமிழன்!  

'இ மெயில் கண்டுபிடித்தவர்’ என்று இன்று உலகமே கொண்டாடும் சிவா அய்யாதுரை, ராஜபாளையம் தமிழன் என்பது நமக்கான பெருமை. 1978-ல் அமெரிக்காவில் படித்தபோது, தனது 14 வயதில் இவர் இ மெயிலைக் கண்டுபிடித்தது அறிவுலக ஆச்சர்யம். 1982-ல் அமெரிக்க அரசிடம் இருந்து, உலகின் முதல் இ மெயில் காப்பிரைட்ஸ் பெற்றார்.



ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இணையத்தைக் கட்டுப்படுத்த, யார் யாரோ இ மெயிலுக்குச் சொந்தம் கொண்டாடினார்கள். அறிவாயுதம் ஏந்திப் போராடினார் சிவா. உண்மை வென்றது. இ மெயில் மட்டும் இல்லாமல், அமெரிக்கத் தபால் துறையின் மறுமலர்ச்சிக்கும் காரணமானவர். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, இவரது நிறுவனம் ஒன்றின் சேவை பெறும் வாடிக்கையாளர். இந்திய அறிவியல் துறையின் ஊழல்கள்குறித்து இவர் எழுதிய கடிதம், நம் தேச நலனுக்கான ஆராய்ச்சி மணி. 'புதுமைகளை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், யாராலும் செய்ய முடியும்’ என்கிற சிவா, தமிழர்களின் பெருமைமிகு அடையாளம்!


அறிவியல் தமிழச்சி!

ரியலூரில் பிறந்து, ஆச்சர்ய உயரங்கள் தொட்ட இஸ்ரோ சயின்டிஸ்ட் வளர்மதி. தேசிய அளவில் திட்ட இயக்குநர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண். செயற்கைக்கோள் செலுத்துதல் போன்ற அதிநவீன அறிவியல் துறையில் தமிழ்ப் பெண்கள் எட்டிப்பார்க்காத நிலையில், வளர்மதி இந்தியாவின் முதல் சுயேச்சை உளவு செயற்கைக்கோள் ரிசாட் 1-ன் திட்ட இயக்குநர் ஆனது அற்புதமான சாதனை.



அயராத உழைப்பும் தேடலுமாக அவர் கால் நூற்றாண்டுக்கு முன்னரே சென்ற பயணம் இளைய தலைமுறைக்கான பாடம். 1984-ல் இஸ்ரோ வில் ஓர் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்து, செயற்கைக்கோள் திட்டப் பொறியாளர், திட்ட மேலாளர், துணைத் திட்ட இயக்குநர், இணைத் திட்ட இயக்குநர் எனப் படிப்படியாக உயர்ந்து, 2012-ல் 'ரிசாட் 1-’ன் திட்ட இயக்குநராக உச்சம் தொட்டார்.



 இந்தியா ஏவிய செயற்கைக்கோள்களிலேயே அதிக எடைகொண்டது ரிசாட் 1. விமானங்கள்கூட ஊடுருவ முடியாத அடர் வனங்கள், குகைகள், நீர்ப்பரப்புகளைப் படம் எடுக்கும் திறன் கொண்ட செயற்கைகோள் அது. ஆனால், இந்தச் சாதனையின் எந்தச் சுவடும் இல்லாமல், 'நம் தேசத்தின் கனவுகளை நனவாக்குவதே இலக்கு. இன்னும் நிறைய வேலை இருக்கிறது’ என எளிமை பேசுகிறார் இந்த முன்னுதாரணத் தமிழச்சி!


வணக்கத்துக்குரிய வாத்தியார்!

டகள விளையாட்டுகளில், தமிழ் வீரர்களைச் சர்வதேச உயரத்துக்கு இட்டுச் செல்லும் ஏகலைவன்... சென்னையைச் சேர்ந்த நாகராஜ். கேரள அரசின் கோடிக்கணக்கான நிதி உதவியுடன் செயல்படும் பி.டி.உஷா அகாடமியில் இருந்து, இதுவரை உருவானது இரண்டு சர்வதேசத் தடகள வீரர்கள் மட்டுமே. ஆனால், எந்த அரசு உதவிகளும் இல்லா மல், நாகராஜ் இதுவரை 24 சர்வதேச வீரர்களை உருவாக்கி இருப்பது மகத்தான சாதனை.


அதில் 14 பேர் சர்வதேச சாம்பியன்கள். 100-க்கும் அதிக மானோர் தேசியத் தடகளச் சாம்பியன்கள். இவை அனைத்தையும் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், தேசத்தின் மீதும் விளையாட்டின் மீதும் உள்ள காதலால் செய்கிறார் நாகராஜ். மாநிலம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடங் களுக்கு அலைந்து திரிந்து, தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவர்களைத் தேடிப் பிடித்து வந்து பயிற்சி அளிப்பதை, கடந்த 25 ஆண்டுகளாக ஒரு தவம்போல் செய்து வரும் நாகராஜின் கனவு, தமிழ்நாட்டில் இருந்து பல ஒலிம்பியன்களை உருவாக்க வேண்டும் என்பதுதான். நடக்கும் நாகராஜ்!



சளைக்காத சட்டப் போராளி!

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகச் சட்டச் சாட்டை சுழற்றும் போராளி 'பொறியாளர்’ சுந்தர்ராஜன். 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்தவர். 'அணு உலைக்கு 1989-ல் வாங்கிய சுற்றுச்சூழல் அனுமதி, 2011-க்கும் பொருந்தும்’ என்று சொன்ன அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் இவர் தொடர்ந்த வழக்கில்தான் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் வலுப்பட்டது.



'ஜப்பான் - ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, அணுசக்தி ஆணையம் அமைத்த குழு பரிந்துரைத்த 17 வகையான பரிந்துரைகளை நிறை வேற்றாமல் கூடங்குளம் அணு உலையைத் திறக்கக் கூடாது’ என இவர் தொடர்ந்த வழக்கில்தான், 'அணுக் கழிவுகளை ஏழு ஆண்டுகளுக்கு கூடங் குளத்திலேயே வைத்திருப்போம்’ என்று முதல் முறையாக அணுக் கழிவுகளைப் பற்றி வாய் திறந்தது அணுசக்தி ஆணையம். இந்தியாவின் முதல் 1,000 மெகாவாட் அணு உலையான கூடங் குளம் உலையில் விபத்து ஏற்பட்டால், அதற்கான நஷ்டஈடு கொடுப்பதில் இருந்து ரஷ்ய நிறுவனத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டதை எதிர்த்தும் வழக்கு நடத்திவரும் கலகக்காரர். நன்றி நண்பரே!


விவசாயக் காதலன்!

ந்திய விவசாயிகளின் நலனுக்காக கால் நூற்றாண்டாகத் தீவிரமாக இயங்கிவரும் 'அறச்சலூர்’ செல்வம், நம் பூமி நேசன். இயற்கை விவசாயம் பரப்புதல், மரபணு மாற்றுப் பயிர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது என்கிற தளங்களில் இவரது பணிகள் வணங்கத்தக்கவை.


விவசாயிகளுக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இயற்கை விவசாயம், செயற்கை உரங்களின் கேடுகள் பற்றிய விழிப்பு உணர்வுப் பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார். 'கான் உலா’ என்ற பெயரில் 125 பள்ளி மாணவர்களை, வனப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று இயற்கையின் ஸ்பரிசத்தை, முக்கியத்துவத்தை உணரச் செய்கிறார். மரபணு மாற்றப்பட்ட 'மான்சான்டோ’ நிறுவனத்தின் விதைகளை, சோதனை முறையில் கோவை வேளாண் பல்கலை யில் பயிர் செய்தபோது, வளாகத்தினுள் சென்று இவர் நடத்திய போராட்டம் அதிகாரத்தைத் திகைக்கவைத்தது.


 மிரண்டுபோன 'மான்சான்டோ’ நிறுவனம் செல்வத்தை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று, தங்கள் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சுற்றிக்காட்டி இவரை வளைக்கப் பார்த்தது. திரும்பி வந்தவர், 'உலகெங்கிலும் இருக்கும் விவசாய நிலங்கள் அனைத்தும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதற்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறது மான்சான்டோ. விதைகளுக்கான பேடன்ட் பெறுவதில் பேய்த்தனமாக இயங்குகிறார்கள். விதைகளைக் கடையில் இருந்து வாங்குகிறீர்கள் என்றால், உங்கள் நிலம் கைவிட்டுப்போகிறது என்று அர்த்தம். எனவே, விதை நெல்லை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்!’ என்று களப் போராளியாக முழங்கினார். செல்வத்துக்கு தமிழ் மண் கடமைப்பட்டிருக்கிறது!


அசத்தல் அதிகாரிகள்!

மோசமான செயல்பாடுகளால் சிதைந்துகிடந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி.) தூக்கி நிறுத்தியது ஆர்.நட்ராஜ் - உதயச்சந்திரன் கூட்டணி. லஞ்சம் கொடுத்தால், சிபாரிசு இருந்தால் மட்டுமே அரசு வேலை என்றிருந்த நிலையை அதிரடியாக மாற்றி அமைத்தார் உதயச்சந்திரன். நடைமுறை மோசடிகளை வேரறுக்கப் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தார்.


அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளே புகுந்து, தேர்வாணையத் தலைவர் உள்ளிட்டோரைப் பந்தாடியது. ஓய்வுபெற்றிருந்த ஆர்.நட்ராஜ் தேர்வாணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆன்லைன் விண்ணப்பம், தேர்வு எழுதி முடித்த மறுநாளே விடைகளை ஆன் லைனில் வெளியிடுவது, வரும் ஆண்டுக்கான தேர்வு அட்டவணைகள், வெளிப்படையான, நேர்மையான நிர்வாகம் என லட்சோபலட்சம் தமிழக இளைஞர்களின் மனதில் நம்பிக்கை ஒளியேற்றியது இந்தக் கூட்டணி. இடையில், உதயச்சந்திரன் மாற்றலானாலும் சீரான நிர்வாகத்தைத் தக்கவைத்தார் நட்ராஜ். அவ்வளவு கெடுபிடியிலும் குரூப்-2 வினாத்தாள் வெளியானதாகச் சர்ச்சை கிளம்பியபோது, தமிழகத் தேர்வாணைய வரலாற்றில் முதல்முறையாக நடந்து முடிந்த தேர்வை அதிரடியாக ரத்து செய்தார் மீசைக்காரர். நேர்மைப் பவனி தொடரட்டும்!


இதயம் உலுக்கிய இயக்குநர்!

காதலும் மனிதமும் பேசும் பாலாஜி சக்திவேலின் திரைப்படங்கள், தமிழ் சினிமாவுக்கு அவசிய ஆக்சிஜன். 'காதல்’ படத்தில் விடலைக் காதலின் ஜன்னல் வழியே சாதியின் கோரத்தையும் அன்பின் ஈரத்தையும் காட்டியபோது, தடதடத்தது தமிழ்த்திரை.



'வழக்கு எண் 18/9’-ல் பாலாஜி தொட்டது இன்னும் உயரம். நலியும் விவசாயம், குழந்தைத் தொழிலாளர் கொடுமை, பெண்களின் பாதுகாப்பு, காவல் துறையின் அராஜகம், அரசியல் அதிகாரத் துஷ்பிரயோகம், நாட்டுப்புறக் கலைகளின் அழிவு, வக்கிர இளைஞர்களின் மொபைல் கலாசாரம், எளிய மனிதர்களின் பேரன்பு... என 'வழக்கு எண்’ பேசியது அபாரமான திரைமொழி அரசியல். '



5-டி’ என்ற புகைப்பட கேமரா தொழில்நுட்பத்தில், மிகக் குறைந்த செலவில் முழுத் திரைப்படத்தையும் எடுத்தது, இன்னொரு சாதனை. எந்த சமரசங்களும் இல்லாமல், எளிய மனிதர்களின் வாழ்க்கையைத் துணிந்து பேசும் இந்த திண்டுக்கல்காரரின் திரைப்படங்கள் இந்த மண்ணுக்கானவை... மக்களுக்கானவை!




நம்பிக்கைத் தோழி!

ழுத்து, நாடகம், ஆவணப்படம் எனக் கலைகளின் வழியே திருநங்கைகளின் மேம்பாட்டுக்காகப் போராடிக்கொண்டே இருப்பவர் ப்ரியா பாபு. இந்த சேவைகளுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், 'பெரியார் விருது’ வென்றவர். 2004-ல் இவர் தொடர்ந்த வழக்கின் மூலமாகவே, திருநங்கைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்தது. தொடர்ந்து, செங்கல்பட்டில் திருநங்கைகளுக்கு அரசு வீடு பெற்றுத் தந்தது, 'கண்ணாடி கலைக் குழு’ மூலம் பிரசாரம் செய்வது என இவர் திரி தீண்டிவைத்த விளக்குகள் ஏராளம்.



திருநங்கைகள் குறித்த எழுத்துக்கள், குறும்படங்கள்,
பி.ஹெச்டி. ஆய்வறிக்கைகள் என்று சிதறிக் கிடக்கும் பதிவுகளைத் தொகுக்கும், 'பாலியல் சிறுபான்மையினருக்கான நூலகம்’ உருவாக்கு வது ப்ரியாவின் கனவுத் திட்டம். எல்லாக் கனவுகளும் நனவாகட்டும்!



அர்ஜுனா அழகி!

மிழக விளையாட்டுத் துறையின் பெருமிதம், தீபிகா பல்லிகல். கொஞ்சம் வெற்றி, நிறையத் தோல்வி என ஜிக்ஜாக் கிராஃபில் இருந்த தீபிகா, இந்த ஆண்டு வெடித்துக் கிளம்பினார். ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற சாரா ஃபிளிட்ஸ் ஜெரால்டிடம் பயிற்சி பெற்ற பின், தீபிகா ஆடியது எல்லாமே வெற்றி வேட்டை. இதுவரை எந்த இந்திய வீராங்கனையும் போகாத 'டோர்னமென்ட் ஆஃப் சாம்பியன்ஸ்’ போட்டியில் முதல்முறையாகக் கால்வைத்தார்.



 அர்ஜுனா விருது பெற்றது, சர்வதேச விஸ்பா ரேங்கிங்கில் 10-வது ரேங்கிங் குக்குள் கால்வைத்த முதல் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை எனக் குவிந்தன பெருமைகள். 21 வயதுக்குள் ஜெர்மன் ஓப்பன், டச் ஓப்பன், ஃப்ரெஞ்ச் ஓப்பன், ஆஸ்திரேலியன் ஓப்பன், ஸ்காட்டிஷ் ஓப்பன், ஈரோப்பியன் ஜூனியர் ஸ்குவாஷ் சர்க்யூட் என ஆறு பட்டங்களை வென்ற வர், இன்னும் இன்னும் உயரம் தொடுவார் என்பது நன்னம்பிக்கை! 


நன்றி - விகடன்

ஒரு அடங்காப்பிடாரியின் டைரியில் இருந்து


டுடே டைம்பாஸ@டி வி்
சின்ன வயசுல அட்வைஸ் பண்ணாத பெற்றோரே இல்லை, 1000 சொன்னாலும் நம்மாளு அதை காதுலயே போட்டுக்க மாட்டான், சட்டை பண்ணிக்க மாட்டான். சித்தன் போக்கு சிவன் போக்குன்னு சுத்துவான்.. இது லேடீஸ்க்கும் பொருந்தும்.. சின்ன வயசுல பேரண்ட்ஸ் என்ன சொன்னாங்க.. அப்போ நம்ம மனசு என்ன நினைச்சுது? ஒரு ஜாலி ஃபிளாஸ் பேக்


1.
உங்க ஆத்தா பிள்ளைய பெக்கச் சொன்னா தொல்லயப் பெத்து விட்டுருக்கா.


அன்புத்தொல்லைன்னு குழந்தையா இருந்தப்போ சொன்னீங்க?



2. இந்த மாதிரி சோம்பேறியா இருந்தா வர்றவ நல்லா மொத்துவா, அப்போ தெரியும்


ஓஹோ, தாய்க்குப்பின் தாரம்னா இதானா? மேரேஜ் ஆகறவரை அம்மா கிட்டே அடி, ஆன பின் சம்சாரம் கிட்டே அடி, ஆனாலும் ஆண் பாவம்


3. ஏழு கழுத வயசாகுது இன்னும் படுக்கையில ஒன்னுக்கு போயிகிட்டு இருக்க நீயெல்லாம் எங்க உருப்பட போற


ஒரு கழுதையோட ஆயுள் ஆவரெஜா 10 வருஷம்னு வெச்சாக்கூட  70 வயசாகுதா? எனக்கு?



4. இப்படியே பண்ணிட்டு இருந்தேனா உன்ன எவனும் கூட சேத்துக்க மாட்டாங்க


நான் என்ன கூட்டணீக்கட்சியா நடத்தப்போறேன்?



5. இப்பப் புரியாது, உன் பிள்ளை நாளைக்கு இப்படிப் பண்ணும் போது தான் தெரியும்!"


நாளைக்கு நடக்கறதை நாளைக்கு பார்த்துக்கலாம், இப்போ நடப்பது அஜித்தின் பில்லா 2, வா போலாம்



-------------------------------------------


6. டாடி மம்மின்னு சொல்லு

  பெரியவங்களை டா - டி போட்டு பேசக்கூடாதுன்னு சொல்லிட்டு டாடின்னு சொல்லச்சொன்னா எப்படி?





7. எனக்குன்னு வந்து பொறந்து இருக்கு பாரு, தருதல


பத்து தலை ராவனனையே தறுதலைன்னு சொன்ன  தேசம் தானே இது?ஒரு தலையை சும்மா விட்றுமா?



8. மாடு மேய்க்க கூட லாயக்கில்ல...

 மாடு மேய்க்கிறது என்ன அவ்ள லேசான விசயமா? ஓடி ஓடி போகும் தெரியுமா?



9. தோசைக்கரண்டிய அடுப்புல வெக்கப்போறேன்


ஓக்கே ஓக்கே தோசையை என் வாய்ல வைக்கப்போறேன்



10. உன்னப் பெத்ததுக்கு ஒருமூட்ட அரிசியப் பெத்துருக்கலாம்" பொங்கியாச்சி தின்றுப்போம்...


எப்போ பாரு திங்கறதுலயே இருங்க



----------------------------------------


அநியாயங்கள் செய்த 2012 யை
அனைவரும் சேர்ந்து வழிஅனுப்பி வைப்போம் ...
போதும் போ 2012டே ... share this ...
போதும் போ 2012டே ...

இவன் ===> @[256612747698514:274:கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர்
 )]




11. தல வாருனதுக்கு அப்புறம் சீப்பை க்ளீன் பண்ணிவைன்னு எத்தனை வாட்டி சொல்றது.


சீப்பை க்ளீன் பண்ற அளவு நான் சீப்பா போய்ட்டேனா?


12. உதவி செய்யலைன்னாலும் பரவாயில்ல, தொந்தரவு செய்யாம இரு


கேட்ட பாக்கெட் மணீயை குடுத்துட்டா நான் ஏன் தொந்தரவு பண்ணப்போறேன்?



13. சின்ன வயசுல நான் எவ்ளோ வேலை செஞ்சேன் தெரியுமா?


யாருக்குத்தெரியும்? யார் வந்து பார்த்தாங்க? நான் கூட என் பையன் கிட்டே இதே டயலாக் விடலாம் போல..




14. நான் இங்க பேசிட்டே இருக்கேன் , அங்க நீ கவனிக்காம என்னடா பண்ற


 பக்கத்து வீட்டு ஃபிகரை கரெக்ட் பண்ணிட்டு இருக்கேன்


15. நாளைக்குக் கல்யாணம்ஆகி போற வீட்டுல, உன்னைக் குத்தம் சொல்ல மாட்டாங்க இப்படி வளர்த்துருக்காங்களேன்னு என்னை தான் சொல்வாங்க


 என்னமோ செடிக்குத்தண்ணி ஊத்துன மாதிரி பேசறீங்களே, நானா வளர்ந்தேன்


--------------------------------------------





16. உன்னயப் பெத்ததுக்குப் பதிலா ஒரு அம்மிக்கல்லப் பெத்துருக்கலாம்... க்ர்ர்ர்ர்.


 நார்மல் டெலிவரி கஷ்டம், சிசேரியன் தான்


17. IAS படிப்பான்னு சண்முகவேலுன்னு பேர் வச்சோம் கெரகம் 10வது தாண்டல.


டென் த் ஃபெயில்னு நெகடிவ்வா திங்க் பண்னக்கூடாது, ஒன்பதாங்கிளாஸ் பாஸ்னு பாசிட்டிவா பேசனும்





18. இவன் நல்லவன் தான் # கூட உள்ள பயக தான் இவன கெடுத்திருப்பாணுக

 ஆமா, கன்னிப்பெண்ணு , கெடுத்துட்டாலும்?





19. அந்த காலத்துல நாங்க எப்படி இருந்தோம் தெரியுமா


நம்ப மாட்டேன்.. ஃபோட்டோ காட்டு


20. நீ இதுகெல்லாம் லாயக்கில்லை. ஊர் சுத்துரதுக்குத்தான் லாயக்கு.


 ஜனாதிபதியே ஊர் தான் சுத்தறார்.. மாசம் ஒன்றரை லட்சம் ரூபா சம்பளம் வேற




----------------------------------


வெண்பூக்கள் பூக்கும் காலம், நாளை எனது நாள்...!
வெண்பூக்கள் பூக்கும் காலம், நாளை எனது நாள்...!



21. உன் வயசைத் தாண்டித் தான்டா நாங்களும் வந்திருக்கோம் 


 தெரியுதல்ல, கிளம்பு கிளம்பு காத்து வரடும்.. ஆல் ஓவர் த வேல்டு அப்பன்ச எல்லாம் வெப்பன்ச வெச்சுத்தான் டீல் பண்ணனும் ..


22. எதுத்த ஊட்டுப்புள்ள மார்க் என்னான்னு கேட்டியா! அது மூத்திரத்த தெனம் ஒரு டம்லர் வாங்கிக் குடி!


நீங்களே தான் சொன்னீங்க எதிர் வீட்டுப்பொண்ணையெல்லாம் பார்க்கக்கூடாதுன்னு , பார்க்காமயே எப்படி இதை எல்லாம் கேட்க முடியும்?



23. போகும் போது எங்க போறேன்னு சொல்லிட்டுப் போறதில்ல ... இதுக்கெல்லாம் எப்ப புத்தி வரப்போகுதோ


எனக்கே தெரியாது, போஸ்டர் பார்த்துதான் முடிவு பண்ணனும்



24. உம்புள்ள என்ன காரியம் செஞ்சுட்டு வந்து நிக்கிதுன்னு பாரு


சரி , சேர் குடுங்க உக்காந்துக்கறேன்



25. டிவி பாத்துகிட்டே சாப்ட்டு தொலையாத

 ம்க்கும், நீங்க மட்டும் சீரியல் பார்க்கலாம், நான் மேட்ச் பார்க்கக்கூடாதா?



------------------------------------------





26. உன்ன நம்பி எந்த பொண்ணடா கட்டி வைக்குறது?


 நீங்க ஒண்ணும் கட்டி வைக்க வேணாம்.. நாங்களே பார்த்துப்போம்


27 எப்படித்தான் இந்த சத்ததிலேயும் இப்படி கும்பகர்ணன் மாதிரி இவ்வளவு நேரமா தூங்க முடியுதோ?

 நாங்க எல்லாம்  தியேட்டர்ல டமால் டுமீல் சவுண்ட்லயே  தூங்குனவங்க



28. ஏண்டா இளச்சுட்டே போறே?கொடுத்து விடுற லன்ச்சை சாப்பிடுறியா இல்ல ஃப்ரண்ட்ஸ்ட கொடுத்துடுறியா?


காதல் ஏக்கம் தான், சொன்னா புரியாது



29. ஏன்டா உன் ஸ்கூல்ல இன்னுமா ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டு குடுக்கல


 பிராகரஸ் கார்டு பிரிண்ட்டுக்கு குடுத்திருக்காங்க, இன்னும் வர்லை


30. 4 கிமீ நடந்தே போய் படிச்சு ஃபஸ்ட் க்லாஸ்ல பாஸ் பண்ணேன்டா


ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணீங்க, ஓக்கே செகண்ட் கிளாஸ்ல, தார்ட் கிளாஸ்ல ஃபெயில் தானே?




----------------------------------
இனிய காலை வணக்கம் நண்பர்களே...


