Wednesday, December 19, 2012

விஜய் டி வி 7 சி ஐஸ்வர்யா பேட்டி

http://www.cinespot.net/gallery/d/980328-1/Aishwarya+Tv+Serial+Actress+Photos+_7_.jpg 

 

நான் நடிகையான கதை! - ஐஸ்வர்யா

தொகுப்பாளியாக, தொடர்களின் நாயகியாக வெற்றி வலம் வந்துகொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக இருந்துகொண்டே "7சி'யில் நடிக்கிறார். சன் தொலைக்காட்சியில் "பைரவி'யாக கலக்கிக்கொண்டே, ஜெயா டி.வியில் பாலசந்தரின் இயக்கத்தில் "இலக்கணம் மாறுதோ' தொடங்கிவிட்டது. அவரிடம் தொடர் நடிப்பு இடைவேளையில் பேசியதிலிருந்து...  


தற்போது நடித்து வரும் தொடர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "7சி', சன் டிவியில் "பைரவி', இப்போது ஜெயா டிவியில் "இலக்கணம் மாறுதோ' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறேன். எல்லா தொடர்களிலும் லீட் ரோல் நான் தான் செய்கிறேன்."7சி' தொடரில் எஸ்தராகவும், "பைரவி' தொடரில் மதுராவாகவும், "இலக்கணம் மாறுதோ' தொடரில் சுரபி என்கிற கதாபாத்திரத்திலும் நடிக்கிறேன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "7சி' எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. அதற்குக் காரணம் அந்த கேரக்டர் துடுக்கான, அதே மற்ற ரோல்களைவிட வித்தியாசமாக இருக்கும். நானும் அந்த கேரக்டரில் ரொம்ப இன்வால்வாயி நடிக்கிறேன்."

இலக்கணம் மாறுதோ' உங்களை எந்த விதத்தில் மாறுபடுத்திக் காட்டும் தொடராக இருக்கும்?"


இலக்கணம் மாறுதோ' இப்போதுதான் புதிதாக ஆரம்பித்திருக்கிறது. கவிதாலயா பேனர்ல கே.பாலசந்தர் சாரோட தொடர் இது. பாலசந்தர் சார் தொடர் என்றாலே அதில் ஒரு வித்தியாசம் இருக்கும். அதுவே கேரண்டிதான். இதுவும் கண்டிப்பாக பல சுவரஸ்யங்கள் நிறைந்த தொடராக இருக்கும். அவர் இயக்கிய "சஹானா' தொடரில் நடித்த காவியாவும் இந்தத் தொடரில் நடிக்கிறாங்க. இரண்டு பெண்களின் மணவாழ்கை சம்பந்தப்பட்ட கதையாக "இலக்கணம் மாறுதோ' உருவாகி வருகிறது.கவிதாலயா பேனர்ல நான் ஒரு தொடராவது நடித்துவிட வேண்டும் என்பது என் அம்மாவோட நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு இப்போது நிஜமாகியிருப்பது மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது


. நீங்கள் நடிக்க வருவதற்கு முன்பு, வேடிக்கை பார்க்க போன இடத்தில் நடிகை ஆகிட்டீங்களாமே உண்மையா?


ஆமாம் உண்மைதான். என் அண்ணனுக்கு டிவியில் காம்பெய்ராக ஆக வேண்டும் என்று நிறைய ஆசையிருந்தது. அப்படிப்பட்ட ஒரு நேரத்தில் விஜய்டிவியில் அதற்கான ஆடிஷன் நடந்தது. அதில் கலந்து கொள்ள அண்ணன் போயிருந்தார். அவரோடு நானும் சும்மா வேடிக்கை பார்க்க போயிருந்தேன். ஆனால் அவர் தேர்வாகவில்லை. எதிர்பாராத விதமாக நான் தேர்தெடுக்கபட்டேன். வேடிக்கை பார்க்க போன இடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் காம்பெய்ரிங் பண்ண வந்தேன். அதைத் தொடர்ந்து தொடரில் நடிக்கவும் வாய்ப்புகள் கிடைக்க இப்படியே என் பயணம் தொடர்கிறது.


தொடர்களில் நடிப்பதற்கு முன்பு நீங்கள் தொகுப்பாளினியாக இருந்தீர்கள். அந்த அனுபவம் பற்றி?


நான் தொடர்ச்சியாக மூன்று வருடமாக விஜய் டிவியில் வரும் "ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தேன். அதே போல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் காம்பெய்ரிங் செய்துள்ளேன். அப்போதிலிருந்தே தொடர்களில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அதில் விருப்பம்மில்லாமல் இருந்தேன். காரணம் தொகுப்பாளினியாக இருப்பது தொடரில் நடிப்பதைவிட ஈசியாக இருக்கும். ஜாலியாக வந்தோமா, ஹாயாக பண்ணோமா போய்க்கிட்டே இருக்கலாம். தினம் ஆபிஸ் வந்து போகிற பீல் தொடரில் நடிக்கும் போது ஏற்படும். ஆனால் காம்பெய்ரிங் செய்வது அப்படி அல்ல.