Sunday, December 30, 2012

இந்தியாவின் நம்பர் 1 unisex salon and spa வீணா பேட்டி

நேச்சுரல்ஸின் புத்தாண்டு பரிசு!

தொகுப்பு: நளினி சம்பத்குமார்

Naturals Unisex Salon and Spa வின் அடுத்த பிரம்மாண்ட முயற்சி Naturals Women! மங்கையர் மலர் வாசகிகளுக்கு நன்கு அறிமுகமான நேச்சுரல்ஸ் வீணாவைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தோம். அதைத் தொடர்ந்து இந்தப் பேட்டி...
அழகு என்றால் என்ன?
ஒருவரின் உடல் அமைப்பு, ஆடை, ஆபரணங்கள், தலை அலங்காரம் போன்றவற்றில் மட்டுமே இல்லை அழகு. அழகை விலை கொடுத்து வாங்க முடியாது! நல்ல குணம், கற்பனைத் திறன், நகைச்சுவை உணர்வு, தன்னம்பிக்கை இவற்றின் வெளிப்பாடே அழகு. அந்த வெளிப்பாடு அவரவர் மனம் பொறுத்து அமையும்.
இந்தியாவின் நம்பர் 1 1 unisex salon and spa என்ற இடத்தை எப்படிப் பிடித்தீர்கள்?

எங்களிடம் வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் உள்ளன்போடு உபசரிக்கிறோம். அவர்களது மனதிற்குப் பிடிக்கும் வண்ணம் அவர்களை அழகூட்டுவதை முழு மனதோடு செய்கிறோம். நாங்கள் கையாளும் franchise model-ம் இந்தச் சாதனைக்கு ஒரு மிகப்பெரிய காரணம்.
அழகுப் பராமரிப்பு - ஆண்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?
6, 7 வருடங்களுக்கு முன் ஆண்கள் சலூனிற்குப் போவது என்பதே ஹேர்கட்டுக்கு மட்டும்தான் என்று இருந்தது. ஆண்களுக்குத் தனி ப்யூட்டி பார்லர் தேவையா? என்ற கேள்வி எல்லோரின் மனதிலும் இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஆண்களும் தங்களது அழகைப் பராமரித்துக் கொள்ள ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார்கள். வாக்சிங்கைத் தவிர அவர்களும் பெடிக்யூர், மேனிக்யூர், ஃபேஷியல், ஹெட் மசாஜ், கலரிங் போன்றவற்றை விரும்பிச் செய்து கொள்கிறார்கள்.
பெண்களின் கண்ணோட்டத்தில் ஏதாவது மாற்றம்?

பணக்கார வீட்டுப் பெண்கள்தான் பார்லருக்குப் போவார்கள் என்ற எண்ணமும் தற்காலத்தில் மாறிவிட்டது. வீட்டு வேலைகள் செய்யும் பெண்கள் (maids) கூட இன்று பார்லருக்கு வரும் ஓர் ஆரோக்கியமான போக்கை நாங்கள் பார்க்கிறோம். வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் என்றால்தான் பார்லருக்குப் போக வேண்டும் என்ற நிலைமாறி இன்று மாதத்தில் ஒருமுறை பார்லருக்குச் சென்று தன் தோற்றத்தைச் சீர்ப்படுத்திக் கொள்ளவே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
Naturals Unisex Salon and Spa வழியாக கொடிகட்டிப் பறக்கிறீர்கள். அப்படியிருக்க, Naturals Women துவக்கக் காரணம்?
நிறையப் பெண்கள் தங்களை அழகு படுத்திக்கொள்ள வரும்போது privacy வேண்டும் என்று விரும்புகிறார்கள். கரூர் போன்ற சிறு நகரங்களில் மட்டும் அல்லாது மாநகரங்களில் கூட ஆண்களின் கண்களுக்கு முன்னால் பார்லரில் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள பெண்கள் தயங்குகிறார்கள். அவர்களது இந்தத் தயக்கத்தைப் போக்கவே naturals women இன்னும் ஆறே மாதங்களில் பிறந்து வளர்ந்தும் விடுவாள்.
Naturals Women இதில் என்னென்ன ஸ்பெஷல்கள் இருக்கின்றன?

முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே இயக்கப்படும் பார்லராக அது இருக்கும். ரிசப்ஷன் தொடங்கி பார்லரில் பணி செய்பவர்கள் வரை அனைவருமே பெண்கள்தான். பெண்கள்தான் இதில் உரிமை பெற்றவர்களாகவும் இயங்கப் போகிறார்கள். Naturals Women பார்லர்களில், வாடிக்கையாளர்களுக்கு, அழகு சேவை தவிர இங்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு pre natal மற்றும் post natal சேவைகளும் வழங்கப்படும்.
உரிமம் (Franchisee) பெற்றவராக இருக்க கல்வித் தகுதி?
கல்வித் தகுதி என்பதை விட அழகு கலையில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். நிறைய படித்தவர்களும் சரி, அவ்வளவாக படிக்காதவர்களும் சரி தங்களுக்குள் இருக்கும் ஆர்வத்தாலேயே நேச்சுரல்ஸின் உரிமம் பெற்றவர்களாக மாறி இன்று வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எவ்வளவு முதலீடு தேவை?

Naturals Womenக்கு உரிமம் பெற விரும்புபவர்கள் 20 முதல் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
உங்களிடம் உரிமம் எடுத்துக் கொள்பவர்களுக்கு நீங்கள் எந்த மாதிரியான உதவிகளைச் செய்கிறீர்கள்?
முதலில் இடத் தேர்வு செய்து தருகிறோம். இது முக்கியமான ஒன்று. மக்கள் நடமாட்டம் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்து அவர்களுக்குத் தெரிவிப்போம். அடுத்து man power. பார்லரில் வேலை செய்வதற்குத் தகுதியான நபர்களை நாங்களே தேர்வு செய்து அனுப்புவோம், அதன்பின் marketing support தருகிறோம். அவர்கள் உரிமம் எடுத்த மூன்றே மூன்று மாத காலத்தில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அவர்கள் எட்ட நாங்கள் அனைத்து விதங்களிலும் உதவுகிறோம்.
உரிமம் பெற்ற கிளைகள் அனைத்திலும் எதிலும், எங்கும், எப்போதும் சீரான தரம். எப்படிச் சாத்தியம்?

போர்ட் வைப்பதிலிருந்து, சலூனுக்குள் வரும் வாடிக்கையாளரை உபசரிப்பது வரை எங்களது அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான சிறப்பான சேவையைத்தான் நாங்கள் கடைபிடிக்கிறோம். எங்களது ஏரியா மேனஜர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வாரா வாரம் சென்று அனைத்து சலூன்களையும் மேற்பார்வை செய்து வருகிறார்கள்.
உங்கள் உரிமம் பெற்றவர்களின் வெற்றிக்குக் காரணம்?
தங்களது பொன்னான நேரத்தையும் மனதையும் ஆர்வத்தையும் கவனத்தையும் முக்கிய முதலீடாக போட்டதுதான் அவர்களது வெற்றிக்குக் காரணம். பணம் போட்டோமா இதோ வெற்றி வந்து விடும் என்பது இதில் கிடையாது.
Franchise India வழங்கும் மிகச் சிறந்த franchisor என்ற விருதை சமீபத்தில் Naturals வாங்கி இருக்கிறதே?

franchising எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்துகொண்டு, எங்களிடம் உரிமம் பெற்றவர்களோடு சுமுகமான நட்புறவை வளர்த்துக் கொண்டோம். அவர்கள் வளர்ச்சியில் தனியொரு அக்கறையும் நாங்கள் காட்டியதற்குக் கிடைத்த விருது இது என்றே சொல்ல வேண்டும்.
உங்களது ட்ரெயினிங் அகாடமி பற்றி...
இரண்டு வார காலம் தொடங்கி எட்டு வார காலம் வரை பயில நிறைய வகுப்புகள் எங்கள் அகாடமியில் இருக்கின்றன. மேக்-அப், ஹேர் ஸ்டைலிங் என இப்படி நிறைய பாடங்கள் இருக்கின்றன. யார் யாருக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் அதைத் தேர்ந்தெடுத்துப் பயிலலாம்.
வேலை வாய்ப்பு?
எங்கள் ட்ரெயினிங் அகாடமியில் பயில்பவர்களுக்கு நாங்களே வேலை வாய்ப்பும் வழங்குகிறோம்