சரி இப்படி இருந்த நீங்கள் அப்புறம் ஏன் தொடரில் நடிக்க ஒத்துக்கிட்டீங்க?


எதுவும் ஒரு கட்டத்தில் போரடிக்கும்தானே? அதுமட்டுமில்லை இங்க நிலைக்கணும் என்றால் நம் திறமையை நிரூபிக்கணும். அதற்குத் தொடர்களில் நடிப்பது முக்கியம். அதற்காக காத்திருந்தேன். அப்போதுதான் "வந்தாளே மகராசி' தொடரின் கதையைக் கேட்டேன். மிகவும் பிடித்திருந்தது. அதனால் இத்தொடரில் நடிக்க சம்மதித்தேன். அந்த தொடரின் மூலமாகத்தான் நான் சின்னத்திரை நாயகி ஆனேன்.


நடிகையாகவும் இருக்கீங்க, தொகுப்பாளியாகவும் இருக்கீங்க எதை விரும்பி செய்கிறீர்கள்?


காம்பெய்ரிங்கிற்கும், நடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. காம்பெய்ரிங் பொருத்தவரை நம்ம வீட்டிலோ நண்பர்களிடமோ பேசுவது போன்று இயல்பாக இருக்கும். அதே சமயம் சில நேரங்களில் சரியாக நிகழ்ச்சி கொடுக்கவில்லை என்றால் உடனே முகத்துக்கு நேரே சொல்லி ஓ வென்று கத்திவிடுவார்கள்.அதுவே நன்றாக இருந்தால் உடனே வாழ்த்துவார்கள், நேரடி நிகழ்ச்சிகள் வழங்குவது ஜாலியாக இருந்தாலும், ரொம்ப கடினமான விஷயம். ஆனால் நடிப்பு அப்படியில்லை, கஷ்டப்பட்டு நடித்து முடித்த பிறகு வெளி இடங்களுக்குப் போகும் போது, ரசிகர்களை சந்திக்கும் போதுதான் நாம் என்ன செய்திருக்கிறோம் என்று தெரியும். நடிக்கும் போது அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட வேண்டியிருக்கிறது. இது ஒரு வித்தியாசமான, புதுமையான நல்ல அனுபவமாக இருக்கிறது. இதில் எது பிடித்திருக்கிறது என்று என்னால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் தொகுப்பாளி ஆன பிறகுதான் நான் நடிகையானேன். அதனால் கம்பெய்ரிங்கும் விடாமல் தொடர்ந்து செய்து வருகிறேன். சமயம் கிடைக்கும்போது மேடை நிகழ்ச்சிகள், திரை விழாக்களையும்கூடத் தொகுத்து வழங்கி வருகிறேன். இதை தவிர விளம்பரப் படங்களிலும் நடிக்கிறேன்.


சினிமாவில் நடிக்க அழைப்புகள் வருகிறதா? அந்தப் பக்கம் போகும் எண்ணம் உண்டா?


ஐந்து வருடமாக பெரிய திரையில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்போதைக்குப் பெரியதிரைக்குப் போகிற எண்ணம் இல்லை. சின்னத்திரையே நிறைவாக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக பெரிய திரைக்குப் போகமாட்டேன்.


உங்களுடைய வருங்காலத் திட்டங்கள் என்ன?


பதினோராம் வகுப்பு படிக்கும் போதே நான் மீடியாவுக்குள் வந்துவிட்டேன். அதனால் பளஸ் டூ முடித்ததும் விஸ்காம் எடுத்து படித்தேன். ஆன் ஸ்கீரின் மட்டும் அல்லாமல் திரைக்கு பின்னும் இருக்க ஆசைப்படுகிறேன். எனக்கு போட்டோகிராபி ரொம்ப பிடிக்கும். கல்லூரியில் படிக்கும் போது பைனல் இயர்ல போட்டோகிராபியில் யூனிவர்ஸிட்டியில் டாப்பராகவும் வந்தேன். முதலில் எல்லா துறையைப் பற்றியும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும், டெக்னிக்கலாக அதில் அனுபவம் பெற்ற பிறகு எனக்கு எது சரியாக வருகிறதோ அந்த துறையை தேர்ந்தெடுக்கலாம் என்றிருக்கிறேன் என்ன சரிதானே?


நன்றி - சினிமா எக்ஸ் பிரஸ்

0 comments: